Wednesday 26 August, 2009

இதற்காகத்தானே காத்திருந்தாய் ராசா...

கல்லூரி இறுதி நாள்..இன்றைக்காவது அவளிடம் கேட்டுவிட வேண்டும்..எத்தனை நாள்தான் மனசுக்குள் வைத்துக் கொண்டு சாவது..என்னால் எச்சில் கூட முழுங்க முடியவில்லை..இதில் என் நண்பன் வேறு உசுப்பிக் கொண்டிருந்தான்..

“ராசா.இன்னைக்குத்தான் காலேஜ் கடைசி..இதை விட்டா வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது..இன்னைக்கே கேட்டுறுடா..”

“மச்சான்..ஒரு மாதிரியா இருக்குடா..இவ்வளவு நாள் நட்பா பழகிட்டு..எதுவும் தப்பா நினைச்சுக்குவாளோ..”

“டே..அதெல்லாம் நினைக்க மாட்டா..அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லைடா..மவனே இன்னைக்கு கேட்காம அப்புறம் எங்கிட்ட ஏதாவது பொலம்பின..அடிதான்..”

"சரிடா…தைரியமா கேக்கலாம்..ஆனா இவ்வளவு நாள் இதுக்குத்தான் பழகினேன்னு கேட்டுட்டா..”

“போடாங்க..நான் சொல்லுறேன்..கேளு..”

அவள் எங்களருகில் வந்தாள்…2 வருட கல்லூரி நட்பு..நான் எந்த பெண்ணிடம் முகம் கொடுத்து பேசியதில்லை..ஆனால் அவள் நட்பு கிடைத்த போது நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை..

“என்ன ராஜா..இங்க உக்கார்ந்து இருக்கீங்க..பேர்வெல் பார்ட்டிக்கு போகலையா..”

குறிப்பறிந்து என் நண்பன் என்னை விட்டு அகன்றான்..

“அது வந்து..உங்க கிட்ட ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்கள்ள..”

அவள் கொஞ்சம் வெட்கப்படுவது அவள் கண்களில் தெரிந்தது..ஒருவேளை அவளும் நான் கேட்பேன் என்று எதிர்பார்க்கிறோளோ..என் மனம் கோலம் போட ஆரம்பித்தது..

“பரவாயில்லை..கேளுங்க..நான் தப்பா நினைக்க மாட்டேன்..”

ஏதோ ஒன்று “வேணான்டா ராசா” என்று எச்சரிக்கவே..மனசு டபுள் கேம் ஆடியது..கேளு, வேண்டா, கேளு, வேண்டாம், கேளு, வேண்டாம், கேளு, வேண்டாம், கேளு, வேண்டாம்…

கடைசியல் “வேண்டாம்” என்பதே ஜெயித்தது..

“ஒன்னுமில்லப்பா..ஏதாவது வேலைக்கு போகப் போறீங்களா..இல்ல கல்யாணமா..”

அவள் முகத்தில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது..ஆஹா..மிஸ் பண்ணிட்டமோ..

“தெரியலீங்க..அப்பாதான் முடிவு பண்ணனும்..நான் கிளம்புறேன்..”

சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் கிளம்பிச் சென்றாள்..என் நண்பன் வந்தான் ஆவலாகக் கேட்டான்..

“என்னடா ராசா..சொல்லிட்டீயா..”

“இல்லடா..”

“போங்கடா..நீங்களும்..உங்கப் பொழைப்பும்..இந்த தைரியம் இல்லாம நீங்களெல்லாம் ஏண்டா காலேஜ்க்கு வர்றீங்க..நீங்களெல்லாம் நெஞ்சு வெடிச்சே சாகப் போறீங்கடா..”

அதற்கப்பறம் 5, 6 வருடங்கள் கடந்தாலும் அவ்வப்போது என் நினைவுக்கு வரும்..நான் அதை மறந்து விடுவேன்..அன்றைக்குத்தான் எதிர்பார்க்காதது நடந்தது.,.நானும் என் மனைவியும் சென்னையில் ஒரு ஹோட்டலில் அமர்ந்து சாப்ப்பிட்டுக் கொண்டிருந்தோம்..யாரோ “ஹாய் ராசா” என்று கூப்பிடும் சத்தம் கேட்டது..கேட்ட குரலாக இருக்கிறதே என்று திரும்பி பார்த்தால் இன்ப அதிர்ச்சி..அவள்தான்..பக்கத்தில் அவளுடைய சிட்பெண்ட்..சாரி ஹஸ்பெண்ட்..நல்லாத்தான் இருந்தார்.,.கையில் 2 வயது குழந்தை..

“எப்படி இருக்க ராசா..5 வருசத்துக்கு முன்னாடிப் பார்த்தது..”

“நல்லா இருக்கேன்பா..இது என்னுடைய மனைவி..”

“ஹிம்..என்னைத்தான் கல்யாணத்துக்கு கூப்புடலை..இது என் கணவர்..”

“குழந்தை அழகா இருக்கு..என்ன பெயர்..”

“வந்தனா..உனக்குத் தெரியும்..நல்லா ரைம்ஸ் எல்லாம் சொல்லுவா..இங்கப்பாரு குட்டி..அங்கிளுக்கு ரைம்ஸ் சொல்லு..”

அடங்கொய்யாலே..அங்கிளா..அருவாளை இப்படித்தான் போடுவாயிங்களோ..

குட்டிப் பொண்ணு கீ கொடுத்த பொம்மை போல் ரைம்ஸ் சொன்னது..சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்..ஒவ்வொருவராக கை கழுவச் செல்ல..கடைசியில் நானும் அவளும் மட்டும்தான் டேபிளில்..

எப்படித்தான் என் மனசுக்குள் சைத்தான் புகுந்தது என்று தெரியவில்லை..திடீரென்று ஒரு எண்ணம்..காலேஜ்ஜில்தான் கேட்கவில்லை..அவள் தெரிந்து கொள்ளட்டுமே..இப்பாவாவது கேப்பாமா..சே..சே..கல்யாணம் வேறு ஆகி விட்டது..இது முறையில்லை..கண்டிப்பாக எழுந்து அறைந்தாலும் அறைவாள்..

என் மனது திரும்பவும் கேம் ஆடவே..இந்த தடவை என்னால் முடியவில்லை..மனதில் அடக்கி கொண்டிருந்து வாய்வரை வரவே கேட்டே விட்டேன்..

“தப்பா எடுத்துக்காதே..காலேஜ் படிக்கிறப்பயே கேட்கலாம் என்று இருந்தேன்..”

அதிர்ந்தே போனாள்..

“என்ன விசயம் ராசா..கேளு..” முகத்தில் பதற்றம் தெரிந்தது..

“காலேஜ் முதல் வருசம் படிக்கிறப்ப எங்கிட்ட ஒரு 200 ரூபா கடன் வாங்கின..அதுக்கப்பறம் நீ அதை மறந்துட்டே.,நானும் எவ்வளவோ தடவை கேட்கலாம்ன்னு இருந்தேன்..நீ எப்படி எடுத்துக்குவேன்னு தெரியலை..நான் பண விசயத்துல கொஞ்சம் கரெக்டா இருப்பேன்..அதான்..இப்பக் கேட்டேன்..”

பின்ன என்னண்ணே..200 ரூபா வாங்கிட்டு 5 வருசமா கொடுக்கலைன்னா என்ன நியாயம்..பணம் என்ன மரத்துலயா காய்க்குது….

38 comments:

vasu balaji said...

ஏண்ணே! எங்களல்லாம் பார்த்தா எப்புடி தெரியுது?நம்பீஈஈஈஈட்டம்ல.

சித்து said...

அண்ணே நீங்களுமா?? அதுவும் காலங் காத்தலயேவா???

Vijay Anand said...

சரியான மொக்கை...

யோ வொய்ஸ் (யோகா) said...

ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ் முடியலலலலலலலலல

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

துபாய் ராஜா said...

பணம் கிடைத்ததா ? இல்லையா ?.அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். :))

//..இதில் என் நண்பன் வேறு உசுப்பிக் கொண்டிருந்தான்..//

பணம் கிடைச்சா நண்பருக்கு 'பார்'ட்டி தர்றேன்னு சொல்லியிருந்தீங்களாண்ணே... :))

Indian Share Market said...

hahahahahahaha..............2much sir

தினேஷ் said...

போய்யா போய்யா வேலையா பாரு கிணத்துல் போட்ட பணத்த தேடி எடுத்தாராம்ல .. நல்லா கிளப்புறாங்கய்யா ட்ர்ர்ர..

taaru said...

பிரபல பதிவருக்கான அடுத்த அடையாளம்.. "இதற்காகத்தானே காத்திருந்தாய் ராசா..":-):-)
[எ.கா. http://www.narsim.in/2009/08/blog-post_26.html]

ஆ.வி., குமுதம் எடிட்டர்கள் கவனத்திற்கு..
"இவ்விடம் ஒரு பக்க கதைகள் சிறந்த முறையில் கோள்கள் பிற்காலம் தற்காலம் எதிர்கால பலன்கள் கணித்து எழுதி தரப்படும் "
இவீங்க - "அவீங்க" ராசா.

taaru said...

அண்ணாச்சியோவ்..

வாழ்க்கை நிகழ்வு அல்லாது வேற ஏதாவது Zonre முயற்சித்துப் பாருங்களேன்.. உங்களுக்குள்ள இருக்கற சிங்கத்த கொஞ்சம் உசுப்புங்க பாசு..

கொஞ்சம் இல்ல உங்ககிட்ட கொள்ளேயத்தே எதிர் பாக்குறே[றோ]ன்[ம்]..

Anonymous said...

ரொம்ப மொக்கை. நீங்கள்லாம் எழுதலேன்னு எவண்டா அழதான்.

மஞ்சூர் ராசா said...

மொக்கையாக இருந்தாலும் நல்ல சுவாரஸ்யமான எழுத்து நடை. வாழ்த்துகள்.

sikkandar said...

mudiyala.....

Anonymous said...

அடங்க்கொயலே! நானும் எதாவது கசமுசா நடக்கும்னு பார்த்தா, சப்புனு முடிச்சிடிங்க
தலைப்ப "200 ரூபாய் நோட்டு"னு மாத்துங்க

அவிய்ங்க ராசா said...

////////////////
வானம்பாடிகள் said...
ஏண்ணே! எங்களல்லாம் பார்த்தா எப்புடி தெரியுது?நம்பீஈஈஈஈட்டம்ல.
26 August, 2009 9:04 PM
////////////
ஹி..ஹி..கோவிச்சுக்காதீங்கண்ணே..

அவிய்ங்க ராசா said...

/////////////////
26 August, 2009 9:04 PM
சித்து said...
அண்ணே நீங்களுமா?? அதுவும் காலங் காத்தலயேவா???
26 August, 2009 9:09 PM
//////////////////
சித்து அண்ணே..எல்லாரும் மொக்கை போடுறாயிங்களே..நம்மளும் முயற்சி பண்ணலாம்னுதான்..

அவிய்ங்க ராசா said...

//////////////////
Vijay Anand said...
சரியான மொக்கை...
26 August, 2009 10:06 PM
யோ வாய்ஸ் said...
ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ் முடியலலலலலலலலல

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
26 August, 2009 10:26
////////////////
நன்றி விஜய் ஆனந்த், யோ

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
துபாய் ராஜா said...
பணம் கிடைத்ததா ? இல்லையா ?.அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். :))

//..இதில் என் நண்பன் வேறு உசுப்பிக் கொண்டிருந்தான்..//

பணம் கிடைச்சா நண்பருக்கு 'பார்'ட்டி தர்றேன்னு சொல்லியிருந்தீங்களாண்ணே... :))
26 August, 2009 11:07 PM
Indian Share Market said...
hahahahahahaha..............2much sir
26 August, 2009 11:15 PM
சூரியன் said...
போய்யா போய்யா வேலையா பாரு கிணத்துல் போட்ட பணத்த தேடி எடுத்தாராம்ல .. நல்லா கிளப்புறாங்கய்யா ட்ர்ர்ர..
26 August, 2009 11:25 PM
/////////////////////////
நம்மளும் எழுதிப் பார்ப்போம்னு கொஞ்சம் முயற்சி பண்ணினேன்..நன்றி சூரியன், ராஜா, ஷேர் மார்க்கெட்

அவிய்ங்க ராசா said...

////////////////
பிரபல பதிவருக்கான அடுத்த அடையாளம்.. "இதற்காகத்தானே காத்திருந்தாய் ராசா..":-):-)
[எ.கா. http://www.narsim.in/2009/08/blog-post_26.html]

ஆ.வி., குமுதம் எடிட்டர்கள் கவனத்திற்கு..
"இவ்விடம் ஒரு பக்க கதைகள் சிறந்த முறையில் கோள்கள் பிற்காலம் தற்காலம் எதிர்கால பலன்கள் கணித்து எழுதி தரப்படும் "
இவீங்க - "அவீங்க" ராசா.
27 August, 2009 1:47 AM
///////////////////////
அண்ணே..ஊருப்பக்கம் வர்றேன்..நாலு அடி வேனுன்னா அடிச்சுக்கங்க….பிரபலபதிவர்ன்னு மட்டும் சொல்லாதீங்க..))))

அவிய்ங்க ராசா said...

////////////////////
Anonymous said...
ரொம்ப மொக்கை. நீங்கள்லாம் எழுதலேன்னு எவண்டா அழதான்.
27 August, 2009 2:09 AM
///////////////////
யாருண்ணே நீங்க..ஒவ்வொரு பதிவு எழுதும் போது தவறாம ஆஜராகி திட்டிட்டு போறீங்க..நான் எதுவும் கடன் பாக்கி வைச்சிருக்கனா..

அவிய்ங்க ராசா said...

//////////////////
மஞ்சூர் ராசா said...
மொக்கையாக இருந்தாலும் நல்ல சுவாரஸ்யமான எழுத்து நடை. வாழ்த்துகள்.
27 August, 2009 2:28 AM
sikkandar said...
mudiyala.....
27 August, 2009 3:24 AM
Anonymous said...
அடங்க்கொயலே! நானும் எதாவது கசமுசா நடக்கும்னு பார்த்தா, சப்புனு முடிச்சிடிங்க
தலைப்ப "200 ரூபாய் நோட்டு"னு மாத்துங்க
27 August, 2009 3:29 AM
/////////////////////
நன்றி ராஜா, சிக்கந்தர், அனானி..

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

ரெட்மகி said...

mokkai

உடன்பிறப்பு said...

இடுகை மொக்கை என்றாலும் மேலே இருக்கே ஒரு படம் அது சூப்பர் ராசா, இங்கே போய் பாருங்க http://www.udanpirappu.com/2009/07/blog-post_17.html

வெற்றி-[க்]-கதிரவன் said...

this is toooooooooo muchhhhhhhhhhhhhhhhhhhhhhhi, oru naal kaila maattaamala poiduvinga... annaikku kaimaa panniduren

நாகராஜன் said...

அடங்கொய்யாலே... இப்படி தான் ஏதாச்சும் இருக்கும்னு மொதல்லயே தெரிஞ்சுது... இப்படி இருநூறு ரூபாய் மொக்கையா இருக்கும்னு நினைக்கலைங்க ராஜா.

Anonymous said...

hai rasa h r u? this story very funny

27 August, 2009 6:07 AM
////////////////////////
இது ஞானியா என்று தெரியவிலை..ஆனாலும் நன்றி

அவிய்ங்க ராசா said...

////////////////
ரெட்மகி said...
mokkai
27 August, 2009 6:11 AM
////////////////////
ஹீ..ஹீ…

அவிய்ங்க ராசா said...

////////////////
உடன்பிறப்பு said...
இடுகை மொக்கை என்றாலும் மேலே இருக்கே ஒரு படம் அது சூப்பர் ராசா, இங்கே போய் பாருங்க http://www.udanpirappu.com/2009/07/blog-post_17.html
27 August, 2009 7:08 AM
//////////////////
சூப்பர் அண்ணே..சுவாதி நல்ல படம் தேடுவதற்கு திணறிப் போனேன்..

அவிய்ங்க ராசா said...

///////////////
[பி]-[த்]-[த]-[ன்] said...
this is toooooooooo muchhhhhhhhhhhhhhhhhhhhhhhi, oru naal kaila maattaamala poiduvinga... annaikku kaimaa panniduren
27 August, 2009 9:45 AM
///////////////////
ஹா..ஹா..இன்னும் ஒரு வருசத்துக்கு ஊர் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டேனே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ராசுக்குட்டி said...
அடங்கொய்யாலே... இப்படி தான் ஏதாச்சும் இருக்கும்னு மொதல்லயே தெரிஞ்சுது... இப்படி இருநூறு ரூபாய் மொக்கையா இருக்கும்னு நினைக்கலைங்க ராஜா.
27 August, 2009 11:10 AM
bawashareef said...
hai rasa h r u? this story very funny
27 August, 2009 12:01 PM
/////////////////////
நன்றி ராசுக்குட்டி, செரீப்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ராசா.. அசத்தறீங்க.

உங்களோட ஒவ்வொரு பதிவும் ரசிக்கும் படியாக இருக்கிறது. உங்க பதிவுகள வார இதழ்களுக்கு அனுப்பலாமே! என்ன நினைக்கிறீர்கள்?

கரிகாலா said...

இப்படித் தான் இருக்கும்னு நெனச்சேன்; இருந்தாலும் மனசுக்குள்ள பழய விசயங்களை கிண்டி விட்டுட்டீங்களே. நல்லா எழுதியிருக்கீங்க.

Suresh said...

நன்றி ! எனக்கு மிகவும் பிடிச்ச பதிவுகளின் பதிவர்

http://blogintamil.blogspot.com/

வலைசரத்தில் நீங்க

அவிய்ங்க ராசா said...

//////////////////
Suresh said...
நன்றி ! எனக்கு மிகவும் பிடிச்ச பதிவுகளின் பதிவர்

http://blogintamil.blogspot.com/

வலைசரத்தில் நீங்க
30 August, 2009 6:13 PM
////////////////////
நன்றி என்று வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை சுரேஷ்..உங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது..

அவிய்ங்க ராசா said...

////////////////
ச.செந்தில்வேலன் said...
ராசா.. அசத்தறீங்க.

உங்களோட ஒவ்வொரு பதிவும் ரசிக்கும் படியாக இருக்கிறது. உங்க பதிவுகள வார இதழ்களுக்கு அனுப்பலாமே! என்ன நினைக்கிறீர்கள்?
28 August, 2009 12:51 AM
கரிகாலா said...
இப்படித் தான் இருக்கும்னு நெனச்சேன்; இருந்தாலும் மனசுக்குள்ள பழய விசயங்களை கிண்டி விட்டுட்டீங்களே. நல்லா எழுதியிருக்கீங்க.
28 August, 2009 6:41 AM
//////////////////
நன்றி செந்தில்வேல்..பத்திரிக்கைகளில் எல்லாம் என்னுடைய எழுத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..நன்றி கரிகாலன்..

Pradeep said...

good one...
:)))

Kirubakaran said...

unaku venum da venum...vera blog ae kidaikalaya unaku..10 nimisham idha padichadhuku unaku venum da venum...!!! nice one:)

Post a Comment