என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு, இப்படி தொடர்ச்சியாக நல்ல படங்கள் வந்தால் மங்காத்தா,காவல்காரன் படங்களை யார்தான் பார்ப்பது. சற்று தாமதாகத்தான் மைனா பார்க்க நேர்ந்தது. இந்த படத்திற்கு நிறைய பேர் விமர்சனம் எழுதி, துவைத்து காய்ப்போட்டுவிட்டதால் நானும் விமர்சனம் எழுதி உங்களை போரடிக்க விரும்பவில்லை. அதனால் படத்தைப் பற்றிய என்னுடைய துணுக்குகள்
- மைனா என்ற பெயரே படத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆவல் ஏற்படுத்துகிறது. அதன்படி செல்லும் ரசிகர்களை இயக்குநர் ஏமாற்றவில்லை.
- எந்த ஒரு காட்சியும் வீணாக வரவில்லை. ஒவ்வொரு காட்சியும் கதையோடு பொருந்தி ரசிக்கும்படி இருப்பது சிறப்பு.
- அழகான ஒரு காதல் பயணத்தை, கதாபாத்திரங்களோடு நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்
- படத்திற்காக நடிக்க..மன்னிக்க வாழ வைக்கப்பட்ட அனைவருக்கும் சல்யூட். மனநிறைவாக செய்திருக்கிறார்கள்.
- கதாநாயகனாக நடித்தவர் தொடங்கும்போது எரிச்சல் தந்தாலும், போக போக மனதிற்குள் ஒட்டிக்கொள்கிறார். ஆனாலும் மதுரை பாஷை பேசியே எத்தனை படங்கள்தான் வரப்போகிறதோ என்று எண்ணும்போது பயமாகவும் இருக்கிறது
- அநியாயமாக இறந்து போவதற்கென்றே கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நாயகி அமலா நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய கன்னத்தில் இருக்கும் சிறு பரு கூட அழகு என்று எழுதலாம் என்று நினைக்கும்வேளையில், மனைவி பூரிக்கட்டையை உயர்த்தியதால், இந்த பேச்சு, இத்தோடு மனமில்லாமல் துண்டிக்கப்படுகிறது
- ஒரு செண்டிமெண்டான காட்சியை ரசிக்கும்போது, உடனே ஒரு ஜாலியான காட்சி வந்துவிடுகிறது. அதனால், படம் முழுவதும் ஒரேயடியாக சோகத்தில் ஆழ்த்தாமல் செல்கிறது
- இன்னொரு ஆச்சர்யம், காவல்துறை அதிகாரியாக நடித்த தம்பி இராமையா. கதாநாயகனோடு மாட்டிக்கொண்டு அல்லாடும் காட்சிகளில் சிரிக்கவைக்கிறார். இன்னோரு அதிகாரியாக நடித்த சேது, தன் இயல்பான நடிப்பால் கவர்கிறார்..எங்கயா இருந்தீங்க இவ்வளவு நாளா??
- இசையமப்பாளர் இமான் இன்னொரு ஆச்சர்யம். பாடல்கள் ஒவ்வொன்றும் படம் முடிந்தபின்பும் முணுமுணுக்க வைக்கின்றன. குறிப்பாக “ஜிங்கு, ஜிங்கு..”, “மைனா..மைனா..” போன்ற பாடல்கள் ஒன்ஸ்மோர்..கைகொடுங்கள் இமான் சார்..தயவு செய்து அர்ஜூன் படம் பக்கம் மட்டும் போயிராதீங்க..
- கேமிராமேனுக்கு பெண்டு கழண்டிருக்கும். யாரும் எட்டிப்பார்க்காத இடங்களுக்கு கூட கேமிராவை எடுத்துக்கொண்டு போய் நிரம்ப உழைத்திருக்கிறார்கள். உழைப்பு வீணாகவில்லை. மலை சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஒவ்வோரு பிரேமிலும் குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. வெல்டன்.
- இதுவரை அதிகம் கவனிக்கப்படாத இயக்குநர் பிரபு சாலமன். இந்த படத்தின் மூலம் கவனிக்கப்படுகிறார். ஒரு படி உயர்ந்திருக்கிறார் என்று சொல்லவேண்டும். இவருக்கு எப்படி வேலை வாங்கவேண்டும் என்று தெரிந்திருக்கிறது. பிரபு சாலமன், பாலா, மிஷ்கின், சேரன், சசி, சமுத்திரக்கனி, சசிக்குமார் என்று ஒரு கூட்டமே நம்பிக்கை தருகிறது. இவர்கள் இருக்கும் வரை தமிழ்சினிமாவின் தரம் இன்னும் உயரும் என்று நம்பிக்கை உள்ளது. அடுத்த படத்திற்கும் தீயா வேலை செய்யணும் மிஸ்டர் சாலமன்…
- கிளைமாக்ஸ் சற்று உலுக்கிதான் போடுகிறது. காலையில் மனைவி எழுந்து காலைவணக்கம் கூட சொல்லாமல் “ஏங்க..கிளைமாக்ஸ்ல இப்படி ஆகிப்போச்சு” என்று சொல்லியபோது இதை உணர்ந்தேன்.
- ஆனா, இந்த படத்தோட மதுரைப்பாஷை பேசி நடிக்கிறத முடிச்சுக்கங்கப்பூ..இனி யாராவது “அடியே..” என்று இழுத்து நடிச்சீங்க..இருக்குடியே....அடியே..(ஆஹா..தொத்துவியாதியா இருக்கும்போலிருக்கே..)
15 comments:
ஆமாம் தங்கள பார்வையும் நன்றாக இருக்கிறது அந்த பஸ் பாடல் எனக்கு பிடித்திருந்தது....
//////////////////////
ம.தி.சுதா said...
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/
1 December 2010 11:19 PM
ம.தி.சுதா said...
ஆமாம் தங்கள பார்வையும் நன்றாக இருக்கிறது அந்த பஸ் பாடல் எனக்கு பிடித்திருந்தது....
1 December 2010 11:22 PM
//////////////////////////
வருகைக்கு நன்றி..சுடுசோறு சாப்பிடுற அளவுக்கெல்லாம் நம்ம பிளாக் பிரபலம் இல்லீங்க..மொத்தம் படிக்கிறதே அதிகபட்சம் 10 பேர், அதுல கமெண்டு போடுறது 4 பேர்..அதனால் நிதானமா நீங்க பழைய சோறே சாப்பிடலாம்..))))))
நேயர் விருப்பமா?
நெறய கருத்துக்கள் எனக்கும் தோணிச்சு.. இருந்தாலும் இயக்குனர்கள் வரிசையில, பாலாவ பிரபுக்கு அடுத்து போட்டது கொஞ்சம் ஓவர்... :):)::):) [எப்பிடி எல்லாம் வம்புக்கு இழுக்குறாய்ங்க !!!!]
naa sollallae?
நல்லப்படம்ணே....நல்லவேளை விமசர்னத்தைப்போடாம பாயிண்ட்போட்டு விளக்குனது நல்லதாப்போச்சு... அதனால் ஒரு கமண்ட் கூடிருக்கு...:)
நீங்க நொல்லாருக்குன்னு சொன்ன ஒரேகாரணத்துக்காக நைட் ஷ்யாமளனின்
the happening படம் பார்த்தம்ணே....எப்ப ஊருக்கு வர்றீக... ஏர்போர்ட் வாசல்லயே பொருளோட வரவேற்கலாம்னு இருக்கம்ணே...:))
அழகான காதல் பயணம்.//
bus ticket evlo?
//அடுத்த படத்திற்கும் தீயா வேலை செய்யணும் மிஸ்டர் சாலமன்…//
paakalaam
உங்களுடைய விமர்சனம் அருமை
வெங்கடேஷ்
///////////////////////
taaru said...
நேயர் விருப்பமா?
நெறய கருத்துக்கள் எனக்கும் தோணிச்சு.. இருந்தாலும் இயக்குனர்கள் வரிசையில, பாலாவ பிரபுக்கு அடுத்து போட்டது கொஞ்சம் ஓவர்... :):)::):) [எப்பிடி எல்லாம் வம்புக்கு இழுக்குறாய்ங்க !!!!]
2 December 2010 12:30 AM
//////////////////////
அக்கிரமத்துக்கு அளவே இல்லாம போச்சு..))))
///////////////////////////
Maduraimalli said...
naa sollallae?
2 December 2010 3:57 AM
//////////////////////////
ஆமா...
////////////////////////////
நாஞ்சில் பிரதாப்™ said...
நல்லப்படம்ணே....நல்லவேளை விமசர்னத்தைப்போடாம பாயிண்ட்போட்டு விளக்குனது நல்லதாப்போச்சு... அதனால் ஒரு கமண்ட் கூடிருக்கு...:)
நீங்க நொல்லாருக்குன்னு சொன்ன ஒரேகாரணத்துக்காக நைட் ஷ்யாமளனின்
the happening படம் பார்த்தம்ணே....எப்ப ஊருக்கு வர்றீக... ஏர்போர்ட் வாசல்லயே பொருளோட வரவேற்கலாம்னு இருக்கம்ணே...:))
2 December 2010 4:10 AM
///////////////////////////
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..ஹி..ஹி..சும்மா சொன்னேன்..படம் நல்லாத்தான் இருந்துச்சு..
//////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அழகான காதல் பயணம்.//
bus ticket evlo?
2 December 2010 7:42 AM
//////////////////////////
40 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பி வைக்கவும்..))
//////////////////////
வார்த்தை said...
//அடுத்த படத்திற்கும் தீயா வேலை செய்யணும் மிஸ்டர் சாலமன்…//
paakalaam
2 December 2010 7:52 AM
Anonymous said...
உங்களுடைய விமர்சனம் அருமை
வெங்கடேஷ்
2 December 2010 7:56 AM
///
நன்றி வார்த்தை, வெங்கடேஷ்..
Rathacharitram - dharitthiram
Surya Rockz..
மைனா பற்றிய தகவல்கள் - Myna Bird in Tamil
Post a Comment