Sunday 7 March, 2010

ஆத்தா..நான் பிரபல பதிவர் ஆயிட்டேன்….

எனக்கே தெரியலைண்ணே..நான் எழுதிய போன பதிவு 100 வது பதிவு போல...நான் இதையெல்லாம் எண்ணுறதில்லை. நண்பன் தான் சொன்னான். அவன் சொன்னவுடனே என் மனம் இறக்கை கட்டியது போல் மகிழ்ச்சியால் துள்ளியது..”ஆஹா..நம்மளும் பிரபல பதிவர் ஆகிட்டோம்..” வீட்டு மொட்டை மாடியில் ஏறி நின்று “நான் பிரபல பதிவர் ஆகிட்டேன்” என்று வானத்திற்கே கேட்கும்படி சொல்ல வேண்டும் போல் இருந்தது..ஆனால் தெருவில் போகும் ஜிம்மி, டாமி போன்ற நாய்கள் என்னைப் பார்த்து முறைக்கும் என்பதால் ஆசையை அடக்கிக் கொண்டேன். சரி பிரபல பதிவர் ஆனதின் முதல் அடையாளமாக “இது 101 வது பதிவு” என்று பதிவு எழுதாவிட்டால் பிரபல பதிவர் வரிசையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவசரம் அவசரமாக பதிவு எழுத ஆரம்பித்தேன்..பலவித சிந்தனைகள் ஓட ஆரம்பித்தன..ம்..எப்படி எழுதலாம்..”என்னையும் மனிதனாய் நினைத்து 100 பதிவுகளைப் படித்து..”..சரி இல்லையே..”இது என்னுடைய 101 வது பதிவு..உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்றே..” ன்னு கொஞ்சம் பீலிங்க்ஸா எழுதானாமுன்னு நினைத்தால் கிடைக்கிற நாலு ஓட்டும் போயிடுமோன்னு பயம் வேற..இப்படி பல எண்ண ஓட்டங்களுடன் எழுத ஆரம்பித்த போதுதான் அதை கலைக்கும் நோக்கத்துடன் ஒரு குரல் கேட்டது..

“என்ன பண்ணுறீங்க..அடுப்புல சுடுதண்ணீ வைச்சிருக்கேன்..கொஞ்சம் ஸ்டவ்வை ஆப் பண்ணிறீங்களா..”

எனக்கு பயங்கர கடுப்புண்ணே..ஒரு பிரபல பதிவருன்னு மரியாதை வேண்டாம்..கோபம் வந்தது பாருங்க..அப்படியே எந்திரிச்சு போய் ஸ்டவ்வை ஆப் பண்ணிட்டேன்..

“ஏண்டி..நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்..இப்படி டிஸ்டர்ப் பண்ணுறீயே..”

“ஏன்..ஒபாமாவோட ஏதும் யாஹூ சாட் பண்ணுறீங்களா..”

உலகத்துலயே கோவாலுக்கு அடுத்து நக்கல் புடிச்சவ என் வீட்டுக்காரிதாண்ணே..கேர்புல்லா கேண்டில் பண்ணனும்..

“என்ன நக்கலா..நான் நேத்துதான் பிரபல பதிவர் ஆனேன்..100 பதிவு எழுதியாச்சு..சரி படிக்கிறவியிங்களுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு போலாமேன்னு ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சா..”

“ஆஹா..ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அலும்ப….இது என்னுடைய 100 வது பதிவு..”100 பதிவையும் படிச்ச அனைவருக்கும்” ன்னு சொல்லி ஆரம்பிச்சிருப்பீங்களே..”

“ஆமாண்டி..அதுதானே குல வழக்கம்..”

“முதல்ல உங்களை யாரு பிரபல பதிவருன்னு சொன்னா..:”

எனக்கு பயமாப் போச்சுண்ணே..ஆஹா..நான்தான் தப்பா நினைச்சுட்டனோ..

“என்னடி இப்படி சொல்லிப்புட்டே..100 பதிவு எழுதிப்புட்டேன்..”

“அதனால..பக்கத்து வீட்டு பாட்டி கூட நூறு தடவ ஸ்ரீராமஜெயம் எழுதுது..அது பிரபல பதிவரா..”

எனக்கு கடுப்பா வந்திருச்சுண்ணே..

“அடியே..என்னையே கலாயிக்கிறயா..”

“முதல்ல நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க..நீங்க பிரபல பதிவருன்னு ஒத்துக்கிறேன்..”

“கேளு..”

“எவ்வளவு ஹிட்ஸ் வாங்கிருக்கீங்க..”

“ஒரு 82,000”

“இதெல்லாம் ஒரு ஹிட்ஸா..ஒரு பத்துலட்சம் ஹிட்ஸாவது..”

“அதுதாண்டி தேடிக்கிட்டு இருக்கேன்..ஏண்டி ஹிட்கவுண்டருல எப்படி 10 லட்சம் செட் பண்ணுறதுன்னு உனக்கு தெரியுமா..”

“எனக்கு அலாரம்தான் செட் பண்ண தெரியும்”

..ஆஹாங்க்..நான் அலெக்ஸா ரேட்டிங்கல..”

“யாருங்க அந்த அலெக்ஸா..எனக்கு தெரியாம..”

“போடிங்க..உன் ஜென்ரல் நாலேஜ்ல தீயைப் பொருத்தி வைக்க..அடுத்த கேள்வி கேளு..”

“ஒரு நாளைக்கு உங்கப் பதிவைப் பாராட்டி எத்தனை இமெயில் வருது..”

“எங்கிட்டு..எனக்கு வந்த ஒரே இமெயில் ”வெல்கம் டூ ஜீமெயில்” தான்…..”

“சரி..அட்லீஸ்ட் நீங்களாவது “எனக்கு வரும் வாசகர் கடிதம்” ன்னு ஒரு பதிவு போட்டிருக்கீங்களா..”

“இல்லையே..”

“சரி..யாரையாவது கன்னாபின்னான்னு திட்டி பதிவு போட்டிருக்கீங்களா..அவிங்களாவது உங்களை திட்டிருக்காயிங்களா..”

“இல்லையே..அதுக்குதான் கோவாலை பதிவுலகத்துல ஜாயின் பண்ண சொல்லியிருக்கேன்..இந்த வாரம் அவன் என்னை திட்டுவான்..அடுத்த வாரம் நான் அவனைத் திட்டுவேன்..”

“செல்லாது..செல்லாது..சரி ஏதாவது கேள்வி பதில் பகுதி ஆரம்பிச்சிருக்கீங்களா..”

“ஒரு தடவை ஆரம்பிச்சேன்..ஒரு பயபுள்ள கேள்வி எழுதல..அப்புறம் நானே ஒரு பத்து கேள்வி கேட்டு பின்னுட்டம் அனுப்பினேன்..அதிலயும் சின்ன பிரச்சனை..பழக்க தோசத்துல கேள்வியை கேட்டுபுட்டு “இப்படிக்கு அவிங்க ராசா” ன்னு எழுதிப்புட்டேன்..”

“நீங்கதான் கடலைப் பருப்பு வாங்கியாரச் சொன்னா துவரம் பருப்பு வாங்குற ஆளாச்சே…சரி அட்லீஸ்ட் கவிதைகள், கதைகள்..”

“எழுத வராதே..அப்படியும் டிரை பண்ணினேன்.. இந்த கவிதையை கேட்டு நீயே சொல்லு…

“அடியே ரோஸூ,

நீதாண்டி என் ஜூஸூ..

உங்கப்பன் மொட்டை பாஸூ..

உன்னை காதலிச்சா போடுவாண்டி கேஸூ..

ஆந்திரா மெஸ்ஸுல போடுவாயிங்க முட்டை பொடிமாஸூ..”

நீ இல்லாம என் வாழ்க்கை லாஸூ..

பக்கத்து வீட்டுக்காரன் பேரு தாஸூ..

அடியே ரோஸூ,

நீதாண்டி என் ஜூஸூ..”

“எப்படி..என் கவிதை..”

“போயா லூஸூ..”

“அடியே..”

“அய்யோ சாரிங்க.ஒரு புளோவுல வந்திருச்சு..சரி..அதை விடுங்க..ஒருநாளைக்கு உங்க பதிவை பாராட்டி எத்தனை போன் கால் வருது....”

“ஒரே ஒரு கால் தான்..அதுவும் வோடபோன்ல இருந்து சீக்கிரம் டியூவைக் கட்டுங்கன்னு சொல்லி..

“இப்படி ஒரு தகுதியும் இல்லாத நீங்க எப்படிங்க பிரபல பதிவர்ன்னு சொல்லிக்கிறீங்க.”

எனக்கு அழுகை, அழுகையா வந்திரிச்சுண்ணே..

“அடியே..நீ என்ன சொன்னாலும் நான் பிரபல பதிவர்தாண்டி”

“எப்படி சொல்லுறீங்க..”

“இப்படி பிரபல பதிவர் பற்றி கிண்டல் பண்ணி ஒரு பதிவு எழுதிட்டோம்ல..”

“போயாங்க..சரி..ஒன்னே ஒன்னு செய்யுங்க..நீங்க பிரபல பதிவர்ன்னு ஒத்துக்குறேன்..பக்கத்து கடைல போயி “நான் பிரபல பதிவர்ன்னு” சொல்லி ஒரு டீ கடனா குடிச்சுட்டு வாங்க பார்ப்போம்..”

சரி, டிரை பண்ணிதான் பார்ப்போமேன்னு போனா..உங்க வீட்டு , எங்க வீட்டு கெட்ட வார்த்தை இல்லைண்ணே..அவ்வளவு கெட்ட வார்த்தை..அதுவும் பத்தாம சுடுதண்ணியை வேற மேல ஊத்தி விட்டுட்டாருண்ணே..

ஏண்ணே..நான் பிரபல பதிவர் ஆக முடியாதாண்ணே…

42 comments:

ஜெய்லானி said...

//ஏண்ணே..நான் பிரபல பதிவர் ஆக முடியாதாண்ணே…//

குடும்பத்திலே அதுவும் பொண்டாட்டி வாயால வாங்காட்டி கஷ்டம் தான்....

துளசி கோபால் said...

எதுக்குபா ஃபீலிங்ஸ்????

பிரபல பதிவர் ஆயாச்சு. விடாமுயற்சி(யே) வெற்றி தரும்.

அதென்ன ஆன்னா ஊன்னா கோவாலு?

எங்கூட்டு கோபால் இல்லைதானே?

வாழ்த்து9க்)கள்.

vasu balaji said...

அட போங்கண்ணே. மிக்கியமான மேட்டர சொல்லாம கேள்வி கேட்டா. எனக்கும் மைனஸ் வோட்டெல்லாம் விளுந்திருக்குன்னு சொல்லி இருக்கலாம்ல.எப்புடியோ 101க்கு வரவேற்பு.100க்கு பாராட்டு.

taaru said...

all iz well.... adichu norukka vaazhthukkal....
anni eppavum correct a thaan solvaaga..... :-)

☀நான் ஆதவன்☀ said...

:))))))))))))))) க்ளாஸ் ராசாண்ணே

Anonymous said...

ராசா கலக்கறீயே ... :)))))))

இளைய கவி said...

101 க்கு வாழ்த்துக்கள் ! உங்களுக்கு ஆதரவா ஒரு பதிவு போட்டு இருக்கேன் போய் பாருங்க http://dailycoffe.blogspot.com/2010/03/blog-post_08.html

எல் கே said...

//நான் பிரபல பதிவர் ஆக முடியாதாண்ணே//
ootukarama otthuka maatanga

Unknown said...

செம்ம கலக்கல். 101க்கு வாழ்த்துகள்

குப்பத்து ராசா said...

//நான் பிரபல பதிவர் ஆக முடியாதாண்ணே//
வாழ்த்துக்கள்
(மனதுக்குள் - நீங்க பிரபல பதிவர் இல்லையா!! - இதை நம்பி தொடர்ச்சியா படிச்சுட்டு இருக்கிறேனே)

creativemani said...

101* வாழ்த்துக்கள்... :)

Unknown said...

:-D)

101க்கு வாழ்த்துகள்..

வரதராஜலு .பூ said...

100-க்கு வாழ்த்துக்கள்.

கலக்கிட்டிங்க போங்க.

ஒரே சிரிப்புதான். எப்பிடிங்க இப்பிடில்லாம்?

//கேர்புல்லா கேண்டில் பண்ணனும்..//

கேர்ஃபுல்லா கேர்ஃபுல்லா அப்பின்னுட்டே கோட்டைய விட்டுட்டிங்க போங்க

அய்யோ அய்யோ

:)

Joe said...

சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்!

பொண்டாட்டியை ரொம்ப மிரட்டுற மாதிரி எழுதியிருக்கீங்களே, சும்மா டுபாக்கூர் தானே?

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நாளுக்குப் பிறகு பார்முக்கு வந்து இருக்கீங்க நண்பா.. வாழ்த்துகள்..

மாதேவி said...

101க்கு வாழ்த்துக்கள்.

Kandumany Veluppillai Rudra said...

யாரு சொன்ன என்ன? நீங்க பெரிய பதிவர் ஆயிட்டீங்க!.

Kandumany Veluppillai Rudra said...

யாரு சொன்ன என்ன? நீங்க பெரிய பதிவர் ஆயிட்டீங்க!.

Senthil said...

U r really great!!!!!!

தேசாந்திரி-பழமை விரும்பி said...

பிரபல பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்!!!
இப்படிக்கு "பிரபல பதிவர்" தேசாந்திரி....

Unknown said...

நண்பரே உங்க பீலிங்க்ஸ் புர்யறது .பேசாம பிரபல பதிவர் அவரது யேபடின்னு நான் ஒரு லைவ் கிளாஸ் எடுக்கறேன் .வாங்களேன் .சென்னை ல ஹோட்டல் green leaf la காலை எட்டு மணி முதல் 6 வரை ----மதிய உணவு இலவசமா கொடுக்கறோம்

பாவா ஷரீப் said...

// எங்கிட்டு..எனக்கு வந்த ஒரே இமெயில் ”வெல்கம் டூ ஜீமெயில்” தான்….. //
செம சிரிப்புதான்

பிரதீப் said...

supera irukkuda...kalakku!

Anonymous said...

ஒண்ணாவது பதிவும் நூத்தி ஒண்ணாவது பதிவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கு; கோவலை துணைக்கி கூப்பிட்டு இருக்கலாமோ?

-
வெங்கடேஷ்

Unknown said...

nice wish for u

Unknown said...

nice wish for u

Unknown said...

nice wish for u

thiyagu said...

very nice wishes to you

T.V.ராதாகிருஷ்ணன் said...

100க்கு வாழ்த்துக்கள்

ARV Loshan said...

பிரபல பதிவராக முயற்சி எடுக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். :)
இந்தத் தடையெல்லாம் கடக்கலேன்னா எப்பிடி? ;௦

100 க்கு வாழ்த்துக்கள்..

பி.கு- அண்ணே நிறையப் பிரபல,பெரிய பதிவரெல்லாம் கோவிக்கப் போறாங்கன்னே.. ;)

kathiravan said...

Good luck, i am reading your blog regularly and nice reading and keep it up.

அன்புடன் நான் said...

பிரபல பதிவருக்கு வாழ்த்துகள்.

(இதை படித்துவிட்டு ... வீட்டுகாரம்மா பார்ப்பதற்குள் அழித்துவிடவும்....)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பிரபல பதிவருக்கு வாழ்த்துகள்

SIVA SATHYA said...

anne,

entha pondadingale eppaditha seekarathaula othukka mattanga. Ulaga magalir thinam, 33% ida othukeedu-nu orumba overathan poetru irukkanga.

Vidiunkanna, Neenka prabala pathivarthan naanga othukarom. Enakku ninaivu therintha naala!! unka pathivathan virumbi rasichu padikkiran. Neenka eppa pathivu poduvinkanu dinam dinam pakkiraen Aana ethai tamila podathan enakku theiryala. 101, 1001 nnu jamaikkana. Valthukal.

அன்புடன் அருணா said...

100க்கு வாழ்த்து!.....நல்லாத்தான் ஆகியிருககீங்க பிரபலம்!

செந்தில் நாதன் Senthil Nathan said...

100க்கு வாழ்த்துகள்!! வாய் விட்டு சிரிச்சேன்!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சார்.. என்னா சார்.. 100வது பதிவ போட்டிருக்கீங்க..
டீரிட் கிடையாதா?..
என்னாது...தண்ணி அடிச்சா, போலீஸ் தொந்தரவா?
போங்க சார்.. டமாசு பண்ணிகிட்டு..
நம்ம நித்தி பயலையும் கூப்பிட்டு கிட்டு ஏதாவது ஆசிரமம் போயிடலாம் சார்..
போலீஸ் பாதுகாப்புல ஆடலாம், பாடலாம்..

ரோசனை பண்ணிட்டு போனப்போடுங்க..

அவிய்ங்க ராசா said...

நன்றி

ஜெய்லானி,
துளசி டீச்சர்
வான்ம்பாடிகள்
தாரு
ஆதவன்
மயில்
இளையகவி
எல்.கே
கே.வி.ஆர்
குப்பத்து ராஜா
மணி
சம்பத்
வரதராஜூலு
ஜோ
கார்த்திகை பாண்டியன்
சர்புதீன்
மாதெவி
உருத்திரா
செந்தில்
தேசாந்திரி
சக்தி
கருவாச்சி
பிரதீப்
சிவசங்கர்
தியாகு
ராதாகிருஷ்ணன்
லோசன்
கதிரவன்
கருணா
உலவு

சிவா
அருணா
செந்தில்
பட்டாபட்டி

அஷீதா said...

ஏனுங்க சார் ..

கலக்கிட்டிங்க போங்க.

ஒரே சிரிப்புதான். எப்பிடிங்க இப்பிடில்லாம்...

உக்காந்து யோசிப்பீங்களோ?

வாழ்த்துகள்!

Jabar said...

நூறு பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் மதுரை தங்கம், வெள்ளை மனசு சிங்கம் அவிங்க ராசா அண்ணனுக்கு இந்த மதுரை தம்பியின் மனம் மகிழ்ந்த பாராட்டுக்கள்.. அண்ணே நா உங்களோட பரம விசிறி... நெதமும் உங்க வலைபூவ ரசிக்காம இருக்க மாட்டேன்.. என் மூலமா என்னோட கூட்டாளியும் உங்க விசிறிதான்... முன்னெல்லாம் ஆனந்தவிகடன் படிச்சுட்டுதான் சினிமா பாப்பேன்.. இப்ப உங்க விமர்சனத்தையும் படிச்சிட்டுதான் சினிமா பாக்கறேன்.... உங்களோட பழைய பதிவுகளில் உள்ள அதனையும் உண்மை... (கருப்பு நிறம், ஹிந்தி, மற்றும் பல )... நேரம் இருந்த என்னோட வலை பூவை பார்க்கவும்... mazhai-kanavugal.blogspot.com

இளந்தமிழன் said...

அண்ணே !!!! வாழ்த்துக்கள். பதிவு நல்லா இருக்கு ... ஒரே சிரிப்புதான் போங்க!!!
நானும் மதுரைக்காரன் தான்னே!!!!!!!!!!

அனு win கனவுகள் said...

அட்டகாசம், ஆரவாரம் அது எப்படிங்க நூறாவது பதிவை மட்டும் இப்படி சுவாரசியமா போட்டு பின்னிட்டீங்க???

நல்ல கலக்கல் காமெடி ! !

99 பதிவுகள் இன்னும் படிக்கவேண்டுமே என்ற ஆவல் வேறு ! ! எப்படி இருக்குமோ என்ற பயம் வேறு ! !

Post a Comment