Sunday, 22 August, 2010

மிக்சர் ஜீஸ்

இந்த வார கருத்து

ரந்தீவ் நோ பால் போட்ட விஷயத்தை மீடியாக்களும், பிளாக்கர்களும் அலசி காயப்போடுவதாக கேள்விப்பட்டேன். இந்த விஷயத்தில் எனக்கு வேறு மாதிரியான அணுகுமுறை உண்டு. கண்டிப்பாக இதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வர் என்று தெரியவில்லை. ரந்தீவ் செய்தது தவறில்லை என்பது என் கருத்து. ஷேவாக் 100 அடிப்பதற்கு எதிரணியினரான ரந்தீவ் எதற்கு உதவவேண்டும். முதலில் நோபால் என்று ஒன்று இருப்பதனாலேதானே அதை ரந்தீவ் உபயோகப்படுத்தினார். அவர் நோபால் போட்டது தவறென்றால் கிரிக்கெட் விதியும் தவறுதானே. இதில் என்ன ஒழுக்கம், பண்பு வேண்டிக் கிடக்கிறது. ஒரு விளையாட்டு வீர்ராக எதிரணி பேட்ஸ்மேன் 100 அடிக்ககூடாது என்று கிரிக்கெட்டில் அனுமதிக்கப்பட்ட நோபாலை உபயோகப்படுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து. திட்ட விரும்புவர்கள் பின்னூட்டத்தில் திட்டலாம்.

இந்த வார படங்கள்

மனோஜ் நைட் சியாமளனின் “ஹேப்பனிங்க்” என்ற படத்தைப் பார்த்து மிரண்டுவிட்டேன். என்ன ஒரு மேக்கிங்க். மனிதர் மிரட்டு, மிரட்டென்று மிரட்டியிருந்தார். தாவரங்கள், செடி, கொடிகள், மரங்கள் வில்லனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் கரு. மனிதருக்கு கண்டிப்பாக எதிர்காலத்தில் ஆஸ்கார் உண்டு.

அடுத்து “மிஸ்டர் ப்ரூக்ஸ்” என்று ஒரு படம். ஆரம்பிக்கும்போது சுவாரசியமில்லாமல்தான் பார்த்தேன். ஆனால் போக, போக காட்சியமைப்புகள் சீட்டின் நுனிக்கே கொண்டு வந்தன. யாரையாவது கொல்லவேண்டும் என்று வெறிபிடித்த வியாதி கொண்ட ஒரு பெரியபுள்ளி, அடக்கமாட்டாமல் காதலர்கள் இரண்டு பேரை கொலை செய்கிறார். அதை எதிர்வீட்டில் அபார்ட்மெண்டில் உள்ள ஒருத்தர் புகைப்படம் எடுத்துவிடுகிறார். தடயங்களை அழிக்க அவர் கேட்கும் விலை என்ன தெரியுமா..அவர் அடுத்த கொலை செய்யும்போது இவரும் பார்க்கவேண்டும்.. சரி மிரட்டல். முடிந்தால் பாருங்களேன்.

இந்த வார கொடுமை

சன்.டிவியில் வரும் நிகழ்ச்சிகள் கொடுமை என்பது ஊருக்கே தெரியும். ஆனால் மகாகொடுமை என்பது “சங்கீத மகா யுத்தம்” என்ற நிகழ்ச்சி பார்த்தபோது தெரிந்தது. படு அமெச்சூர்தனமாக உள்ளது. அதில் வரும் நடுவர்கள் யாருக்கும் இந்த நிகழ்ச்சியில் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை. ஏதோ கடனுக்கு நிகழ்ச்சி நடத்தி, முடித்து விடுகிறார்கள். என்னுடைய ஆசை என்ன தெரியுமா..கிராமங்களில் எத்தனையோ பேர் நிறைய திறமைகளை அடக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுப்பதற்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சி…

இந்த வார நகைச்சுவை

யாருண்ணே இந்த சாம் ஆணடர்சன். நான் விவேக், வடிவேல் நகைச்சுவைககு கூட இப்படி சிரித்ததில்லை. இன்று முழுவதும் சாம் ஆண்டர்சன் டான்ஸ் வீடியோ பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன். ஞாயிற்று கிழமையில் நான் செய்த முதல் காரியம், தலைவர் நடித்த உலகப் புகழ்பெற்ற “யாருக்கு யாரோ” படத்தை புல் டௌன்லோட் செய்த்துதான். இந்த வார முழுக்க தலைவர் ஆடிய “ராசாத்தி” பாடல்தான் பார்க்கப்போறேன். யார் யாருக்கோ பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த தலைவனுக்கு ஊத்தினா என்னப்பா..யாராவது ஊத்துங்கப்பா..நாங்க கண்டிப்பா எதிர்த்து பதிவுபோடமாட்டோம். மணிரத்னம் படத்தில் அடுத்த ஹூரோவாக சாம் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை பண்ணி பார்த்தேன்….கண்டிப்பா 250 நாள்தாண்ணே…

இந்த வாரவேண்டுகோள்

பதிவுலத்தில் வாரத்திற்கு ஒரு சண்டையாவது வரவேண்டும் என்று நேர்த்தி கடன்போல..திரும்ப ஆரம்பித்து விட்டது. தயவுசெய்து..ஹல்ல்ல்லோ..ஹல்லோ..பேசிக்கிட்டிருக்கும்போது யாருப்பா கல்லை கொண்டி எறியிறது..ஹல்லோ..பேச..யோவ்..எவன்யா கல்லை எடுத்து திரும்ப திரும்ப எறியிறது…கூட்டுங்கயா சபைய…

இந்த வார வரவேற்பு

நர்சிம் திரும்ப எழுத வந்தவிட்டார் போல இருக்கிறது. அவருடைய பதிவுகளை மிகவும் ரசிப்பேன்(சில புனைவுகளைத் தவிர). வந்த வேகத்திலேயே சிக்ஸர் அடித்த அந்த கவிதை அபாரம். வெல்கம் பேக் நர்சிம். இதைதவிர நான் தினமும் திறந்து பார்க்கும் சில பிளாக்குகள்.

1. லக்கிலுக், அதிஷா (நக்கலுக்காக)

2. கேபிள் சங்கர்(கொத்து புரோட்டாவுக்காக..களவாணி விமர்சனம் ஏமாற்றமே)

3. ஜாக்கிசேகர்(ஆங்கில பட விமர்சனத்திற்காக)

4. பரிசல்காரன்(பல்சுவைக்கு)

5. பட்டா பட்டி(செம..லொள்ளுக்காக.)

6. வெளியூர்க்காரன் (லொள்ளு பிளஸ்)

7. அறுசுவை.காம்(சோறு ஆக்குவதற்கு..)

8. தமிழ்சினிமா.காம்(அடுத்து யாருக்கு கோயில் கட்டப்போறாயிங்க என்பதை தெரிந்து கொள்ள)

9. தட்ஸ்தமிழ்.காம்(அமெரிக்காவில் தினத்தந்தி கிடைக்காத்தால்)

இந்த வார சந்தேகம்

பதிவுகளில் எப்படி யூடியூப் வீடியோக்களை இணைப்பது. நிறைய இணைக்க ஆசை. விளக்குபவர்களுக்கு நம்ம ஊருக்கு வரும்போது ஒரு ஐபோன் வாங்கிவரலாம் என்று ஆசையாய் இருந்தது. ஆனால் ஐபோன் – 4ஜீ இப்போது பெயிலியர் ஆகி, நிறைய பேர் இங்கு திருப்பிதருவதால், நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள் என்பது தெரியும்..

19 comments:

வெறும்பய said...

அண்ணே ஜூஸ் செம டேஸ்டே ..

Viji said...

"தி happening " படம் செம கலக்கல் ல.நம்ப ஊரு காரர் என்னமா கலக்காரர்.

ஆனா நாங்க "லேடி இன் தி வாட்டர் " படம் இங்க அமெரிக்கால பார்க்க போனப டிக்கெட் குடுகரர்வர் ரொம்ப ஏளனமா சிரிச்சிட்டு கண்டிப்பா இந்த படம் தான் பார்க்க poreengalanu கேட்டார்.அதே மாதிரி திடேர்லையும் எங்களையும் சேர்த்து ஏழு பேரு தான்.athulayum ரெண்டு பேரு பேரு போட்டதும் எதோ donation வாங்கிட்டு போய்ட்டாங்க ;-
பச் ;-(

எல்லோருக்கும் அவர் படம் புரிய மாட்டேங்குது பிடிக்க மாட்டேங்குது .

வெறும்பய said...

நம்ம கடந்த வருஷம் ரெண்டு ஆஸ்கார் கொடுத்தாங்க உங்களுக்கு தெரியாதா...

எல்லா ஆஸ்காரும் நம்ம அ)சிங்கத்துக்கு தான் கொடுக்கிறதா இருந்தாங்க... அவருதான் பெருந்தன்மையா ரெண்டு மட்டும் எனக்கு போதும் மத்தவங்களுக்கும் குடுங்கன்னு பெருந்தன்மையா கொடுத்தாராம்...

அவரோட யாருக்கு யாரோ படத்தை பாத்திட்டு எல்லோரும் பாருக்குள் பீர் தேடின கதை பி பி சி நியூஸ் வந்திச்சே தெரியாதா...

இது வரைக்கும் வந்த சினிமா படங்களிலையே சிறந்த படமா இந்த படத்தை தான் செலக்ட் பண்ணியிருக்காங்க.. உலக அளவில்.. அதிலும் ஸ்டேப்னிக்கு குடுக்குற விளக்கம்.. சிறந்த வசனமா தேர்வு பண்ணியிருக்காங்க...

உலக வரலாற்றில கூட இடம் பிடிச்சிருக்கு இந்த படம்...

இன்னொரு முக்கியமான விஷயம்.. இந்த படத்தோட 100 ஒரிஜினல் டி வி டி லேமினேட் பண்ணி நாயாகரா, அமோசான், நைல் நதி இப்படி பல இடங்களில வீசியிருக்காங்க ..

இப்படி பல சுவாரசியமான பல தகவல் இருக்கு...

வெறும்பய said...

மேலே நான் கூறிய அனைத்து தகவல்களும் "சாம் ஆணடர்சன்" தலைவர் பற்றியது..

நாஞ்சில் பிரதாப் said...

என்னது சாம் ஆன்ட்டர்சனை தெரியாதா??? எலே மக்கா பஸ்சை கொளுத்துங்கலே...

அந்தப்படத்துல ரவுடிங்களுக்கு அட்வைஸ் பண்ணுவாரே எங்க தலைவர் சாம்...அதை பாத்தீங்களா...அதுதான் படத்துக்கு டர்னிங்க பாயிண்ட்டே....

MaduraiMalli said...

when batsmen scores run on noball (middle of the innings) why its being credited? freehit pathi appuram paesalaam, annae namma vaadham puriyudha?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விளக்குபவர்களுக்கு நம்ம ஊருக்கு வரும்போது ஒரு ஐபோன் வாங்கிவரலாம் என்று ஆசையாய் இருந்தது. ஆனால் ஐபோன் – 4ஜீ இப்போது பெயிலியர் ஆகி, நிறைய பேர் இங்கு திருப்பிதருவதால், நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள் என்பது தெரியும்..//
பரவா இல்லை நான் பாத்துகிறேன். வாங்கிட்டு வாங்க..

ராம்ஜி_யாஹூ said...

நோ பால்- தனது அணி தோற்க போகிறது என்பது தெரியும்.
எனவே எதிர் அணி வீரராவது நூறு அடிக்கட்டுமே என்ற பரந்த மனப்பான்மை வேண்டாமா.

என்ன ஆச்சு போன வாரம் எழுத்து கடவுளைப் பற்றி வாரி இருந்தீர்கள்.

இந்த வாரம் அவரின் பக்த கோடிகளை (பக்த கோடி பதிவர்களை) ஐஸ் வைத்து உள்ளீர்கள்,. இந்த நுண்ணரசியல் புரிய வில்லை

Anonymous said...

rasa , america-vil thinathanthi kedaikatha ??? www.dailythanthi.com

Anonymous said...

>>இதைதவிர நான் தினமும் திறந்து பார்க்கும் சில பிளாக்குகள்.

நண்பர் பிரதீப் 'எந்திரன்' படத்திற்கு விமர்சனம் எழுதி இருக்காரே! பாக்கலையா?? ஒரே ரகளை பண்ணி இருக்கார். (http://espradeep.blogspot.com)
-
வெங்கடேஷ்

அவிய்ங்க ராசா said...

/////////////////////
வெறும்பய said...
அண்ணே ஜூஸ் செம டேஸ்டே ..
21 August 2010 10:24 PM
////////////////////////
நன்றி வெறும்பய..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
Viji said...
"தி happening " படம் செம கலக்கல் ல.நம்ப ஊரு காரர் என்னமா கலக்காரர்.

ஆனா நாங்க "லேடி இன் தி வாட்டர் " படம் இங்க அமெரிக்கால பார்க்க போனப டிக்கெட் குடுகரர்வர் ரொம்ப ஏளனமா சிரிச்சிட்டு கண்டிப்பா இந்த படம் தான் பார்க்க poreengalanu கேட்டார்.அதே மாதிரி திடேர்லையும் எங்களையும் சேர்த்து ஏழு பேரு தான்.athulayum ரெண்டு பேரு பேரு போட்டதும் எதோ donation வாங்கிட்டு போய்ட்டாங்க ;-
பச் ;-(

எல்லோருக்கும் அவர் படம் புரிய மாட்டேங்குது பிடிக்க மாட்டேங்குது .
21 August 2010 10:41 PM
//////////////////////////////
ஆமாம் விஜி..இப்போது ஆங்கில படங்களிலும் விறு விறு எதிர்பார்க்கப்படிகுறது..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
வெறும்பய said...
நம்ம கடந்த வருஷம் ரெண்டு ஆஸ்கார் கொடுத்தாங்க உங்களுக்கு தெரியாதா...

எல்லா ஆஸ்காரும் நம்ம அ)சிங்கத்துக்கு தான் கொடுக்கிறதா இருந்தாங்க... அவருதான் பெருந்தன்மையா ரெண்டு மட்டும் எனக்கு போதும் மத்தவங்களுக்கும் குடுங்கன்னு பெருந்தன்மையா கொடுத்தாராம்...

அவரோட யாருக்கு யாரோ படத்தை பாத்திட்டு எல்லோரும் பாருக்குள் பீர் தேடின கதை பி பி சி நியூஸ் வந்திச்சே தெரியாதா...

இது வரைக்கும் வந்த சினிமா படங்களிலையே சிறந்த படமா இந்த படத்தை தான் செலக்ட் பண்ணியிருக்காங்க.. உலக அளவில்.. அதிலும் ஸ்டேப்னிக்கு குடுக்குற விளக்கம்.. சிறந்த வசனமா தேர்வு பண்ணியிருக்காங்க...

உலக வரலாற்றில கூட இடம் பிடிச்சிருக்கு இந்த படம்...

இன்னொரு முக்கியமான விஷயம்.. இந்த படத்தோட 100 ஒரிஜினல் டி வி டி லேமினேட் பண்ணி நாயாகரா, அமோசான், நைல் நதி இப்படி பல இடங்களில வீசியிருக்காங்க ..

இப்படி பல சுவாரசியமான பல தகவல் இருக்கு...
21 August 2010 10:41 PM
/////////////////////////
யூடியூபில் தலைவர் பேட்டி பார்த்தேன்..அட..அட..அட..

அவிய்ங்க ராசா said...

/////////////////
நாஞ்சில் பிரதாப் said...
என்னது சாம் ஆன்ட்டர்சனை தெரியாதா??? எலே மக்கா பஸ்சை கொளுத்துங்கலே...

அந்தப்படத்துல ரவுடிங்களுக்கு அட்வைஸ் பண்ணுவாரே எங்க தலைவர் சாம்...அதை பாத்தீங்களா...அதுதான் படத்துக்கு டர்னிங்க பாயிண்ட்டே....
22 August 2010 12:42 AM
///////////////////////
அண்ணே..என்னையும் சாம் சங்கத்துல சேர்த்து விடுங்கண்ணே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//விளக்குபவர்களுக்கு நம்ம ஊருக்கு வரும்போது ஒரு ஐபோன் வாங்கிவரலாம் என்று ஆசையாய் இருந்தது. ஆனால் ஐபோன் – 4ஜீ இப்போது பெயிலியர் ஆகி, நிறைய பேர் இங்கு திருப்பிதருவதால், நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள் என்பது தெரியும்..//
பரவா இல்லை நான் பாத்துகிறேன். வாங்கிட்டு வாங்க..
22 August 2010 7:27 AM
/////////////////////////////
இம்புட்டு பழகிட்டு பெயிலியர் ஆன மாடலை கொடுக்க மனசு கஷ்டமா இருக்குண்ணே,,

அவிய்ங்க ராசா said...

//////////////////
ராம்ஜி_யாஹூ said...
நோ பால்- தனது அணி தோற்க போகிறது என்பது தெரியும்.
எனவே எதிர் அணி வீரராவது நூறு அடிக்கட்டுமே என்ற பரந்த மனப்பான்மை வேண்டாமா.

என்ன ஆச்சு போன வாரம் எழுத்து கடவுளைப் பற்றி வாரி இருந்தீர்கள்.

இந்த வாரம் அவரின் பக்த கோடிகளை (பக்த கோடி பதிவர்களை) ஐஸ் வைத்து உள்ளீர்கள்,. இந்த நுண்ணரசியல் புரிய வில்லை
22 August 2010 7:40 AM
/////////////////////////
அதை விடுங்கள்..அவசரத்தில் லிஸ்டிலிருந்து உங்கள் பெயர் விடுபட்டுவிட்டது..மன்னிக்கவும்..

ராம்ஜி யாகூ - கலக்கல் பின்னுட்டத்திற்கு

அவிய்ங்க ராசா said...

///////////////
Anonymous said...
rasa , america-vil thinathanthi kedaikatha ??? www.dailythanthi.com
23 August 2010 7:36 AM
///////////////////////
நண்பா..நான் இபேப்பரை சொல்லவில்லை. செய்தித்தாள் படிப்பதற்கு சம்மானது தட்ஸ்தமிழ்.காம்

அவிய்ங்க ராசா said...

/////////////////
Anonymous said...
>>இதைதவிர நான் தினமும் திறந்து பார்க்கும் சில பிளாக்குகள்.

நண்பர் பிரதீப் 'எந்திரன்' படத்திற்கு விமர்சனம் எழுதி இருக்காரே! பாக்கலையா?? ஒரே ரகளை பண்ணி இருக்கார். (http://espradeep.blogspot.com)
-
வெங்கடேஷ்
23 August 2010 12:07 PM
///////////////////////
கலக்கல்..பயபுள்ள பார்முக்கு வந்துடுச்சு..

sat said...

Mr Brooks is a "killer" movie. _ Shasi

Post a Comment