“மார்க்..மார்க்..”
சத்தமாக என் காதில் விழுந்தது. இந்த குரலை இவ்வளவு அருகாமையில் கேட்பதற்கு என்ன தவம் செய்திருப்பேன்..
குரல் கொடுத்தவள், ஏஞ்சலா..என் ஆசைக்காதலி. அவளை காதல் செய்ய வைப்பதற்கு என்ன தவம் செய்திருப்பேன். எவ்வளவு முயற்சிகள், கிப்டுகள்..எதற்கும் அவள் அசரவில்லை. அவளிடமிருந்து ஒரே பதில்தான்.
“முதலில் ஒரு வேலை வாங்கி வா..பிறகு பார்க்கலாம்..”
இதோ, என் கையில் அபார்ட்மெண்ட் ஆர்டர். அவளிடம்தான் முதலில் காட்டவேண்டும். எவ்வளவு முயற்சிகள், இந்த வேலை கிடைப்பதற்கு. க்யூவில் நின்று, இன்டெர்வியூக்கள் அட்டெண்ட் செய்து..ப்ச்..வாழ்க்கை இவ்வளவு கஷ்டமானதா..ஆனால், என் எண்ணம் முழுவதும் ஏஞ்சலாதான் ஆக்கிரமித்திந்தாள். குறைந்தது 20 இன்டெர்வியூக்கள். இதோ, இப்போதுதான் வேலை கிடைத்தது. அதுவும் முக்கியமான பேங்கில், கணிப்பொறி வல்லுனராக, காண்டிராக்டர் ஒப்பந்தம்..
அப்படியே என்னை வாரி அணைத்துக் கொண்டாள்..
“ரொம்ப சந்தோசமா இருக்கு மார்க்..எனக்காகவா..”
“ம்..”
அன்று முழுதும், எனக்கு ஸ்ட்ராபெரி சுவைதான். எனக்கு ஸ்ட்ராபெரி பிடிக்காது. ஆனால் ஏனோ அன்று பிடித்திருந்தது. முதலில் அவள் லிப்ஸ்டிக்கை மாற்ற சொல்லவேண்டும். அந்த பேங்க் டவுண்டௌனின் மையப்பகுதியில் இருந்தது. அக்சஸ் கார்டு வாங்கி உள்ளே நுழைந்தவன் அதிர்ந்து போனேன். நான் இருப்பது அமெரிக்காதானா, அல்லது சீனாவா. அல்லது இந்தியாவா...இருக்கை முழுவதும் சீனர்கள் மற்றும் இந்தியர்களே ஆக்கிரமித்திருந்தார்கள். அமெரிக்காவை இந்தியாவிற்கும், சீனாவிற்கும் விற்றுவிட்டார்களா..
எனக்கு தலைசுற்றியது..எங்கு பார்த்தாலும், இந்தி, மற்றும் சீன மொழிகளில் உரையாடால்கள். நான் 20 இன்டெர்வியூக்கள் அட்டெண்ட் பண்ணியது இன்றுதான் உறைத்தது. என் நாட்டில் எனக்கு வேலை இல்லையா..
“ஹே..ஐ.ஆம் சோப்ரா..யுவர் மேனேஜர்..”
சத்தம் கேட்டு திரும்பி பார்க்கிறேன். என்னுடைய மேனேஜர். அவரும் இந்தியர்தான். இந்த தேசம் அடகுவைக்கப்பட்டுவிட்டதா..கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் அமெரிக்கன் யாரும் காணவில்லை. அதோ, அங்கு ஒரு அமெரிக்கன், கோழிக்குஞ்சு போல நடுங்கி கொண்டு அமர்ந்துருக்கிறானே..அவன் அருகில் சென்றேன். அளவாக சிரித்தான். முகத்தில் சந்தோசம் இல்லை..
“ஹாய்,,ஐ. ஆம் மார்க்..”
“நான் டாம்..”
“ம்..எப்போ சேர்ந்தீர்கள்..”
“போன மாதம்..இன்றுதான் எனக்கு கடைசி நாள்..”
அதிர்ந்து போனேன்.
“ஏன்..என்ன ஆனது..”
“ம்ம்ம்..பெர்மான்ஸ் சரியில்லையாம். இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் சமமாக எனக்கு வேலை செய்ய தெரியவில்லையாம்..ஓ மேன்..தி இஸ் கில்லிங்க்..அவர்கள், ஒருநாளில் 15 மணிநேரம் வேலை செய்கிறார்கள். என்னால் அப்படி முடியவில்லை. என் குடும்பம் உள்ளது. அதை நான் பார்க்கவேண்டுமே….முடியவில்லை..அனுப்பிவிட்டார்கள்..”
அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை. எனக்கு சங்கடமாக இருந்தது. ஒன்றுமே சொல்லாமல் என் இடத்திற்கு சென்றேன். அவன் வெளியே போனது, ஒரு வாரத்தில் எனக்கு உறைத்தது. என்னால் 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யமுடியவில்லை. நான் ஏன் பார்க்கவேண்டும். 6 மணி ஆனால் கூட யாரும் இடத்தை விட்டு போகவில்லை. என்னால் அப்படி இருக்க முடியவில்லை. நான் என் ஆஞ்சலாவைப் பார்க்கவேண்டும், என்னால் இருக்கமுடியாது. 6 மணி ஆனதும் என் காரை கிளப்பினேன். என் அலுவகத்தில் ஒரு மாதிரி பார்த்தார்கள். சோ வாட்..
வாரம் ஒரு திட்டு என்பது, தினமும் ஒரு திட்டானது. முடிவாக, என் மேனேஜரிடம் இருந்து அந்த வார்த்தை வந்தது..
“சாரி..மார்க்..யூ ஆர் டெர்மினேட்டட்..”
அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. எனக்கு யார் பேசியதும் கேட்கவுமில்லை. செட்டில்மெண்ட் வாங்க கூட பிடிக்கவில்லை. பேசாமல் எழுந்து காரைக் கிளப்பி ஆஞ்சலா வீட்டுக்கு சென்றேன். ஆஞ்சலா வீட்டில் இருந்தாள். கூடவே பக்கத்து வீட்டு சிறுவன். கையில் நோட்டு புத்தகத்தோடு..
“மார்க்..இது பக்கத்து வீட்டு சிறுவன்..ஏதோ வரலாறு படிக்கிறானாம்..டவுட் கேட்டு வந்தான்..அதுசரி..நீ ஏன் டல்லாக இருக்கிறாய்..எனி பிராப்ளம்..”
தலைகுனிந்தேன்..
“ப்ச்..என்ன ஆச்சு..சொல்லு..”
“வேலை போயிடுச்சு..”
“வாட்…”
உறைந்து போனாள். இருக்காதா..இதை நம்பிதான் அவள் கர்ப்பமாகி இருந்தாள். அவளால் வேலைக்கு கூட செல்ல முடியாது. அறை முழுக்க நிசப்தம், 10 நிமிடம் யாரும் எதுவும் பேசவில்லை. அதை கலைத்தாற் போல பக்கத்து வீட்டு சிறுவன் கேட்டான்..
“ஏஞ்சலா..ஒரு கேள்வி. இதுவரை அமெரிக்கா யாரிடம் அடிமையானதில்லையாமே..”
அவள் சொல்லும்முன்பே நான் முந்திக் கொண்டேன்..சத்தமாக..
“யார் சொன்னது..இந்தியாவிடமும், சீனாவிடமும் அடிமைப்பட்டு எவ்வளவோ வருடங்கள் ஆயிற்று.,..”
19 comments:
நல்லா இருக்கிறது
:( சந்தோஷப்படுவதா? வருத்தப்படுவதா?
இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
//அபார்ட்மெண்ட் ஆர்டர்//
கொஞ்சம் மாற்றி விடவும்...
நாம 15 மணி நேரம் வேளை செஞ்சு தான் அவன்ட்ட இருந்து பணம் வாங்குறோம்? அப்டின்னு இதுல நீங்களே ஒத்துக்க்கொள்கிறீர்களா?... அப்புறம் எப்படி அடிமை?? ஏதோ இடிக்குற மாதிரி இல்ல?!!!
நல்லாயிருக்கு சகோதரம் வாழ்த்துக்கள்....
ஹ்ம்..நல்லா இருக்கே கேட்க!!
ஹலோ அண்ணா
என்னக்கு முதல ஒரு சந்தேகம்.நீங்க யாரு கட்சி.
நீங்க சொல்றது ரொம்ப சரி.அவ்ளோ கஷ்டமா இருக்குன எதுக்கு வேலை குடுகரங்க நமக்கு.உண்மையாந ரீசன் காசும் கொஞ்சமா தான் தருவோம்,ஆனா வேலையும் நெறைய செய்யனும்ன ,நம்ப தான் எளிச்சவயனுங்க.அதுவும் இங்க கலிபோர்னியா ல மறந்து கூட அமெரிக்கன்ஸ் பார்க்க முடியல.
////////////////////
nis (Ravana) said...
நல்லா இருக்கிறது
7 October 2010 12:28 AM
//////////////////////
நன்றி ராவணா
///////////////////////
☀நான் ஆதவன்☀ said...
:( சந்தோஷப்படுவதா? வருத்தப்படுவதா?
7 October 2010 1:13 AM
//////////////////////
தெரியலையேண்ணே.))
//////////////////////////
taaru said...
//அபார்ட்மெண்ட் ஆர்டர்//
கொஞ்சம் மாற்றி விடவும்...
நாம 15 மணி நேரம் வேளை செஞ்சு தான் அவன்ட்ட இருந்து பணம் வாங்குறோம்? அப்டின்னு இதுல நீங்களே ஒத்துக்க்கொள்கிறீர்களா?... அப்புறம் எப்படி அடிமை?? ஏதோ இடிக்குற மாதிரி இல்ல?!!!
7 October 2010 2:50 AM
///////////////////////////
அநேகமாக கதையின் நாட் வேறுமாதிரி என நினைக்கிறேன். ஒரு அமெரிக்கனின் பார்வையிலேயே இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது.ஆனால் , அடிமை என்பதை அடகுவைக்கப்பட்ட என்று இருக்கவேண்டும் என்பதை ஓத்துக் கொள்கிறேன்..
//////////////////////
ம.தி.சுதா said...
நல்லாயிருக்கு சகோதரம் வாழ்த்துக்கள்....
7 October 2010 8:51 AM
//////////////////////
நன்றி சுதா..
///////////////////////////
kutipaiya said...
ஹ்ம்..நல்லா இருக்கே கேட்க!!
7 October 2010 10:12 AM
////////////////////////
நன்றி குட்டிபையன்..
/////////////////////////
Viji said...
ஹலோ அண்ணா
என்னக்கு முதல ஒரு சந்தேகம்.நீங்க யாரு கட்சி.
நீங்க சொல்றது ரொம்ப சரி.அவ்ளோ கஷ்டமா இருக்குன எதுக்கு வேலை குடுகரங்க நமக்கு.உண்மையாந ரீசன் காசும் கொஞ்சமா தான் தருவோம்,ஆனா வேலையும் நெறைய செய்யனும்ன ,நம்ப தான் எளிச்சவயனுங்க.அதுவும் இங்க கலிபோர்னியா ல மறந்து கூட அமெரிக்கன்ஸ் பார்க்க முடியல.
7 October 2010 4:20 PM
///////////////////////////
ஆஹா..நான் எந்த கட்சியுமில்லை. ஒரு அமெரிக்கனின் பார்வையில் அவனுடைய உணர்வை தான் எடுத்து சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்..
Nice View...............................!
Good post bro. I dont know if i have to laugh or feel sad after reading this....
in one way its true and i'm happy abt it.... america is not a successful america like now if no indians or chinese had gone there
in another way, its too much exaggerated that only one american is there in the whole bank..... if we are a minority in our country, wont we be sad??..... ofcourse yes.....
Outcomes:
1.australians stabbing indian students frequently bcos australians feel like minorities in their own country
2.malaysian govt pass strict rules against indians, and also malay race people hate & cheat indians in malaysia and singapore because malays feel like minorities in their own country
3.americans hate to work with indians becuase americans feel like minorities in their own country
4.british pass racist comments to indians, because they were ruling us then, and now we are ruling them (indirectly) and acquiring all the british companies ranging from Jaguar cars, Land Rover, Whyte & Mackay to Tetley tea
5. forget abt minorities outside india, within india also, we have made some locals as minorities...... Kannadigas in bangalore really feels as minorities, as most of the high postion IT jobs are taken over by Tamilians and Northis, also more than half of the costliest areas like jayanagar, indira nagar are owned by Tamilians and thats why they dont want to give water to tamils and they cheat northis so badly......
so all in all, its the anger of minorities...... no one can help it..... it will be there..... it has to be there.....
So, நான் ஒரு வல்லரசு நடு என்று பிதற்றி திரியும் அமெரிக்கா, என்றோ நமக்கு அடிமையாகி போன கதை ஒரு அமெரிக்கன் கனவு அல்ல.... ஒரு இந்தியன் நினைவு..... nothing much to say...... just few simple words..... WAY TO GO INDIA.
Regards
Nachu
/////////////////////////
சிவகுமார் said...
Nice View...............................!
7 October 2010 10:25 PM
/////////////////////////////
நன்றி சிவகுமார்
//////////////////////////////
Nachu said...
Good post bro. I dont know if i have to laugh or feel sad after reading this....
in one way its true and i'm happy abt it.... america is not a successful america like now if no indians or chinese had gone there
in another way, its too much exaggerated that only one american is there in the whole bank..... if we are a minority in our country, wont we be sad??..... ofcourse yes.....
Outcomes:
1.australians stabbing indian students frequently bcos australians feel like minorities in their own country
2.malaysian govt pass strict rules against indians, and also malay race people hate & cheat indians in malaysia and singapore because malays feel like minorities in their own country
3.americans hate to work with indians becuase americans feel like minorities in their own country
4.british pass racist comments to indians, because they were ruling us then, and now we are ruling them (indirectly) and acquiring all the british companies ranging from Jaguar cars, Land Rover, Whyte & Mackay to Tetley tea
5. forget abt minorities outside india, within india also, we have made some locals as minorities...... Kannadigas in bangalore really feels as minorities, as most of the high postion IT jobs are taken over by Tamilians and Northis, also more than half of the costliest areas like jayanagar, indira nagar are owned by Tamilians and thats why they dont want to give water to tamils and they cheat northis so badly......
so all in all, its the anger of minorities...... no one can help it..... it will be there..... it has to be there.....
So, நான் ஒரு வல்லரசு நடு என்று பிதற்றி திரியும் அமெரிக்கா, என்றோ நமக்கு அடிமையாகி போன கதை ஒரு அமெரிக்கன் கனவு அல்ல.... ஒரு இந்தியன் நினைவு..... nothing much to say...... just few simple words..... WAY TO GO INDIA.
Regards
Nachu
/////////////////////////////////////
நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நாகு..ஆனால், இன்னொரு நாட்டை அடிமைப்படுத்திதான், நாம் நாடு வல்லரசு ஆகவேண்டுமா..என்று அமெரிக்கர்களும், ஆஸ்திரேலியர்களும், இந்தியாவுக்கு வந்து வேலை செய்யும் நிலை வருகிறதோ, அன்றுதான் நாம் முன்னியேறியிருக்கிறோம் என்று அர்த்தம்.
//////////////////////
Nachu said...
Good post bro. I dont know if i have to laugh or feel sad after reading this....
in one way its true and i'm happy abt it.... america is not a successful america like now if no indians or chinese had gone there
in another way, its too much exaggerated that only one american is there in the whole bank..... if we are a minority in our country, wont we be sad??..... ofcourse yes.....
///////////////////////////
நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நாகு. இன்னொரு நாட்டில் வேலை செய்தால்தான், நம் நாடு முன்னேறும் என்பதில்லை. என்று அமெரிக்கர்களும், ஆஸ்திரேலியர்களும் இங்கு வந்து வேலை செய்யும் நிலை வருகிறதோ, அன்றுதான் நாம் முன்னேறியிருக்கிறோம் என்பது என் கருத்து
Nice post and a different view. But the fact what I've seen is........
working for 15 hours is not a daily show for software guys nowadays. May be some exceptions will be there due to project deadlines and client pressure. Especially onsite Indians are following the same 6-8 hours job after getting settled over there.
Post a Comment