Sunday, 29 August 2010

ஆத்தா எனக்கு டிரெயின் டிக்கெட் கிடைச்சிருச்சி…

நண்பன் நேற்று தொலைபேசியிருந்தான். குரலில் சந்தோசம் தெறித்தது. அவ்வளவு சந்தோசமாக அவன் குரலைக் கேட்டதில்லை.

“என்னடா..இவ்வளவு சந்தோசம்..எதுவும் புரோமசன் கிடைச்சிருச்சா..”

“ம்ம்ம்ம்..ஹூம்..”

“பின்ன..வேறு ஏதாவது கம்பெனியில ஆபர்???”

“இல்லடா..”

“எந்திரன் படம் ரீலீஸ் அன்னைக்கு போஸ்டர் ஒட்டுற பாக்கியம் ஏதாவது கிடைச்சிருச்சா..??”

“டே..வேற வேலை இல்லையா..நான் எதுக்கு ஒட்டுறேன்”

“நீ பெரிய ஆளா வரவேணாமா..???”

“போஸ்டர் ஒட்டினா எப்படிடா பெரிய ஆளா வரமுடியும்…”

“என்னடா இப்படி சொல்லிட்ட..தாமரைக்கனி, கருப்பசாமி பாண்டியன், சேடபட்டி முத்தையா போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்கள் எல்லாம் போஸ்டர் ஒட்டிதான முன்னுக்கு வந்தாங்க..”

“டே..ராசா..கொலைவெறியை கிளப்பாத…”

“ப்ச்..சொல்லுடா..சஸ்பென்ஸ் தாங்கலை..”

“சந்தோசமா இருக்குடா..தீபாவளிக்கு மதுரைக்குப் போக டிரெயினில டிக்கெட் கிடைச்சிருச்சு..”

என்னால் நம்பமுடியவில்லை..என்னது ஒரு சாமானியனுக்கு தீபாவளி சமயத்தில் ரயில் டிக்கெட் கிடைக்கிறதா..சும்மா புரூடா விடுறான்னு ஒரு சந்தேகம்

“டே நண்பா..சும்மா விடாதே..அமெரிக்க விசா கூட கிடைச்சிரும்..தீபாவளி அன்னைக்கு டிரெயின்ல டிக்கெட்டா..எப்படிடா..”

“ரொம்ப கஷ்டப்பட்டோம்ல..போன தீபாவளிதான் ஏமாந்துட்டேன்..இந்த தீபாவளி எப்படியாவது..”

“நிறுத்து..போன தீபாவளி எப்படி ஏமாந்த..”

“ஆமாண்டா..காலையில சீக்கிரம் போய் லைனுல நின்னா, முதல்ல வாங்கிரலாமுன்னு நைட் 1 மணிக்கெல்லாம் மேற்கு மாம்பலம் ரெயில்வே ஸ்டேசனுக்குப் போறேன்..எனக்கு முன்னாடியே ஒரு பத்து பேருடா..சும்மா கைலியைக் கட்டிக்கிட்டு பீடியை வழிச்சிக்கிட்டு, “இன்னாமே..டிக்கெட்டா..அப்பால லைனுல வந்து குந்திக்க நைனா..” ங்குறாங்கே..எல்லாரு கையிலயும் ஹிண்டு பேப்பர்..”

“என்னது ஹிண்டு பேப்பரா..”

“விரிச்சு தூங்க தான்.”

“யாருடா அவிங்க எல்லாம்..”

“எல்லாம் ஏஜண்டுகள் ஏற்பாடு பண்ணுன ஆளாம்டா..உள்ளாற டிக்கெட் குடுக்கிறவியங்களுக்கும் இவிங்களுக்கும் ஒரு லிங்க் இருக்காம்டா..கொத்து கொத்தா டிக்கெட் வாங்குற மாதிரி பிளானுடா. ஆடிப்போயிட்டண்டா..சரி நானும் பதினொன்னாவது ஆளா குந்திக்கிட்டு…அய்யோ..உக்கார்ந்துகிட்டே தூங்கிட்டேன்..”

“அப்புறம்..”.

“நானும் எப்படியாவது வாங்கிடாலாம்னு பதினோறாவது ஆளா நின்னு பார்த்தேண்டா..பத்து பேரு டிக்கெட் வாங்கிட்டாயிங்க..நான் கரெக்டா கவுண்டருக்கு போறப்ப..”

“நீ ஏண்டா கவுண்டருக்கு போற..முதலியாருகிட்ட போயிருக்க வேண்டியதுதான..”

“மவனே கடிக்கிறீயா..சொல்லுறத கேளு..டிக்கெட் கவுண்டருக்கு போறேன்..ரேஷன் கடையில பாமாயில் இல்லைங்கிற மாதிரி, “சாரிங்க, டிக்கெட் இல்லைங்கிறாயிங்க..நானும் விடலையே..எந்த டிரெயினாலும் பரவாயில்லைங்க..போடுங்க ஒரு டிக்கெட் போடுங்கண்ணேன்..தீபாவளி முடிஞ்ச அடுத்த நாளைக்கு இருக்கு..அதுவும் வெயிட்டிங்க் லிஸ்ட் 151 ன்னு சொல்லுறாயிங்கடா..நைட் புல்லா சாக்கடைக்கு பக்கத்துல உக்கார்ந்து இருந்த எனக்கு எப்படி இருக்கும்..”

“அடப்பாவி..இண்டெர்நெட்டுல டிரை பண்ண வேண்டியதுதான..”

“எது..இண்டர்நெட்டா.,..கடுப்ப கிளப்பாத..8 மணி வரைக்கும் சரியா வேலை செய்யும்..கரெக்டா 8 மணிக்கு “நீங்கள் தொடர்புகொண்ட சர்வர்கள் அனைத்தும் இப்போது உபயோகத்தில் உள்ளன..தயவு செய்து அனைத்து டிக்கெட்டுகளும் ஏஜெண்டுகள் புக் பண்ணி காலியான பிறகு டிரை பண்ணவும்” னு சொல்லுதுடா..

“கொடுமைடா..அதுசரி..இந்த தீபாவளிக்கு எப்படி கிடைச்சிருச்சு..”

“நான் என்ன மடையானா..ஒரு ஏஜண்டுகிட்ட போனேன்..சார் ரேட் ரெண்டு மடங்காகுமுன்னு சொன்னான்..போயிட்டு போகுதுன்னு கொடுத்தேன்..டிக்கெட் கையில வந்துருச்சு..”

“சூப்பருடா..டே..ஒரு ஹெல்ப்டா..அடுத்த வருச தீபாவளிக்கு அண்ணன் கிட்ட இப்பவே எனக்கு ரெண்டு டிக்கெட் சொல்லிடுறா..”

“கண்டிப்பாடா....”

“தேங்க்ஸ்டா..இப்படித்தான் அமெரிக்காவுல..”

“டே..லைன் சரியா கிடைக்க மாட்டிங்குது..நான் அப்புறம் போன் பண்ணவா..”

“டே..இரு..இரு..நான் முடிச்சுக்கிறேன்.இப்படித்தான் அமெரிக்காவுல...”

“ஹலோ..ஹலோ..ஹலோ..சரியா கேக்கலை....ஹலோ…ஹலோ…

ஒரு பயபுள்ள மதிக்குதாண்ணு பாருங்கண்ணே…

5 comments:

சிங்கக்குட்டி said...

ஹி ஹி ஹி நக்கல் இடுகை என்றாலும் உண்மை அதுதான்.

அமெரிக்க விசா கூட வாங்க இப்போ ஆள் இல்லை என்று தட்ஸ் தமிழில் படித்தேன் அப்படியா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னா ஒரு அலப்பற.. ஆனா உண்மை நிலையம் இது தான்... திபாவளிக்கு மட்டுமில்ல மற்ற நாளைகளிலும் குமரி பக்கம் போற ட்ரைன்களின் நிலை இது தான்...

Viji said...

என்ன அண்ணே
இப்படி சொல்றீங்க.௫ வருஷம் கழிச்சு இந்திய கு மொத்தமா குடித்தனம் போரம்.நீங்க சொல்றத பார்த்த பயமல இருக்கு.

Thirumalai Kandasami said...

Interesting Truth,,

but very late news,,reservation finished 20 days before

அவிய்ங்க ராசா said...

நன்றி சிங்ககுட்டி.இல்லீங்க..இப்பெல்லாம் விசா கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்..ஹெச்1 தான் நீங்கள் சொல்லும் நிலை.

நன்றி வெறும்பய

நன்ரி விஜி..தைரியமா வாங்க...))

நன்றி திரு..இப்பதான் டைம் கிடைச்சிச்சு..

Post a Comment