Tuesday, 16 March, 2010

டீக்கடை பெஞ்சு

உலகத்தோட அறிவு களஞ்சியம் ஒவ்வொரு தெருவில் இருக்கும் டீக்கடை பெஞ்சுன்னு சொல்லலாம்ணே..அவ்வளவு அறிவு கொட்டிக் கிடக்கும். நீங்க ஐ.ஏ.எஸ் எழுதப் போறீங்களா..டிரெயினிங்க் சென்டர் எல்லாம் போக வேண்டியதில்லை. பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு போய் 1 மாசம் உக்காருங்க..சுத்தமாயிடுவீங்க..அதாவது அவ்வளவு ஞானம் கிடைக்கும்னு சொல்ல வந்தேன். ஒபாமாவிலிருந்து பக்கத்து தெருவில் ஓடிப்போன பாமா வரைக்கும் தெள்ள தெளிவா அலசுவாயிங்க, என்.டி.டிவி செய்திகள் மாதிரி. நீங்க போய் பக்கத்தில் போய் உக்கார்ந்து சுவாராசியமா கவனிச்சாலும் சூதானமா இருக்கணும். இல்லைன்னா ஒரு மாச பில் பாக்கி 92 ரூபாயை உங்க தலையில் கட்டிருவாயிங்க..சிலநேரம் பதிவுலகம் பத்தியெல்லாம் பேசுறாயிங்கன்னா பாத்துக்கங்களேன்..

இப்படித்தான் போன நேத்து வீட்டுல கேஸ் தீர்ந்து போச்சு. சரி பக்கத்து டீக்கடைக்கு போய் ஒரு டீ சாப்பிடுவோமேன்னு உக்கார்ந்தேன்..என்னமா அலும்ப கொடுக்குறாயிங்க..ஒரு பேப்பர் படிக்க விடமாட்டிறாயிங்கண்ணே..பக்கத்தில இருக்குறவன் அப்பதான் ஜூ.வி வாங்கி படிச்சுக்கிட்டிருந்தான்..அதுல பிரபல(!!!???) பெரியாரிஸ்ட் சாருவின் பேட்டி என்று இருந்தது..ரெண்டு பேரு பேசுறாயிங்க….

“மச்சான்..பெரியாரிஸ்டுன்னா இன்னாடா..”

“தெரியலையேடா…”

“அது யாருடா சாரு நிவேதா..”

எனக்கு வந்த கோவத்துக்கு அளவே இல்லைண்ணே..தினமும் ஒரு லட்சம் வாசகர்கள் படிக்கும் உளக..சரி..உலக எழுத்தாளரைப் பத்தி இப்படி சொன்னா கோவம் வராதாண்ணே..பொங்கி எழுந்திட்டேண்ணே..

“சார்..சாரு நிவேதான்னா பிரபல எழுத்தாளருங்க..ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ஹிட்ஸ்..”

“எது..கொசுவுக்கு அடிப்பாயிங்களே..அந்த ஹிட்ஸா..”

“அய்யோ..இல்லைங்க..அது வந்து இன்டெர்நெட் ஹிட்ஸ்ங்க..”

“இன்டெர்நெட்ல எதுக்குங்க ஹிட்ஸ் அடிகிறாயிங்க..”

அப்பவே தெரிஞ்சு போச்சுண்ணே..சட்டுபுட்டுன்னு காபியை குடிச்சுட்டு இடத்தை காலி பண்றதுதான் நல்லதுன்னு. இந்த காபி தண்ணியை வேற சீக்கிரம் கொடுக்க மாட்டிங்குறாயிங்க..ஒருத்தன் திரும்பவும் என் வாயை கிண்டினான்..

“எதுக்குங்க..அவரைப் போயி பெரியாரிஸ்ட்ன்னு சொல்லுறாயிங்க..”

“தெரியலைண்ணே..அவருதான் சாமியார் பத்தி பக்கம் பக்கமா விளம்பரம் பண்ணினாரு..ஒருவேளை அதுக்கா இருக்குமோ..”

“சாமியார் பத்தி விளம்பரம்னா..அப்புறம் எப்படி பெரியாரிஸ்ட்..”

“யோவ்..ஆள விடுங்கயா..வேணும்னா நீயும் ஏதாவது சாமியார் மடத்துல போய் சிங்கி அடி..உனக்கும் பெரியாஸ்ட் கொடுப்பாயிங்க...டீக்கடை அண்ணே..எனக்கு எப்ப டீ வரும்..”

எரிச்சலோடு கேட்டேன்..அடுத்த நியூஸுக்கு தாவிட்டாயிங்கண்ணே..

“ஆறு மணிக்கு மேல் நடப்பதையெல்லாம் நடிகர் சங்கம் கண்காணிக்க முடியாது..” சரத்குமார் அறிவிப்பு..

“குமாரு..ஏண்டா புவனேஸ்வரி மேட்டருல மட்டும் பாய்ஞ்சு வந்து கண்டனம் சொன்னாயிங்க..அது மட்டும் எப்படிடா..”

“ஒருவேளை அது ஆறு மணிக்கு உள்ள நடந்துருக்கும்போலயே..ஹி..ஹி..”

ஆஹா..உசிருக்கு உலை வச்சிருவாயிங்க போலிருக்கேன்னு நைசா இடத்தை காலி பண்ண ஆரம்பிச்சேன்..

“ராசா..ராசா..நில்லுங்க..டீயை சாப்பிட்டு போங்க..”

“இல்லை..வீட்டுல கொஞ்சம் வேலையிருக்கு..”

“பரவாயில்லை உக்காருங்க..எப்பவாவதுதான் இங்க வர்றீங்க.”

எனக்கு ஏழரை நாட்டு சனி அன்னைக்கு ஏழுமணிக்கெல்லாம் ஸ்டார்ட் ஆயிடுச்சுண்ணே..

“நான் ஒரு சமுகசேவகன்..ரஞ்சிதாவுடன் இருந்த நிமிடங்களில் பிரக்ஞையன்றி இருந்தேன்..” சுவாமி நித்தியானந்தா..

"ஏண்ணே..குமாரு...அது என்னண்ணே பிரக்ஞையன்றி..அப்படின்னா..”

“ஹி..ஹி..சொல்ல கூச்சமா இருக்குடா..”

அடப்பாவிங்களா..காலங்காத்தாலயே செக்ஸ் சி.டி பத்தி பேசுறாயிங்களேன்னு “நீங்களெல்லாம் யோக்கியமானவர்களான்னு” உண்மைத்தமிழன் மாதிரி கேக்கலாமுன்னுதான் பார்த்தேன்..ஆனால் அடுத்த பக்கத்தில் போட்டிருந்த ராஜலீலை விளம்பரம் என்னை நிலைதடுமாறவைத்தது..

கடைசியா நான் கேட்ட டீ வந்தது. அத டீன்னு சொன்னா டீயைக் கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறதால டிக்காசன் தண்ணி என்று சொல்லலாம்..வாயில் வைத்து ஒரு மடக்கு கூட குடிக்கல..அதுக்குள்ளாற ஒருத்தன் ஆரம்பிச்சான்..

“ராசா அண்ணே..நீங்க பதிவுலகத்திலதான்னே இருக்கீங்க….”

“ஆமா..”

“நீங்க..எந்த குரூப்பு..**** குரூப்பா இல்லாட்டி ****** குரூப்பா..”

“நான் ஓ பாஸிட்டிவ் குரூப்பு..”

“இல்லைண்ணே..யாருக்கு சப்போர்ட்டு..”

“யோவ்..நாங்க என்னா கட்சியா நடத்துறோம்..குரூப்பா இருக்குறதுக்கு.நாங்க எவ்வளவு ஒற்றுமையா இருக்கோம் தெரியுமா...”

“இல்லைண்ணே..சும்மா தெரிஞ்சுக்குறதுக்குதான்…ஆமா..உங்களையாண்ணே மூக்குல குத்துனாயிங்க..”

அடப்பாவிகளா..ஒரு டீ குடிக்க வந்தது தப்புங்களாயா…

17 comments:

ஜெய்லானி said...

//கடைசியா நான் கேட்ட டீ வந்தது. அத டீன்னு சொன்னா டீயைக் கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறதால டிக்காசன் தண்ணி என்று சொல்லலாம்//

ராஸா பாத்து, யாராவது சங்கம் வைச்சு அதுக்கு கேசு போட்ற போராங்க

sivakumar said...

lol...hilarious writing!

செந்தில் நாதன் said...

நல்லா டி குடிசிங்க போங்க!!

Han!F R!fay said...

மெய்யாலுமே மூக்குல குத்து வாங்கன கடுப்புல போட்ட பதிவோ???
என்ன இருந்தாலும் இந்த குமார் பய புள்ள உங்கள பாத்து இப்டி கேடுருக்க கூடாதுண்ணே...!!!!

Dr.P.Kandaswamy said...

ஆமா, நாம எல்லாம் ஒரே குரூப்பாத்தேன் திரியரோம் இல்லீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// உங்களையாண்ணே மூக்குல குத்துனாயிங்க..”

அடப்பாவிகளா..ஒரு டீ குடிக்க வந்தது தப்புங்களாயா…
//

சிரிச்சு மாளவில்லை...

பிரசன்னா இராசன் said...

ஆக நீவிர் ஒரு பிரபல பதிவர் என்ற காரணத்தினால் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளை களைய, உம்மை எமது வா.பா.போ.போ குழுவில் சேருமாறு யாம் கட்டளை இடுகிறோம். இந்த கட்டளையை மீறினால் பதிவானந்தா தங்களை பகிஷ்கரிப்பார் என எச்சரிக்கிறோம்...

Dr.P.Kandaswamy said...

டீக்கடை நல்லா இருக்குதுங்க.

டக்கால்டி said...

செம சிரிப்பு வருது பாஸ்...
குருப்பு மேட்டர படிக்கும் போது நிலக்கடலை வாங்கிக் கொடுத்துட்டு கவுண்டமணியிடம் நெல்லை சிவா "நீங்க எந்த கட்சின்னு சொல்லுங்க...ஒரு அபிமானம்னு ஒன்னு இருக்கணும் இல்ல" என்ற காமெடி சீன் நினைவுக்குவந்தது.

கலகலப்ரியா said...

ம்க்கும்... நல்லாதான் ஆத்துறாய்ங்கடா டீய... ஆமா என்னோட க்ரூப் எதுன்னு சொன்னாங்களா... எனக்கு கண்டிப்பா தெரிஞ்சாவனும்..

Meshak said...

எதுக்கும் அடுத்தமுறை டீகடைக்கு போகும்போது துணைக்கு கோபாலை அழைத்து செல்லவும் ரொம்பதான் திணறிட்டிங்க போல.

Mullai said...

பக்கத்து டீக்கடைக்கு போய் ஒரு டீ சாப்பிடுவோமேன்னு உக்கார்ந்தேன்.....சட்டுபுட்டுன்னு காபியை குடிச்சுட்டு இடத்தை காலி பண்றதுதான் நல்லதுன்னு. இந்த காபி தண்ணியை வேற சீக்கிரம் கொடுக்க மாட்டிங்குறாயிங்க..????? டீ or காபி

ஹுஸைனம்மா said...

/சரி பக்கத்து டீக்கடைக்கு போய் ஒரு டீ சாப்பிடுவோமேன்னு/

//இந்த காபி தண்ணியை வேற சீக்கிரம் கொடுக்க மாட்டிங்குறாயிங்க//

//கடைசியா நான் கேட்ட டீ வந்தது//

ரொம்பக் குழம்பியிருக்கீங்க போல!! இன்னுமா தூக்கம் கலையல?

அஷீதா said...

ayayoooo mudiyalanga...

Veliyoorkaran said...

பங்காளி சட்டுபுட்டுன்னு வந்து பமுக'ல (பட்டாப்பட்டி முன்னேற்ற கழகம் ) சேர்ந்துருங்க..உங்கள உடனடியா மகளிர் அணிக்கு மாநில தலைவரா அறிவிக்கிறோம்...தனியா ஆசிரமம் கட்டி தர்றோம்..அதுவும் கேமரா ப்ரீ ரூம்...உங்கள யாரும் கலாய்க்காம எங்களோட ராணுவம் உங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும்...என்ன சொல்றீங்க...நீங்க கட்சில சேர்ற மாபெரும் விழாவுக்கு ஏற்பாடு பண்ணிறவா... ??

gopi g said...

ஒரு இடைவெளிக்குப் பிறகு உங்களிடமிருந்து ஒரு நகைச்சுவை மிளிர்ந்த பதிவைப் படித்தேன். வாழ்த்துக்கள்.

jigopi

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே என்னையும் உங்க க்ரூப்ல சேர்த்துக்கங்கண்ணே :)

Post a Comment