Wednesday 20 October, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார ஆச்சர்யம்

கலைஞர் இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டார், மதுரையில் அதிமுக கூட்டிய போராட்டத்திற்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்கும் என்று. அவ்வளவுதான், இனிமேல் அதிமுக என்று இருந்த நிலையை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்திருக்கிறது. என்னதான் பொதுமக்கள் கலந்து கொள்ளவில்லை என்று சப்பைக் கட்டு கட்டினாலும், இதில் கலந்து கொண்ட தொண்டர்கள் அனைவரும் ஆளுக்கு 10 ஓட்டு கொண்டுவந்தால், தி.மு.கவுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். கலைஞர் சுதாரிக்கவேண்டிய நேரமிது.

ஆச்சர்யம் என்னவென்றால், அழகிரி கோட்டையான மதுரையில் சொல்லிவைத்து அடித்ததுதான். ஏண்ணே..இப்படியும், இங்கிட்டு அமெரிக்காவிலயும், ஒரு மாநாடு போட்டாதான் என்னவாம். நாங்களும், தினமும் ஆபிஸ்ஸுக்கு போய் போரடிக்குதுல்ல

இந்த வார கொடுமை

நான் படித்த திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வர் மேல் கன்னியாஸ்திரி எழுப்பிய பாலியல் புகார் கண்டு அதிர்ந்து போனேன். ஒழுக்கம், எளிமை, தூய்மை, இது போன்ற பண்புகள் எல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில்தான் இன்றைய பாதிரியார்கள் உள்ளனர் என்று சொன்னால் சரியாக இருக்கும். படத்தில் காண்பிப்பது போல், நீளமான அங்கி ஒன்றை போட்டு கொண்டு எப்போதும் சிரித்த முகத்துடன், “பிரைஸ் த லார்ட் சன்” என்று சொல்லும் பாதிரியார்களை இனிமேல் கனவில்தான் பார்க்கமுடியும் போலிருக்கிறது. ஆடம்பர வாழ்க்கை, சாதி அரசியல், பாலியல் புகார்கள், இன்னும் பல என்று சொல்லிக்கொண்டே போகலாம். எப்போதும் பாதிரியார்களை மரியாதையுடன் பார்க்கும் கிறிஸ்தவ சமூகம், இனிமேல் அப்படி பார்க்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை

இந்த வார மாற்றம்

எனக்கு கிடைக்கும் நாலு ஓட்டுகளை பற்றி நான் கிண்டலாக எழுதிய கடந்த பதிவில் “நீ முதல்ல ஓட்டு போட்டியா” என்று நண்பர் ஒருவர் எழுதியது என் சிந்தனையை கிளறியது(கேசரி இல்லைண்ணே..). இதுவரை முடிந்தவரை தமிழிஸில் ஓட்டு போட்டுவந்த நான், தமிழ்மணத்தில் ஓட்டு போட ஆரம்பித்திருக்கிறேன், நல்ல பதிவுகளை படிக்கும்போது. என்னமோ தெரியவில்லை, இப்போதெல்லாம் தமிழ்மணம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இண்ட்லிக்கு மாறிப்போன தமிழிஸ் இப்போதெல்லாம், சட்னி இல்லாத இட்லி போல் இருக்கிறது..

இந்த வார பாடல்

இந்த பாடலை கண்டிப்பாக யாரும் கேட்டிருக்க மாட்டீர்கள். லௌடு ஸ்பீக்கரை கண்டுபிடிப்பதற்கு காரணமான நடிகர் டாகடர் ராஜசேகரின் தம்பி நடித்த “கோல்மால்” என்ற ஒரு படத்தின் “நீ பேசும்” என்று ஒரு பாடல், தற்போது கேட்க நேர்ந்தது. பாடலின் நடுவில் ஹீரோ, ஹீரோயினுக்கும் தரும் பிரெஞ்ச் டைப் முத்தத்தை பார்க்க மாட்டாமல் பொறாமை காரணமாக கண்ணை மூடிக்கொண்டாலும், ஏதோ பாடல் சுகமாகத்தான் இருந்தது

இந்த வார பதிவு

படிக்கும்போதே திக்கென்று இருக்கிறது ஆட்டோ சங்கர் வாக்குமூலத்தை படிக்கும்போது. கீழ்கண்ட இந்த பதிவு கடஅண்ட் பேஸ்டாக இருந்தாலும், திக்கென்று இருக்கிறது

http://ragariz.blogspot.com/2010/10/blog-post_19.html

இந்த வார படம்

கடந்த வாரம் இரண்டு படங்களை பார்க்க நேர்ந்தது. “செக்ஸ் அண்ட் சிட்டி” என்ற ஒரு படம் நான்கு நியூயார்க் பெண்களின் வாழ்க்கை பற்றியது. சிலநேரம் அமெச்சூர்தனமாக இருந்தாலும், தனது திருமணத்திற்காக அலங்காரம் பண்ணிக் கொண்டு அலப்பறையாக மேரேஜ் ஹாலுக்கு வந்து மாப்பிள்ளை ஓடிவிட்டால், ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்று ஒரு சீன்(அது இல்லைண்ணே..) சூப்பர். இன்னும் மனதில் நிற்கிறது. நடிகை ஜெசிகா பார்கர் என்று நினைக்கிறேன்..ம்ம்ம்..மூச்சுவிடத்தான் முடிகிறது..ஹி..ஹி..

அடுத்த படம், ஜிம் கேரியின் அலட்டலான “லையர், லையர்..” எப்போதும் பொய் சொல்லியே வக்கில் வாழ்க்கை நடத்தும் லையாரான லாயே ஜிம்கேரி, ஒருநாள் முழுதும் உண்மைதான் பேசவேண்டும் என்ற நிலைவந்தால் என்ன ஆகும் என்பதை வயிறு வலிக்க வலிக்க சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக, அரைகுறையாக டிரெஸ் பண்ணி கொண்டு லிப்டில் வரும் இளம்பெண்ணிடம், பொய்பேசமுடியாமல், உண்மைபேசும் ஜிம்கெரியின் அந்த டயலாக்…ச்சீ..ச்சீ….))))

23 comments:

Gobi said...

Juice'la sakkara kammi thala... innum nalla puliya vaalthukkal

அரபுத்தமிழன் said...

பாதிரியார்களும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் என்பது இயற்கையோடு ஒத்தது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்.

Prathap Kumar S. said...

//இண்ட்லிக்கு மாறிப்போன தமிழிஸ் இப்போதெல்லாம், சட்னி இல்லாத இட்லி போல் இருக்கிறது//

அப்படி இல்ல ராசாண்ணே...தமிழ்மணத்துக்கு இன்ட்லி எவ்வளோ பரவால்ல...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

'pro bono et vero'

ஜோதிஜி said...

நல்லாயிருக்கு உங்கள் நோக்கம்.

taaru said...

//இனிமேல் அதிமுக என்று இருந்த நிலையை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்திருக்கிறது.//
அது தி.மு.க தானே? அண்ணா?

அட நீ வேற அண்ணே... மாநாடு நடந்த நாலு மணி நேரம் மதுரைல எல்லா ஏரியா வும் பவர் கட் ஆம்..எவனும் டிவி ல லைவ் பாக்க முடியாம பண்ணிட்டாங்க... எல்லாம் எங்கள் அ..நெ...ரின் அரும்பணி.... வாழ்க... வாழ்க.....

//பொய்பேசமுடியாமல், உண்மைபேசும் ஜிம்கெரியின் அந்த டயலாக்…ச்சீ..ச்சீ….)))//
இப்டி எல்லாம் தனியா படம் பாத்து.. வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டா... இரவு பத்து டு பத்தரைகுள்ள பாண்டி முனீஸ்வரன் வந்து கண்ண குத்திடுவாரு.. பாத்துக்கோங்க.....:):):):):P

jothi said...

// கலைஞர் சுதாரிக்கவேண்டிய நேரமிது.//

கலைஞர் சூதானமாத்தான் இருக்காருண்ணே,.. நாமதான்,.. ம்ம்ம் என்னத்த சொல்ல??

//நான் படித்த திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வர் மேல் கன்னியாஸ்திரி எழுப்பிய பாலியல் புகார் கண்டு அதிர்ந்து போனேன்//

அந்த பெண்ணுக்கு எவ்வளவு பிரச்சனைகள் வரும் எனத்தெரிந்தும் தைரியமா சொன்னுச்சு??? இந்தபெண்ணால் எத்தனை பெண்களின் கற்பு காப்பற்றப்பட்டிருக்கிறது?? இல்லையாண்ணே??

jothi said...

//நல்ல பதிவுகளை படிக்கும்போது. என்னமோ தெரியவில்லை, இப்போதெல்லாம் தமிழ்மணம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது//

பிரச்சனை பதிவுகளா இல்லை திரட்டியாண்ணே?? ஏன்னா தமிழ்மணத்தில் வருகிற பதிவுகள் இண்ட்லியிலும் இருக்கின்றன,.. தமிழ்மணத்தில் ஓட்டு போடும் போது தமிழிஷிலும் ஒரு ஓட்டு போட்டுவிடலாம். அவை தமிழிஷிலும் ஹிட்டாகும்,..

//இண்ட்லிக்கு மாறிப்போன தமிழிஸ் இப்போதெல்லாம்,//

ஆனால் நீங்க சொன்ன புகாரை நானும் ஒப்புக்கொள்கிறேன்,..

jothi said...

//பாடலின் நடுவில் ஹீரோ, ஹீரோயினுக்கும் தரும் பிரெஞ்ச் டைப் முத்தத்தை பார்க்க மாட்டாமல் பொறாமை காரணமாக கண்ணை மூடிக்கொண்டாலும், ஏதோ பாடல் சுகமாகத்தான் இருந்தது//

தப்பிச்சிங்க,.. கண்ணை மூடியதால்தான் சுகமாக இருந்திருக்கிறது

jothi said...

//நடிகை ஜெசிகா பார்கர் என்று நினைக்கிறேன்..ம்ம்ம்..மூச்சுவிடத்தான் முடிகிறது..ஹி..ஹி..//

நடிகை மூச்சுவிட்டதை ஏன் பார்த்தீங்க??

//அடுத்த படம், ஜிம் கேரியின் அலட்டலான “லையர், லையர்..”//

கலக்கலான படம் இல்லண்ணே??

jothi said...

மிக்ஸர் சூஸ் சூப்பருண்ணே,..

Philosophy Prabhakaran said...

பதிவுலக சண்டை பற்றி புதுசா எதுவும் எழுதலைய அண்ணே...

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Gobi said...
Juice'la sakkara kammi thala... innum nalla puliya vaalthukkal
19 October 2010 9:56 PM
///////////////////////////
சக்கரை உடம்புக்கு ஒத்துக்காதுண்ணே..ஹி..ஹி

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
அரபுத்தமிழன் said...
பாதிரியார்களும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் என்பது இயற்கையோடு ஒத்தது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்.
19 October 2010 10:15 PM
//////////////////////////
100% ஆதரிக்கிறேன்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
நாஞ்சில் பிரதாப் said...
//இண்ட்லிக்கு மாறிப்போன தமிழிஸ் இப்போதெல்லாம், சட்னி இல்லாத இட்லி போல் இருக்கிறது//

அப்படி இல்ல ராசாண்ணே...தமிழ்மணத்துக்கு இன்ட்லி எவ்வளோ பரவால்ல...
19 October 2010 10:40 P
//////////////////////////
ம்..எனக்கென்னமோ, இண்ட்லி டெம்ப்ளேட் குழப்பமாக இருக்குண்ணே..

அவிய்ங்க ராசா said...

////////////////////
பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
'pro bono et vero'
19 October 2010 10:57 PM
////////////////////
ஆஹா..நீங்களும் நம்ம காலேஜ்ஜூதானா..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
ஜோதிஜி said...
நல்லாயிருக்கு உங்கள் நோக்கம்.
19 October 2010 11:13 PM
//////////////////////////
நன்றி ஜோதிஜி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
taaru said...
//இனிமேல் அதிமுக என்று இருந்த நிலையை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்திருக்கிறது.//
அது தி.மு.க தானே? அண்ணா?

அட நீ வேற அண்ணே... மாநாடு நடந்த நாலு மணி நேரம் மதுரைல எல்லா ஏரியா வும் பவர் கட் ஆம்..எவனும் டிவி ல லைவ் பாக்க முடியாம பண்ணிட்டாங்க... எல்லாம் எங்கள் அ..நெ...ரின் அரும்பணி.... வாழ்க... வாழ்க.....

//பொய்பேசமுடியாமல், உண்மைபேசும் ஜிம்கெரியின் அந்த டயலாக்…ச்சீ..ச்சீ….)))//
இப்டி எல்லாம் தனியா படம் பாத்து.. வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டா... இரவு பத்து டு பத்தரைகுள்ள பாண்டி முனீஸ்வரன் வந்து கண்ண குத்திடுவாரு.. பாத்துக்கோங்க.....:):):):):P
20 October 2010 2:26 AM
/////////////////////////
அது அம்மா தி.மு.க ண்ணே..பாண்டி முனீஸ்வரனா..அமெரிக்க விசா தந்துருவாயிங்களாண்ணே...

அவிய்ங்க ராசா said...

/////////////////
jothi said...
// கலைஞர் சுதாரிக்கவேண்டிய நேரமிது.//

கலைஞர் சூதானமாத்தான் இருக்காருண்ணே,.. நாமதான்,.. ம்ம்ம் என்னத்த சொல்ல??

//நான் படித்த திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வர் மேல் கன்னியாஸ்திரி எழுப்பிய பாலியல் புகார் கண்டு அதிர்ந்து போனேன்//

அந்த பெண்ணுக்கு எவ்வளவு பிரச்சனைகள் வரும் எனத்தெரிந்தும் தைரியமா சொன்னுச்சு??? இந்தபெண்ணால் எத்தனை பெண்களின் கற்பு காப்பற்றப்பட்டிருக்கிறது?? இல்லையாண்ணே??
20 October 2010 11:37 AM
/////////////////////////
கண்டிப்பாக ஜோதி..முன்னமே சொல்லியிருக்கலாம்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
jothi said...
//நல்ல பதிவுகளை படிக்கும்போது. என்னமோ தெரியவில்லை, இப்போதெல்லாம் தமிழ்மணம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது//

பிரச்சனை பதிவுகளா இல்லை திரட்டியாண்ணே?? ஏன்னா தமிழ்மணத்தில் வருகிற பதிவுகள் இண்ட்லியிலும் இருக்கின்றன,.. தமிழ்மணத்தில் ஓட்டு போடும் போது தமிழிஷிலும் ஒரு ஓட்டு போட்டுவிடலாம். அவை தமிழிஷிலும் ஹிட்டாகும்,..

//இண்ட்லிக்கு மாறிப்போன தமிழிஸ் இப்போதெல்லாம்,//

ஆனால் நீங்க சொன்ன புகாரை நானும் ஒப்புக்கொள்கிறேன்,..
20 October 2010 11:46 A
////////////////////////////
நான் ஏற்கனவே சொல்லியபடி, ஐ.டி கொஞ்சம் சதி பண்ணிருச்சு..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
jothi said...
//பாடலின் நடுவில் ஹீரோ, ஹீரோயினுக்கும் தரும் பிரெஞ்ச் டைப் முத்தத்தை பார்க்க மாட்டாமல் பொறாமை காரணமாக கண்ணை மூடிக்கொண்டாலும், ஏதோ பாடல் சுகமாகத்தான் இருந்தது//

தப்பிச்சிங்க,.. கண்ணை மூடியதால்தான் சுகமாக இருந்திருக்கிறது
20 October 2010 11:50 AM
/////////////////////
ஹி..ஹி..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
jothi said...
மிக்ஸர் சூஸ் சூப்பருண்ணே,..
20 October 2010 11:56 AM
/////////////////////
நன்றி ஜோதி,

அவிய்ங்க ராசா said...

////////////////////
philosophy prabhakaran said...
பதிவுலக சண்டை பற்றி புதுசா எதுவும் எழுதலைய அண்ணே...
20 October 2010 2:37 PM
//////////////////////////
எழுதி எழுதி போரடிச்சிருச்சுண்ணே

Post a Comment