இந்த வாரப் பாடல்கள்
சில பாடல்களைக் கேட்கும்போது, உயிரையே உருக்கி விடும். பழைய இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரகுமானின் அனைத்து மெலடிகளும் இந்த ரகத்தை சேர்ந்தவையே. சமீபமாக திரைக்கு வரவிருக்கிற “அங்காடித் தெரு” படத்தில் வருகின்ற “உன் பேரை சொல்லும்போதே” மற்றும் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” இந்த இரண்டு பாடல்களை ஏதும் தொல்லை இல்லாத நேரங்களில்(சுருக்கமாக சொன்னால் மனைவி ஊருக்கு போனபின்பு..ஹி..ஹி..) கண்களை மூடி கேட்டுப் பாருங்கள். ஏதோ இன்னொரு உலகத்திற்கு டிக்கெட் இல்லாமல் எடுத்து சென்று திரும்ப இந்த உலகத்திற்கே எடுத்து வரும். வசந்தபாலனின் இயல்பான “வெயில்” படத்திற்கு அடுத்து வரும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. டிரெய்லரில் அடிக்கடி சிரிக்கும் “அஞ்சலி” கூட மனத்தை ஏதோ செய்கிறது(ஒரு நிமிசம்..மனைவி வர்றது மாதிரி இருக்கு..செக் பண்ணிக்கிறேன்..)
இந்த வார நன்றிகள்
நூறாவது பதிவு பற்றி நானே என்னை நக்கல் பண்ணினாலும் ஒரு விஷயத்தை மறக்க விரும்பவில்லை. உங்களின் வெளிப்படையான பின்னூட்டங்களும், தொடரும் ஆதரவு வருகைகளும். சில நண்பர்களின் பாராட்டு இமெயில்களை படிக்கும் போது கண்ணுல இருந்து தண்ணியா….(ஹலோ..ஹலோ..யார் அங்க ஓடுறது..நில்லுங்கப்பா..அக்கவுண்ட் நம்பர் எல்லாம் கொடுத்து ஹெல்ப் கேக்க மாட்டேன்..இருக்குற ஒரு லட்சத்தையும் எல்.சி.டி புகழ் ஸ்ரீஸ்ரீ பத்தியானந்த சுவாமிகளுக்கு கன்சல்ட்டிங்க் பீஸ் கொடுத்திட்டேன்..அம்மா..தாயே..தர்மம்..அய்யோ..சாரி..…)
இந்த வார நடிகர்
நடிகர் ஜீவா..தற்செயலாக கற்றது தமிழ் பார்க்க நேர்ந்தது..என்ன ஒரு நடிப்பு. தித்திக்குதே படத்தில் சின்னப்பையனாக அறிமுகமான இந்த நடிகனுக்குள் இப்படி ஒரு நடிப்பா.. எங்கே ஒளிந்து கிடந்தது. பின்னி எடுத்து விட்டார்..ஒவ்வொரு அசைவும் நடிப்பு. அதுவும் தன் காதலியை விபச்சார விடுதியில் பார்க்கும்போது நடிக்கும் நடிப்பு இருக்கிறதே..ப்ச்..படம் மனதை என்னமோ செய்தது. “நிஜமாத்தான் சொல்லுறியா” என்று பல இடங்களில் கதாநாயகி கேட்கும் இடங்கள்..ஜீவாவை “கச்சேரி” படத்தில் இன்று பார்க்கும்போது அவர்மேல் தப்பு இல்லை என்று தோணியது. கற்றது தமிழ் போன்ற படங்கள் எல்லாம் ஓடவில்லை என்றால் இப்படிதான் ஆகும்…
இந்த வார கொடுமை
காசு..காசு..,.காசு..சென்னை முழுவதும் காசு..காசு..காசு..இது இல்லையென்றால் நாய் கூட மதிக்கவில்லை. இந்த சென்னையில்..குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட அடமானம் வைக்கப்படும் சூழ்நிலை கூடிய சீக்கிரம் வரும். அப்போது எல்லோரும் கையில் 100, 500 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துக் கொண்டு தெருக்களில் பைத்தியமாய் அலையப் போகிறோம், நான் உள்பட…எங்கு திரும்பினாலும் குறைந்த பட்ச நியாயம் கூட கிடைக்கவில்லை. தெருமுனையில் ஏறும் ஆட்டோவிலிருந்து, மல்டிபிளெக்ஸ் அபார்ட்மெண்ட் வரை…டூவீலரில் அடிபட்டு உயிர்க்கு போராடிக் கொண்டிருக்கும் நாய் மேல் சிறிதும் யோசிக்காமல் ஆட்டோ விட்டு ஏற்றிய ஆட்டோக்காரரிடம் கேட்டபோது “சவாரி வெயிட்டிங்பா..” என்று வந்த பதிலால் சிந்தித்தது
இந்த வார போனஸ் கொடுமை
வாயிள்ளா ஜீவன்களுகு கூட “ப்ளூ கிராஸ்” என்ற அமைப்பு உள்ளது. ஆனால் “அணு அளவும் பயமில்லை” யில் கலந்து கொள்ளும் வாய் உள்ள ஜீவன்களை பாதுகாக்க ஒரு அமைப்பு இல்லை என நினைக்கும்போது கஷ்டமாக உள்ளது. அவிங்களை எவ்வளவு கொடுமைப்படுத்த முடியுமோ, அவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்கள். பாவம் அந்த ஜீவன்களும் பாப்புலாரிட்டிக்காக “ப்ச்..ஆக்சுவலி திஸ் இஸ் வெரி டப் டாஸ்க்” என்ற போது வெறி ஏறியது. விஜய் டீ.விக்கு ஒரு வேண்டுகோள்..இன்னும் அவிங்ககிட்ட உசிரு மட்டும்தான் இருக்கிறது. அதையும் எடுத்துட்டீங்கன்னா டீ.ஆர்.பி ரேட்டிங்க் எங்கேயோ போயிடும்..
இந்த வார சாப்பாட்டுக்கடை
வேளச்சேரியில் காந்தி சாலை நடுவில் பேச்சிலர்களுக்காக உள்ள கையேந்திபவன் சொர்க்கம் “உதயம் டிபன் சென்டர்”. சென்னையில் இவ்வளவு தரமாகவும், விலை குறைவாகவும் சாப்பிட்டதில்லை. அதுவும் முட்டை உடையாமல் போட்டுத் தரப்படும் அந்த முட்டை தோசைக்கு தெரிவில் ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.
இந்த வார வேண்டுகோள்
எவ்வளவு அழகாக எழுதுகிறார்கள் நம் பதிவர்கள். சோகம், நகைச்சுவை, சந்தோசம், காதல், கவிதை, கதை, சினிமா என்று கலக்கும் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் ஒரு வார இதழ் ஆரம்பிக்ககூடாது..
27 comments:
//எவ்வளவு அழகாக எழுதுகிறார்கள் நம் பதிவர்கள். சோகம், நகைச்சுவை, சந்தோசம், காதல், கவிதை, கதை, சினிமா என்று கலக்கும் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் ஒரு வார இதழ் ஆரம்பிக்ககூடாது.. //
Raja., are you okay?
எவ்வளவு அழகாக எழுதுகிறார்கள் நம் பதிவர்கள். சோகம், நகைச்சுவை, சந்தோசம், காதல், கவிதை, கதை, சினிமா என்று கலக்கும் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் ஒரு வார இதழ் ஆரம்பிக்ககூடாது.. //
அப்ப எதாவது சாமியார் cd ரிலீஸ் ஆச்சுனா subscribe பண்ண சொல்லுவீங்களா?
.
not only in chennai, in all metros if you do not have money, no one will respect,
Since you were in US , u know very well how people will treat us if we do not have money or post.
//கண்களை மூடி கேட்டுப் பாருங்கள். ஏதோ இன்னொரு உலகத்திற்கு டிக்கெட் இல்லாமல் எடுத்து சென்று திரும்ப இந்த உலகத்திற்கே எடுத்து வரும்.//
ஏனுங்க சார்..பக்கத்துல இருக்குற டி கடைக்கு போயிட்டு வந்திருப்பீங்க...அதுக்கே இவளோ பில்ட் அப்'ஆ.
//(ஒரு நிமிசம்..மனைவி வர்றது மாதிரி இருக்கு..செக் பண்ணிக்கிறேன்..)//
உங்கள நெனச்சா கொஞ்சம் பாவமா தான் சார் இருக்கு... :)
மிக்சர் சூப்பர். :)
உங்கள் ப்ளாகில் எங்கு கிளிக் செய்தாலும் புது விளம்பரம் வருதே? அது எப்படி? வருமானத்திற்கா?
மதுரை புருட் மிக்சர் நல்லாத்தான் இருக்கு ராசாண்ணே.....
//இந்த வாரப் பாடல்கள்// இன்னிக்கு சாயங்காலமே ஒரு டிக்கட் போட்டுறலாம்...
அஞ்சலிய பாத்த ஒடனே.. MKU அஞ்சலி ஞாபகம் வந்துருச்சாக்கும் அண்ணாத்தைக்கு? [அண்ணி மிக்சர் சூசு படிக்காமல் இருக்க எல்லாம் வல்ல ஸ்ரீஸ்ரீ பத்தியானந்த சுவாமிகளை வேண்டிக் கொ'ல்'கிறேன்]
//நடிகர் ஜீவா.!!// எல்லா புகழும் ராம் அவர்களுக்கே.
//கற்றது தமிழ் போன்ற படங்கள் எல்லாம் ஓடவில்லை// நான் நெம்ப வருதபட்டுட்டு இருக்குற விஷயம்ண்ணே..
//இந்த வார போனஸ் கொடுமை//
நீங்க விஜய் fan ஆ? அட அவுரு இல்லண்ணே ..டி.வி ய சொன்னேன்..
//ஏன் ஒரு வார இதழ் ஆரம்பிக்ககூடாது..//
ஏன் கூடாது?? பிக்கலாமே..
//கற்றது தமிழ் போன்ற படங்கள் எல்லாம் ஓடவில்லை என்றால் இப்படிதான் ஆகும்//
அந்த படம்லாம் ஓடினாதாங்க தப்பு
அந்த படத்தோட இயக்குனருகாவது தெரியுமா படத்தோட கத என்னனு
//காசு..காசு..,.காசு..சென்னை முழுவதும் காசு..காசு..காசு..இது இல்லையென்றால் நாய் கூட மதிக்கவில்லை. இந்த சென்னையில்..
அடிங்க.. அப்போ நீ என்னாத்துக்கு வெளிநாடு போயிட்டு வந்தே.. காசு பாக்க தானே?
தல பாட்டு டவுன்லோட் போட்டு கேட்டுக்கொண்டிருக்கிறேன் ..
//எவ்வளவு அழகாக எழுதுகிறார்கள் நம் பதிவர்கள். சோகம், நகைச்சுவை, சந்தோசம், காதல், கவிதை, கதை, சினிமா என்று கலக்கும் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் ஒரு வார இதழ் ஆரம்பிக்ககூடாது.. //
இதுபோன்ற விஷயங்களில் எங்களுக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது அண்ணா... அனால் உங்களை போன்ற "பிரபல பதிவர்கள்" தான் இதெற்கெல்லாம் முதல் அடி எடுத்து வைத்து முன்னோடியாக இருக்க வேண்டும்... தலை ஆடலாம்... வாலெல்லாம் ஆடக்கூடாதுண்ணே...
வார இதழ் ஆரம்பிக்கிறோமோ இல்லையோ... குறைந்தபட்சம் வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட பத்து பேர் இணைந்து ஒரு குழுப்பதிவையாவது ஆரம்பிப்போம் அண்ணா...
சுவையான மிக்சர்
Hello Aveenga Rasa....Unga blogukku karisalkaran blog la irunthu vanthen...unga blogs padichi siripaa irunthathu...Unga accent apdiyee namma madura pakkam poitu vandha feeling..Really so nice..100 vadhu pathivu potuttu neenga panna alapparai supperuubbb...Ini apppapo vandhu vasichu poga enaku oru pathivu thalam kidaichiruku..thanks Aveenga Rasa...
///////////////////
அப்பாவி முரு said...
//எவ்வளவு அழகாக எழுதுகிறார்கள் நம் பதிவர்கள். சோகம், நகைச்சுவை, சந்தோசம், காதல், கவிதை, கதை, சினிமா என்று கலக்கும் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் ஒரு வார இதழ் ஆரம்பிக்ககூடாது.. //
Raja., are you okay?
//////////////////
yes
//////////////////////////
தத்துபித்து said...
எவ்வளவு அழகாக எழுதுகிறார்கள் நம் பதிவர்கள். சோகம், நகைச்சுவை, சந்தோசம், காதல், கவிதை, கதை, சினிமா என்று கலக்கும் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் ஒரு வார இதழ் ஆரம்பிக்ககூடாது.. //
அப்ப எதாவது சாமியார் cd ரிலீஸ் ஆச்சுனா subscribe பண்ண சொல்லுவீங்களா?
.
21 March 2010 9:45 PM
/////////////////////////
சீ..சீ..அந்த மாதிரி கல்நெஞ்சக்காரயிங்க நம்ம இல்லைண்ணே..10% டிஸ்கவுண்ட் கொடுப்போம்..ஹி..ஹி.
/////////////////////////
ராம்ஜி_யாஹூ said...
not only in chennai, in all metros if you do not have money, no one will respect,
Since you were in US , u know very well how people will treat us if we do not have money or post.
21 March 2010 10:04 PM
//////////////////////////
சென்னையில ரொம்ப கஷ்டம்ணே..
/////////////////////////
அஷீதா said...
//கண்களை மூடி கேட்டுப் பாருங்கள். ஏதோ இன்னொரு உலகத்திற்கு டிக்கெட் இல்லாமல் எடுத்து சென்று திரும்ப இந்த உலகத்திற்கே எடுத்து வரும்.//
ஏனுங்க சார்..பக்கத்துல இருக்குற டி கடைக்கு போயிட்டு வந்திருப்பீங்க...அதுக்கே இவளோ பில்ட் அப்'ஆ.
//(ஒரு நிமிசம்..மனைவி வர்றது மாதிரி இருக்கு..செக் பண்ணிக்கிறேன்..)//
உங்கள நெனச்சா கொஞ்சம் பாவமா தான் சார் இருக்கு... :)
21 March 2010 10:27 PM
///////////////////////////
பொதுவாழ்க்கையில இதெல்லாம் சகஜம்பா..))
//////////////////////
வானம்பாடிகள் said...
மிக்சர் சூப்பர். :)
21 March 2010 11:16 PM
/////////////////////
நன்றி வானம்பாடிகள்..
///////////////////////
Vijayashankar said...
உங்கள் ப்ளாகில் எங்கு கிளிக் செய்தாலும் புது விளம்பரம் வருதே? அது எப்படி? வருமானத்திற்கா?
21 March 2010 11:23 PM
///////////////////////
புரியுது...)))
/////////////////////
kanavugal said...
மதுரை புருட் மிக்சர் நல்லாத்தான் இருக்கு ராசாண்ணே.....
21 March 2010 11:34 PM
/////////////////////////
நன்றி அண்ணே..
//////////////////////////////
taaru said...
//இந்த வாரப் பாடல்கள்// இன்னிக்கு சாயங்காலமே ஒரு டிக்கட் போட்டுறலாம்...
அஞ்சலிய பாத்த ஒடனே.. MKU அஞ்சலி ஞாபகம் வந்துருச்சாக்கும் அண்ணாத்தைக்கு? [அண்ணி மிக்சர் சூசு படிக்காமல் இருக்க எல்லாம் வல்ல ஸ்ரீஸ்ரீ பத்தியானந்த சுவாமிகளை வேண்டிக் கொ'ல்'கிறேன்]
21 March 2010 11:53 PM
taaru said...
//நடிகர் ஜீவா.!!// எல்லா புகழும் ராம் அவர்களுக்கே.
//கற்றது தமிழ் போன்ற படங்கள் எல்லாம் ஓடவில்லை// நான் நெம்ப வருதபட்டுட்டு இருக்குற விஷயம்ண்ணே..
//இந்த வார போனஸ் கொடுமை//
நீங்க விஜய் fan ஆ? அட அவுரு இல்லண்ணே ..டி.வி ய சொன்னேன்..
//ஏன் ஒரு வார இதழ் ஆரம்பிக்ககூடாது..//
ஏன் கூடாது?? பிக்கலாமே..
21 March 2010 11:55 PM
/////////////////////////////
கூடிய சீக்கிரம் உங்களுக்கும் கல்யாணம் ஆகும்ல..))
/////////////////////
ரமேஷ் கார்த்திகேயன் said...
//கற்றது தமிழ் போன்ற படங்கள் எல்லாம் ஓடவில்லை என்றால் இப்படிதான் ஆகும்//
அந்த படம்லாம் ஓடினாதாங்க தப்பு
அந்த படத்தோட இயக்குனருகாவது தெரியுமா படத்தோட கத என்னனு
22 March 2010 2:07 AM
////////////////////////
அதில் உள்ள காதலை மட்டுமே எடுத்தாலே அருமையான கதை இருக்கே..
//////////////////////
Walter Vetrivel said...
//காசு..காசு..,.காசு..சென்னை முழுவதும் காசு..காசு..காசு..இது இல்லையென்றால் நாய் கூட மதிக்கவில்லை. இந்த சென்னையில்..
அடிங்க.. அப்போ நீ என்னாத்துக்கு வெளிநாடு போயிட்டு வந்தே.. காசு பாக்க தானே?
22 March 2010 2:09 AM
///////////////////////////
இதற்கு ஒரு பெரிய பதில் எழுதவேண்டிய எண்ணம் இருந்தது. ஆனால் நீங்கள் கேட்ட கேள்வியில் மரியாதை இல்லாததால் இதுதான் என் பதில் “வருகைக்கு நன்றி”
/////////////////////////
ஸ்ரீ.கிருஷ்ணா said...
தல பாட்டு டவுன்லோட் போட்டு கேட்டுக்கொண்டிருக்கிறேன் ..
22 March 2010 8:15 AM
flying taurus said...
//எவ்வளவு அழகாக எழுதுகிறார்கள் நம் பதிவர்கள். சோகம், நகைச்சுவை, சந்தோசம், காதல், கவிதை, கதை, சினிமா என்று கலக்கும் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் ஒரு வார இதழ் ஆரம்பிக்ககூடாது.. //
இதுபோன்ற விஷயங்களில் எங்களுக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது அண்ணா... அனால் உங்களை போன்ற "பிரபல பதிவர்கள்" தான் இதெற்கெல்லாம் முதல் அடி எடுத்து வைத்து முன்னோடியாக இருக்க வேண்டும்... தலை ஆடலாம்... வாலெல்லாம் ஆடக்கூடாதுண்ணே...
வார இதழ் ஆரம்பிக்கிறோமோ இல்லையோ... குறைந்தபட்சம் வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட பத்து பேர் இணைந்து ஒரு குழுப்பதிவையாவது ஆரம்பிப்போம் அண்ணா...
22 March 2010 8:17 PM
வரதராஜலு .பூ said...
சுவையான மிக்சர்
23 March 2010 4:15 AM
Madhu said...
Hello Aveenga Rasa....Unga blogukku karisalkaran blog la irunthu vanthen...unga blogs padichi siripaa irunthathu...Unga accent apdiyee namma madura pakkam poitu vandha feeling..Really so nice..100 vadhu pathivu potuttu neenga panna alapparai supperuubbb...Ini apppapo vandhu vasichu poga enaku oru pathivu thalam kidaichiruku..thanks Aveenga Rasa...
23 March 2010 5:20 AM
///////////////////////////////
நன்றி கிருஷ்ணா..டாரஸ், மது, வரதராஜூலு..
டாராஸ்..பிரபலபதிவரா..ஏன் இப்படி..))))
எனது கடந்த பின்னூட்டத்திற்கு விரிவான பதில் எழுதாததில் எனக்கு வருத்தம் :(
Post a Comment