Saturday 28 August, 2010

நான் மகான் அல்ல – விமர்சனம்

முதல் பாதிக்கும், இரண்டாவது பாதிக்கும் இவ்வளவு வித்தியாசம் காட்ட முடியுமா?? முடியுமே என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் சுசிந்தீரன். அதே ஒரு அரதப்பழசான பழிவாங்கும் கதைதான்.

தமிழ்ப்பட கதாநாயகனுக்குரிய அத்தனை இலக்கணத்தையும் பொருந்திய கார்த்திக் வழக்கம்போல் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுகிறார். கணவனை விட கார்த்திக்கிடமே அதிகம் பேசும் நண்பியின் திருமணத்திற்கு செல்லும் கார்த்தி, இளைஞர்களின் ஜொள்ளுக்கு காரணமான காஜல் சுவீட்கடையை கணடதும் காதலிக்கிறார். வழக்கம்போல், அவர் இவரை விரட்ட, இவர் அவரை விரட்ட இளைஞர்களுக்கு வயிறு பற்றிக் கொண்டு வருகிறது.

எப்போதும் போதை அடித்தபடியே திரியும் அந்த ஐந்து கல்லூரி நண்பர்களை காட்டும்போது படம் ஸ்டார்ட் ஆகிறது. போதை தலைக்கேற, கடற்கரைக்கு வரைக்கும் பெண்களை கற்பழிக்கின்றனர். அதன் உச்சகட்டமாக அடைக்கலம் கேட்டு வரும் நண்பனின் காதலியைக் கற்பழித்து கொன்றுவிட, கார்த்தியின் அப்பா அதற்கு சாட்சியாகிறார்.

வில்லன்களின் இலக்கணப்படி சாட்சியான கார்த்தியின் அப்பாவை லோக்கல் ரவுடியின் உதவியுடன் போட்டு தள்ள, வெகுண்டெழுந்த கார்த்தி, ஒரு நிமிடத்தில் காஜல் அகர்வாலை மறந்து, ஆக்சன் ஹீரோவாகிறார்..ரன், சண்டைக்கோழி கிளைமாக்ஸ் மாதிரி அந்த போதை இளைஞர்களை போட்டு தள்ளி, நான் மகான் அல்ல என்று நிரூபிக்கிறார்.

முதல் பாதி, இளமை துள்ளலாக செல்கிறது. கார்த்தி காஜலிடம் செய்யும் குறும்புகள், மௌன ராகத்தை நினைவுப்படுத்தினாலும் ரசிக்கும்படியாக உள்ளது. அந்த 5 போதை இளைஞர்களை காட்டும்போது, திக்கென்று இருக்கிறது. இதே சூழ்நிலையை கவுதம்மேனன் “வேட்டையாடு, விளையாடு” படத்தில் காண்பித்திருப்பார். அவர்களை பார்க்கும்போதெல்லாம், நமக்கும் கொஞ்சம் உதறல் எடுப்பது, இயக்குநரின் வெற்றி எனலம்.

கார்த்தி பருத்தி வீரனின் பாதிப்பில் இருந்து வெளியேறி, பக்கத்து வீட்டு பையனாக வருகிறார். இளமைக்குறும்புகளில் கண்டிப்பாக சிரிக்க வைக்கிறார். அப்பா இறந்தவுடன், வேறு தளத்திற்கு செல்லும் அந்த சேஞ்ச் ஓவரை ரசிக்க முடிகிறது.

எங்கே பிடித்தார்கள் அந்த ஐந்து இளைஞர்களை. எப்போதும் டோப் அடித்துக் கொண்டே அவர்கள் செய்யும் காரியம் பகீர் ரகம். அதுவும், ஒரு பெண்ணின் தலையை தனியே வெட்டி, அதை கொத்தும்போது, என் கழுத்தை தடவிப் பார்த்துக் கொண்டேன். குறிப்பாக, நந்தா படத்தில் சிறுவனாக வரும் அந்தப் பையன், பரட்டைத் தலையுடன் கண்களில் வெறியுடன் திரியும் அந்த இளைஞன், உண்மையிலேயே பயமுறுத்திகிறார்கள். அவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு தரும் அந்த லோக்கல் ரவுடி, கார்த்திக்கு உதவும் அந்த பெரிய தாதா என, கேரக்டருக்கு அப்படியே பொருந்துகின்றனர். பாத்திரப்படைப்பில், இயக்குநரின் திறமை தெரிகிறது

விறுவிறுவென செல்லும் இரண்டு மணிநேரத்தில், இயக்குநர், திரைக்கதையே, ரசிக்கும்படி அமைத்திருக்கிறார். ஊரே பேசும் அந்த பெரிய தாதாவை, இளைஞர்கள் சர்வசாதரணமாக கொலை செய்வது நம்பும்படி இல்லையென்றாலும், அந்த இளைஞர்களின் வெறி ஆச்சர்யபடவைக்கிறது. பாஸ்கர் சக்தியின் வசனமும், மதியின் கேமிராவும், யுவனின் இசையும் படத்திற்கு பெரிய பிளஸ். வன்முறையை கொஞசம் தவிர்த்திருக்கலாம். படம்பார்த்து விட்டு தூங்கினால், என் தலையை யாரோ வெட்டி, என் கையில் கொடுப்பதாக கனவு வந்து பயமுறுத்திகிறது

இறுதியாக நான் மகான் அல்ல – குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் - இடைவேளை முன்பு வரை .

14 comments:

http://rkguru.blogspot.com/ said...

நானும் அப்படிதான் நினைக்கிறன்....ரொம்ப பயமுருத்தல்தான்

Mohan said...

படத்தை இழுக்காமல் இரண்டு மணி நேரத்தில் முடித்தது கூட படத்தின் பெரிய பிளஸ் என்று நினைக்கிறேன்.உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nalla padam

கலகலப்ரியா said...

நல்லாருக்கு.... விமர்சனம்...

Anonymous said...

Hi,
I totally disagree with your statement that 4 students killing the DADA is not believable.

The ROOT cause for the premise is that the students don't have any FEAR (maybe under the influence of drugs or simply because of survival instincts or age{not thinking of the consequences}).

Actually the reason i am posting this is to let you know the psychological part.
I can understand you saying this in your personal blog , BUT what i find it very very amateurish is even KUMUDAM is making such a statement that reaches a million people.

Hope you see the other side of the human mind and not as a statement against you. Thanks!

Sam

MaduraiMalli said...

Hey annan sam sollittaru, ellarum kaetukungapo.. nayee ivan paerla poda dhairiyam illae, advise panraaraam adviseuh

Good citizen said...

ஏய்,,மயிர,, சாரி மதுரமல்லி ,,சொல்லுற விசயம்
நல்ல விசயம்னு தெரிஞ்சும் ஒருத்தர் அனானியில பொட்டுட்டு போயிருக்கிரார்,,இத சொல்லுறதுக்கு
தெகிரியம் தேவையா,, மொன்ன நாயே

அவிய்ங்க ராசா said...

////////////////////
rk guru said...
நானும் அப்படிதான் நினைக்கிறன்....ரொம்ப பயமுருத்தல்தான்
27 August 2010 10:55 PM
////////////////////////
நன்றி குரு..

அவிய்ங்க ராசா said...

///////////////////
Mohan said...
படத்தை இழுக்காமல் இரண்டு மணி நேரத்தில் முடித்தது கூட படத்தின் பெரிய பிளஸ் என்று நினைக்கிறேன்.உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது.
27 August 2010 11:12 PM
/////////////////////
நன்றி மோகன்..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
nalla padam
27 August 2010 11:17 PM
///////////////////////
நன்றி ரமேஷ்..

அவிய்ங்க ராசா said...

////////////////
கலகலப்ரியா said...
நல்லாருக்கு.... விமர்சனம்...
28 August 2010 5:53 AM
/////////////////
நன்றி பிரியா..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
nonymous said...
Hi,
I totally disagree with your statement that 4 students killing the DADA is not believable.

The ROOT cause for the premise is that the students don't have any FEAR (maybe under the influence of drugs or simply because of survival instincts or age{not thinking of the consequences}).

Actually the reason i am posting this is to let you know the psychological part.
I can understand you saying this in your personal blog , BUT what i find it very very amateurish is even KUMUDAM is making such a statement that reaches a million people.

Hope you see the other side of the human mind and not as a statement against you. Thanks!

Sam
///////////////////////////
சாம்..உங்கள் கருத்துக்கு நன்றி..நீங்கள் இன்னும் ஒரு தாதாவை பார்த்தில்லை என்று நினைக்கிறேன். படத்தில் காண்பித்தது போல், மூன்று பேருடன் டீலிங்க் பேச போக மாட்டார். ஒரு பத்து பேராவது இருப்பர். கையில் எப்போதும் ஒரு கன் இருக்கும்.

அவிய்ங்க ராசா said...

///////////////////////
MaduraiMalli said...
Hey annan sam sollittaru, ellarum kaetukungapo.. nayee ivan paerla poda dhairiyam illae, advise panraaraam adviseuh
28 August 2010 9:56 PM
moulefrite said...
ஏய்,,மயிர,, சாரி மதுரமல்லி ,,சொல்லுற விசயம்
நல்ல விசயம்னு தெரிஞ்சும் ஒருத்தர் அனானியில பொட்டுட்டு போயிருக்கிரார்,,இத சொல்லுறதுக்கு
தெகிரியம் தேவையா,, மொன்ன நாயே
29 August 2010 12:49 AM
/////////////////////
ஆஹா..ஏன்..இப்படி..தண்ணி குடிச்சிட்டு வரலாமுன்னு போயிட்டு வர்றதுக்குள்ள இப்படி ஒரு சண்டையா..சமாதானமா போங்கப்பூ..

Anonymous said...

Hi,

This is Sam -who posted as anonymous -because i don't have a Google account (whether you believe it or not). I have been doing a lot of Research on the human mind; hence this post. Our lives are practically ruled/driven by FEAR and NOT unconditional love.

There are several reasons for this and primarily Survival and Security (monetary) overtakes Aliveness and Freedom (after say 21 +).

Anyway back to the point, if we were to somehow( that is the risk) cast away our FEARs, there is a very high probability of attaining unconditional love. Thanks!

Sam

Post a Comment