Friday, 19 March, 2010

போடா கிறுக்குப் பயலே

எனக்கு அடிக்கடி தலைவலி வந்ததில்லை. கடைசியாக வேட்டைக்காரன் படம் பார்க்கும்போது வந்ததாக ஞாபகம். அதற்கு பிறகு நேற்றுதான் வந்தது. அதுவும் அலுவலகத்தில் அதிகம் வேலை இருக்கும்போது வந்ததால் நிரம்ப சிரமப்பட்டேன்..அதிகம் கோபப்பட்டேன். இயல்பாக நான் அதிகம் கோபப்படுவதில்லை. ஆனால் நேற்று இயல்பை மீறி கோபம் வந்தது..

நான் தினமும் அம்மாவிடம் பேசிவிடுவேன். அட்லீஸ்ட் “நல்லா இருக்கீங்களா” என்றாவது..நான் அவர்களுக்கு கொடுக்க முடிந்த சந்தோசம் இது ஒன்று மட்டும்தான். ஒன்றைக் கவனித்திருக்கிறேன். என்னோடு பேசும்போது மட்டும் அம்மா மிகவும் சந்தோசமாய் இருக்கிறார்கள். சந்தோசத்தின் வெளிப்பாடு அந்த குரலிலேயே தெரியும்..”நல்லா இருக்கியாப்பா” என்ற குரலில் உள்ள உற்சாகம் “சரி..வைச்சிடுறேன்பா” என்னும்போது சுத்தமாக வடிந்து விடும். தாய்ப்பாசம்..

யோசித்துப் பார்த்தால், நமக்கு பல வழிகள் உண்டு நம்மை சந்தோசப்படுத்துவதற்கு. சினிமாவிற்கு செல்லலாம், நண்பர்களோடு அரட்டை அடிக்கலாம், பதிவு எழுதலாம்..ஆனால் என் அம்மாவிற்கு உள்ள ஒரே சந்தோசம் என்னோடு பேசுவது மட்டும்தான். யோசித்துப் பாருங்கள்..வாழ்க்கையின் விளிம்பில் இருப்பவர்களுக்கு எது சந்தோசமாக இருக்கும்..பணம், கார், பங்களா..காஸ்ட்லியான உடை, வெரைட்டியான உணவு….ம்..ஹூம்..அன்பு, பாசம்..என் மகன் உள்ளான்…சந்தோசமாக உள்ளான்..என்னை மாதம் ஒருமுறை பார்க்க வருவான்..இந்த நினைவுகளோடு மட்டுமே என் அம்மா வாழ்கிறார்கள்..

மாதம் ஒருமுறை என் அம்மாவைப் பார்க்க போகும் போது அவர்கள் முகத்தில் சந்தோசத்தைப் பார்க்க வேண்டுமே..கோடி கொடுத்தாலும் அதை எங்கும் வாங்க முடியாது..என்னைப் பெருமையாக பக்கத்து வீட்டிற்கு கூட்டி செல்வார்கள்..”என் பையன் சென்னையிலிருந்து வந்திருக்கான்..” என்று சொல்லும்போது அவர்கள் முகத்தில் பெருமிதத்தை பார்க்க வேண்டுமே..உண்மையாக சொல்லுகிறேன்..நீங்கள் அம்மாவிற்கு கோடி, கோடியாக கொட்டி கொடுத்தாலும் பிடிக்காது..இந்த மாதிரி சிறு, சிறு பெருமிதங்களே அவர்களுக்கு கோடிகள்..

இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது, எனக்கு வந்த மஞ்சள் காமாலை..ஆளை அடித்துப் போட்டுவிட்டது..என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. ஏறக்குறைய விளிம்பில் நிற்கிறேன்..என் அம்மா மிகவும் எடை குறைவுதான்..ஆனாலும் என்னை தூக்கி கொண்டு ஓடினார்கள் பெரியாஸ்பத்திரிக்கு…அப்போதெல்லாம் எங்கே எமர்ஜென்சி கவனிப்புகள்..என்னை ஒரு ஓரமாக மருத்துவமனையில் போட்டுவிட்டு “டாக்டர் வந்து பார்ப்பார்..” என்ற போது என் அம்மா அழுத அழுகை இன்னும் நினைவுக்கு வருகிறது..35 வயதே ஆன டாகடரின் கால்களை, 50 வயதான அம்மா பிடித்து அழுகும்போது உங்களுக்கு எப்படி இருக்கும். என்னால் அதெல்லாம் மௌன சாட்சியாக பார்க்க மட்டும்தான் முடிந்தது,.

ஒரு வாரமாக அம்மாவிற்கு சொட்டு தூக்கமில்லை. அடிக்கடி கவலையுடன் குளுக்கோஸ் பாட்டிலைப் பார்ப்பார்கள்..சிலநேரம் அவசரம், அவசரமாக ஓடிப்போய் நர்ஸை கூட்டி வருவார்கள் பல திட்டுகளை வாங்கிக் கொண்டும்..அத்தனையும் தாய்ப்பாசம்..மாசு கலக்காத பாசம்.. என்னால் எழக்கூட முடியவில்லை..உண்மையைச் சொல்லப்போனால் ஏறக்குறைய அசைவற்றுதான் கிடந்தேன்.. என் அசைவாய் அம்மாதான் இருந்தார்கள், எனக்கு ஊட்டி விடுவது முதற்கொண்டு, கால் கழுவுவது வரை…யார் செய்வார்..நண்பர்கள்..ம்..ஹூம்..சொந்தக்காரர்கள்..ம்..ஹீம்..அம்மா..அம்மா மட்டுமே..நான் எப்போதும் அம்மாவை பார்க்கும்போதெல்லாம் அணைத்துக் கொள்வேன்…அப்படி அணைக்கும்போதெல்லாம் நான் உணர்வது சூடு..அம்மாவின் கருவறையிலிருக்கும்போது நான் உணர்ந்த சூடு..என் நெஞ்சுக் கூட்டில் கடைசி வரையில் இருக்கும்..

இப்படிப்பட்ட அம்மாதான் நேற்று எனக்கு வழக்கம்போல் கால் செய்தார்கள்..மிகவும் பரபரப்பாக மீட்டிங்கில் இருந்தேன்.சற்று தலைவலி வேறு..அம்மா பெயரைப் பார்த்தவுடன் சூழ்நிலை காரணமாக கட் செய்தேன்.. மீட்டிங்கில் பேச ஆரம்பித்தவுடன் திரும்பவும் கால்..அம்மா..எல்லாரும் ஒரு மாதிரியாய் பார்க்கவே திரும்பவும் கட் பண்ண வேண்டிய சூழ்நிலை. திரும்பவும் கால்.இந்த முறை கோபம் வந்தது..

“அம்மா..மீட்டிங்ல..”
“தம்பி ராசா..”
“அப்புறம் கூப்பிடுறேன்..”
“இல்லடா..”
“யம்மா..ஒரு தடவை சொன்னா புரியாது..இப்ப வைக்கிறீங்களா..இல்லையா..”

எதிர்முனையில் ஒரு சத்தம் இல்லை..கட் செய்தார்கள்..
நான் இவ்வளவு கோபமாக பேசியதில்லை..மீட்டிங்க் அவசரம், தலைவலி..எல்லாம் சேர்த்து வார்த்தைகளாக வெடித்தன..மீட்டிங்க் முடிந்தது..வேலை காரணமாக எல்லாவற்றையும் மறந்து போனேன்….தலைவலியுடன் வீடு சென்றவன் தூங்கிப் போனேன்..

மறுமுறை எழுந்து பிரஷ் செய்யலாம் என்று கிளம்பிய போதுதான் அம்மா புகைப்படத்தைப் பார்த்தேன்..கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்து கொண்டிருந்தார்கள்..கண்கள் என்னையே பார்ப்பது போல் இருந்தது..முகம் “நல்லா இருக்கியாப்பா” என்று கேட்பது போல் இருந்தது..என்ன காரியம் செய்தேன் நேற்று..இப்போதுதான் நினைவிற்கு வந்தது..அவசரம் அவசர்மாக கால் செய்தேன்..முதல் அழைப்பிலேயே எடுத்து விட்டார்கள்..காத்திரிந்திருப்பார்கள் போல..

“அம்மா..”
“தம்பிபா..எப்படி இருக்கப்பா..”
“நல்லா இருக்கேன்மா..”

என்னால் பேசமுடியவில்லை..

“சாரிம்மா..நேத்து ஒரு அவசர மீட்டிங்க..ஆமா..எதுக்கு கால் செஞ்சீங்க..”

“நேத்து உனக்கு தலைவலியாலம்பா..மருமக சொன்னா..அதை விசாரிக்கத்தான் பண்ணினே..இப்ப எப்படி இருக்கு..மாத்திரை போட்டியா..டாக்டரைப் போய்….”

இதற்கு மேல் என்னால் கவனிக்க முடியவில்லை..என்னை யாரோ காரி உமிழ்வது போல இருந்தது..எனக்கு எப்போதுமே பிடிக்காத கண்ணீர் என்னை அறியாமல் என் கண்களில்..

“அம்மா…”

“என்னப்பா..”

“சாரிம்மா..நேத்து ஒரு மாதிரி அவசரத்துல உங்களை கோவமா..”

“ஏ..இதுக்கென்னப்பா..நீ மீட்டிங்குல இருக்குறப்ப நான் பேசியிருக்க கூடாது..தம்பி..இதனால உனக்கு எதுவும் கெட்ட பே வரலையில்ல..”

“இல்லைம்மா..சாரிம்மா..மன்னிச்சிடுங்க..”

“போடா கிறுக்குப் பயலே..”

50 comments:

Unknown said...

“போடா கிறுக்குப் பயலே..”//-;))

தத்துபித்து said...

உண்மை , உண்மையை தவிர வேறொன்றும் இல்லை .
.
//எனக்கு அடிக்கடி தலைவலி வந்ததில்லை. கடைசியாக வேட்டைக்காரன் படம் பார்க்கும்போது வந்ததாக ஞாபகம்//

எனக்கு மயக்கமே வந்தது .
.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

super post thala...

Unknown said...

சூப்பரா இருக்கு ...! ஒரு நிமிஷம் என் கண்ணு கலங்கிருச்சு ..

vasu balaji said...

ம்ம். எந்த ஏக்கமும் தாங்கிக்கிரலாம். இது தீராக்கடன்.

taaru said...

//நான் அதிகம் கோபப்படுவதில்லை.//
விளம்பரம் எல்லாம் பெருசா இருக்கு... பட் அம்மாகிட்ட கேட்டாவுள்ள தெரியும்...
//நண்பர்கள்..ம்..ஹூம்//
அண்ணே.. எனக்கு பண்ணாய்ங்க அண்ணே... அப்போ அவிங்களும் எனக்கு அம்மா மாதிரி தானண்ணே ...


இத படிச்சு முடிக்கும் போது அப்டியே Plain ஆயிட்டேண்ணே .... இந்த மாதிரி இன்னும் எம்புட்டோ இருக்கு... வாழ்த்துக்கள் அண்ணா..

Vijayashankar said...

உங்கள் அம்மாவை உங்களோடு அழைத்து வைத்துக்கொள்ளுங்கள். சும்மா மட்டும் எழுதினேன் என்றால், அதுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

ya i lightly cried..

Veliyoorkaran said...

அண்ணேன்...கலங்கடிச்சுபுடீங்க அண்ணேன்..சூப்பர் அண்ணேன்..இருங்க எங்கம்மாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன்..!!

Soundappan said...

Photo'la irukkira amma yaaru pangali?

Unknown said...

நெகிழ்ச்சியான உணர்வு..

Valpayan said...

Nenja nakkittinga..

ப.கந்தசாமி said...

கண்ணு கலங்கிடுச்சுங்க

நாகராஜன் said...

ராசா.

அழ வைக்கணும்னு முடிவு பண்ணிட்டு எழுதிருக்கீங்க... அழவும் வைச்சுட்டீங்க... அம்மா-க்கு இணை அம்மா தாங்க...

அஷீதா said...

கண்ணீருடன் பின்னூட்டம் பதிக்கும் முதல் பதிவு உங்களுடையது தாங்க...

ரொம்ப நல்லா இருந்துது...நன்றி. நான் என்னோட அம்மாக்கு இப்போவே போன் போட்டு பேசறேன்.

Thuvarakan said...

சொல்ல வார்த்தைகள் கூட இல்லை.....

பாவக்காய் said...

>>போடா கிறுக்குப் பயலே
என் அம்மாவும் இதையேதான் சொல்லுவாங்க !!
நெகிழ்வாய் இருந்தது !!
செந்தில்

Unknown said...

இதுக்கும் மேல உங்களுக்கு பின்னூட்டம் போடாம இருந்தா அது தப்புதாண்ணே.
ஆரம்பத்துல இருந்து உங்க பதிவுகள படிக்கிறேண்ணே.
ஒவ்வொரு பதிவுலயும் சும்மா பின்னுறீங்களேண்ணே!
ஒங்க பதிவ படிச்சிட்டு ஒன்னு அழுகுறது இல்ல சிரிக்கிறதே வேலையாப்போச்சு. அதுலயும் இந்தப் பதிவு ஒருபடி மேலேதான். ஒரு சின்ன மேட்டர எடுத்துக்கிட்டு கபடி விளையாடுறீங்களேண்ணே. அற்புதம்ண்ணே! ஊரு சோழவந்தான்..படிப்பு எங்க? மதுரையாண்ணே? ஏன்னா நமக்கு மதுரைதான்:-)

அனு win கனவுகள் said...

உருக்கமான பதிவு ! !
உணர்வு பூர்வமான பதிவு!
தாய் பாசத்தின் வலியை புரிய வைக்க ஒரு நல்ல முயற்சி ! !

இவ்வளவு அன்பு இருக்கும் பட்சத்தில் எதற்காக அவரை தனியே இருக்க விட்டு பாச போராட்டம் நடத்த வேண்டும். சென்னைக்கு அழைத்து வாருங்களேன்.

மொத்ததில் கலங்கடித்த நல்ல பதிவு ! ! !

Jabar said...

என் நண்பர்களுக்கு அப்புறம் என்னை அழவும், சிரிக்கவும் வைப்பதே வேலையாய் இருக்கும் அன்பு சிங்கம், மதுரை தங்கம், எங்கள் மனங்களை ஆளும் ராசா அண்ணனுக்கு என் நன்றிகள்.. அண்ணே இப்படி படிக்கும் போதுதான் அம்மாவுக்கு போன் பண்ணனும்னு தோணுது... வருத்தப்பட வேண்டிய விஷயம்..

Jabar said...

அண்ணே.. உங்கள நேருல பார்த்து பேசனும்னே... நான் சென்னைக்கு வரும்போது சந்திக்கலாமா????

Menaga Sathia said...

இந்த பதிவு யூத் புல் விகடனில் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள்!!

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

ஜெய்லானி said...

:-((

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
ஆர்.கே.சதீஷ்குமார் said...
“போடா கிறுக்குப் பயலே..”//-;))
18 March 2010 9:54 PM
///////////////////////////
வருகைக்கு நன்றி சதீஷ்..

அவிய்ங்க ராசா said...

////////////////////
தத்துபித்து said...
உண்மை , உண்மையை தவிர வேறொன்றும் இல்லை .
.
//எனக்கு அடிக்கடி தலைவலி வந்ததில்லை. கடைசியாக வேட்டைக்காரன் படம் பார்க்கும்போது வந்ததாக ஞாபகம்//

எனக்கு மயக்கமே வந்தது .
.
18 March 2010 9:55 PM
/////////////////////
ஹி..ஹி..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
2010 9:55 PM
ஸ்ரீ.கிருஷ்ணா said...
super post thala...
18 March 2010 10:23 PM
Arul said...
சூப்பரா இருக்கு ...! ஒரு நிமிஷம் என் கண்ணு கலங்கிருச்சு ..
18 March 2010 10:27 PM
வானம்பாடிகள் said...
ம்ம். எந்த ஏக்கமும் தாங்கிக்கிரலாம். இது தீராக்கடன்.
18 March 2010 10:43 PM
////////////////////
நன்றி கிருஷ்ணா, அருள், வானம்பாடிகள்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
taaru said...
//நான் அதிகம் கோபப்படுவதில்லை.//
விளம்பரம் எல்லாம் பெருசா இருக்கு... பட் அம்மாகிட்ட கேட்டாவுள்ள தெரியும்...
//நண்பர்கள்..ம்..ஹூம்//
அண்ணே.. எனக்கு பண்ணாய்ங்க அண்ணே... அப்போ அவிங்களும் எனக்கு அம்மா மாதிரி தானண்ணே ...


இத படிச்சு முடிக்கும் போது அப்டியே Plain ஆயிட்டேண்ணே .... இந்த மாதிரி இன்னும் எம்புட்டோ இருக்கு... வாழ்த்துக்கள் அண்ணா..
18 March 2010 11:04 PM
//////////////////////
நீங்கள் அதிர்ஷ்டமானவர், இப்படிப்பட்ட நண்பர்களை பெறுவதற்கு..

அவிய்ங்க ராசா said...

//////////////////
Vijayashankar said...
உங்கள் அம்மாவை உங்களோடு அழைத்து வைத்துக்கொள்ளுங்கள். சும்மா மட்டும் எழுதினேன் என்றால், அதுக்கு வாழ்த்துக்கள்.
19 March 2010 12:28 AM
///////////////////////
நானும் பலதடவை அழைத்து விட்டேன்..ஊரை விட்டு வரமாட்டேன் என்கிறார்கள்..மேலும் அவர்களை சென்னையில் வாட்ட நான் விரும்பவில்லை..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Anonymous said...
ya i lightly cried..
19 March 2010 1:05 AM
Veliyoorkaran said...
அண்ணேன்...கலங்கடிச்சுபுடீங்க அண்ணேன்..சூப்பர் அண்ணேன்..இருங்க எங்கம்மாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன்..!!
19 March 2010 2:48 AM
/////////////////////
நன்றி அனானி, வெளியூர்க்காரன்,..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
Soundappan said...
Photo'la irukkira amma yaaru pangali?
19 March 2010 2:50 AM
///////////////////////
இல்லை நண்பா..என்னைப் போன்ற ஒரு மகனின் தாய்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
நெகிழ்ச்சியான உணர்வு..
19 March 2010 2:50 AM
Valpayan said...
Nenja nakkittinga..
19 March 2010 2:57 AM
Dr.P.Kandaswamy said...
கண்ணு கலங்கிடுச்சுங்க
19 March 2010 6:55 AM
ராசுக்குட்டி said...
ராசா.

அழ வைக்கணும்னு முடிவு பண்ணிட்டு எழுதிருக்கீங்க... அழவும் வைச்சுட்டீங்க... அம்மா-க்கு இணை அம்மா தாங்க...
19 March 2010 7:23 AM
/////////////////////
நன்றி வால்பையன், கந்தசாமி, சம்பத், ராசுக்குட்டி..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
அஷீதா said...
கண்ணீருடன் பின்னூட்டம் பதிக்கும் முதல் பதிவு உங்களுடையது தாங்க...

ரொம்ப நல்லா இருந்துது...நன்றி. நான் என்னோட அம்மாக்கு இப்போவே போன் போட்டு பேசறேன்.
19 March 2010 9:56 AM
Thuvarakan said...
சொல்ல வார்த்தைகள் கூட இல்லை.....
19 March 2010 12:04 PM
பாவக்காய் said...
>>போடா கிறுக்குப் பயலே
என் அம்மாவும் இதையேதான் சொல்லுவாங்க !!
நெகிழ்வாய் இருந்தது !!
செந்தில்
19 March 2010 12:23 PM
//////////////////////////
நன்றி அஷீதா..பாவக்காய், துவாரகன், செந்தில்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Amal said...
இதுக்கும் மேல உங்களுக்கு பின்னூட்டம் போடாம இருந்தா அது தப்புதாண்ணே.
ஆரம்பத்துல இருந்து உங்க பதிவுகள படிக்கிறேண்ணே.
ஒவ்வொரு பதிவுலயும் சும்மா பின்னுறீங்களேண்ணே!
ஒங்க பதிவ படிச்சிட்டு ஒன்னு அழுகுறது இல்ல சிரிக்கிறதே வேலையாப்போச்சு. அதுலயும் இந்தப் பதிவு ஒருபடி மேலேதான். ஒரு சின்ன மேட்டர எடுத்துக்கிட்டு கபடி விளையாடுறீங்களேண்ணே. அற்புதம்ண்ணே! ஊரு சோழவந்தான்..படிப்பு எங்க? மதுரையாண்ணே? ஏன்னா நமக்கு மதுரைதான்:-)
19 March 2010 3:41 PM
/////////////////////
நன்றி நண்பா..படித்தது மதுரை காமராஜ் கல்லூரியில்….மதுரையில எந்த ஏரியாண்ணே..

அவிய்ங்க ராசா said...

////////////////////
2010 3:41 PM
அனு win கனவுகள் said...
உருக்கமான பதிவு ! !
உணர்வு பூர்வமான பதிவு!
தாய் பாசத்தின் வலியை புரிய வைக்க ஒரு நல்ல முயற்சி ! !

இவ்வளவு அன்பு இருக்கும் பட்சத்தில் எதற்காக அவரை தனியே இருக்க விட்டு பாச போராட்டம் நடத்த வேண்டும். சென்னைக்கு அழைத்து வாருங்களேன்.

மொத்ததில் கலங்கடித்த நல்ல பதிவு ! ! !
19 March 2010 10:30 PM
///////////////////////
நானும் பலதடவை அழைத்து விட்டேன்..ஊரை விட்டு வரமாட்டேன் என்கிறார்கள்..மேலும் அவர்களை சென்னையில் வாட்ட நான் விரும்பவில்லை..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
kanavugal said...
என் நண்பர்களுக்கு அப்புறம் என்னை அழவும், சிரிக்கவும் வைப்பதே வேலையாய் இருக்கும் அன்பு சிங்கம், மதுரை தங்கம், எங்கள் மனங்களை ஆளும் ராசா அண்ணனுக்கு என் நன்றிகள்.. அண்ணே இப்படி படிக்கும் போதுதான் அம்மாவுக்கு போன் பண்ணனும்னு தோணுது... வருத்தப்பட வேண்டிய விஷயம்..
20 March 2010 2:01 AM
kanavugal said...
அண்ணே.. உங்கள நேருல பார்த்து பேசனும்னே... நான் சென்னைக்கு வரும்போது சந்திக்கலாமா????
20 March 2010 2:04 AM
////////////////////////
நன்றி கனவுகள்…கண்டிப்பாக சந்திக்கலாம்..ஆனால் நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் அவ்வளவு சுவாரஷ்யமான ஆள் இல்லை..)))

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Mrs.Menagasathia said...
இந்த பதிவு யூத் புல் விகடனில் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள்!!

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
20 March 2010 2:44 AM
ஜெய்லானி said...
:-((
//////////////////////
நன்றி மேனகா, ஜெய்லானி..

*இயற்கை ராஜி* said...

super

Jabar said...

சகோதரர்களில் சுவாரசியமானவர்கள், சுவரசியமற்றவர்கள் என்ற பிரிவினை கிடையாதண்ணே..... அதுவும் மதுரை என்றவுடன் தனி பாசம்.. அவ்வளவுதான்....

Jaaffer Sadiq said...

there are no words to prasie you..
You are really a good son...
Your mother is very lucky Raja..

Priya said...

என் கண்ணு கலங்கிருச்சு ...

Philosophy Prabhakaran said...

/* கண்ணீருடன் பின்னூட்டம் பதிக்கும் முதல் பதிவு உங்களுடையது தாங்க... */

நான் சொல்ல நினைத்த அதே வார்த்தைகள்... சிறப்பாக இருந்தது அண்ணா...

mind voice: தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சுனவனா இருப்பான் போல இருக்கே...

Anonymous said...

I miss my mom :(

sakthikumar said...

உங்களை பாராட்ட வார்த்தை இல்லை

என் தாயின் அரவணைப்பில் இருந்த தருணங்களை எண்ணி பார்க்க வைத்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.... நன்றிகள்... நன்றிகள்......

T.S.SUTHA said...

thanks brother, I love this, it happended in my life!!! Touched my heart!!! Love my mum!

N.K.S Ramnad said...

mudiyala very good story.

N.K.S Ramnad said...

mudiyala very good story.

சிறுகுடி ராம் said...

உண்மையிலேயே ரொம்ப அருமையா இருந்தது... ஒவ்வொரு வரியை படிக்கும்போதும் நானே அந்தந்த சூழ்நிலைகளில் இருந்ததுபோல் உணர்ந்தேன். இன்று மாலையே நான் அம்மாவிடம் பேசவேண்டும் என்று மனது கிடந்தது துடித்துக்கொண்டிருக்கிறது...
நன்றி ராசா..

சிறுகுடி ராம் said...

ஆமா, உங்க "அவிய்ங்க"-ல பாத்தா நம்ம மதுரப்பக்கம் மாதிரி தெரியுதே! எந்த ஊரு ராசா நீங்க?

அன்புடன் அருண் said...

என் தாயை நினைவு படுத்தி விட்டீர்கள்! கண் கலங்கி விட்டேன்!

Dhatchana said...

kannirudan ur new friend Dhatchana

Post a comment