Thursday, 21 October 2010

எந்தலைவனைப் பத்தி தப்பாவா பேசுற…

நடுத்தர வர்க்கத்தில் பிறந்த எனக்கு , எல்லாமே அட்ஜஸ்ட் பண்ணியே பழகிப்போய்இருந்தது. கூட்டத்தில் கல்லெடுத்து அடிக்கிறானா, எடு ஓட்டம், டிராபிக் கான்ஸ்டபிள் பிடித்துவிட்டாரா, கொடு 50 ரூபாய், வருகிற மாதத்தில் ஒருதடவை ரெஸ்டாரெண்டில் சாப்பாடு கட்பண்ணினால் டாலி ஆகிவிடும். பஸ்ஸில் யாராவது தகராறு பண்ணுகிறானா, கீப் கொயட். எதற்கு அவனிடத்தில் சண்டை போட்டு பிரச்சனையாகி சட்டையை கிழித்து கொள்ள.

எல்லாமே இப்படியே பழகிப்போய்விட்டது. ஆனாலும் சிலநேரங்களில் என்னை அறியாமல் வந்த சமூககோபம் கூட வயிற்று பசியை நினைக்கும்போது பஞ்சாய் பறந்து போய்விட்டது. தெருவில் யாராவது குடித்துவிட்டு தகராறு பண்ணினால் எனக்கென்ன, என்னை அடிக்காதவரை. அப்படியே அடித்தாலும் என்ன, வாங்கிட்டுதான் போவோமே, குடியா முழுகிவிடும். சிலநேரங்களில் என்மேலே எனக்கு வெறுப்பு வந்தது. ஆனால் என்னதான் செய்வது, இப்படிதான் வாழவேண்டியிருந்தது.., இந்த உலகத்தில் இன்னும் உயிரோடு இருப்பதற்கு.

அப்படி இருந்த காலங்களில்தான், சினிமா படங்கள் எனக்கு சின்ன ஆறுதலை தந்தது. படத்தில் ஹீரோ, சமுகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக்கேட்டபோது எனக்கும் பொங்கிகொண்டு வந்தது. தெருவில் அடாவடியாய் வசூல் செய்யும் வில்லனை ஹூரோ புரட்டி எடுத்தபொது என்னை அந்த ஹீரோவாக கற்பனை பண்ணிகொண்டு மகிழ்ந்தேன். அபலை பெண்ணை கற்பழிக்க வரும் வில்லனில் மூக்கில் ஹூரோ குத்து விடும்போது என்னை அறியாமலே என் விரல்கள் மடங்கியது. அந்த காலங்களில் தான் நானும் என் நண்பனும் ஒரு நடிகரின் படங்களைப் பார்ப்பதில் கவனம் செலுத்தினோம். என்ன ஒரு வசீகரம், என்ன ஒரு நடை, என்ன ஒரு ஆதிக்கம். மயங்கிபோனோம். அவருடைய படங்கள் ரீலீஸா, என்ன கிளாஸ் இருந்தாலும் பள்ளிக்கூடம் கட். தலைவரை விட படிப்பு முக்கியமில்லை என்ற கருத்து மெல்ல என் மனத்தில் ஆழப்பதிந்தது.

மாரிமுத்து கடையில் டீ குடிக்கிறோமோ இல்லையோ, நடிகருடைய படங்களை சேகரிக்க சென்றோம். தினமும் அவர் வாங்கும் தினசரிகளில் அவருடைய படங்கள் கவனமாக கட் செய்யப்பட்டு எங்கள் வீடுகளை அலங்கரித்தது. நான் மிடில்கிளாஸ் மனப்பான்மையை மறந்த தருணங்கள் , தலைவனைப் பற்றி யாரவது தவறாக பேசியதால் வருபவை . படு லோக்கலாகி(ஜாக்கிசேகர் மன்னிக்க..) போனேன். யாராவது தலைவனைப் பற்றி தவறாக பேசினால் முதலில் அடித்துவிட்டுதான் பேச்சு. அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த 10 நாள் காசு முதல்நாள் முதல் ஷோவில் காலியானது. காசுபோனால் என்ன..தலைவன் படம் பார்த்தாச்சுல்ல..

அப்போதுதான் எனக்கு அவன் அறிமுகமானான். கல்லூரியில் புதிதாக சேர்ந்திருந்தான். பெயர் மார்க்ஸ். பெயரைக் கேட்டவுடனே எனக்கு பிடிக்கவில்லை. அது என்ன மார்க்ஸ். அவனைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை. பெயருக்கேத்தாற்போலே கம்யூனிசம் பேசினான், குறிப்பாக தலைவனைப் பற்றி. எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நல்லவன் ஒருவன் தலைவனைப் பற்றி பேசினாலே அடிப்பேன். இவன் பேசினால் விடுவேனா..நேராக அவனிடத்தில் சென்று எச்சரித்தேன்…

“மார்க்ஸ்..”

“சொல்லுப்பா..”

“நீ எவனா வேணா இருந்துட்டு போ..ஆனா தலைவனைப் பற்றி எதுவும் தப்பா பேசின..பிச்சுடுவேன்..”

“ஏன்..உண்மையைத்தானே பேசுனேன்..”

“என்னத்த கிழிச்ச…****** மவனே..”

கோபத்தில் முதல்முதலாக எனக்கு கெட்டவார்த்தை வந்தது. அப்பவே எழுந்து அவன் முகத்தில் குத்துவிடலாம் என்று தோன்றியது. அடக்கிகொண்டேன் சூழ்நிலை அறிந்து..

“உனக்கென்னடா தெரியும், தலைவனைப் பத்தி..”

“அவர்மேலே எனக்கென்னடா கோபம். என் கோபமெல்லாம் உன்மேலதாண்டா..”

“***** சாவடிச்சுருவேன்..நாங்க படம் பார்த்தா உனக்கென்னடா..எறியுதா..***** மூடிட்டு போவியா..”

“நல்லா பாரு..யார் வேணாமுன்னு சொன்னா..ஆனால் அப்பன் வெயிலுல்ல தினமும் உழைச்சு சம்பாதிச்ச காசை ஒருநிமிசத்துல காலி பண்ணுறியே, அதனால்தான் கோபம் வருது…”

“மவனே..என் அப்பன் சம்பாதிச்ச காசை நான் என்னவேணாலும் பண்ணுவேன். உனக்கென்ன..”

“ம்..பண்ணு..ஆனா, உன்னைப் பார்த்து உன் நண்பன் பண்ணுறான். அவனைப் பார்த்து அவன் நண்பன் பண்ணுறான். அவனைப் பார்த்து இன்னும் நாலுபேர் பண்ணுறான், இப்படியே பார்த்து பார்த்து நம்ம தலைமுறையே நாசமாப் போயிடும்டா..நாமதான் இப்படி இருக்கோம், அட்லீஸ்ட் அடுத்த தலைமுறையாவது நல்லா வளர்ப்போம்டா..கொஞ்சம் யோசிச்சு பாருடா..”

ம்…ஹூம்..இனிமேல் இவனிடத்தில் பேசி பிரயோஜனமில்லை என்று முடிவெடுத்தேன். அடியைப் போட்டால்தான் இனிமேல் தலைவனைப் பத்தி தப்பா பேசமாட்டான் என்று முடிவெடுத்தேன். நானும் என் நண்பனும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினோம். கல்லூரி முடிந்து அவன் ஒரு சந்து வழியாகத்தான் தினமும் போவான். அங்கு வைத்து அடிபின்னினால் யாருக்கும் கேக்காது என்று முடிவெடுத்தோம். நினைத்தால் போல சரியாக மாட்டினான்..இருக்கிற கோபத்தையெல்லாம் அவனிடம்தான் காட்டினேன். அசுர கோபம் வந்தது. ஒரு சிறிய கட்டை ஒன்று வைத்திருந்தேன். அதை எடுத்து அவன் தலையில் ஒரு அடி..வெறித்தனமாக கத்தினேன்..

“ங்கோத்தா…யாரைப் பத்தி தப்பா பேசுற..”

மனம் முழுவதும் திருப்தியாக இருந்தது. அடித்த அடியில் கீழே விழுந்து விட்டான். பெருமிதமாக இருந்து. காலரை தூக்கி விட்டுக்கொண்டேன். இவனைப் பார்த்தாவது அடுத்தவன் பேசமாட்டானில்ல….நண்பன் தடுத்தான்..

"டே…அவன் தலையில் இருந்து ரத்தம் வருதுடா..”

“விடுடா..நாய் சாகட்டும்..”

“டே..வேணான்டா..வா, வீட்டுல கொண்டாவது விட்டு விட்டு வந்துவோம்..”

திடிரென்று எனக்கு மிடில்கிளாஸ் மனப்பான்மை விழித்துக் கொண்டது. ஆஹா..பிரச்சனையாயிருமோ..பிரின்ஸ்பாலிடம் கம்ப்ளெயின் கொடுத்தா..பதறிப்போனேன். அவசரமாக விழுந்து கிடக்கும் அவனிடம் சென்றேன். கண்முன் தெரியாமல் அடித்திருந்தோம். அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.. கூலிவேலை பார்க்கும் அவன் அப்பா தீபாவளிக்கு எடுத்து கொடுத்த ஒரே சட்டை பத்து இடங்களில் கிழிந்திருந்தது. அவன் மற்ற சட்டைகள் போட்டு இதுவரை நான் பார்த்ததில்லை. அவனுடைய உதடு கிழிந்து ரத்தம் வந்தது. தலையிலும் நல்ல அடி..முதன்முதலாக அவன்மேல் எனக்கு பரிதாபம் வந்தது..

“டே..எந்திரு..எந்திரு..ஏன் இப்படி பேசணும்..இப்படியெல்லாம் அடி வாங்கணும்..தேவையா..”

அவனை தூக்கினோம். அவனால் நிற்க முடியவில்லை. என்மேல் சாய்ந்து கொண்டான். என் தோள்மேல் கைபோட்டு கொண்டான். அவனை அப்படியே மெதுவாக நடத்திக் கொண்டு போனேன். முதலாக என்மேல் எனக்கு கோபம் வந்தது. சே..என்ன ஒரு கோபம். என்ன ஒரு அடக்கமாட்டாத கோபம். தப்பு செய்துவிட்டேன். அவன் என்னிடத்தில் எதுவும் பேசவில்லை.

அவன் வீடு வந்தது. வீட்டில் யாரும் இல்லை. அவனை விட்டுவிட்டு திரும்பும்போது, அடக்க மாட்டாமல் அவனிடம் கேட்டேன்..

“இனிமேல் என் தலைவனைப் பத்தி ஏதாவது பேசுவியா..”

அந்த பொழுதும் அவன் சிரித்தான். இன்னும் வாயில் ரத்தம் ஒழுகிக் கொண்டு இருந்தது..அவன் கண்களைப் பார்த்தேன். அடி வாங்கின வலி அவன் கண்களிடம் தெரிந்தது.வாயில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே அந்த வலியிலும் அவன் சொன்னான்..

“பேசுவேன்..உனக்காக, எனக்காக..உன் குழந்தைகளுக்காக..என் குழந்தைகளுக்காக…இன்னும் சத்தமா…”

காலை விந்தி, விந்தி உள்ளே சென்றான். முதல்முதலாக யாரோ என்னை செருப்பால் அடித்தது போல் இருந்தது..

42 comments:

Thekkikattan|தெகா said...

படு பயங்கரமா இருக்கு... இது மாதிரி எத்தனையோ பேர் - பகிர்ந்தமை நன்றி!

Unknown said...

எப்பண்ணே இதை விட்டு வெளிய வருவிங்க? 

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Thekkikattan|தெகா said...
படு பயங்கரமா இருக்கு... இது மாதிரி எத்தனையோ பேர் - பகிர்ந்தமை நன்றி!
21 October 2010 6:45 PM
//////////////////////////
நன்றி தெகா..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
முகிலன் said...
எப்பண்ணே இதை விட்டு வெளிய வருவிங்க?
21 October 2010 7:37 PM
////////////////////////////
நடிகர் கடஅவுட்டுக்கு கெட் அவுட் சொல்லும் வரை. கருப்பாயி கிழவிகள் உருவாகத வரை. ஒருத்தரவாது யோசிக்க ஆரம்பிக்கும்வரை..நமக்காக..நம் பிள்ளைகளுக்காக...

Unknown said...

அருமை!

M S Sathish said...

அண்ணே .. இது உண்மை சம்பவமா ? இல்லை கற்பனையா ?

Philosophy Prabhakaran said...

அது சரி.... இவ்வளவு கூத்து நடந்தபிறகு நீங்க திருந்துனீர்களா... இல்லையா...

taaru said...

ரொம்ப அழகா எழுதி இருக்கே அண்ணே....[உரிமைல ஒருமை...கோவிச்சுகாதே அண்ணே...]... நல்லா வந்து இருக்கு...வாழ்த்துக்கள்...

Anonymous said...

அண்ணே இப்போ எந்த ஊரிலே, என்ன தொழில் பண்ணுறீங்க?

Prathap Kumar S. said...

//நடிகர் கடஅவுட்டுக்கு கெட் அவுட் சொல்லும் வரை. கருப்பாயி கிழவிகள் உருவாகத வரை. ஒருத்தரவாது யோசிக்க ஆரம்பிக்கும்வரை..நமக்காக..நம் பிள்ளைகளுக்காக... //

உங்க சமூகசிந்தனை பாராட்டுக்குரியது....உங்க முயற்சியை வீடாதீங்க ராசாண்ணே...

லெமூரியன்... said...

Chanceless raasa.

Anonymous said...

நேற்று கூட மூன்று பின்னூட்டங்கள் மிக கேவலமான வசையில் வந்திருந்தது. ஆனாலும் பேசுவேன்.

அறிவில்லாதவன் said...

பகுத்தறிவு என்பதை இல்லாமல் பார்த்துகொள்ளும் அரசியலும், சினிமாவும் இருக்கும் வரை எல்லோரும் மூடர்களாக தான் இருப்பார்கள். முட்டாளா இருகிறதில பெருமை வேறு.சித்த சுவாதீனம் இல்லாத 400 பேர்களுக்கு தேடிசென்று மூன்று வேளை உணவளித்து காக்கும் ஒரு நல்லவன பற்றி பேச நாதி இல்ல. நடிகன பற்றி ஆயிரம் முறை பேசி பேசி மாஞ்சு போகிறார்கள் வெட்கம் கேட்ட முட்டாள் மனிதர்கள்

Radhakrishnan said...

:) உண்மையிலுமே மிகவும் அருமை.

Unknown said...

ஆயிரமாயிரம் மார்க்ஸ் பிறக்க வேண்டுவோம்!
மிக அருமையான இந்த பதிவை ஆயிரம் முறை மீள்பதிவு செய்தாலும், பின்னூட்டமிட வருகிறேன்...

நசரேயன் said...

அண்ணே உங்களுக்கு கட்அவுட் வைக்கணும்

Anonymous said...

அண்ணே சினிமா ரசிகர்களை கிழிப்பதுபோல, அரசியல் தொண்டன்களையும் ஒரு புடி புடிங்கண்ணே. அப்பன் காசுல தண்ணியடிச்சு வீணாப்போயிட்டு இருக்கற மாணவர்களைப் பத்தியும் எழுந்தனும்ணே. அத பாத்து மக்கள் திருந்துரானுங்களோ இல்லியோ, உங்கள் எழுத்துல படிக்கறப்போ ஒரு உணர்ச்சி வருதுண்ணே. அதுக்காத்தான். Sakthi

jothi said...

உண்மையில் எனக்கும் இதேவிதமான வேதனை உண்டு,.. வட்டிகடையில் 200 ரூபாய் வாங்கி கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கையில், செய்கிற வேலையை ஒதுக்கிவிட்டு மண்டி போட்டு மலை ஏறி படம் வெற்றி பெற வேண்டுமென நேர்த்திக்கடன் செய்கையில், நெஞ்சம் கனத்துதான் போகிறது. யாருக்காக, எதற்காக, போன்ற கேள்விகள் மட்டும் தொக்கி நிற்கிறது. என்ன செய்வது?? நீங்கள் முதல் பாராவில் சொன்னதுபோல் நம் வேலையை பார்த்துக்கொண்டே செல்ல வேண்டியதுதான்,.. ஊரைத் திருத்த நம்ம என்ன பெரியாரா???

MaduraiMalli said...

Bossu yaaru photo yaedutha... manashu vittu sirichu irukkingalae.. ungala sutthi poda sollunga :)

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Karikal@ன் - கரிகாலன் said...
அருமை!
21 October 2010 8:11 PM
///////////////////////
ந்ன்றி க்ரிகாலன்

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
M S Sathish said...
அண்ணே .. இது உண்மை சம்பவமா ? இல்லை கற்பனையா ?
21 October 2010 8:45 PM
////////////////////////
நீங்களே கண்டுபிடியுங்களேன்..)))

அவிய்ங்க ராசா said...

////////////////////////
philosophy prabhakaran said...
அது சரி.... இவ்வளவு கூத்து நடந்தபிறகு நீங்க திருந்துனீர்களா... இல்லையா...
21 October 2010 9:45 PM
/////////////////////////
திருந்தியதால்தானே எழுத முடிந்தது

அவிய்ங்க ராசா said...

/////////////////////
taaru said...
ரொம்ப அழகா எழுதி இருக்கே அண்ணே....[உரிமைல ஒருமை...கோவிச்சுகாதே அண்ணே...]... நல்லா வந்து இருக்கு...வாழ்த்துக்கள்...
21 October 2010 11:07 PM
///////////////////////
உங்களை என்னைக்கு கோவிச்சிருக்கேன் தாரு..ந்ன்றிகள்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
Anonymous said...
அண்ணே இப்போ எந்த ஊரிலே, என்ன தொழில் பண்ணுறீங்க?
21 October 2010 11:19 PM
////////////////////////////
ஏண்ணே..எதுவும் லோன் கொடுக்க போறீங்களா..)))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
கடஅவுட்டுக்கு கெட் அவுட் சொல்லும் வரை. கருப்பாயி கிழவிகள் உருவாகத வரை. ஒருத்தரவாது யோசிக்க ஆரம்பிக்கும்வரை..நமக்காக..நம் பிள்ளைகளுக்காக... //

உங்க சமூகசிந்தனை பாராட்டுக்குரியது....உங்க முயற்சியை வீடாதீங்க ராசாண்ணே...
21 October 2010 11:41 PM
/////////////////////////
நன்றி பிரதாப்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
லெமூரியன்... said...
Chanceless raasa.
22 October 2010 12:19 AM
////////////////////////
நன்றி லெமூரியன்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
itsmeena said...
நேற்று கூட மூன்று பின்னூட்டங்கள் மிக கேவலமான வசையில் வந்திருந்தது. ஆனாலும் பேசுவேன்.
22 October 2010 12:34 AM
//////////////////////////////
கண்டிப்பாக மீனா..தொடருங்கள்..

அவிய்ங்க ராசா said...

////////////////////
அறிவில்லாதவன் said...
பகுத்தறிவு என்பதை இல்லாமல் பார்த்துகொள்ளும் அரசியலும், சினிமாவும் இருக்கும் வரை எல்லோரும் மூடர்களாக தான் இருப்பார்கள். முட்டாளா இருகிறதில பெருமை வேறு.சித்த சுவாதீனம் இல்லாத 400 பேர்களுக்கு தேடிசென்று மூன்று வேளை உணவளித்து காக்கும் ஒரு நல்லவன பற்றி பேச நாதி இல்ல. நடிகன பற்றி ஆயிரம் முறை பேசி பேசி மாஞ்சு போகிறார்கள் வெட்கம் கேட்ட முட்டாள் மனிதர்கள்
22 October 2010 12:45 AM
//////////////////////
தங்கள் கருத்துக்கு நன்றி..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
V.Radhakrishnan said...
:) உண்மையிலுமே மிகவும் அருமை.
22 October 2010 1:02 AM
//////////////////////
நன்றி ராதாகிருஷ்ணன்

அவிய்ங்க ராசா said...

//////////////////////
தஞ்சாவூரான் said...
ஆயிரமாயிரம் மார்க்ஸ் பிறக்க வேண்டுவோம்!
மிக அருமையான இந்த பதிவை ஆயிரம் முறை மீள்பதிவு செய்தாலும், பின்னூட்டமிட வருகிறேன்...
22 October 2010 2:43 AM
//////////////////////
நன்றி தஞ்சாவூரான்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
நசரேயன் said...
அண்ணே உங்களுக்கு கட்அவுட் வைக்கணும்
22 October 2010 4:12 AM
//////////////////////////
நன்றி நாசரேயன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Anonymous said...
அண்ணே சினிமா ரசிகர்களை கிழிப்பதுபோல, அரசியல் தொண்டன்களையும் ஒரு புடி புடிங்கண்ணே. அப்பன் காசுல தண்ணியடிச்சு வீணாப்போயிட்டு இருக்கற மாணவர்களைப் பத்தியும் எழுந்தனும்ணே. அத பாத்து மக்கள் திருந்துரானுங்களோ இல்லியோ, உங்கள் எழுத்துல படிக்கறப்போ ஒரு உணர்ச்சி வருதுண்ணே. அதுக்காத்தான். Sakthi
22 October 2010 10:51 AM
/////////////////////
நன்றி சக்தி..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
jothi said...
உண்மையில் எனக்கும் இதேவிதமான வேதனை உண்டு,.. வட்டிகடையில் 200 ரூபாய் வாங்கி கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கையில், செய்கிற வேலையை ஒதுக்கிவிட்டு மண்டி போட்டு மலை ஏறி படம் வெற்றி பெற வேண்டுமென நேர்த்திக்கடன் செய்கையில், நெஞ்சம் கனத்துதான் போகிறது. யாருக்காக, எதற்காக, போன்ற கேள்விகள் மட்டும் தொக்கி நிற்கிறது. என்ன செய்வது?? நீங்கள் முதல் பாராவில் சொன்னதுபோல் நம் வேலையை பார்த்துக்கொண்டே செல்ல வேண்டியதுதான்,.. ஊரைத் திருத்த நம்ம என்ன பெரியாரா???
22 October 2010 11:25 A
////////////////////////////
ஆமாம் ஜோதி..ஏதோ இணையம் கிடைத்த்தால் இதையும் சொல்ல முடிகிறது..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
MaduraiMalli said...
Bossu yaaru photo yaedutha... manashu vittu sirichu irukkingalae.. ungala sutthi poda sollunga :)
22 October 2010 1:06 PM
/////////////////////////
இல்லைப்பா..அவசரத்துக்கு உங்க்ள் போட்டோதான் கிடைச்சது..)))

Pradeep said...

Enthiranukkum enthirikum enbathae endhiranin kathai..

Anonymous said...

Nalla poluthu poguthu pola....

Arun said...

இந்த விஷயம் எல்லாம் இங்க எழுதுன நீங்க நினைக்குற மக்களுக்கு போய் சேராது. உங்க blog படிக்கிறவங்க எல்லாம் நல்ல படிச்சி settle ஆகி இருக்கவங்கதான். Blog la சொன்ன விஷயத்த சென்னைக்கு வந்த அப்புறம் மேடை போட்டு இல்லைனா அந்த நடிகர் படம் ஓடுற theatre ல இந்த ப்ளோக்கை slidea போடுனங்க.. ஒருத்தராவது திரிந்துவங்க.. சரியாண்ணே!?

-Arun

அரபுத்தமிழன் said...

போட்டோ சிரிக்க வைக்குது,
பதிவு பதற வச்சாலும் சிந்திக்க வைக்குது.
அருமையான பதிவு ராசா.

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Anonymous said...
Nalla poluthu poguthu pola....
24 October 2010 6:38 PM
//////////////////////////
ஆமாண்ணே..ஏதோ உங்க புண்ணியத்துல..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Arun said...
இந்த விஷயம் எல்லாம் இங்க எழுதுன நீங்க நினைக்குற மக்களுக்கு போய் சேராது. உங்க blog படிக்கிறவங்க எல்லாம் நல்ல படிச்சி settle ஆகி இருக்கவங்கதான். Blog la சொன்ன விஷயத்த சென்னைக்கு வந்த அப்புறம் மேடை போட்டு இல்லைனா அந்த நடிகர் படம் ஓடுற theatre ல இந்த ப்ளோக்கை slidea போடுனங்க.. ஒருத்தராவது திரிந்துவங்க.. சரியாண்ணே!?

-Arun
24 October 2010 10:38 PM
///////////////////////////
காலேஜ் படிக்கிற எவ்வளவோ பேரு பிளாக்கை படிக்கிறாயிங்கண்ணே. அட்லீஸ்ட் ஒருத்தர் யோசிப்பாருல்லண்ணே. அப்படியே இல்லைண்ணா கூட, நீங்க யாருக்கிட்டயாவது சொல்ல மாட்டிங்களா..அப்படியே பரவி, ஒருத்தர் யோசிக்க ஆரம்பிச்சா கூட போதுமுண்ணே..மனசு திருப்தியா இருக்கும்ணே...

அவிய்ங்க ராசா said...

////////////////////////
அரபுத்தமிழன் said...
போட்டோ சிரிக்க வைக்குது,
பதிவு பதற வச்சாலும் சிந்திக்க வைக்குது.
அருமையான பதிவு ராசா.
24 October 2010 11:11 PM
////////////////////////////
நன்றிண்ணே...

Arun said...

///////////////////////////
காலேஜ் படிக்கிற எவ்வளவோ பேரு பிளாக்கை படிக்கிறாயிங்கண்ணே. அட்லீஸ்ட் ஒருத்தர் யோசிப்பாருல்லண்ணே.
///////////////////////
கருப்பாயி பாட்டியோட வாரிசு college ல படிகுதாண்ணே?? College la படிக்குற கருப்பாயி பேரன் தறுதலையா இருக்க மாட்டண்ணே!! நீங்க சொல்ற blog விஷயம் தறுதலைக்கு தாண்ணே!! அந்த தறுதலை எல்லாம் blog படிகாதுண்ணே!!
-Arun

Post a Comment