Friday 26 February, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார பிரச்சனை

அஜீத்-திரையுலகம் பிரச்சனைப் பற்றி எழுதாவிட்டால் பதிவர் சங்கத்திலிருந்து விலக்கிவிடுவோம் என்று மிரட்டப்படுவதால்(மிரட்டுராங்கையா..ஹி…ஹி) அஜீத் பிரச்சனையை எழுதுவது அவசியமாகிறது.. இந்த வாரத்தில் சில பதிவுகளைப் படிக்கும்போது சிப்பு, சிப்பா(சிரிப்பாமாம்..) வந்தது. அதுவும் அஜீத் தான்யா வேட்டிக் கட்டின ஆம்பிளை என்று ஒரு நண்பர் சூளுரைந்திருந்தார். கவர்மென்ட்டை பகைத்துக் கொண்டு யாரும் இங்கு வாழமுடியாது(அரசியல்வாதிகளைத் தவிர), அதனால் சீக்கிரமே சமாதானம் ஏற்பட்டு, எல்லோருக்கும் அல்வா கொடுக்கப்படும் என்று உள்மனது சொல்லியது. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு என்ன கவலைன்னா, குமுதம் சொல்லியது போல் நடுவுல “பஞ்சாயத்து தலைவனுக்கு பாராட்டு விழா” ன்னு ஏதாவது நடுத்திருவாயிங்களோன்னுதான்…எதுக்கும் கொஞ்சம் பாராட்டுக்களை மிச்சம் வைங்கப்பா..அடுத்து ”தைரிய லட்சுமியை” பாராட்ட உதவும்.. அப்புறம் இன்னும் ஒரு சந்தேகம்..அஜீத்குமார் தெரியும்..அது யாருண்ணே, தல???

இந்த வார வாழ்த்துக்கள்

வேறு யாருக்கு..தன்மான சிங்கம், பாரதத்தின் அங்கம், எங்கள் தங்கம், கொள்கைகளின் சங்கம்(யாரு யாருக்கு அடைமொழி கொடுக்குறோம்..இவருக்கு கொடுக்கலாமுன்னே) சச்சின் டெண்டுல்கருக்குதான். மனுசன் பொறக்குறப்பயே “குவா, குவா” ன்னு கத்துறக்குப் பதிலா “கிரிக்கெட், கிரிக்கெட்” ன்னுதான் கத்திருப்பார் போல. அந்த 200 அடிக்கும்போது முகத்தில் ஒரு கர்வம், ஆணவம் இருக்க வேண்டுமே..ம்..ஹூம்..துளியும் இல்லை..அதற்கு இணையான இன்னொருத்தர்..”ஏ.ஆர். ரகுமான்..” ஆஸ்கார் வாங்கும்போது அவர் முகத்தைப் பாருங்கள்..துளி கூட கர்வம் இருக்காது..இதற்காகவே, என் வாழ்க்கையில் ஒருமுறையாவது இவர்களை பார்க்கவேண்டும் என துடிக்கிறேன், முடியாது என்று தெரிந்தாலும்…சச்சின் 200 அடிக்கும் முன்னர் “தோனி” வேண்டுமென்று அவருக்கு பந்து வரக்கூடாது என்ற நோக்கத்தில் 4, 6 ரன்களாக அடித்து ஆடி பாலிடிக்ஸ் பண்ணினார் என்று நண்பர்கள் சொன்னார்கள்., சரி நம்ம கோவாலுகிட்ட எதுக்கும் கேக்கலாமுன்னு கேட்டா “ஆமாண்டா ராசா..அன்னைக்கு தோனி பண்ணியது ரொம்ப தப்புடா..சரி அத விடு..மேட்சுல இந்தியா எத்தனை கோலுடா போட்டாயிங்க” ன்னு கேக்குறாண்ணே..

இந்த வாரப் பதிவு

ஏழு கடல், ஏழு மலையெல்லாம் தாண்ட வேண்டியதில்லை. தமிழிஸ் மற்றும் தமிழ்மணத்தை புரட்டினாலே, நிறைய சுவாராசியமான பதிவர்கள் கிடைக்கிறார்கள். சமீபத்தில் நான் படித்து ரசித்த பதிவர் “வெளியூர்க்காரன்”. மனுசனுக்கு என்னமா நக்கல் வருது..நீங்களும் படித்துப் பாருங்களேன்..

இந்த வாரக் கொடுமை

முன்பெல்லாம் சானல்களில் அடல்ஸ் ஒன்லி நிகழ்ச்சி பார்ப்பதற்கு “சூர்யா”, “தேஜா” சானல்களின் இரவு நேரப் படங்களுக்கு இளைஞர்கள் காத்திருப்பதாக கேள்விப் பட்டிருகிறேன். ஆனால் இப்போது எல்லாரும் “மானாடா மயிலாட, ஜோடி நம்பர் ஒன் சீசன் 4” மற்றும் “ஆடவரெல்லாம் ஆட வரலாம்” நிகச்சிகளைப் பார்த்துவிடுவதால் இரவு சீக்கிரம் தூங்கப்போய், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு புண்ணியம் தேடிக் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். ஆனாலும் விடாமல் சில பேர் “வசந்த்” டீ.விக்கு முன்னால் சனிக்கிழமை இரவு தவம் கிடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வேணாமுன்னே..மனசை கெடுத்துக்காதிங்க..அத விடுங்க..”போன வாரப்படம் ஏண்ணே படம் ஒளிபரப்பலை..”

இந்த வார சாப்பாட்டுக்கடை

வீட்டுக்குப் பக்கத்துலயே சூப்பர் ஆந்திரா மெஸ்ஸு இருந்திருக்கிறது, ஜாக்கி சேகர் அண்ணன் பதிவைப் பார்த்த பின்னால்தான் தெரிந்தது. உண்மையிலேயே சூப்பர்தான். அதுவும் அந்தப் ஆவக்காய் மற்றும் வெண்டிக்காய் பொரியல்…சோறை விட அதுதான் அதிகம் வாங்கினேன். வேளச்சேரி வந்தால் மறக்காமல் சாப்பிடுங்கள். டி.சி.எஸ் பக்கத்து சந்தில் கொஞ்சம் உள்ளே போனால் முதல் மாடியில் உள்ளது. அந்த தெருவிலே நிறைய ஆந்திர மெஸ்கள் உள்ளன.இதுதான் டாப்பு..மத்ததெல்லாம் டூப்பு..

மற்றும் ஒரு ஹோட்டல் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ளது “ராயல் ரீகேல்”. நான் வெஜ், மற்றும் வெஜ் அயிட்டங்கள் ஏ.ஒன்..மற்றும் சர்விஸ்க்காகவே அடிக்கடி செல்லலாம்..அந்தப் பக்கம் வந்தால் சொல்லுங்க நானும் வர்றேன்..”நீங்க பே பண்ணுங்க..”

இன்னும் ஒரு ஹோட்டல் செனடாப் ரோடில்..இது ஒரு வடநாட்டு தாபா..75 ரூபாய்க்கு பபே கொடுகிறார்கள்…சப்பாத்தி, மற்றும் சப்ஜி சுடசுட எடுத்து எடுத்து வைக்கிறார்கள்....பபே என்பதால் சமையல் செய்பவர்கள் கதறுகிறார்கள்..ஒருத்தரெல்லாம் ஒருமுறை சாப்பிட்டு, கை கழுவி விட்டு இரண்டாம் முறை வருகிறார்..கூடிய சீக்கிரம் கடையை மூடும் வாய்ப்பு உள்ளது..அதற்குள் சென்று விடுங்கள்

இந்த வாரம் கவர்ந்தது

திருநெல்வேலி புதிய பஸ்ஸ்டாண்டில் ஒரு அல்வாக்கடை போர்டில் படித்தது..

“ஒரிஜினல் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா..எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. பக்கத்தில் உள்ள கடை எங்கள் கிளை அல்ல..போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..”:

22 comments:

இவன் சிவன் said...

ஆமா ராசான்னே அந்த மெஸ் அமக்களமா இருக்கும்... அதி காலைலேயே ஜூஸ் போட்டாச்சு போல...

Veliyoorkaran said...

தல ரொம்ப நன்றி தல..இனிமே நீங்கதான் பதிவுலக ரௌடி...உங்க கைலதான் எல்லாரும் முத்தம் குடுக்கணும்...சொல்லிபுட்டேன் ஆமாம்...!! :)

Rettaival's Blog said...

வெளி...நான் இவருக்கு பாரத ரத்னா தரலாம்னு இருக்கே..நீ என்ன சொல்ற! இல்லை கோல்டன் க்லோப் அவார்ட் குடுக்கலாமா...? வெளியூர்காரன் சார்பாக ரெட்டைவால்ஸின் நன்றி அவிய்ங்க அவர்களே!

Veliyoorkaran said...

@@ரெட்டைவால் ' ஸ் said...
வெளி...நான் இவருக்கு பாரத ரத்னா தரலாம்னு இருக்கே..நீ என்ன சொல்ற! இல்லை கோல்டன் க்லோப் அவார்ட் குடுக்கலாமா...?//
//////////////////////////////////////////
ரெண்டையும் மிக்ஸ் பண்ணி "பாரத க்லோப்"னு ஒரு அவார்ட அவிய்ங்க அண்ணாச்சிக்கு குடுத்தர்லாம்...(நம்ம ரெண்டு பெரும் ஆளுக்கு நூறு ரூவா காசு போட்டு மெரினா பீச்ல த்ரிஷாவுக்கு பாராட்டு விழா நடத்தி மிச்சம் இருக்கற "கோல்டன் ரத்னா" அவார்ட அவிய்ங்க அண்ணாச்சி கையாள குடுத்து த்ரிஷாகிட்ட நல்ல பேர் வாங்கிரலாம்...சிம்பு முதல்வர் ஆய்ட்டா பின்னாடி பயன்படும்..என்னா சொல்ற.ஒகே வா ..? :)

Unknown said...

//“ஒரிஜினல் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா..எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. பக்கத்தில் உள்ள கடை எங்கள் கிளை அல்ல..போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..” //

ஹி ஹி.., இது ஜூப்பருங்கோ

மங்குனி அமைச்சர் said...

//ஆமா ராசான்னே அந்த மெஸ் அமக்களமா இருக்கும்... அதி காலைலேயே ஜூஸ் போட்டாச்சு போல...//

சார் ஜூசுக்கு மிக்சிங் என்னா தருவீங்க

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெளியூரு...
"பாரத க்லோப்"-ல , "ஸ்பான்சர் பை பட்டாபட்டினு" , போட்டுக்களாமா?..
நான் தனியா , உன்னையும் , ரெட்டையையும் கவனிச்சுக்கிறேன்..
ஒரு சான்ஸ் குடுயா...

ராம்ஜி_யாஹூ said...

The only constraint with these messes are, we are unable to go with our wifes. The seating arrangements are not comfortable. Mostly these messes are suitable for bachelors.

ராம்ஜி_யாஹூ said...

Tirunelveli iruttu kadai alwa actually has a branch. The main shop is in Keela radha veedhi Town(next to baba medicals- old maarar studio branch) and their branch is in the same east car street, Vishakam sweets.

Viji said...

Anna
Velacherryla than irukeengala.Anga irukura Krishna Boli stalla afternoon sambar satham sapitu paarunga.Adada suda suda satham with poriyal amarkalama irukum.Sapitu sollunga eppadinu

Jackiesekar said...

வீட்டுக்குப் பக்கத்துலயே சூப்பர் ஆந்திரா மெஸ்ஸு இருந்திருக்கிறது, ஜாக்கி சேகர் அண்ணன் பதிவைப் பார்த்த பின்னால்தான் தெரிந்தது. உண்மையிலேயே சூப்பர்தான். அதுவும் அந்தப் ஆவக்காய் மற்றும் வெண்டிக்காய் பொரியல்…சோறை விட அதுதான் அதிகம் வாங்கினேன். --//

ராசா உண்மைதான்.. அதுவும் ஜீன்ஸ் போட்ட புள்ளைங்கூட சாப்டறதுல இருக்கற சொகம் இருக்கே....

ரமேஷ் கார்த்திகேயன் said...

//ஆனாலும் விடாமல் சில பேர் “வசந்த்” டீ.விக்கு முன்னால் சனிக்கிழமை இரவு தவம் கிடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வேணாமுன்னே..மனசை கெடுத்துக்காதிங்க..அத விடுங்க..”போன வாரப்படம் ஏண்ணே படம் ஒளிபரப்பலை..”//

எத்தன மணிக்கு
detaila சொல்லுங்க

அவிய்ங்க ராசா said...

//////////////////////
இவன் சிவன் said...
ஆமா ராசான்னே அந்த மெஸ் அமக்களமா இருக்கும்... அதி காலைலேயே ஜூஸ் போட்டாச்சு போல...
26 February 2010 7:09 PM
////////////////////////
ஆமாண்ணே,,ஜூஸ் உடம்புக்கு நல்லது…)

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Veliyoorkaran said...
தல ரொம்ப நன்றி தல..இனிமே நீங்கதான் பதிவுலக ரௌடி...உங்க கைலதான் எல்லாரும் முத்தம் குடுக்கணும்...சொல்லிபுட்டேன் ஆமாம்...!! :)
26 February 2010 8:53 PM
////////////////////////////
ஹா..ஹ..அப்படியே 2016 ல முதலமைச்சர் ஆகுறோம்..))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////////
ary 2010 8:53 PM
ரெட்டைவால் ' ஸ் said...
வெளி...நான் இவருக்கு பாரத ரத்னா தரலாம்னு இருக்கே..நீ என்ன சொல்ற! இல்லை கோல்டன் க்லோப் அவார்ட் குடுக்கலாமா...? வெளியூர்காரன் சார்பாக ரெட்டைவால்ஸின் நன்றி அவிய்ங்க அவர்களே!
26 February 2010 9:10 PM
Veliyoorkaran said...
@@ரெட்டைவால் ' ஸ் said...
வெளி...நான் இவருக்கு பாரத ரத்னா தரலாம்னு இருக்கே..நீ என்ன சொல்ற! இல்லை கோல்டன் க்லோப் அவார்ட் குடுக்கலாமா...?//
//////////////////////////////////////////
ரெண்டையும் மிக்ஸ் பண்ணி "பாரத க்லோப்"னு ஒரு அவார்ட அவிய்ங்க அண்ணாச்சிக்கு குடுத்தர்லாம்...(நம்ம ரெண்டு பெரும் ஆளுக்கு நூறு ரூவா காசு போட்டு மெரினா பீச்ல த்ரிஷாவுக்கு பாராட்டு விழா நடத்தி மிச்சம் இருக்கற "கோல்டன் ரத்னா" அவார்ட அவிய்ங்க அண்ணாச்சி கையாள குடுத்து த்ரிஷாகிட்ட நல்ல பேர் வாங்கிரலாம்...சிம்பு முதல்வர் ஆய்ட்டா பின்னாடி பயன்படும்..என்னா சொல்ற.ஒகே வா ..? :)
26 February 2010 9:26 PM
////////////////////////
சிறப்பு அழைப்பாராக நயன் தாரா???

அவிய்ங்க ராசா said...

/////////////////////
பேநா மூடி said...
//“ஒரிஜினல் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா..எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. பக்கத்தில் உள்ள கடை எங்கள் கிளை அல்ல..போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..” //

ஹி ஹி.., இது ஜூப்பருங்கோ
26 February 2010 10:01 PM
/////////////////////////
நன்றி அண்ணே..

அவிய்ங்க ராசா said...

////////////////////
பட்டாபட்டி.. said...
வெளியூரு...
"பாரத க்லோப்"-ல , "ஸ்பான்சர் பை பட்டாபட்டினு" , போட்டுக்களாமா?..
நான் தனியா , உன்னையும் , ரெட்டையையும் கவனிச்சுக்கிறேன்..
ஒரு சான்ஸ் குடுயா...
26 February 2010 10:37 PM
////////////////////////
ஆஹா..இது வேறயா,,))

அவிய்ங்க ராசா said...

/////////////////////
ry 2010 10:37 PM
யாஹூராம்ஜி said...
The only constraint with these messes are, we are unable to go with our wifes. The seating arrangements are not comfortable. Mostly these messes are suitable for bachelors.
26 February 2010 11:10 PM
யாஹூராம்ஜி said...
Tirunelveli iruttu kadai alwa actually has a branch. The main shop is in Keela radha veedhi Town(next to baba medicals- old maarar studio branch) and their branch is in the same east car street, Vishakam sweets.
26 February 2010 11:12 PM
Viji said...
Anna
Velacherryla than irukeengala.Anga irukura Krishna Boli stalla afternoon sambar satham sapitu paarunga.Adada suda suda satham with poriyal amarkalama irukum.Sapitu sollunga eppadinu
26 February 2010 11:17 PM
ஜாக்கி சேகர் said...
வீட்டுக்குப் பக்கத்துலயே சூப்பர் ஆந்திரா மெஸ்ஸு இருந்திருக்கிறது, ஜாக்கி சேகர் அண்ணன் பதிவைப் பார்த்த பின்னால்தான் தெரிந்தது. உண்மையிலேயே சூப்பர்தான். அதுவும் அந்தப் ஆவக்காய் மற்றும் வெண்டிக்காய் பொரியல்…சோறை விட அதுதான் அதிகம் வாங்கினேன். --//

ராசா உண்மைதான்.. அதுவும் ஜீன்ஸ் போட்ட புள்ளைங்கூட சாப்டறதுல இருக்கற சொகம் இருக்கே....
26 February 2010 11:23 PM
ரமேஷ் கார்த்திகேயன் said...
//ஆனாலும் விடாமல் சில பேர் “வசந்த்” டீ.விக்கு முன்னால் சனிக்கிழமை இரவு தவம் கிடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வேணாமுன்னே..மனசை கெடுத்துக்காதிங்க..அத விடுங்க..”போன வாரப்படம் ஏண்ணே படம் ஒளிபரப்பலை..”//

எத்தன மணிக்கு
detaila சொல்லுங்க
26 February 2010 11:50 PM
/////////////////
நான் மனைவியுடந்தான் சென்றிருந்தேன் ராம்ஜி,
கண்டிப்பாக விஜி
ஹி..ஹி ஜாக்கி அண்ணா..
நைட் 12 மணிக்குன்னு பசங்க சொன்னாங்க ராஜேஷ்..))

வீரராகவன் said...

ஓட்டல் என்றாலே எனக்கு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் உள்ள மீனாட்சி பவன்தான் நினைவுக்கு வருகிறது. நான் தமிழ் நாட்டில் பல இடங்களில் பல ஊர்களில் சாப்பிட்ட அனுபவத்தில் சொல்கிறேன். சவால் விடுகிறேன். உணவு தரத்திலும் சரி, பரிமாறும் பாங்கும் சரி, உணவு வகைகளிலும் சரி, விலையிலும் சரி, திண்டுக்கல் மீனாட்சி பவன் தான் நம்பர் ஒன். சவாலுக்கு தயாரா?

taaru said...

//பதிவர் “வெளியூர்க்காரன்” மனுசனுக்கு என்னமா நக்கல் வருது..நீங்களும் படித்துப் பாருங்களேன்..//
ரெண்டே பதிவு தான் படிச்சு இருக்கேன்...தக்காளி செம நக்கலு நய்யாண்டி 'வெவ்வெவ்வே" படிச்சுட்டு காது மூக்கெல்லாம் ரத்தம்... செம காமெடி.... ராசா அண்ணே இம்பூட்டு நாளா சொல்லவே இல்லாம இருந்தீரோ?! anyway நன்றிஹை.

Post a Comment