Wednesday 31 March, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார பயம்

யப்பா..நான் கூட சாதாரணமாக நினைத்து விட்டேன் பதிவுலகம் பற்றி. சங்கம் அமைப்பது தொடர்பாக எவ்வளவு கருத்துகள், மோதல்கள்…ஆனால் ஒன்று கூட ஆரோக்கியமானதாக இல்லை. நான் பதிவர் சந்திப்பு பற்றி பல கனவுகளுடன் சென்றேன். பல பதிவர்களை சந்திக்கலாம்.. உரையாடலாம்..கருத்து பரிமாறலாம்...ம்..ஹூம்..ஒன்று கூட நடக்கவில்லை, சில நண்பர்களை சந்தித்தது தவிர…அடுத்த பதிவர் சந்திப்புலயாவது(நடக்குமா???) எல்லா பதிவர்களுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, ஒரு ஆரோக்யமான நட்பு சூழலை உருவாக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. எழுத்தை மட்டும் வைத்து ஒருவரை எடை போடக்கூடாது. அவரிடம் பழுகும்போது மட்டுமே அவரைப்பற்றி தெரிய வரும். எழுத்துக்கும் நடத்தைக்கும் எவ்வளவு வித்தியாசம்.. இதில் சங்கம் பற்றிய சில பதிவுகளை படிக்கும்போது, இந்த பிரச்சனையில் சாதி, மதம் கலந்து விட்டது என தெரிகிறது. சாதி, மதம் கலந்த எந்த ஒரு நிகழ்வும் உருப்படாதது என்பது என் கருத்து. மீ த எஸ்கேப்பு சொல்லும்முன்பு ஒரு ஆலோசனைண்ணே... எனக்கு மொத்தம் 180 பாலோயர் இருக்கீங்க..நம்ம எல்லோரும் சேர்ந்து ஒரு சங்கம் அமைப்போமாண்ணே..பெயர் கூட “அவிங்க ராசா கொலைவெறிப் படை”.(எங்க ஓடுறீங்க..சங்ககத்துல ஜாயின் பண்ணினா ஒரு ஷாம்பு பாட்டில் இலவசமா தர்றோம்ணே....)

இந்த வார படம்

அங்காடித்தெரு பற்றி விமர்சனம் எழுதலாம் என்று நினைத்தால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ஏறக்குறைய நூறு விமர்சன பதிவாவது வந்திருக்கும்..நான் என்ன புதிதாக எழுதுவது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இது போன்ற படங்கள் போற்றப்படவேண்டும். இல்லையேல், அடுத்த வருடத்திற்குள் பேரரசு மாஸ் ஹீரோ ஆகி விடுவார்..அப்புறம் நம்மதான் கஷ்டப்படணும். பொதுவாக சரவணா ஸ்டோர்ஸில் சர்வீஸ் நன்றாக இருக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் இந்தப் படம் பார்த்து விட்டு சென்றால் அவர்களை வேறு கோணத்தில் பார்ப்பீர்கள்..அப்படி பார்த்தால் இந்தப்படம் உங்களை ஏதோ விதத்தில் பாதித்திருக்கிறது என்று அர்த்தம். தமிழக அரசு இந்தப்படத்திற்கு விருது கொடுப்பதற்கு பதிலாக, எல்லாக் கடைகளிலும் ஒரு ரெய்ட் நடத்தி, ஊழியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று நடவடிக்கை எடுக்கலாம்.அதைத்தான் வசந்தபாலனும் விரும்புவார்..

இந்தவார சந்தேகம்

விஜய் டீ.வி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பலபேர் நன்றாக ஆடினாலும், எப்போதுமே திவ்யதர்சினி(டி.டி), ஜெயலட்சுமி இவர்களே செலக்ட் ஆவதாக நண்பன் சொல்லுகிறான். அதுபோல மானாட மயிலாட நிகழ்ச்சியில் கூட சில பேர்களே செலக்ட் மாறி, மாறி செலக்ட் செய்யப்படுவதாக கேள்வி. என் கேள்வி என்னவென்றால், அப்ப பார்க்குறவியிங்க எல்லாரும் இளிச்சாவாயங்களா(வரப்போகும் பின்னூட்டம்..”அப்ப ஏன் பார்க்குற..??) நான் அளிக்கப்போகும் பதில்(பின்ன, அஜால், குஜால் நிகழ்ச்சிகளை ஜோதி தியேட்டரிலயா பார்க்கமுடியும்..) திரும்பி வரப்போகும் கேள்வி(அஜால் குஜால் படத்துல கதை, திரைக்கதை, டைரக்சனெல்லாம் ஆஸ்கார் ரேஞ்சுக்கு எதிர் பார்த்துட்டுதான் போவியா..)..நான் அளிக்கும் பதில்…….(…..)

இதற்கு பேர்தான் கள்ள மௌனமோ..??

இந்த வார பாடல்

கொஞ்சம் பழைய பாடல்தான்..சத்யம் படத்தில் “என் அன்பே” என்ற பாடல்..முடிந்தால் யூடியூப்பில் கேட்டு பாருங்கள். படமாக்கியவிதம், மற்றும் பாடியவர் குரல்(சாதனா சர்கம்??) அனைத்தும் அருமை. மற்றும் நாணயம் படத்தில் “நான் போகிறேன் மேலே மேலே..” ஜேம்ஸ் வசந்தன் இசையில் எஸ்.பி.பி மற்றும் சித்ரா கலக்கியிருப்பார்கள்.

எப்போதும் என் ஆல்டைம் பேவரைட், துள்ளுவதோ இளமையில் வரும் “வயது வா வா என்கிறது..” இந்தப் பாடலை தூங்குவதற்கு முன்பு கேட்டால் டிக்கெட் இல்லாமல் சொர்க்கம் நிச்சயம்..

இந்த வார சாப்பாட்டுக்கடை

கே.கே நகர் சிவன் பார்க் அருகில் இருக்கும் “சுடலை மாடன்” குடிசை ஹோட்டல்…இரண்டு இட்லியை வைத்து போதும், போதும் என்று கேட்கிற அளவுக்கு சாம்பார் ஊற்றுவார்கள் பாருங்கள்..சாம்பாருக்கு தொட்டுக் கொள்ளதான் இங்கு இட்லி..அவ்வளவு சுவை…சாம்பார் சட்னியில் கொஞ்சம் கூட கஞ்சத்தனம் கிடையாது..போனவாரம் சரவணபவனில் சாப்பிடும்போது, எக்ஸ்டா அப்பளம் கேட்டதறு 7 ரூபாய் பில் போட்டதாக ஞாபகம்..சரவணபவனில் கேசரி ஒரு பிளேட் வாங்கி பாருங்கள்..சரியாக 100 கிராம் நிறுத்து, அதையும் நாலு தடவை கரண்டியை வைத்து தட்டியே தருவார்கள்..

இந்த வாரம் படித்த மொக்கை கவிதை

என் மாமியார் வாந்தி எடுத்தாள்…

என் பொண்டாட்டி சாந்தி கிடைத்தாள்…

12 comments:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//என் மாமியார் வாந்தி எடுத்தாள்…

என் பொண்டாட்டி சாந்தி கிடைத்தாள்//

கவித சூப்பர்..
மிக்சர் ஜூஸ் அதவிட சூப்பர்..

vasu balaji said...

/எனக்கு மொத்தம் 180 பாலோயர் இருக்கீங்க../

10% செல்லாத ஓட்டுன்னு அந்த நேர்மைய பாராட்டுறேன்:))

/ஆனால் நீங்கள் இந்தப் படம் பார்த்து விட்டு சென்றால் அவர்களை வேறு கோணத்தில் பார்ப்பீர்கள்..அப்படி பார்த்தால் இந்தப்படம் உங்களை ஏதோ விதத்தில் பாதித்திருக்கிறது என்று அர்த்தம்./

ஒரு மழைக்காலத்தில் ஜெர்கின்சோடு போய்ப்பாருங்கள் ராசா. படம் வருமுன்னரே செய்திகளையும், நேரடியாகவும் பார்த்த என் கருத்து:

இவர்கள் அனுபவித்த வக்கிரங்களுக்கு சிக்கிய கஸ்டமர் வடிகால்.

/இரண்டு இட்லியை வைத்து போதும், போதும் என்று கேட்கிற அளவுக்கு சாம்பார் ஊற்றுவார்கள் பாருங்கள்../

ஹி ஹி. சென்னையில் நடுத்தர மக்கள் சிறிய ஹோட்டலில் கேட்பதே இப்படித்தான் தெரியுமா ராசா?

“ரண்டு இட்லி..இட்லி தெரியாம சாம்பார்”

vinu said...

ஏப்ரல் 1 என் இனிய
" இந்திய மக்கள் தின" வாழ்த்துக்கள்
இந்த நல்ல நாளில், காவிரில, கங்கை தண்ணிய குடிக்கற மாதிரி , கருப்பு பணம் 73 லட்சம் கோடி வர மாதிரி, பெட்ரோல் வெல கொறையரா மாதிரி, ஒரு கனவ,அடிக்கடி நினச்சி பாத்து சந்தோஷமா இருக்கணும் .

taaru said...

அது என்ன சூசு படத்த போடாம வெறும் மிக்சர் மட்டும்..இதெல்லாம் நல்லா இல்ல ..ஆமா...

//ஒரு ஷாம்பு பாட்டில் இலவசமா //
ஒரு "பத்திரமா பாத்துக்கோ" ஆயில் கண்ட்ரோல் பார்சேல்ல்...

//தமிழக அரசு இந்தப்படத்திற்கு விருது கொடுப்பதற்கு பதிலாக, எல்லாக் கடைகளிலும் ஒரு ரெய்ட் நடத்தி, ஊழியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று நடவடிக்கை எடுக்கலாம்.அதைத்தான் வசந்தபாலனும் விரும்புவார்..//
நான் நினச்சேன் .. நீ [ஒத்த கருத்தோடு நெருக்கமாக உணர்வதால் இந்த ஒருமை.கோவிச்சுகாதீங்க அண்ணாச்சியோவ்..!] சொல்லிப்புட்டே அண்ணே....!!


//என் மாமியார் வாந்தி எடுத்தாள்…
என் பொண்டாட்டி சாந்தி கிடைத்தாள்…//

இதுக்காகவே ஒரு கொலைவெறி தாக்குதல் நடத்தணும்... அவீங்க ராசா அட்ரஸ் வேணும்?கொஞ்சம் அனுப்புறீகளா?

ஜெய்லானி said...

////என் மாமியார் வாந்தி எடுத்தாள்…
என் பொண்டாட்டி சாந்தி கிடைத்தாள்…//

எப்ப ராஸா ரெண்டாவது கல்யானம் செஞ்ச ? . பால்ய கல்யானத்துக்கு என்ன தண்டனை தெரியுமால உமக்கு!!!

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல்.

Gazy... said...

இப்படிலாம் எழுதறதுக்கு மல்லாக்க படத்துகிட்டு யோசிப்பாய்ங்களோ?சூப்பர்

ப.கந்தசாமி said...

ஏனுங்க, அப்ப பதிவர் குழுமம் அம்போதானா? நானு கோயமுத்தூர்ல ஒண்ணு ஆரம்பிக்கலாமின்னு இருந்தனுங்க, அப்ப வேண்டாமுங்களா?

Mullai said...

ennathu...i asked u to write....not to copy paste...unga styla oru kavithai pls....

ராம்ஜி_யாஹூ said...

back to humour. welcome.

அவிய்ங்க ராசா said...

Thanks Mullai,Ramji, Thiru, Vinu, Tharu, Kandasamy sir, Vaanambadigal sir, akbar, gazy, jeylani

nellai அண்ணாச்சி said...

நல்லா எழுதுரிங்க ரொம்ப சந்தோசம்

Post a Comment