Saturday, 14 August, 2010

மவனே, இனிமேல் யாராவது எந்திரனைப் பத்தி தப்பா பேசினீங்க…!!!!

எங்கள் குலத்தெய்வம், ஏழைமக்களின் பங்காளன், தமிழகத்தின் விடிவெள்ளி, தமிழகத்தைக் காக்க வந்த வருங்கால முதலைமச்சர் சூப்பர்ஸ்டாருக்கு..

தலைவா..தங்கமே..எப்படி தலைவா இருக்கீங்க..நாந்தான் தலைவா, மருத வாடிப்பட்டி ஒன்றியம் 13 வது வட்ட ரசிகர் மன்ற செயலாளர் முத்து வீரப்பன் பேசுறேன்..

தலைவா..புல்லரிக்குது தலைவா..எந்திரன் ரிலீஸாமே..அப்படியே தெருவுக்குப்போய் “எந்தலைவன்” படம் வருது பாருன்னு கத்தணும் போல இருக்கு தலைவா..இந்த தடவை அவிங்க ரசிகர் மன்றத்துக்கு ஆப்படிக்கணும் தலைவா..கண்டிப்பா வெள்ளிவிழாதான் தலைவா..நீ கவலைப்படாதே தலைவா..நாங்க பார்த்துக்கறோம்..

அவிங்க ஆளுதான் பெரிய ஆக்டருன்னு ஊருல சொல்லிக்கிட்டு திரியுறாயிங்க தலைவா..உம்முன்னாடி அவிங்க நிக்க முடியுமா தலைவா..இப்பவே தோரணம், கட்அவுட்டுக்கு பால் ஊத்தறதுக்கு செலவுக்கு ரெடி பண்ணிறோம் தலைவா..ம்….கருமம் இந்த காசுதான்..அதவிடு..பத்துநாள் நைட் டூட்டி பார்த்தா சரியாகிடும்..என்ன காலையிலும் மூட்டைய தூக்கிட்டு, நைட்டுலயும் மூட்டைய தூக்குறதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்..ஆனா அதைல்லாம் பார்க்க முடியுமா..நீ ஸ்டைலா வந்து முடியைக் கோதிவிட்டாலே, அந்த கஷ்டமெல்லாம் பஞ்சாய் பறந்து போயிடும்..

என் தெய்வமே..சின்னபுள்ளையிலிருந்து, உன்பேரைதான் தெய்வமே கையில கூட பச்சை குத்திவைச்சிருக்கேன்..ஒருநாளைக்கு என் கூட்டாளி நாக்குமேல பல்லைப் போட்டு “போடா உன் தலைவனை மறந்துருவ” ன்னு சொல்லிபுட்டான்..சுள்ளுனு கோவம் வந்துருச்சு..எடுத்தேன் பாரு, ஒரு ஆணி..எடுத்து “சூப்பர் ஸ்டார் வாழ்க” ன்னு கையிலயும் மாருலயும் கிறுக்கி புட்டேன்..கருமம் துருபுடிச்ச ஆணி போல..செப்டிக் ஆகி..ரெண்டுநாள் கவருமெண்டு ஆஸ்பத்திரியில படுத்து கிடந்தேன்..காய்ச்சல் வேற..கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில கக்கூஸு பக்கத்துல படுக்க வைச்சுட்டாயிங்க தலைவா..நாத்தம்..தாங்கலை..விடு தலைவா..நம்ம ஆட்சி வந்தப்புறம் மாத்திக்குவோம்..

அப்புறம் தலைவரே.உன்னை நேருல பார்த்தேன்பூ..அதுவும் மருதையில..எம்புட்டு ஸ்டைலா இருக்க நீயி..அதான் தலைவரே..10 வருசம் முன்னாடி ஷூட்டிங்குன்னு வந்தியே..மருத ஏர்போர்ட்டுல உள்ள விட மாட்டிங்குறாயிங்க..நாம் விடுவோமா..எந்தலைவன பார்க்காம எதுக்கு இந்த லைப்பு..சுவரேறி குதிச்சுப்புட்டோம்ல..என்ன..சுவத்துல பீங்கான் பதிச்சிருப்பாயிங்க போலிருக்கு..காலில குத்திருச்சு..அதெல்லாம் ஒரு வலியா தலைவா..உசுரே குடுப்போம் தலைவா..ரத்தம் ஒழுகுது..நான் துடைக்கலையே..”தலைவா…சூப்பர்ஸ்டார் ..வாழ்க..” ன்னு நீ வர்றப்ப கத்துனேன் தலைவா..நீதான் அப்படியே, பிளசர் காருல ஏறி போயிட்ட….ப்ச்..நீ என்ன பண்ணுவ..உனக்கு ஆயிரம் வேலை இருக்கும்..எனக்கு ஒன்னும் வருத்தம் இல்லை தலைவா..

தலைவா..ஆனா ஒன்னு..இந்த கட்சிக்காரயிங்க ஏமாத்திபுட்டாயிங்க..நீ சொல்லிப்புட்டேன்னு உசுரைக் கொடுத்து வேலை செஞ்சோம் தலைவா..ஒரு மாசமா வேலைக்கு போகலையே.. நீ அவிங்களை செயிக்க வையின்னு ஒரு வார்த்தை சொல்லிப்புட்டலே..அப்புறம் எப்படி தூங்குவோம்..என்ன வீட்டுலதான் அவளும், குழந்தையும் ரெண்டுவேளை பட்டினி..இருக்கட்டுமே தலைவா..உனக்கில்லாத உசிரு எதுக்கு இந்த மசிரு..அவ கூட வந்து சத்தம் போட்டா..குழந்தைக்கு பால் வாங்க காசு வேணுமாம்..விட்டேன் ஒரு அறை..அங்கிட்டு போயி விழுந்தா..ரெண்டு வேலை கஞ்சி சாப்பிடலைன்னா செத்தா போயிடுவோம்..என் தலைவனுக்காக வேலை பார்க்கறப்ப இதெல்லாம் ஒரு பொருட்டா தலைவா..

தலைவா..அப்புறம் நீ சினிமாவுக்கு வந்து 25 வருசம் ஆச்சுல..மதுரையில கூட விழா கொண்டாடுனாயிங்க..காலையில வந்துடோம்ல..என்ன எண்ரிடி பீஸு தான் ஜாஸ்தி..அப்புறம் ஸ்டிக்கரு, பனியன்னு கொடுத்தாயிங்க..ஆனாலும் அதுக்கெல்லாம் காசு வாங்கிட்டாயிங்க தலைவா..அன்னிக்கு பார்த்து கையில காசு வேற இல்லையா..நம்ம சுப்பிரமணிட்ட சொல்லி என் சைக்கிள வித்து காசு கொண்டு வர சொல்லிட்டேன்..இப்ப சைக்கிள் இல்லைன்னா குறைஞ்சா போகப்போறோம்..உன் ஸ்டிக்கரை நெஞ்சில குத்துனப்ப எப்படி இருந்துச்சு தெரியுமா..அப்படியே நீ என் நெஞ்சுக்குள போயி, உசிருல கலந்துட்ட தலைவா..இன்னும் இந்த இடம் சூடா இருக்கு பாரு..

தலைவா..ஊருக்குள்ளாற நிறைய பேரு பொறாமை புடிச்சு திரியிறாயிங்க தலிவா..நீயி..கலைஞர மூத்த தலைவருன்னு சொல்லிக்கிட்டே, அந்த அம்மா ஆட்சிக்கு வந்தவுடனே “தைரியலட்சுமின்னு” சொன்னில..அத கிண்டல் பண்ணுராயிங்க தலைவா..எனக்கு தெரியும்..அது சாணக்கியத்தனம்தானே..இத புரிஞ்சுக்காம..சரி விடு..நீ எது பண்ணுனாலும் அதில ஒரு அர்த்தம் இருக்கும்..

உன் கண்ணசவைக்கு காத்திருக்குறோம் தலைவா..எப்ப அரசியலுக்கு வர்ற..நீ முத்து படத்துலயே சொல்லிபுட்டயே..”நான் எப்ப வருவேன்..எப்படி வருவேன்….” புரிஞ்சிருச்சு தலைவா..இந்த ஒரு டயலாக்குகாகவே சினிபிரியா தியேட்டருல 100 நாள் ஓட்டிபுட்டோம்ல..சீக்கிரம் வா தலைவா..நீ எதுக்கும் கவலைப்படாதே தலைவா..நாங்க இருக்கோம்ல…கடைசி வரைக்கும் உசிரேயே கொடுப்போம்ல..உனக்குதான் தலைவா..எடுத்துக்கோ..பொண்டாட்டி, குழந்தைன்னு யாரும் வேண்டாம் தலைவா..நீ ஒருத்தன் போதும்..

அய்யோ தலைவா..நேரம் ஆகிப்போச்சு..எந்திரன் வேற வருது..கட் அவுட்டுக்கு பால் ஊத்தணும்..தோரணம் கட்டணும்..பேனர் வாங்கணும்..செலவு கொஞ்சம் இருக்கும்..ஒரு வாரம் எக்ஸ்டிரா டூட்டி பார்த்தோம்னா சம்பாதிரிச்சரலாம்..என்ன..மூட்டை தூக்குறதுல..இந்த முதுகுதான்..ப்ச்..பரவாயில்லை தலைவா..உன்னை பார்க்க சென்னை வந்தா மண்டபத்துக்குள்ளாற விட மாட்டுறாயிங்க..இந்த லெட்டர் பார்த்தவுடனே..உன்னோட போட்டா அனுப்பு..சாமி படத்த தூக்கிட்டு அந்த படத்தைதான் வைச்சிக்குவேன்..

அய்யயோ..பேச்சுவாக்குல ஒன்னை கேக்க மறந்துட்டேன்..

“அடுத்த படம் எப்ப தலைவா..”

82 comments:

joe vimal said...

nach vera edhum solradhukilla

Mohamed Faaique said...

oru rasiganin kaditham...

நாஞ்சில் பிரதாப் said...

கலக்கல் பதிவு தலைவா.... புத்தி மழுங்கிய இல்லை மழுங்கடிப்பட்ட ரசிகர்களுக்கு இதுமாதிரி எத்தனை பதிவுகள் போட்டாலும் புரியாது...

இதுக்கு நான் என்பிளாக்குல லின்க் கொடுக்கறேன் தலைவா...

சேலம் தேவா said...

ஏழை தமிழ் சினிமா ரசிகனின் அப்பட்டமான நிலையை நல்லா எழுதியிருக்கீங்க!

ராம்ஜி_யாஹூ said...

முப்பது வருடம் முன்பு இதே போல உரிமைக்குரல் , உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசின் பொழுது கட் அவுட் வைத்து, தோரணங்கள் கட்டியவர்கள் தான் சேடப்பட்டி முத்தையா, தாமரைக்கனி, கருப்பசாமி பாண்டியன், சாத்தூர் இராமச்சந்திரன், சங்கரன் கோயில் சம காலத்து சட்ட மன்ற உறுப்பினர் கருப்பசாமி.

பள்ளி பருவத்தில் திரை அரங்க தோரணங்கள் அருகிலேயே பொழுதை கழித்த சாத்தூர் ராமச்சந்திரன் தான் இன்று பல மருத்துவ கல்லூரிகளுக்கு, மாணவர்கள் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டும், பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தும் மந்திரி.

சரத்குமார் படங்களுக்கு போஸ்டர் அடிதவரால் எளிதில் சாயர்புரம் பஞ்சாயத்து கவுன்சிலராக வெற்றி பெற முடிந்தது.

இந்த நம்பிக்கை தான் எங்களுக்கும் கட் அவுட் வைக்க, பால் அபிஷேகம் செய்ய தூண்டுகிறது.

மதுரையில் ஒரு காலத்தில் தன் சொந்த பணத்தை செலவு செய்து காளி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை நூறு நாட்கள் ஓட வாய்த்த மதுரை ரஜினி மன்ற தலைவர் jaafar இன் சொந்த காரருக்கு ரஜினியின் ஒரு தொலை பேசி அழைப்பில் மருத்துவ கல்லலூரி இடம், அரசு வேலை வாங்கி தர முடிந்தது. அதுதான் ரஜினி, கமல் என்ற தெய்வங்களின் மகிமை.

Anonymous said...

1,00,000 periyaar vandhaalum thiruthave mudiyaadhu....

வெறும்பய said...

ஏழை தமிழ் சினிமா ரசிகனின் அப்பட்டமான நிலை

tamildigitalcinema said...

உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

// கலக்கல் பதிவு தலைவா.... புத்தி மழுங்கிய இல்லை மழுங்கடிப்பட்ட ரசிகர்களுக்கு இதுமாதிரி எத்தனை பதிவுகள் போட்டாலும் புரியாது...
//

ரிப்பீட் சொல்லிக்கறேன்.

ராசாண்ணே, கலக்கல் பதிவுங்க..

சிங்கக்குட்டி said...

அட விடுங்க பாஸ், 1957-ல் தமிழ் தலைவர் (ஹி ஹி ஹி ஹையோ ஹையோ) குளித்தலை தொகுயிதில் இருந்து ஆரமித்ததில் இருந்து வரிசையாக புரட்சித் தலைவர் அப்புறம் அம்மா அப்புறம் மீண்டும் தமிழ் தலைவர் என்று இந்த 53 வருடத்தில் யாரும் அல்லது யாருக்கும் செய்யாத புதிதாக எதுவும் ரஜினிக்கு மட்டும் இல்லையே?

அப்புறம் ஏங்க ரஜினிக்கு மட்டும் இந்த உள்குத்து?

தமிழ் நாட்டுல இப்ப போய் பாருங்க படத்துல நடிக்காத "வாரிசுகள்" படம் கூட போஸ்டர்ல இருக்குங்க?

கக்கு - மாணிக்கம் said...

நண்பர் ராம்ஜி-யாஹூ அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டார். இதுதான் உண்மை நிலை.
ராம்ஜி, நீங்கள் தனியாகவே பதிவே போடலாம் இந்த செய்திகளை வைத்து.

R.Bhagyaraj said...
This comment has been removed by the author.
R.Bhagyaraj said...

this is tooooooooooo muchhhhhhhhhhh..

davusur pandikkalam ippa poster vaikkarankoo

yen rajini mal ivvalavu kovammm..

nobody saw flim like that...

tamilnadu is going growth.... DVD ila pakkarankooo sir.....

please change your statment

நாஞ்சில் பிரதாப் said...

ராம்ஜி சார், ஒருசிலர் பயன்பெற்றார்கள் என புள்ளிவிவரம் காண்பித்துவிட்டு வெளியே தெரியாமல் எத்தனைபேரின் வாழ்க்கை பாழாயிருக்கிறது என்ற நிதசர்னத்தையு நாம் உணரவேண்டும்.

நடிகர்களை கடவுளாக மதிக்கும் இந்தகேடுகெட்ட இளைஞர்களின் மனிதில்இருந்து அடியோட மாறவேண்டும். தயவு செய்து அவர்களை ஊக்குவிக்காதீர்கள்.

ராம்ஜி_யாஹூ said...

பிரதாப்- நான் சினிமா கலை ரசிகர்களை ஊக்குவிக்க வில்லை, கட் அவுட் வைக்கும், தோரணம் கட்டும் பெரும்பான்மையான ரசிகர்களும் இன்று விபரம் அறிந்தே செய்கின்றனர். தங்கள் உழைப்பிற்கு நேரம் வீனாக்கல்களுக்கு ஏற்ற பலனை உடனே அடைந்து விடுகிறார்கள்.

கே.ஆர்.பி.செந்தில் said...

//நடிகர்களை கடவுளாக மதிக்கும் இந்தகேடுகெட்ட இளைஞர்களின் மனிதில்இருந்து அடியோட மாறவேண்டும். தயவு செய்து அவர்களை ஊக்குவிக்காதீர்கள்.//

ரைட்டு...

subra said...

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யார் அறிவாரோ,
நெஞ்சி பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட
மனிதரை நினைந்து விட்டாள்,பதிவு பிரமாதம் ,
வாழ்த்துக்கள் . mugilan.

ப.செல்வக்குமார் said...

//என்ன வீட்டுலதான் அவளும், குழந்தையும் ரெண்டுவேளை பட்டினி..இருக்கட்டுமே தலைவா..உனக்கில்லாத உசிரு எதுக்கு இந்த மசிரு..அவ கூட வந்து சத்தம் போட்டா..குழந்தைக்கு பால் வாங்க காசு வேணுமாம்..விட்டேன் ஒரு அறை..அங்கிட்டு போயி விழுந்தா..ரெண்டு வேலை கஞ்சி சாப்பிடலைன்னா செத்தா போயிடுவோம்..என் தலைவனுக்காக வேலை பார்க்கறப்ப இதெல்லாம் ஒரு பொருட்டா தலைவா..
///
பட்டைய கிளப்பிருக்கீங்க ..!! தலைப்ப படிச்சதும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது ..!! அண்ணா கலக்கிட்டீங்க ..1!

சுரேஷ் கண்ணன் said...

நல்ல பதிவு. இம்மாதிரியான கண்மூடித்தனமான ரசிகர்களின் சதவீதம் இப்போது குறைந்திருக்கிறது என்றாலும் அது கணிசமான அளவில் இருக்கிறது என்பதால் இம்மாதிரியான பதிவுகளின் தேவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

"ராஜா" said...

செம்ம பதிவு .. இந்த மாதிரியான ரசிகர்கள் ரஜினிக்கே இப்பொழுது அதிகம் அவரும் அவர்களை நன்றாக ஏமாற்றி கொண்டு இருக்கிறார் .....

S.M.Raj said...

//நடிகர்களை கடவுளாக மதிக்கும் இந்தகேடுகெட்ட இளைஞர்களின் மனிதில்இருந்து அடியோட மாறவேண்டும். தயவு செய்து அவர்களை ஊக்குவிக்காதீர்கள்.//

ரைட்டு...

புலவன் புலிகேசி said...

சூப்பர் பதிவு தல...செருப்பால அடிச்ச மாதிரி சொன்னீங்க. நடிகன கடவுளா பாக்குற குணம் ஒழியனும்.

sweet said...

Vaanga thurai ayya

Ungalai paarttha karuppu VIVEKAANANDHAR maathiri theriyudhe?

ada ada

enna oru latchanam indha mugatthula

ennoda kanne pattu vidum pola

UNGALAI MAATHIRIYE UNGA ARTICLE-m irukku

Unga arivai paartthu poorichu poitten

Idhu maathiri innum neraya eludhi VIVEKAANANDHAR maathiri kilambi naattai thirutthunga raasa

Nanga ungalai thaan nambi irukkom

Enga college-la unga padatthai vachu irukkom

enga-nu solla matten adhu suspense

Anga thaan angaye thaan vachu irukkom

Pinna ippadi karutthu solra alungalai anga thaane vaikkanum

avaenga munnadi thaan vachu irukkom

Kannan karel vivehaanandhar vaalga

avar vali varum suresh kannan, nanjil pradhab avargaladhu padangalaiyum peritthaga otta irukkirom

ILAIYA SAMUDHAAYAME VAA VAA

madhumidha1@yahoo.com

Anonymous said...

தேவையானது கல்வியறிவு.அது மட்டும் போதாது.அதற்கேற்ற வேலை.இது இரண்டும் ஈடேறும் வரை இது தொடரத்தான் செய்யும்.படித்துவிட்டு பொறுப்பான வேளையில் இருப்பவன் எவனாவது இந்த பால்அபிஷேகம்,பீர்அபிஷேகம் செய்வானா? (ஒன்றிரண்டு
அப்படியும் இருக்கும்)

மர்மயோகி said...

//தேவையானது கல்வியறிவு.அது மட்டும் போதாது.அதற்கேற்ற வேலை.இது இரண்டும் ஈடேறும் வரை இது தொடரத்தான் செய்யும்.படித்துவிட்டு பொறுப்பான வேளையில் இருப்பவன் எவனாவது இந்த பால்அபிஷேகம்,பீர்அபிஷேகம் செய்வானா? (ஒன்றிரண்டு
அப்படியும் இருக்கும்) //

முதலமைச்சர் பதிவிளிப்பவர் தொடர்ந்து, பெரிய பெரிய அதிகாரிகள் கூட இது போன்ற கூத்தாடிகளைக் கொண்டாடும் அவலம் தமிழகத்தில்தான்...

A.P.Sathy said...

Ungala apdi seyya yaaravathu seyya sonnangala? (Kurippa Rajini)
Aduthavangala paathikaatha, ungala nambi irukkiravangalukku throgam pannaatha ungalukku santhosam tharra entha seyalayum seyyalam.
Paal abishegam sevatil avangalukku santhosamna ungalukku enna? (Aduthavanga santhosa patta vayiru erigira aala nenga?)
Unmai ennanna, unmaya pesaratha ezhuthi neenga vilambaram thedra sarasari manithan than nengal... Vera solla enna irukku...

Prabhu Rajadurai said...

40 வருடங்களாகிறது, ஜெயகாந்தன் 'சினிமாவுக்கு போன சித்தாளு' என்ற குறுநாவல் எழுதி....அதே வார்த்தைகள் இன்றும் நிதர்சனமாக இருக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.

பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்த அந்த நாவலை நினைவூட்டியது, இந்த பதிவு.

வாழ்த்துகள்!

Anonymous said...

Adichikittu sagingada.... Aveenga rasava..... Blogger aaa vitte thorathumgada......

Phantom Mohan said...

திருப்பதில கொண்டு போய் கோடி கோடியா கொட்ட தெரியுது. தெருவுல சாமி ஊர்வலம் வந்தா குடும்பத்தோட விழுந்து கும்பிடத் தெரியுது. இன்னும் என்னனென்னவோ சாமி பேரைச் சொல்லி பண்றாங்க. அத முதல்ல நிறுத்தச் சொல்லுங்க பாஸ். பல்லாயிரக்கணக்கான வருசமா பண்ணிக்கிட்டு இருக்காங்க, எத்தனையோ கோடி அதில போகுது.

முதல்ல இந்த ஊருக்கு நியாயம் சொல்றது, அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்றது, அமெரிக்காவப் பாரு அன்டர்டிகாவப் பாருன்னு கம்பர் பண்றத முதல்ல நிறுத்துங்க. தனக்கு என்ன தேவையோ அத செய்ய எல்லாவனுக்கும் தெரியும்.

இந்த போஸ்ட்ட படம் வராதப்ப எழுதிருந்தா ஒரு நியாயம் இருக்கு. படம் வரும் போது எழுதி ஒரு சீன் போட்டு, எதுக்கு வீண் விளம்பரம்.???

சத்யம் ராஜு கேஸ் என்னாச்சு, போபர்ஸ், spectrum, இன்னும் மக்களுக்கு தேவையான, தெரியவேண்டிய எவ்வளவோ விஷயம் இருக்கு, அதப்பத்தி எழுதுங்க, சினிமா, சினிமா சினிமா ஏன்????? ?

மணிஜீ...... said...

அடி..தூள்டா

கன்கொன் || Kangon said...

அருமை....

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

அருமையான பிரதிபலிப்பு.. ஆனாலும் பத்திகள் கூடிவிட்டன. ராம்ஜி யாஹூவின் பின்னூட்டங்களை ரசிப்பேன் பல இடங்களில். இங்கே :(

லட்சக்கணக்கான லாட்டரி சீட்டு வாங்குபவர்களில் ஒருவனுக்கு பரிசு கிடைக்கின்றதே.. ஆகவே எல்லாரும் லாட்டரி வாங்குங்கள், உங்கள் உழைப்பு வீண்போகாது என்ற தொனியில் இருக்கிறது ராம்ஜீ யாஹூ உங்கள் பின்னூட்டம். :(

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தானா பார்த்து திருந்தாவிட்டா திருடனை மட்டும் இல்ல, இந்த மாதிரி பைத்தியங்களையும் கூடத்தான் திருத்த முடியாது!

பிரியமுடன் பிரபு said...

சூப்பர் பதிவு தல...செருப்பால அடிச்ச மாதிரி சொன்னீங்க. நடிகன கடவுளா பாக்குற குணம் ஒழியனும்.

அட்த்ஹே அதெ

அவிய்ங்க ராசா said...

////////////////
joe vimal said...
nach vera edhum solradhukilla
13 August 2010 11:49 PM
//////////////////////
நன்றி ஜோ..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Mohamed Faaique said...
oru rasiganin kaditham...
14 August 2010 12:10 AM
//////////////////////
ரசிகன் என்று சொல்லக்கூடாதுண்ணே..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
நாஞ்சில் பிரதாப் said...
கலக்கல் பதிவு தலைவா.... புத்தி மழுங்கிய இல்லை மழுங்கடிப்பட்ட ரசிகர்களுக்கு இதுமாதிரி எத்தனை பதிவுகள் போட்டாலும் புரியாது...

இதுக்கு நான் என்பிளாக்குல லின்க் கொடுக்கறேன் தலைவா...
14 August 2010 12:10 AM
///////////////////////
நன்றி தலைவா..உங்கள் அன்பிற்கு...

அவிய்ங்க ராசா said...

////////////////////
சேலம் தேவா said...
ஏழை தமிழ் சினிமா ரசிகனின் அப்பட்டமான நிலையை நல்லா எழுதியிருக்கீங்க!
14 August 2010 12:16 AM
///////////////////
நன்றி தேவா..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
ராம்ஜி_யாஹூ said...
முப்பது வருடம் முன்பு இதே போல உரிமைக்குரல் , உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசின் பொழுது கட் அவுட் வைத்து, தோரணங்கள் கட்டியவர்கள் தான் சேடப்பட்டி முத்தையா, தாமரைக்கனி, கருப்பசாமி பாண்டியன், சாத்தூர் இராமச்சந்திரன், சங்கரன் கோயில் சம காலத்து சட்ட மன்ற உறுப்பினர் கருப்பசாமி.

பள்ளி பருவத்தில் திரை அரங்க தோரணங்கள் அருகிலேயே பொழுதை கழித்த சாத்தூர் ராமச்சந்திரன் தான் இன்று பல மருத்துவ கல்லூரிகளுக்கு, மாணவர்கள் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டும், பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தும் மந்திரி.

சரத்குமார் படங்களுக்கு போஸ்டர் அடிதவரால் எளிதில் சாயர்புரம் பஞ்சாயத்து கவுன்சிலராக வெற்றி பெற முடிந்தது.

இந்த நம்பிக்கை தான் எங்களுக்கும் கட் அவுட் வைக்க, பால் அபிஷேகம் செய்ய தூண்டுகிறது.

மதுரையில் ஒரு காலத்தில் தன் சொந்த பணத்தை செலவு செய்து காளி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை நூறு நாட்கள் ஓட வாய்த்த மதுரை ரஜினி மன்ற தலைவர் jaafar இன் சொந்த காரருக்கு ரஜினியின் ஒரு தொலை பேசி அழைப்பில் மருத்துவ கல்லலூரி இடம், அரசு வேலை வாங்கி தர முடிந்தது. அதுதான் ரஜினி, கமல் என்ற தெய்வங்களின் மகிமை.
14 August 2010 12:21 AM
////////////////////////
ராம்ஜி..உங்கள் கருத்துமேல் எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு..ஆனால் இந்த கருத்தை ஒருமுறை நீங்களே படித்து பாருங்கள். பகுத்தறிவு உள்ள யாருமே இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கஞ்சா விற்பவர் கூடதான் நன்றாக சம்பாதிக்கிறார். அதற்காக அது நல்ல தொழிலா..மற்றும் நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லாம் போஸ்டர் ஒட்டிதான் முன்னுக்கு வந்தார்களா..எல்லாரும் போஸ்டர் ஒட்டினால் முன்னால் வருவார்களா..என்னமோ போங்க...

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
ராம்ஜி_யாஹூ said...
முப்பது வருடம் முன்பு இதே போல உரிமைக்குரல் , உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசின் பொழுது கட் அவுட் வைத்து, தோரணங்கள் கட்டியவர்கள் தான் சேடப்பட்டி முத்தையா, தாமரைக்கனி, கருப்பசாமி பாண்டியன், சாத்தூர் இராமச்சந்திரன், சங்கரன் கோயில் சம காலத்து சட்ட மன்ற உறுப்பினர் கருப்பசாமி.

பள்ளி பருவத்தில் திரை அரங்க தோரணங்கள் அருகிலேயே பொழுதை கழித்த சாத்தூர் ராமச்சந்திரன் தான் இன்று பல மருத்துவ கல்லூரிகளுக்கு, மாணவர்கள் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டும், பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தும் மந்திரி.

சரத்குமார் படங்களுக்கு போஸ்டர் அடிதவரால் எளிதில் சாயர்புரம் பஞ்சாயத்து கவுன்சிலராக வெற்றி பெற முடிந்தது.

இந்த நம்பிக்கை தான் எங்களுக்கும் கட் அவுட் வைக்க, பால் அபிஷேகம் செய்ய தூண்டுகிறது.

மதுரையில் ஒரு காலத்தில் தன் சொந்த பணத்தை செலவு செய்து காளி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை நூறு நாட்கள் ஓட வாய்த்த மதுரை ரஜினி மன்ற தலைவர் jaafar இன் சொந்த காரருக்கு ரஜினியின் ஒரு தொலை பேசி அழைப்பில் மருத்துவ கல்லலூரி இடம், அரசு வேலை வாங்கி தர முடிந்தது. அதுதான் ரஜினி, கமல் என்ற தெய்வங்களின் மகிமை.
14 August 2010 12:21 A
//////////////////////
ராம்ஜி..நீங்கள் சொல்வதை பகுத்தறிவு உள்ள யாரும் ஏற்கமாட்டார்கள். நீங்களே முழுமனதோடு உங்கள் கருத்தை படித்து பாருங்கள்..நீங்கள் சொல்வது உங்கள் மனதுக்கு சொல்வது சரி என்று தோன்றினால், திரும்பவும் கமெண்டுங்கள். விவாதிப்போம்..

அவிய்ங்க ராசா said...

/////////////////
Anonymous said...
1,00,000 periyaar vandhaalum thiruthave mudiyaadhu....
14 August 2010 12:24 AM
////////////////////
கண்டிப்பா அண்ணா..

அவிய்ங்க ராசா said...

/////////////////
வெறும்பய said...
ஏழை தமிழ் சினிமா ரசிகனின் அப்பட்டமான நிலை
14 August 2010 12:39 AM
////////////////
நன்றி வெறும்பய..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
// கலக்கல் பதிவு தலைவா.... புத்தி மழுங்கிய இல்லை மழுங்கடிப்பட்ட ரசிகர்களுக்கு இதுமாதிரி எத்தனை பதிவுகள் போட்டாலும் புரியாது...
//

ரிப்பீட் சொல்லிக்கறேன்.

ராசாண்ணே, கலக்கல் பதிவுங்க..
14 August 2010 12:56 AM
//////////////////////
நன்றி செந்தில்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
சிங்கக்குட்டி said...
அட விடுங்க பாஸ், 1957-ல் தமிழ் தலைவர் (ஹி ஹி ஹி ஹையோ ஹையோ) குளித்தலை தொகுயிதில் இருந்து ஆரமித்ததில் இருந்து வரிசையாக புரட்சித் தலைவர் அப்புறம் அம்மா அப்புறம் மீண்டும் தமிழ் தலைவர் என்று இந்த 53 வருடத்தில் யாரும் அல்லது யாருக்கும் செய்யாத புதிதாக எதுவும் ரஜினிக்கு மட்டும் இல்லையே?

அப்புறம் ஏங்க ரஜினிக்கு மட்டும் இந்த உள்குத்து?

தமிழ் நாட்டுல இப்ப போய் பாருங்க படத்துல நடிக்காத "வாரிசுகள்" படம் கூட போஸ்டர்ல இருக்குங்க?
14 August 2010 12:59 AM
///////////////////////////////
அப்ப ரஜினியும் தப்பு பண்ணுராருன்னு ஒத்துகுறீங்களா..நானும் அப்படி பதிவில் எதுவும் சொல்லவில்லையே. ஒரு ரசிகன் என்று சொல்லபடுவனின் மனநிலையை எழுதியிருக்கிறேன் என்றே கருதுகிறேன்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
கக்கு - மாணிக்கம் said...
நண்பர் ராம்ஜி-யாஹூ அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டார். இதுதான் உண்மை நிலை.
ராம்ஜி, நீங்கள் தனியாகவே பதிவே போடலாம் இந்த செய்திகளை வைத்து.
14 August 2010 1:06 AM
////////////////////////
மாணிக்கம் அண்ணா..ராம்ஜி அண்ணாவை நீங்கள் எதுவும் கிண்டல் அடிக்கலையே..)))

அவிய்ங்க ராசா said...

////////////////////////
R.Bhagyaraj said...
this is tooooooooooo muchhhhhhhhhhh..

davusur pandikkalam ippa poster vaikkarankoo

yen rajini mal ivvalavu kovammm..

nobody saw flim like that...

tamilnadu is going growth.... DVD ila pakkarankooo sir.....

please change your statment
14 August 2010 1:14 AM
///////////////////////////
இந்த பதிவில் ரஜினி மேல் எதுவும் கோபம் காட்டவில்லை நண்பா..ஒரு ரசிகன் என்று சொல்லபடுபவனின் கடிதம் இது..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
கே.ஆர்.பி.செந்தில் said...
//நடிகர்களை கடவுளாக மதிக்கும் இந்தகேடுகெட்ட இளைஞர்களின் மனிதில்இருந்து அடியோட மாறவேண்டும். தயவு செய்து அவர்களை ஊக்குவிக்காதீர்கள்.//

ரைட்டு...
14 August 2010 1:51 AM
subra said...
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யார் அறிவாரோ,
நெஞ்சி பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட
மனிதரை நினைந்து விட்டாள்,பதிவு பிரமாதம் ,
வாழ்த்துக்கள் . mugilan.
14 August 2010 2:09 AM
////////////////////////////
நன்றி செந்தில், சுப்ரா..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
புலவன் புலிகேசி said...
சூப்பர் பதிவு தல...செருப்பால அடிச்ச மாதிரி சொன்னீங்க. நடிகன கடவுளா பாக்குற குணம் ஒழியனும்.
14 August 2010 3:55 AM
/////////////////////////////
நன்றி தலைவா..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
sweet said...
Vaanga thurai ayya

Ungalai paarttha karuppu VIVEKAANANDHAR maathiri theriyudhe?

ada ada

enna oru latchanam indha mugatthula

ennoda kanne pattu vidum pola

UNGALAI MAATHIRIYE UNGA ARTICLE-m irukku

Unga arivai paartthu poorichu poitten

Idhu maathiri innum neraya eludhi VIVEKAANANDHAR maathiri kilambi naattai thirutthunga raasa

Nanga ungalai thaan nambi irukkom

Enga college-la unga padatthai vachu irukkom

enga-nu solla matten adhu suspense

Anga thaan angaye thaan vachu irukkom

Pinna ippadi karutthu solra alungalai anga thaane vaikkanum

avaenga munnadi thaan vachu irukkom

Kannan karel vivehaanandhar vaalga

avar vali varum suresh kannan, nanjil pradhab avargaladhu padangalaiyum peritthaga otta irukkirom

ILAIYA SAMUDHAAYAME VAA VAA

madhumidha1@yahoo.com
14 August 2010 3:57 AM
//////////////////////////
நண்பா..என் பதிவில் எந்த வன்மமும் இல்லை.ஆனால் உங்கள் கமெண்டை படித்து பாருங்கள். எல்லா வன்மமும் இருக்கிறது. அன்பையே தேர்ந்தெடுப்போமே..)

அவிய்ங்க ராசா said...

///////////////////////
Anonymous said...
தேவையானது கல்வியறிவு.அது மட்டும் போதாது.அதற்கேற்ற வேலை.இது இரண்டும் ஈடேறும் வரை இது தொடரத்தான் செய்யும்.படித்துவிட்டு பொறுப்பான வேளையில் இருப்பவன் எவனாவது இந்த பால்அபிஷேகம்,பீர்அபிஷேகம் செய்வானா? (ஒன்றிரண்டு
அப்படியும் இருக்கும்)
14 August 2010 4:14 AM
மர்மயோகி said...
//தேவையானது கல்வியறிவு.அது மட்டும் போதாது.அதற்கேற்ற வேலை.இது இரண்டும் ஈடேறும் வரை இது தொடரத்தான் செய்யும்.படித்துவிட்டு பொறுப்பான வேளையில் இருப்பவன் எவனாவது இந்த பால்அபிஷேகம்,பீர்அபிஷேகம் செய்வானா? (ஒன்றிரண்டு
அப்படியும் இருக்கும்) //

முதலமைச்சர் பதிவிளிப்பவர் தொடர்ந்து, பெரிய பெரிய அதிகாரிகள் கூட இது போன்ற கூத்தாடிகளைக்
////////////////////////////
நன்றி அனானி, மர்மயோகி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
A.P.Sathy said...
Ungala apdi seyya yaaravathu seyya sonnangala? (Kurippa Rajini)
Aduthavangala paathikaatha, ungala nambi irukkiravangalukku throgam pannaatha ungalukku santhosam tharra entha seyalayum seyyalam.
Paal abishegam sevatil avangalukku santhosamna ungalukku enna? (Aduthavanga santhosa patta vayiru erigira aala nenga?)
Unmai ennanna, unmaya pesaratha ezhuthi neenga vilambaram thedra sarasari manithan than nengal... Vera solla enna irukku...
14 August 2010 5:29 AM
///////////////////////////
சாதி..எது சந்தோசம்..குழந்தை பாலுக்கும், மனைவி பசிக்கும் தவிக்கும்போது, போஸ்டர் ஒட்டப்போவதுதான் சந்தோசமா..மனசாட்சியை தொட்டு சொல்லுங்க..என்னத்த விளம்பரம் போங்க..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Prabhu Rajadurai said...
40 வருடங்களாகிறது, ஜெயகாந்தன் 'சினிமாவுக்கு போன சித்தாளு' என்ற குறுநாவல் எழுதி....அதே வார்த்தைகள் இன்றும் நிதர்சனமாக இருக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.

பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்த அந்த நாவலை நினைவூட்டியது, இந்த பதிவு.

வாழ்த்துகள்!
14 August 2010 5:43 AM
Anonymous said...
Adichikittu sagingada.... Aveenga rasava..... Blogger aaa vitte thorathumgada......
14 August 2010 6:29 AM
////////////////////////
நன்றி பிரபு, அனானி..

Viji said...

Correcta sonnenga anna.Cinema va cinema vaa partha pirachanaye irukathu.

Appuram unga palaya pathiva padicheengala.Ethavathu comment panuveenganu nenachen silenta aagiteenga ;-)

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Phantom Mohan said...
திருப்பதில கொண்டு போய் கோடி கோடியா கொட்ட தெரியுது. தெருவுல சாமி ஊர்வலம் வந்தா குடும்பத்தோட விழுந்து கும்பிடத் தெரியுது. இன்னும் என்னனென்னவோ சாமி பேரைச் சொல்லி பண்றாங்க. அத முதல்ல நிறுத்தச் சொல்லுங்க பாஸ். பல்லாயிரக்கணக்கான வருசமா பண்ணிக்கிட்டு இருக்காங்க, எத்தனையோ கோடி அதில போகுது.

முதல்ல இந்த ஊருக்கு நியாயம் சொல்றது, அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்றது, அமெரிக்காவப் பாரு அன்டர்டிகாவப் பாருன்னு கம்பர் பண்றத முதல்ல நிறுத்துங்க. தனக்கு என்ன தேவையோ அத செய்ய எல்லாவனுக்கும் தெரியும்.

இந்த போஸ்ட்ட படம் வராதப்ப எழுதிருந்தா ஒரு நியாயம் இருக்கு. படம் வரும் போது எழுதி ஒரு சீன் போட்டு, எதுக்கு வீண் விளம்பரம்.???

சத்யம் ராஜு கேஸ் என்னாச்சு, போபர்ஸ், spectrum, இன்னும் மக்களுக்கு தேவையான, தெரியவேண்டிய எவ்வளவோ விஷயம் இருக்கு, அதப்பத்தி எழுதுங்க, சினிமா, சினிமா சினிமா ஏன்????? ?
14 August 2010 7:30 AM
//////////////////////////
நண்பா பக்கத்து வீட்டில் கொள்ளை போவதை பற்றி கவலைப்பட்டால், சத்யம் ராஜூ கொள்ளை அடித்ததை பற்றி முதலில் கவலை கொள்ள சொல்வீர்களா..என் முன்னால் பதிவுகளை படித்து பாருங்கப்பூ. ஏதோ எந்திரன் வந்தற்காக இதை எழுதுவதில்லை..நன்றி..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
மணிஜீ...... said...
அடி..தூள்டா
14 August 2010 7:56 AM
கன்கொன் || Kangon said...
அருமை....
14 August 2010 8:01 AM
///////////////////////
நன்றி மணிஜீ..
நன்றி கன் கொன்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...
அருமையான பிரதிபலிப்பு.. ஆனாலும் பத்திகள் கூடிவிட்டன. ராம்ஜி யாஹூவின் பின்னூட்டங்களை ரசிப்பேன் பல இடங்களில். இங்கே :(

லட்சக்கணக்கான லாட்டரி சீட்டு வாங்குபவர்களில் ஒருவனுக்கு பரிசு கிடைக்கின்றதே.. ஆகவே எல்லாரும் லாட்டரி வாங்குங்கள், உங்கள் உழைப்பு வீண்போகாது என்ற தொனியில் இருக்கிறது ராம்ஜீ யாஹூ உங்கள் பின்னூட்டம். :(
14 August 2010 8:20 AM
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
தானா பார்த்து திருந்தாவிட்டா திருடனை மட்டும் இல்ல, இந்த மாதிரி பைத்தியங்களையும் கூடத்தான் திருத்த முடியாது!
14 August 2010 8:24 AM
பிரியமுடன் பிரபு said...
சூப்பர் பதிவு தல...செருப்பால அடிச்ச மாதிரி சொன்னீங்க. நடிகன கடவுளா பாக்குற குணம் ஒழியனும்.

அட்த்ஹே அதெ
14 August 2010 9:07 AM
//////////////////////////////
நன்றி மது. எனக்கு அதிர்ச்சிதான்..

நன்றி நண்பர்

நன்றி பிரபு..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான பதிவு.. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது.. ஆனா முன்னமாதிரி இப்ப யாரும் கிடையாது.. ஒரு சிலர்தான் இப்படி.. என்னசெய்ய.. காலம் மாற்றும்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
ப.செல்வக்குமார் said...
//என்ன வீட்டுலதான் அவளும், குழந்தையும் ரெண்டுவேளை பட்டினி..இருக்கட்டுமே தலைவா..உனக்கில்லாத உசிரு எதுக்கு இந்த மசிரு..அவ கூட வந்து சத்தம் போட்டா..குழந்தைக்கு பால் வாங்க காசு வேணுமாம்..விட்டேன் ஒரு அறை..அங்கிட்டு போயி விழுந்தா..ரெண்டு வேலை கஞ்சி சாப்பிடலைன்னா செத்தா போயிடுவோம்..என் தலைவனுக்காக வேலை பார்க்கறப்ப இதெல்லாம் ஒரு பொருட்டா தலைவா..
///
பட்டைய கிளப்பிருக்கீங்க ..!! தலைப்ப படிச்சதும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது ..!! அண்ணா கலக்கிட்டீங்க ..1!
14 August 2010 2:30 AM
சுரேஷ் கண்ணன் said...
நல்ல பதிவு. இம்மாதிரியான கண்மூடித்தனமான ரசிகர்களின் சதவீதம் இப்போது குறைந்திருக்கிறது என்றாலும் அது கணிசமான அளவில் இருக்கிறது என்பதால் இம்மாதிரியான பதிவுகளின் தேவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
14 August 2010 2:44 AM
"ராஜா" said...
செம்ம பதிவு .. இந்த மாதிரியான ரசிகர்கள் ரஜினிக்கே இப்பொழுது அதிகம் அவரும் அவர்களை நன்றாக ஏமாற்றி கொண்டு இருக்கிறார் .....
14 August 2010 3:31 AM
S.M.Raj said...
//நடிகர்களை கடவுளாக மதிக்கும் இந்தகேடுகெட்ட இளைஞர்களின் மனிதில்இருந்து அடியோட மாறவேண்டும். தயவு செய்து அவர்களை ஊக்குவிக்காதீர்கள்.//

ரைட்டு...
14 August 2010 3:46 AM
//////////////////////////////
நன்றி சுரேஷ், செல்வா, ராஜ்

வழிப்போக்கன் - யோகேஷ் said...

நடிகர்கள் மேல் வெறிப்பிடித்த மோகம் கொண்ட ரசிகர்களுக்கு பாடம்...

Saran said...

இது ரஜினி தப்பா... ரசிகர்கள் செய்த தப்பா...

LOSHAN said...

ம்ம்.. பெருமூச்சும் வந்தது,,
நம் நாட்டிலும் இது கொஞ்சம் தொற்றிக் கொள்வது கவலை..

ரசிப்பது வேறு.. பைத்தியம் போல பக்தி வெறி வந்து அலைவது வேறு.
கலக்கல் ராசா..

R.Gopi said...

இதே போல் ஆட்சியாளர்கள் செய்யும் அராஜகத்திற்கு எதிராகவும் பதிவு எழுதினால், சந்தோசப்படுவேன்...

Showkat Ali said...

Jayakanthan's " Sinimavukku pona sithalu" was written on MGR's fan crzes same like this 30 years back. It clearly shows "Tamil rasigan" will never change irrespective of time.

சிங்கக்குட்டி said...

//அப்ப ரஜினியும் தப்பு பண்ணுராருன்னு ஒத்துகுறீங்களா//

இன்னும் என் கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, அவர் ஒன்றும் தவறு செய்யவில்லை, ஆனால் ஒரு நடிகரை நடிகராக பார்க்காமல் மற்றவர் செய்யும் தவறுக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்?

மேலும் விளம்பரத்துக்காக எல்லா விசையத்திலும் அவரை ஏன் குத்த வேண்டும் என்பதுதான் என் கருத்து.

இன்று மதுரையில் போய் ஒரு சொத்து வாங்குங்கள், அதில் தேவை இல்லாமல் யார் யாருக்கு பணம் போகிறது என்று படம் பிடித்து போடுங்கள், இப்படி நாட்டுக்கு உடனே தேவை படும் விசையம் நிறைய இருக்கும் போது, சிறு வயசு ஆர்வ கோளாறை எல்லாம் பெரிய விசையமாக நினைக்க வேண்டாம் என்பதுதான் இதன் உள்கருத்து.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

ரொம்ப நல்ல குத்தல் பதிவு.
வெறிபிடித்த ரசிகர்களுக்கு வேனும் நல்லா

அப்துல்மாலிக் said...

இதை அப்படியே பிரிண்ட் எடுத்து படம் ரிலீஸ் அன்னிக்கு ஒருஇடம் பாக்கியில்லாமல் ஒட்டனும். திருந்துவாங்களா?

S Maharajan said...

அவிய்ங்க ராசா நல்லதான் எழுதி இருக்கிக இத மாதிரி மற்ற நடிகர்கள்களும் எழுதுனீங்க நல்ல இருக்கும் ஏன் இப்போ நடக்குற ஆட்சியை பற்றி கூட எழுதலாம் (பயம்)
ரஜினி என்றாலே உங்களுக்கு?.................................
வார்த்தை சொல் விரும்ப வில்லை நண்பரே!

//Phantom Mohan said...
திருப்பதில கொண்டு போய் கோடி கோடியா கொட்ட தெரியுது. தெருவுல சாமி ஊர்வலம் வந்தா குடும்பத்தோட விழுந்து கும்பிடத் தெரியுது. இன்னும் என்னனென்னவோ சாமி பேரைச் சொல்லி பண்றாங்க. அத முதல்ல நிறுத்தச் சொல்லுங்க பாஸ். பல்லாயிரக்கணக்கான வருசமா பண்ணிக்கிட்டு இருக்காங்க, எத்தனையோ கோடி அதில போகுது.//

நண்பரின் இந்த கருத்தை நானும் வழிமொழிகிறேன்

Anonymous said...

nn

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
வழிப்போக்கன் - யோகேஷ் said...
நடிகர்கள் மேல் வெறிப்பிடித்த மோகம் கொண்ட ரசிகர்களுக்கு பாடம்...
14 August 2010 5:26 PM
//////////////////////
முதலில் ரசிகன் தப்பு.ஆனால் ரஜினி, தன் மேல் உள்ள பொறுபையும் தட்டி கழிக்க முடியாது..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
LOSHAN said...
ம்ம்.. பெருமூச்சும் வந்தது,,
நம் நாட்டிலும் இது கொஞ்சம் தொற்றிக் கொள்வது கவலை..

ரசிப்பது வேறு.. பைத்தியம் போல பக்தி வெறி வந்து அலைவது வேறு.
கலக்கல் ராசா..
14 August 2010 7:39 PM
////////////////
நன்றி லோஷன்..

அவிய்ங்க ராசா said...

////////////////////
R.Gopi said...
இதே போல் ஆட்சியாளர்கள் செய்யும் அராஜகத்திற்கு எதிராகவும் பதிவு எழுதினால், சந்தோசப்படுவேன்...
14 August 2010 8:24 PM
/////////////////////
ஐயா..அதற்கு நிறைய புலனாய்வு பத்திரிக்கைகள் இருக்கின்றன. நான் பக்கத்து வீட்டில் நடப்பதை எனக்கு தெரிந்தவைதான் எழுதமுடியும்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Showkat Ali said...
Jayakanthan's " Sinimavukku pona sithalu" was written on MGR's fan crzes same like this 30 years back. It clearly shows "Tamil rasigan" will never change irrespective of time.
14 August 2010 10:52 PM
////////////////////////
நன்றி சௌகத்..கண்டிப்பாக படிக்கின்றேன்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
சிங்கக்குட்டி said...
//அப்ப ரஜினியும் தப்பு பண்ணுராருன்னு ஒத்துகுறீங்களா//

இன்னும் என் கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, அவர் ஒன்றும் தவறு செய்யவில்லை, ஆனால் ஒரு நடிகரை நடிகராக பார்க்காமல் மற்றவர் செய்யும் தவறுக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்?

மேலும் விளம்பரத்துக்காக எல்லா விசையத்திலும் அவரை ஏன் குத்த வேண்டும் என்பதுதான் என் கருத்து.

இன்று மதுரையில் போய் ஒரு சொத்து வாங்குங்கள், அதில் தேவை இல்லாமல் யார் யாருக்கு பணம் போகிறது என்று படம் பிடித்து போடுங்கள், இப்படி நாட்டுக்கு உடனே தேவை படும் விசையம் நிறைய இருக்கும் போது, சிறு வயசு ஆர்வ கோளாறை எல்லாம் பெரிய விசையமாக நினைக்க வேண்டாம் என்பதுதான் இதன் உள்கருத்து.
14 August 2010 11:27 PM
/////////////////////////////
ஐயா..அவருடைய ரசிகர்கள் குழந்தை மனப்பான்மையிலே உள்ளனர். அவர்களுக்கு அவர்களுடைய தவறை எடுத்து சொல்லும் பொறுப்பி ரஜினிக்கு உண்டு. அதைவிட்டு விட்டு "நான் இப்ப வருவேன்..வெயிட் பண்ணுங்க..ரெடியா இருங்க...அப்புறம் டைரக்டர் எழுதிக் கொடுத்தாரு.." என்று பல்டி அடிப்பது எந்த விதத்தில் நியாயம்..அவருடைய பொறுப்பை தட்டிக்கழிப்பதும் குற்றமே. எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் அந்த ரசிகர்கள்தான், அறியாமையில் செய்கிறார்கள் என்றால், உங்களைப் போல் படித்தவர்கள், நான்கும் தெரிந்தவர்கள் இன்னும் இதனை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான். சில கமெண்டுகளை பார்க்கும்போது, "ஏன் இப்படி" என்று கோபம் தோன்றுகிறது..மன்னிக்கவும்..

Anonymous said...

உங்கள் ப்ளாக்குக்கு வந்தால் (எங்காவது கிளிக் செய்தல) விளம்பரமா வருது.. அது எப்படிங்க?

வைரஸா இல்லே காசு பார்க்கும் விளம்பரமா?

ராம்ஜி யாகூ எவ்வளவு எளிமையா கிண்டலா எழுதியிருக்கார்.

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
nonymous said...
உங்கள் ப்ளாக்குக்கு வந்தால் (எங்காவது கிளிக் செய்தல) விளம்பரமா வருது.. அது எப்படிங்க?

வைரஸா இல்லே காசு பார்க்கும் விளம்பரமா?

ராம்ஜி யாகூ எவ்வளவு எளிமையா கிண்டலா எழுதியிருக்கார்.
15 August 2010 7:13 PM
////////////////////////////
நண்பா..நான் எதுவும் விளம்பரம் வைக்கவில்லையே..உங்கள் கணிப்பொறியை சரி செய்யமுடியுமா..

ஆகாயமனிதன்.. said...

///மதுரையில் ஒரு காலத்தில் தன் சொந்த பணத்தை செலவு செய்து காளி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை நூறு நாட்கள் ஓட வாய்த்த மதுரை ரஜினி மன்ற தலைவர் jaafar இன் சொந்த காரருக்கு ரஜினியின் ஒரு தொலை பேசி அழைப்பில் மருத்துவ கல்லலூரி இடம், அரசு வேலை வாங்கி தர முடிந்தது. அதுதான் ரஜினி, கமல் என்ற தெய்வங்களின் மகிமை.
14 August 2010 12:21 AM///
எல்லோருடைய கனவும் என்ஜினீயரிங் காலேஜ் கட்டறது தானா ?
ரசிகர்கள் (ரசிகர் மன்றங்கள்) எல்லோரும் சேர்ந்து ஒரு கம்பெனி (கார்பரேட்) ஆரம்பியுங்கள்...
(ஆளுக்கு ஆயிரம் ரூபாய் சேர்த்தால் போதும்.... )
பின்னர் நீங்களே படம் எடுக்கலாம்...டிவி கம்பெனி ஆரம்பிக்கலாம்...
சினிமாகாரன் சினிமா தான் எடுக்கணும்...
(ரஜினி அரசியல் வரமாட்டார்...
அரசியலுக்கு வந்த சிவாஜி கணேசன் நிலைமை..சிவாஜி ராவுக்கு தெரியாதா ???)
குருவி-வில்லு (கலைஞர் டிவி !!)
வேட்டைக்காரன்-சுறா (சன் டிவி)
இது விஜய்க்கு அரசியல் செக்....(check)
அதுபோல் (கலைஞர் குடும்பம்) ரஜினிக்கு ஏற்கனேவே ஒரு முறை சூன்யம் வைத்துள்ளது..
ரசிகர்கள் அதை மறந்துவிட்டீர்கள்....
(ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் !!!- அவர் மரியாதை (அமைதி) கெட்டுவிடும்)

mkr said...

இவர்கள் மாற மாட்டார்கள்.ரஜினி விசயத்தில் இவர்கள் படிப்பினை பெற வில்லையென்றால் வேற எந்த நடிகர் விசயத்தில் பெற போகிறார்கள்

Arun said...

Sir, neenga solradu elam poii apadi elam yengayum nadakaradu ela summa ungaluku hits venum nu reel vidathinga..
Ningatan ennum kuppaiya think panringa..
Rajni elorukum edupaar kai pillai pola elorum estathuku eluthuringa... ungala elam patha sirikadhatan thonnudu..
Raasa avargale unga mela nala mathipu erundadhu ana mattam thadra blog kevalama eluthi erukinga.. gudbye to ur blog.. I read only half of the blog, looks very disgusting change ur attitude boss... very irritating...

Maduraimalli said...

Raasa, neenga rajini rasigana ippidi ellaam kastapattu irukkinga... ayyo paavam.

Ungala mathiri rasigar irukum varai 1000 rajini vanthalum thappu illai

Muneeswaran said...

கண்மூடித்தனமான ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் யாரும் ப்ளாக்லாம் படிக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். இங்கே சொன்ன அட்வைஸ் மழை, சவுக்கடி, சாட்டையடி எதோ ஒன்றை போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த ரசிகனிடம் சென்று சொன்னால் உபயோகமாக இருக்கும். அதை விடுத்து இங்கே ப்ளாக்கில் ரசிகனின் கடிதம் என்ற போர்வையில் எதையோ எழுதுவதை (உண்மையாகவே இருந்தாலும்) ஸீன் போடுவதாகவே நான் கருதுகிறேன்.

Anonymous said...

Ngoyyala!
Computer la coolie velai paakaravanlam vandhutam puthi solla!
Rajini madhiri 25% sambalatha samooga sevaikku kudukka venam, oru 10% kudu paapom.

Santhosh said...

Thalaiva nan than rasigan pesuraen enga urula padicha ore alu nan than avaruku padikatheryiathu athan elutha sonnaru !#!@#%^$%^$ Enga thalaivanum rasigarkalum nerya senchanga nee enna sencha .... ithu avuru enga mela vaika sollala nangale vecha pasam... dei avuru nala munariyavan jasthi nee entha 1980 la irukiya he he he kasu iruntha padam parpom matha nala velai parpom, nee velai parkama office la utkanthu blog podutu, padichitu comment podura manasachiyae kettu paru..

Poda poi polapa paru"

Post a Comment