இந்த வார சண்டை
பதிவுலகம் எப்போதுமே ஹாட். எப்போதும், ஏதாவது ஒரு சண்டை இருந்து கொண்டே இருந்து, தன் தனித்தன்மையை இழக்காமல் இருக்கும். அப்படியே சென்ற வாரமும் இருந்தது.
பதிவர் ஜாக்கிசேகரை கிண்டல் பண்ணி, இன்னொரு பதிவர் எழுதியதால், சண்டைத் தீ பற்றிக் கொள்ள சுடசுட செய்தியாகிப் போனது. நீ யார் பக்கம் என்று கேட்டால், நான் கொல்லைப் பக்கம் என்று சொல்லுவேன். ஏனென்றால் அங்குதானே கொய்யாப்பழம் கிடைக்கும்.
இந்த வார விவாதம்
என்.டி.டிவியில் சுதாங்கன், ஞானி, ஸ்ரீதர், சின்மயி கலந்து கொண்ட எந்திரன் விவாதம் காணநேர்ந்தது. தோற்கடிக்கபடவே முடியாத நபர் ஞானி என்று தோன்றியது. எந்த ஒரு டாபிக் கொடுத்தாலும், ஆணித்தரமாகவும், சிறப்பாகவும் விவாதம் செய்யக்கூடியவர் ஞானி என்று திரும்பவும் நீரூபணமானது. அவர் சொன்ன எல்லா பாயிண்டுகளுக்கும் பதிலளிக்க முடியாமல் சின்மயி முகம்போன போக்கை பார்க்கவேண்டுமே. கடுகு தாளித்தாற்போல. சின்மயின் கருத்துகள் எல்லாம் அமெச்சூர்த்தனமாகவும், வடிவேலு பாணியில் சொல்லப்போனால் சின்னப்புள்ளைத்தனமாகவும் இருந்தது. அரங்கு முழுக்க ஒரு பக்கம் சேர்ந்த பார்வையாளர்களாவே நிரப்பப்பட்டிருந்தனர். சின்மயி ஹச்சென்று தும்மினாலும் “ஆஹா..தலைவர் மாதிரி தும்முறாயா..” என்று கைதட்டுவார்கள் போலும். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தொகுப்பாளரும், ரசிகர் மன்ற தலைவரைப் போல நடந்து கொண்டதும், எரிச்சலை தந்தது. கடைசியாக விவாதத்தில் ஜெயித்தது சின்மயி தரப்பினர் என்று சொன்னபோது சிரிப்பாக இருந்தது
இந்த வார காமெடி
நடிகை ராதிகா உண்மையிலேயே அப்பாவியா, அல்லது அப்பாவி மாதிரியா என்று தெரியவில்லை. மேடையில் பேசத்தெரியாத நபர்களில், இதுவரை, மனோரமா, ரஜினிகாந்த் என்று நினைத்திருந்தேன், இப்போது ராதிகாவையும் சேர்த்து கொள்ளலாம். நார்மலாக தமிழில் சிலவார்த்தைகளை பேசும்போது பார்த்து பேசவேண்டியதுள்ளது. டபுள் மீனிங்க்கெல்லாம் தாண்டி, டிரிபிள் மீனிங்காகி சங்கடத்துக்குள் உள்ளாக்கும் நிலை உள்ளது. விஜய் டி.வி கொண்டாடிய கமல் விழாவில் இப்படித்தான் பேசி, கமல் நெளியவேண்டிய சூழ்நிலை. இப்போது இயக்குநர் சங்கர் விழாவில் அவருடைய பேச்சில், பாரதிராஜா, சரத்குமார் நெளிந்த காமெடியைப் படிக்க அண்ணன் உண்மைத்தமிழனின் இந்த பதிவை கிளிக்கவும்
இந்த வார படம்
திரைப்படத்திற்கு கதை சொல்லும் பாங்கு மிகவும் முக்கியம். ஆனால் ஒரு படம் முழுவதையே ஹேண்டி கேமிரா கோணத்தில் சொல்ல முடியுமா..சொல்லியிருக்கிறார்கள் “கிளாவர் பீல்ட்” என்ற திரைப்படத்தில். நண்பன் பதவிஉயர்வு விழாவை படம்பிடிக்க ஒருவர் தொடங்குவதில் இருந்து ஆரம்பிக்கிறது. கேமிரா வழியாகவே நாமும் பார்ப்பது போன்ற உணர்வு. நன்றாக செல்லும் விழாவில், திடிரென்று கட்டடம் நடுங்க, எல்லோடும் வெளியே பார்க்கிறார்கள். ஒரு பெரிய ஏலியன் மற்றும் சிஷ்யபிள்ளைகளான சின்ன ஏலியன்கள், நியூயார்க் நகரத்தையே அழிக்க தொடங்க, உயிர்பிழைக்க ஓடுகிறார்கள். ஓடும்போது, சுதந்திர தேவியின் சிலையும், ப்ரூக்ளின் பாலமும் ஒருநிமிடத்தில் நொறுங்குவது திக். நம்ம பாணியில் சொல்லவேண்டுமானால், “ங்கொய்யாலே இது படம்டா..”
இந்த வார பாடல்
மைனா படத்தில் சில பாடல்களை கேட்க நேர்ந்தது. அதில் ஒரு சூப்பரான துள்ளலிசை பாடல் ஒன்று “ஜிங் சிக்கா” என்ற பாடலை கேட்டவுடன் எழுந்து ஒரு குத்தாட்டம் போடத் தோன்றுகிறது. என் காரில் வந்த அமெரிக்கர் ஒருவர் “ஓ வாவ்..வாட் இஸ் “சிங்க் சிக்கா” என்று கேட்ட போது என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. வேறுவழியில்லாமல் “இட்ஸ் எ கைண்ட் ஆப் புட் அயிட்டம்” என்று சொல்ல ஒரு மாதிரியாக பார்த்தார்
இந்த வார ஜோக்(18+)
பொதுவாக எனக்கு நிறைய ஏஜோக் தெரிந்திருந்தாலும் எழுதுவதில்லை. ஆனால் நண்பர் ஒருவர், ஒரு டீசண்டான ஏஜோக் எழுதுமாறு அன்பு கட்டளை இட்டதால் இந்த ஜோக். பிடிக்கவில்லையென்றால் மன்னிக்கவும்
கொடைக்கானலுக்கு ஒரு தம்பதியினர், தங்கள் 3 வயது குழந்தையுடன் டூர் சென்றனர். சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் ஹனிமூன் வந்த இடமும் அதுவே. அதனால் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போதும் அவர்களுக்கு ஹனிமூன் வந்த ஞாபகம் வரவே கண்வன் மனைவியைப் பார்த்து “ஏ..இந்த இடம் ஞாபகம் இருக்கா..நாம முதல்நாள் வந்தோமே” என குழந்தை “அப்பா..அப்ப நான் எங்கப்பா இருந்தேன்” என்றான், கண்வனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அடுத்த இடத்தைப் பற்றியும் கண்வன் சொல்ல “அப்பா..அப்ப நான் எங்கப்பா இருந்தேன்” என்று குழந்தை கேட்க கணவன் ஒன்றும் சொல்லவில்லை. குழந்தை தொணதொணப்பு ஒரு கட்டத்தில் அதிகமாக, கணவன் சொன்னான்.
“கொடைக்கானல் வர்றப்ப எங்கிட்ட இருந்தே. கொடைக்கானல் விட்டு கிளம்புறப்ப அம்மாகிட்ட இருந்த..”
(ஏண்ணே..ஏஜோக்கெல்லாம் எழுதுறேன்..நான் பிரபலபதிவராயிட்டன்ல..)))
18 comments:
nice
எப்படியோ உங்க வாசகனாக மாத்தி சந்தோஷப்பட வச்சுக்கிட்டுருக்கீங்க.
அண்ணே... இந்த வார பதிவுல இருந்து தயவு செய்து அந்த ரெண்டு பதிவுங்கள எடுத்துடுங்க... திரும்பவும் சண்டையை கெளர வேண்டாம்...
////////////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
nice
24 October 2010 7:13 PM
///////////////////////////////
நன்றி ரமேஷ்
//////////////////////////
ஜோதிஜி said...
எப்படியோ உங்க வாசகனாக மாத்தி சந்தோஷப்பட வச்சுக்கிட்டுருக்கீங்க.
24 October 2010 7:20 PM
////////////////////////
நன்றி ஜோதிஜி..வாசகனெல்லாம் பெரிய வார்த்தை...))
//////////////////////////
philosophy prabhakaran said...
அண்ணே... இந்த வார பதிவுல இருந்து தயவு செய்து அந்த ரெண்டு பதிவுங்கள எடுத்துடுங்க... திரும்பவும் சண்டையை கெளர வேண்டாம்...
24 October 2010 7:23 PM
//////////////////////////
கண்டிப்பாக அண்ணே..இந்த வார பதிவையே எடுத்து விட்டேன். படிக்கும் ஒருவர் மனது கூட புண்படக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்..அறிவுறுத்தலுக்கு நன்றி...
ராசாண்ணே....சோக்கு ஜுப்பரு...:))
Kothu parotta,sandwhich-nonveg varisaiyil itho Aveenga raasavin mixture juice... thingal thorum..
// ஒரு டீசண்டான ஏஜோக் எழுதுமாறு அன்பு கட்டளை இட்டதால் இந்த ஜோக்///
டீசிண்டில்லாத ஜோக் எப்படி இருக்கும்?? அது சரி ஜூஸ்ல இப்பதான் முதன் முதலா hot (சூடா? இல்லை மிளகாயா?) பார்க்கிறேன்,..
மொத்தத்தில் கலக்கல்
தொகுப்பு அருமை! நன்றி!
//////////////////////////
நாஞ்சில் பிரதாப் said...
ராசாண்ணே....சோக்கு ஜுப்பரு...:))
24 October 2010 9:02 PM
//////////////////////////
நன்றி பிரதாப்..
/////////////////////////////
MaduraiMalli said...
Kothu parotta,sandwhich-nonveg varisaiyil itho Aveenga raasavin mixture juice... thingal thorum..
25 October 2010 10:03 AM
/////////////////////////////
இப்படி ஏத்திவிட்டே கைபுள்ளை உடம்பு ரணகளமாக்குங்க..)))
//////////////////////////
jothi said...
// ஒரு டீசண்டான ஏஜோக் எழுதுமாறு அன்பு கட்டளை இட்டதால் இந்த ஜோக்///
டீசிண்டில்லாத ஜோக் எப்படி இருக்கும்?? அது சரி ஜூஸ்ல இப்பதான் முதன் முதலா hot (சூடா? இல்லை மிளகாயா?) பார்க்கிறேன்,..
மொத்தத்தில் கலக்கல்
25 October 2010 11:28 AM
/////////////////////////
டீசண்டில்லாத ஏஜோக் காதை பொத்தி கொள்வது மாதிரி இருக்கும்..))
வருகைக்கு நன்றிங்கோ..
////////////////////
எஸ்.கே said...
தொகுப்பு அருமை! நன்றி!
25 October 2010 11:59 AM
////////////////////
நன்றி எஸ்.கே..
அண்ணே, எனக்கொரு ஜூஸ் சூடா - பயபுள்ள
Vanakkam Raasa,
Ungala maathiri konjam thelivaa yosikkiravar 'தோற்கடிக்கபடவே முடியாத நபர் ஞானி nu ezhuthuradhu nambave mudiyalae. ஞானி ai enakku pala varudangala theriyum. Endha oru visayathilum oru thani karuthu adhuvum ethir-marai karuthu therivippavar indha ஞானி. Appadi sonna than, thani thanmai-nu thanakku thaane nanburavar. Neenga sonna vivadhathai naan paarkala. Adhule avar sariya paesavum vaaippu irukku. Aana dont generalize his debate skills. Naan ஞானிyudan irendoru naal pazhagiya vagayilum, matra vivaadhangalil paartha vagayilum, avar than karuthe sari ennum thinnai pechu saamarthiyare thavira, perum thiramaisaalinu solla iyaladhu. Sooo, ungala maathiri sariya yosikkiravanga thappana karutha veliyida vendam .
Nandri.
Sooo, ungala maathiri sariya yosikkiravanga thappana karutha veliyida vendam .
Nandri.
// Yaaru ivarraah... Douglas annae saravana (comedy piece).. itha naa sonnaennu yaar kittaeyum sollidathinga..
//மேடையில் பேசத்தெரியாத நபர்களில், இதுவரை, மனோரமா, ரஜினிகாந்த்//
Medayila nalla pesara raasaa sollitaaru doi
Post a Comment