Wednesday 27 October, 2010

ங்கொய்யாலே…அப்படி என்னதான்யா பேசுறாயிங்க

சமீபத்தில் ஒரு இளம்பெண்ணுடன் காரில் செல்லும் அனுபவம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இப்போதுதான் கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்திரிப்பார் போலும். காரில் அவரை ஒரு இடத்தில் டிராப் செய்யவேண்டிய சூழ்நிலை. கிளம்புவதற்கு முன்பு பெர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ணிக்க கண்ணாடியை முடிந்த வரை முறைப்போம் என்று சென்றபோது சொல்லி வைத்தாற் போல் மனைவி குறுக்கே நின்றாள்.

“எங்கிட்டு போறீங்க..”

“இல்ல..தலை சீவிக்கலாமுன்னு..”

“எப்போதும் வெளியே போறப்ப சீவ மாட்டிங்களே..இப்ப என்ன புதுசா”

“ஹே..சீ..சீ..தலை கொஞ்சம் குலைஞ்ச மாதிரி ஒரு பீலிங்க்”

“கிளம்புங்க..நல்லாதான் இருக்கும்..”

“அடியே..பார்க்குறதுக்கு பரதேசி மாதிரி இருக்கேண்டி..”

“நீங்க சீவுனாலும் அப்படித்தான் இருப்பீங்க..கிளம்புங்க..”

“சரி..கொஞ்சம் பவுடரு..”

“அடுப்பாங்கறையில சாம்பல் இருக்கும். வேணுமுன்னா பூசிக்குங்க..”

“அய்யோ..வேண்டாம்..தலை குலைஞ்சு போயிருக்கு..”

“இதுக்கு மேலே ஒரு அடி எடுத்து வைச்சா, உங்க வாழ்க்கை குலைஞ்சு போயிரும் பரவாயில்லையா..”

இதுக்கு மேலே போனா, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் நடையை கட்டினேன். என்னைக்கும் என்னிடம் “போயிட்டு வாங்க” என்று சொல்லும் வூட்டுக்காரி அன்னைக்கு அந்த பொண்ணிடம் “பத்திரமா போயிட்டு வாப்பா” என்று சொன்னாள். அதோடு இல்லாமல் வேணுமென்றே..”ஏங்க..போன மாசம் தான உங்களுக்கு 32 வது பொறந்தநாள்” என்று சொல்லி ஹிண்ட்ஸ் கொடுத்தாள். எனக்கு வந்த கடுப்பில் காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய, அந்த பெண் பயந்து போனாள்..

“அய்யோ..கொஞ்சம் ஸ்லோவாவே டிரைவ் பண்ணுங்க..”

“ஹி..ஹி..இதெல்லாம் நமக்கு சர்வசாதரணம்..எப்போதும் 80, 90 மைல்தான் போறது..இன்னைக்கு நீங்க பயப்படுவீங்களேன்னுதான் ஜஸ்ட் 70”

சிரித்தாள். சைடு மிரர் வழியாக பார்த்தேன். என் வூட்டுக்காரி முறைத்து கொண்டு இருந்தது தெரிந்தது. சரி, இன்றைக்கு வெளியிலேயே சாப்பிட்டு வரவேண்டும் என்று முடிவு செய்தேன்..

சரி பயபுள்ளைகிட்டு பேச்சு கொடுப்போம் என்று ஆரம்பித்தேன்..

“உங்க பேரு என்ன..”

திடிரென்று “போடா, போடா புண்ணாக்கு” என்று குரல்கேட்க பயந்து போனேன். அவள் மொபைல் போனில் ரிங்க்டோனாம்..நல்லாதான்யா வைச்சிருக்காயிங்க.. அவள் போனில் பேச ஆரம்பித்தாள்..

“ஏ..இட்ஸ் மீயா..ஹவ் ஆர் யூ..”

“-------------“(எதிர்முனை)

“ப்ச்..ஏன்பா போனே பேசலை.. நீ கடைசியா போன் பேசி ரெண்டு மணிநேரம் ஆகுது தெரியுமா..”

“------------“

(ஏர்டெல் ஏன் லாபத்துல ஓடாது) – என் மனசாட்சி

“கமான் யா..இட்ஸ் கிரேஸி..”

“-----------“

(யாருங்க..எதிர்முனையில கிரேஸி மோகனா) - என் மனசாட்சி

“ம்..நீ சொல்லு..”

“--------------“

(எவனாவது சொல்லித் தொலைங்கடா..) – என் மனசாட்சி

“சாப்பிட்ட்யா..”

:--------------“

(ரொம்ப முக்கியம்) – என் மனசாட்சி

“கம் ஆன் விஷால்..”

“------------------“

(டே விஷாலு..இன்னைக்கு நீதான் ஊறுகாயா..) – என் மனசாட்சி

“ம்..அப்புறம்... என்ன பேசுறது.”

“------------------“

(அடிப்பாவி..அது தெரியாம இம்புட்டு நேரமா பேசிக்கிட்டு இருக்கீங்களா..) – என் மனசாட்சி

“சொல்லுடா..”

“-----------------“

(ஜொள்ளுடா ன்னு இருக்கணும்..) – என் மனசாட்சி

“நீதான பேசுன..நீதான் சொல்லணும்..”

“-----------------------“

எனக்கு வந்த கொலைவெறியில் ஆக்சிலேட்டரை மிதித்தேன்..செருப்பை கழட்டி என்னையே அடித்து கொள்ளலாம் என்றால், அந்த காலில்தான் பிரேக்கை மிதித்து கொண்டிருந்தேன்.. அவள் தொடர்ந்தாள்..

“ம்..ஒரு இட்லி, கொஞ்சம் ப்ரூட்ஸ்,,”

“-------“

(பிரேக்பாஸ்டாமாம்..) எனக்கு கொலைவெறி உச்சிக்கு சென்றது.

“நோடா,.கம் ஆன்..யூ நோ வேர் ஐ ஆம் பிரம்..”

“--------------“

(இறங்கியவுடனே அவள் அடுத்த முனையில் பேசும் விஷாலை போட்டுதள்ள முடிவெடுத்தேன்..”

“கம் ஆன் டா..விஷால்.. மை நேடிவ் இஸ் நாட் சென்னை..”

“---------------“

“ஐ. ஆம் நியர் டூ மடுரை..”

“-----------------“

(மதுரையாமாம்..இங்கிலீபீசு..) கூர்ந்து கவனித்தேன்

“ஆக்சுவலி..இட் இஸ் 30. கிலோமீட்டர் அவே பிரம் மடுரை. தேட்ஸ் கால்டு குட்லாடம்பட்டி..”


(அடிப்பாவி..குட்லாடம்பட்டிக்காரியா நீயி..எனக்கு வந்த கடுப்பில் பின்னாடி திரும்பி கேட்டே விட்டேன்..)

“எக்ஸ்கீயூஸ்மி..நீங்கதான் வாடிப்பட்டில ரயில்வே கேட்டு போடுறப்ப வெள்ளரிக்காய் விக்குறதா..”

“நோ..நோ..யூ ஆர் ஜோக்கிங்க்”

(அடிப்பாவி..எம்புட்டு கடுப்புல சீரியாஸா கேக்குறேன். அதுக்கும் கோல் போடுறாளே..)

அதுக்கப்புறம் ஒரு வார்த்தை பேசலையே..சீயின்னு ஆயிடுத்து. பேசாம வண்டிய ஓட்டுனேன். அவள் விடாமல் போனில் பேசிக் கொண்டே இருக்க, நான் மதியானம் வீட்டில் நடக்கப் போகும் கலவரம் பற்றி யோசிக்க, பயமாக இருந்தது. அவள் வரவேண்டிய ஸ்டாப் வர இன்னும் அவள் போன் பேச்சை நிறுத்தவில்லை. இறங்கியவுடனே நடந்து சென்றவள், போன வேகத்தில் ஏதோ மறந்து போன மாதிரி திரும்பி வந்தாள். டிரைவர் சீட்டு அருகில் பாதகத்தி வந்து சொல்லுறா..

“தேங்க்யூ அங்கிள்..”


22 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thoppi thoppi

taaru said...

//“அய்யோ..கொஞ்சம் ஸ்லோவாவே டிரைவ் பண்ணுங்க..”//
இந்த இடத்துல அந்த இளம்பெண்... அதாண்ணே எங்கூரு பொண்ணு என்னா சொல்லுச்சோ அத்த சொல்லவும்.... [டிரைவ் பண்ணுங்க அண்ணா !!! கர்ரக்ட் ஆ?]

//“தேங்க்யூ அங்கிள்..”//
நானே பரவா இல்ல போல...கொஞ்சம் யூத் மாதிரி யோசிச்சேன்.. இதுக்கு பேசாம???

//போன மாசம் தான உங்களுக்கு 32 வது பொறந்தநாள்//
அட.. அப்போ கண்டிப்பா நீயி அண்ணா அண்ணா.. அண்ணா தாண்ணே...[அய் மீன் எனக்கு]

பின் குறிப்பு:
//அடுப்பாங்கறையில சாம்பல் இருக்கும். //
//எப்போதும் 80, 90 மைல்தான் போறது.//
//(ஏர்டெல் ஏன் லாபத்துல ஓடாது) – என் மனசாட்//

கதை எங்க நடக்குது?? கொஞ்சம் கொளப்புதோ??
உங்கூருலனா , ஏது கரி,சாம்பல் ?, நம்ம ஊருலனா, கி.மீல தானே?
இனி வருவனவற்றில் சரி பாத்துக்கோ அண்ணா..... புவியியல் முக்கியம் இல்லியா?

பாவக்காய் said...

kalakkal thalai... :-)

எல் கே said...

//“தேங்க்யூ அங்கிள்..”//

i like it

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஎன் வூட்டுக்காரி முறைத்து கொண்டு இருந்தது தெரிந்தது. சரி, இன்றைக்கு வெளியிலேயே சாப்பிட்டு வரவேண்டும் என்று முடிவு செய்தேன்..ஃஃஃஃஃ
சொந்த அனுபவமா ஐயா....

Prathap Kumar S. said...

தேங்க்யூ அங்கிள்..”//

//i like it //

Me too....:))

Arun said...

Entha kathakalam india va ela US laya?

vaarththai said...

:)

sakthi said...

ஹ ஹ ஹ

நல்லாத்தான் எழுதியிருக்கீங்க அங்கிள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
thoppi thoppi
26 October 2010 11:06 PM
/////////////////////////////
ஹி..ஹி..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
taaru said...
//“அய்யோ..கொஞ்சம் ஸ்லோவாவே டிரைவ் பண்ணுங்க..”//
இந்த இடத்துல அந்த இளம்பெண்... அதாண்ணே எங்கூரு பொண்ணு என்னா சொல்லுச்சோ அத்த சொல்லவும்.... [டிரைவ் பண்ணுங்க அண்ணா !!! கர்ரக்ட் ஆ?]

//“தேங்க்யூ அங்கிள்..”//
நானே பரவா இல்ல போல...கொஞ்சம் யூத் மாதிரி யோசிச்சேன்.. இதுக்கு பேசாம???

//போன மாசம் தான உங்களுக்கு 32 வது பொறந்தநாள்//
அட.. அப்போ கண்டிப்பா நீயி அண்ணா அண்ணா.. அண்ணா தாண்ணே...[அய் மீன் எனக்கு]

பின் குறிப்பு:
//அடுப்பாங்கறையில சாம்பல் இருக்கும். //
//எப்போதும் 80, 90 மைல்தான் போறது.//
//(ஏர்டெல் ஏன் லாபத்துல ஓடாது) – என் மனசாட்//

கதை எங்க நடக்குது?? கொஞ்சம் கொளப்புதோ??
உங்கூருலனா , ஏது கரி,சாம்பல் ?, நம்ம ஊருலனா, கி.மீல தானே?
இனி வருவனவற்றில் சரி பாத்துக்கோ அண்ணா..... புவியியல் முக்கியம் இல்லியா?
26 October 2010 11:12 PM
//////////////////////
ஹி..ஹி..அண்ணே, அண்ணேதான்..))
இங்கு குளிருக்கு எல்லா இடத்துலயும் எரிஅடுப்பு வைச்சிருப்பாயிங்க..இங்க மைல் கணக்குதான் சொல்லுவாயிங்க..விஷால் இந்தியாவுல இருந்து கால்பண்ணினான், அதனால் ஏர்டெல் லாபம்தான்.புவியியல் கரெக்டா வருதா..ஹி..ஹி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
பாவக்காய் said...
kalakkal thalai... :-)
26 October 2010 11:30 PM
////////////////////////////
நன்றி பாவக்காய்..

அவிய்ங்க ராசா said...

////////////////////
LK said...
//“தேங்க்யூ அங்கிள்..”//

i like it
26 October 2010 11:54 PM
///////////////////
நன்றி எல்.கே..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ம.தி.சுதா said...
ஃஃஃஃஃஎன் வூட்டுக்காரி முறைத்து கொண்டு இருந்தது தெரிந்தது. சரி, இன்றைக்கு வெளியிலேயே சாப்பிட்டு வரவேண்டும் என்று முடிவு செய்தேன்..ஃஃஃஃஃ
சொந்த அனுபவமா ஐயா....
27 October 2010 12:25 AM
//////////////////////
நன்றி மதி...சொந்த அனுபவந்தான்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
நாஞ்சில் பிரதாப் said...
தேங்க்யூ அங்கிள்..”//

//i like it //

Me too....:))
27 October 2010 1:03 AM
////////////////////
நன்றி பிரதாப்..

அவிய்ங்க ராசா said...

///////////////////
Arun said...
Entha kathakalam india va ela US laya?
27 October 2010 2:04 AM
//////////////////////
யூ.எஸ் தான் அருண்

அவிய்ங்க ராசா said...

////////////////////////
vaarththai said...
:)
27 October 2010 2:22 AM
////////////////////////////
நன்ரி வார்த்தை..

அவிய்ங்க ராசா said...

////////
akthi said...
ஹ ஹ ஹ

நல்லாத்தான் எழுதியிருக்கீங்க அங்கிள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்
27 October 2010 7:23 AM
//////////////////////
நன்றி சக்தி..

Vijay Anand said...

//“தேங்க்யூ அங்கிள்..”//
Same Blood....

Arun said...

/// (ஏர்டெல் ஏன் லாபத்துல ஓடாது) – என் மனசாட்சி ///

Airtel yengayo edikudhe.. :D

-Arun

Prabhakar said...

Enjoyed the piece. My sympathies to you. Where is that bloody Vishal from? Kottampatti?

அரபுத்தமிழன் said...

:)) Nice

Post a Comment