என்றைக்குமில்லாமல் இன்று சற்று படபடப்பாக இருந்தது. முதல் தடவையாக பதிவர் சந்திப்புக்கு போகிறோம்..அதுவும் பதிவர் சங்கம் அமைப்பது பற்றி டிஸ்கசன் வேற..என்ன பேசலாம்..ஏதாவது ஹோம் வொர்க் பண்ணனுமே..நம்மளுக்கு என்னைக்குமே வில்லன் வீட்டுக்கு வெளியே இல்லைண்ணே..உள்ளேதான்..இந்தா கூப்பிடுறாங்க பாருங்க…
“என்னங்க..அந்த சாம்பாரு…”
“அடியே..திரும்ப திரும்ப என் லைனில கிராஸ் பண்ணுற..வேண்டாம்..”
“அப்படி என்னதான் பண்ணுறீங்க..”
“இன்னைக்கு பதிவர் சந்திப்புல..அதுதான் தயார் பண்ணுறேன்.நாங்க “சென்னை இணைய எழுத்தாளர் சங்கம்” ன்னு ஆரம்பிக்க..”
“வாவ்,.,,இனிமேல் நீங்க எழுத்தாளரா..சூப்பருங்க..எழுத்தாளரு மனைவின்னு பெருமையா சொல்லிக்கலாம்..”
“அடியே பொறு..நாம அந்த அளவுக்கு வொர்த் இல்லை..பதிவரா இல்லை எழுத்தாளரான்னு பெயர் வைக்கலாமான்னு சொல்லி டிஸ்கசன் போய்கிட்டு இருக்கு..”
“ஏங்க..எழுத்தாளருன்னே இருக்கட்டும்..கொஞ்சம் பெருமையா இருக்கும்..”
“ஆஹா..எதுக்கு அடிவாங்கவா..”
“”சரிங்க..சங்கம் ஆரம்பிக்கப் போறீங்கள்ள..உங்களுக்கு என்ன பதவி..பொருளாளர் பதவி கிடைச்சுடும்ல..”
“அதுக்குதான் நிறைய போட்டி இருக்கும்..அநேகமா தேர்தல் நடக்கும் போல..”
“அய்யய்யோ..உங்களுக்கு நார்மலாகவே தமிழ்மணத்துலயோ, தமிழிஸ்லயோ 1 ஓட்டுதான் விழும்..”
“நம்மளுக்குன்னு ஒரு குரூப் இல்லாத்தது எவ்வளவு கஷ்டமா இருக்கு பாத்தியா..”
“ஏங்க..ஏதாவது காசு தள்ளி..”
“இல்ல..இது ஜனநாயக முறையில..”
“சரி..வெற்றியோட திரும்பி வாங்க..”
திலகமிட்டு அனுப்பினாள். 6.30 மணிக்கு பதிவர் சந்திப்புக்கு சென்றேன். அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. உண்மைத்தமிழன் அவர்கள் பேச ஆரம்பிக்கவே, கேபிள் சங்கர் அவர்கள் தொடர்ந்தார்..
அதுக்கப்பறம்தான் ஆரம்பித்ததுண்ணே..யாரு பேசுறத யாருமே கவனிக்கலை. குழு குழுவாக பேச ஆரம்பிச்சுட்டாங்க..பிரச்சனை என்னவென்றால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஆளுமை இல்லாததுதான். பதிவர் சந்திப்பை தமிழக காங்கிரஸோடு ஒப்பிடலாம்..எல்லோரும் தங்கள் கருத்தை சொன்னார்களே ஒழிய, முடிவு எடுக்காமலே சங்கத்தை கலைச்சுட்டாயிங்க..
இது போன்ற கூட்டத்திற்கு வரும்போது முடிவுகளோடு வரவேண்டுமென்று என் கருத்து. ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்டால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு “குழு ஆரம்பிக்கலாமா வேண்டாமா..” என்ற கருத்து விவாதம்தான் நடக்கும். குழுவிற்கு பெயர் இதுதான்(அல்லது 4 பெயர்களில் எது பெட்டர்), குழுவின் நோக்கம் இதுதான், ஏதாவது சேர்க்கணுமா..குழுத்தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கலாம்..என்று கட் அண்ட் ரைட்டாக கேட்டிருந்தால் இந்நேரம் ஒரு முடிவு கிடைத்திருக்கும். அதை விட்டு விட்டு குழு ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று ஆலோசனை செய்தால் இன்னும் பத்து வருடம் வெயிட் பண்ணலாம்..
முதலில் குழு ஆரம்பிக்கலாம்..வருபவர்கள் வரட்டும். குழு அமைத்து இன்ன செய்தோம் என்று நிரூபிப்போம். அதைப் பார்த்து எல்லாரும் தானாகவே சேர்வார்கள். அப்படியே சேரவில்லையென்றாலும் உலகம் அழிந்து விடாது(அனானியா போட்டு கும்மிடாதிங்கப்பூ..)
பதிவர் சந்திப்போது நண்பர் இரட்டைவால், மற்றும் சுகுமாறன் அவர்களை சந்தித்தேன். பேச்சுக்களை சற்று சீரியசாக கவனித்ததால் சரியாக பேச முடியவில்லை. மன்னித்து விடுங்கள்..
உண்மையைச் சொல்லப்போனால் ஏண்டா போனோம் என்று இருந்தது. ஆனால் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட டீ.யை குடித்தபின்பு பிறவிப்பயன் அடைந்தேன். அப்படி ஒரு சுவை. நன்றி உண்மைத்தமிழன் அண்ணாச்சி. ஒன்று கண்டிப்பாக சொல்ல வேண்டும். கேபிள் சங்கர், உண்மைத்தமிழன், தண்டோரா அவர்களின் முயற்சி. சும்மா, கூட்டத்திற்கு வந்து நானும் இப்படி ஒரு பதிவு போடலாம். ஆனால் இதற்கான முயற்சியை எடுத்து, யார் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி..ஹேட்ஸ் ஆப் சார்ஸ்..
அலுப்பாக வீடு வந்தேன். என் மனைவி இதற்காகவே காத்திருந்தாள் போலும்..
“என்னங்க..தமிழ் இணைய எழுத்தாளர்கள் சங்கமா..அல்லது தமிழ் இணைய பதிவர்கள் சங்கமா..”
“ம்…தமிழ் இணைய குழப்பவாதிகள் சங்கம்…”
33 comments:
அட! இவ்வளவோ நடந்துருச்சா?
குழுமம் என்னாத்துக்குன்னு கேட்டாருங்க ஒருத்தர். அப்ப நானும் எழுந்து.............. வெளியே வந்துட்டேன்.
“வாவ்,.,,இனிமேல் நீங்க எழுத்தாளரா..சூப்பருங்க..எழுத்தாளரு மனைவின்னு பெருமையா சொல்லிக்கலாம்..//
:))
//“அதுக்குதான் நிறைய போட்டி இருக்கும்..அநேகமா தேர்தல் நடக்கும் போல..”
“அய்யய்யோ..உங்களுக்கு நார்மலாகவே தமிழ்மணத்துலயோ, தமிழிஸ்லயோ 1 ஓட்டுதான் விழும்..”//
இதுக்கப்புறம் சிரிப்பை நிப்பாட்ட வெகு நேரமாச்சு ..
:))
தல அங்க உங்கள பக்கமுடியாம போச்சி எப்புடி Miss பண்ணேன்னு தெரியல..
:((
u r the 1st, u have surpassed Dondu this time
so all have agreed to disagree yaa. but it is good that we live as it is. This freedom is the secret of the blog's success.
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி......
முதலில் குழு ஆரம்பிக்கலாம்..வருபவர்கள் வரட்டும். குழு அமைத்து இன்ன செய்தோம் என்று நிரூபிப்போம். அதைப் பார்த்து எல்லாரும் தானாகவே சேர்வார்கள். அப்படியே சேரவில்லையென்றாலும் உலகம் அழிந்து விடாது//
:))
சாரிங்க உங்கள பாக்க முடியல..:))
நாங்களும் கோவையில் இதே மாதிரி(!) ஒரு குழுமம் ஆரம்பிக்கப்போறோமில்ல???
அப்போ இனிமேல் வலைபதிவாளர்களின் விடுகளில் தண்ணீர் வரவில்லை என்றால் சாலை
mariyalthanunu சொல்லுங்க!
அப்ப , "பின்னூட்டம் மட்டும் போடுவோர்" சங்கம் ஒன்னு ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.
இது கேபிள் , தண்டோரா , உண்மைத்தமிழன் அவர்களின் முயற்சி, முதல் கூட்டம் என்பதால் அப்படிதான் இருக்கும்,
போக போக ... நிறைய அடிச்சிக்கலாம், என்ன யாரும் வேட்டியோட வந்திடாதீங்க அப்புறம் யாராவது உருவிட்டா உண்மைத்தமிழன் அண்ணாச்சி காசு குடுக்கமட்டார்.
முதலில் சேருவோம், பிறகு
" முதலில் குழு ஆரம்பிக்கலாம்..வருபவர்கள் வரட்டும். குழு அமைத்து இன்ன செய்தோம் என்று நிரூபிப்போம். அதைப் பார்த்து எல்லாரும் தானாகவே சேர்வார்கள்."
அப்படித்தான் முடிவாகி இருக்கிறது அண்ணாச்சி .....
ஹிஹி.. பஸ்ட் டைம் வந்தீங்களா? அதான் அப்பாவியா இருக்கீங்க.! இதென்ன பிரமாதம்.. சமயத்துல சட்டசபை தோத்துடும்..
சங்கம் ஆரம்பிச்சி, கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி எங்கியாவது திருச்சியிலேயோ, சென்னையிலேயோ இல்லை மதுரையிலேயோ ஒரு 100 ஏக்கர் நிலம் இலவசமா சங்கத்துக்கு வாங்கற ஐடியா இருந்தாச் சொல்லுங்க.. நானும் சேந்துக்கலாமின்னு இருக்கேன்.. மிரட்டியெல்லாம் கூப்பிடவேண்டாம்.. கலைஞருக்குப் பாராட்டு விழான்னு சொன்னாலே வந்திருவேம்லா..
கட்டதுரைக்கு கட்டம் சரியில்லன்னு நினைக்குறேன்...
சந்திப்புல கம்னு உக்காந்துட்டு பதிவுல வந்து பயபுள்ள என்னா போடு போடுது பாரேன்...
ரசித்தேன்..
“//ம்…தமிழ் இணைய குழப்பவாதிகள் சங்கம்…”//
ரொம்ப நல்லாருக்குங்க...வழிமொழிகிறேன்!
மேலே கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது சிலர் கீழே கையில் தம்மோடு பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் லக்கியை மட்டுமே எனக்குத் தெரியும். அவர் மற்றொருவரிடம், இந்த வலைபதிவர்கள் உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டீர்களே, நீங்கள் பேசுங்களேன் என்றார்.
அதற்கு அவர் "பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு ஆலோசனைகளோ, ஆலோசகர்களோ தேவையில்லை" என்று படுகூலாக கூறினார்.
ஏலேய் எல்லாம் தெரிஞ்சுதாம்ல வந்திருக்கானுவ. நாமதான் தெரியாமபோயி சிக்கிட்டோம்போல...
:-)
என்னா இப்புடி சொல்லிபுட்டீங்க...இது ஆரம்பந்தானே...இன்னும் எவ்வள்வோ இருக்குண்ணே...நன்றி
/////////////////////////////
துளசி கோபால் said...
அட! இவ்வளவோ நடந்துருச்சா?
குழுமம் என்னாத்துக்குன்னு கேட்டாருங்க ஒருத்தர். அப்ப நானும் எழுந்து.............. வெளியே வந்துட்டேன்.
27 March 2010 9:35 AM
/////////////////////////
உங்களை பார்த்து பேசனும்னு நினைத்தேன்..அதுக்குள்ளாற போயிட்டீங்களே..
//////////////////////
ச.செந்தில்வேலன் said...
“வாவ்,.,,இனிமேல் நீங்க எழுத்தாளரா..சூப்பருங்க..எழுத்தாளரு மனைவின்னு பெருமையா சொல்லிக்கலாம்..//
:))
27 March 2010 9:45 AM
//////////////////////
வருகைக்கு நன்றி செந்தில்
//////////////////////
பிரியமுடன்...வசந்த் said...
//“அதுக்குதான் நிறைய போட்டி இருக்கும்..அநேகமா தேர்தல் நடக்கும் போல..”
“அய்யய்யோ..உங்களுக்கு நார்மலாகவே தமிழ்மணத்துலயோ, தமிழிஸ்லயோ 1 ஓட்டுதான் விழும்..”//
இதுக்கப்புறம் சிரிப்பை நிப்பாட்ட வெகு நேரமாச்சு ..
:))
27 March 2010 9:48 AM
//////////////////////
ஹி..ஹி..குரூப் இல்லாதது ரொம்ப கஷ்டமாத்தேன்..இருக்கு..
/////////////////
2010 9:48 AM
ஸ்ரீ.கிருஷ்ணா said...
தல அங்க உங்கள பக்கமுடியாம போச்சி எப்புடி Miss பண்ணேன்னு தெரியல..
27 March 2010 9:51 AM
//////////////////
கடைசியா உக்கார்ந்து இருந்தேன்..
//////////////////////
துபாய் ராஜா said...
:((
27 March 2010 10:07 AM
//////////////////////
வருகைக்கு நன்றி ராஜா..
/////////////////////
ராம்ஜி_யாஹூ said...
u r the 1st, u have surpassed Dondu this time
so all have agreed to disagree yaa. but it is good that we live as it is. This freedom is the secret of the blog's success.
27 March 2010 10:28 AM
/////////////////////
நீங்க குழுவில இருக்கீங்கல்ல..)))
///////////////////////
Sukumar Swaminathan said...
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி......
27 March 2010 11:10 AM
/////////////////////////
கண்டிப்பா அண்ணே..அடுத்த சந்திப்பின்போது நிறைய பேசலாம்..
///////////////////////
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
முதலில் குழு ஆரம்பிக்கலாம்..வருபவர்கள் வரட்டும். குழு அமைத்து இன்ன செய்தோம் என்று நிரூபிப்போம். அதைப் பார்த்து எல்லாரும் தானாகவே சேர்வார்கள். அப்படியே சேரவில்லையென்றாலும் உலகம் அழிந்து விடாது//
:))
சாரிங்க உங்கள பாக்க முடியல..:))
27 March 2010 11:49 AM
////////////////////////
நான் உங்களைப் பார்த்தேன்..பிசியா இருந்தீங்க..ஒன்னு கேக்கனும்னு இருந்தேன்…ஏதாவது படத்துல ஹீரோவா நடிக்கிறீங்களா..ஏதோ படத்துல பார்த்த மாதிரி இருந்துச்சு..அதான்..
//////////////////
Dr.P.Kandaswamy said...
நாங்களும் கோவையில் இதே மாதிரி(!) ஒரு குழுமம் ஆரம்பிக்கப்போறோமில்ல???
27 March 2010 4:23 PM
/////////////////////
கண்டிப்பா..ஆனா கடிசியில சங்கத்தை கலைச்சிடனும்..ஓகேயா..
///////////////////////
MATHI said...
அப்போ இனிமேல் வலைபதிவாளர்களின் விடுகளில் தண்ணீர் வரவில்லை என்றால் சாலை
mariyalthanunu சொல்லுங்க!
27 March 2010 5:17 PM
அஹோரி said...
அப்ப , "பின்னூட்டம் மட்டும் போடுவோர்" சங்கம் ஒன்னு ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.
27 March 2010 7:02 PM
கே.ஆர்.பி.செந்தில் said...
இது கேபிள் , தண்டோரா , உண்மைத்தமிழன் அவர்களின் முயற்சி, முதல் கூட்டம் என்பதால் அப்படிதான் இருக்கும்,
போக போக ... நிறைய அடிச்சிக்கலாம், என்ன யாரும் வேட்டியோட வந்திடாதீங்க அப்புறம் யாராவது உருவிட்டா உண்மைத்தமிழன் அண்ணாச்சி காசு குடுக்கமட்டார்.
முதலில் சேருவோம், பிறகு
" முதலில் குழு ஆரம்பிக்கலாம்..வருபவர்கள் வரட்டும். குழு அமைத்து இன்ன செய்தோம் என்று நிரூபிப்போம். அதைப் பார்த்து எல்லாரும் தானாகவே சேர்வார்கள்."
அப்படித்தான் முடிவாகி இருக்கிறது அண்ணாச்சி .....
27 March 2010 8:27 PM
////////////////////////
கடையடைப்பு தான் மதி..கண்டிப்பா அஹோரி..நன்றி செந்தில்..
/////////////////////
ஆதிமூலகிருஷ்ணன் said...
ஹிஹி.. பஸ்ட் டைம் வந்தீங்களா? அதான் அப்பாவியா இருக்கீங்க.! இதென்ன பிரமாதம்.. சமயத்துல சட்டசபை தோத்துடும்..
27 March 2010 9:33 PM
Anonymous said...
சங்கம் ஆரம்பிச்சி, கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி எங்கியாவது திருச்சியிலேயோ, சென்னையிலேயோ இல்லை மதுரையிலேயோ ஒரு 100 ஏக்கர் நிலம் இலவசமா சங்கத்துக்கு வாங்கற ஐடியா இருந்தாச் சொல்லுங்க.. நானும் சேந்துக்கலாமின்னு இருக்கேன்.. மிரட்டியெல்லாம் கூப்பிடவேண்டாம்.. கலைஞருக்குப் பாராட்டு விழான்னு சொன்னாலே வந்திருவேம்லா..
27 March 2010 9:38 PM
கண்ணா.. said...
கட்டதுரைக்கு கட்டம் சரியில்லன்னு நினைக்குறேன்...
சந்திப்புல கம்னு உக்காந்துட்டு பதிவுல வந்து பயபுள்ள என்னா போடு போடுது பாரேன்...
28 March 2010 12:19 AM
///////////////////////
கட்டதுரைக்கு என்னோட விளையாடுறதே வேலையாப் போச்சு..
//////////////////////////
ஜெரி ஈசானந்தன். said...
ரசித்தேன்..
28 March 2010 12:28 AM
ஆர்.கே.சதீஷ்குமார் said...
“//ம்…தமிழ் இணைய குழப்பவாதிகள் சங்கம்…”//
ரொம்ப நல்லாருக்குங்க...வழிமொழிகிறேன்!
28 March 2010 1:37 AM
Anonymous said...
மேலே கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது சிலர் கீழே கையில் தம்மோடு பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் லக்கியை மட்டுமே எனக்குத் தெரியும். அவர் மற்றொருவரிடம், இந்த வலைபதிவர்கள் உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டீர்களே, நீங்கள் பேசுங்களேன் என்றார்.
அதற்கு அவர் "பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு ஆலோசனைகளோ, ஆலோசகர்களோ தேவையில்லை" என்று படுகூலாக கூறினார்.
ஏலேய் எல்லாம் தெரிஞ்சுதாம்ல வந்திருக்கானுவ. நாமதான் தெரியாமபோயி சிக்கிட்டோம்போல...
28 March 2010 1:52 AM
இராகவன் நைஜிரியா said...
:-)
28 March 2010 5:48 AM
மயில்ராவணன் said...
என்னா இப்புடி சொல்லிபுட்டீங்க...இது ஆரம்பந்தானே...இன்னும் எவ்வள்வோ இருக்குண்ணே...நன்றி
28 March 2010 9:56 AM
//////////////////////////
நன்றி ஈசா..சதிஷ்..
ஒன்னும் சொல்லுறதுக்கில்லை அனானி அண்ணே..)))
நன்றி ராகவன், மயில்ராவணன்..
அவிய்ங்க அண்ணே.. ரொம்ப நேரம் உங்களை வாசிச்சுட்டாங்க போல இருக்கு!
Post a Comment