Thursday 31 October, 2013

ஆரம்பம் – விமர்சனம்


இப்போதெல்லாம் விமர்சனம் எழுதவே பயமாக இருக்கிறது, கழுத்தில் யாரோ கத்தியை வைத்தாற் போலவே ஒரு பிரமை. ஒரு படம் சரியில்லை என்று எழுதினால்..”டேய்ய்ய்ய்ய்..ஊருப்பக்கம் வாடா..” ங்கிற மாதிரி அன்பான கமெண்டுகளும், அருமையான தமிழ்சொற்களை கொண்டு, “தே..சு..” போன்ற வார்த்தைகளாய் கொண்டு அழகாக எழுதப்பட்ட மெயில்களும், வரவேற்கின்றன..மாறாக ஒரு பட்த்தை பாராட்டி எழுதினால் “என்னய்யா விமர்சனம் எழுதுற..மொக்கை பட்த்த போய் நல்லா இருக்குங்குற” என்று வரும் மெயில்கள் கலங்கடிக்கவும் செய்கின்றன..

ஆனாலும், நாமெல்லாம் எழுதாவிட்டால், வீட்டு முன்னால் அமர்ந்து கொண்டு உண்ணாவிரதம் மேற்கொள்வோம் என்று நாடே கொந்தளிப்பதால், உங்களுக்கு “ஆரம்பம்” விமர்சனம். என் கழுத்து மற்றும், இதர பாகங்களின் நலம் வேண்டி, பட்த்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன்..எல்லோரும் படித்து, சந்தோசமாக இருக்கவும்..

படத்தின் கதை இதுதான். மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிக்கிறது. மூன்று குண்டு வைத்த்துவிட்டு ஸ்டைலிசாக வருவது ஹீரோ அஜீத். அதன் தொடர்ச்சியாக, சென்னையிலிருந்து மும்பை வரும் கம்யூட்டர் ஹாக்கரான ஆர்யா மும்பை வரும்போது கட்த்தப்படுகிறார். அவரை வைத்து, ஒரு சானல் நெட்வொர்க்கையே முடக்குகிறார் அஜீத். காரணம், பிளாஷ்பேக்காக விரிகிறது. ராணா, மற்றும், அஜீத் பாம் ஸ்குவார்டாக வேலை பார்க்கிறார்கள். முடியும்போது, தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை...இது..மக்களை காப்பாற்றுகிறார்கள். அந்த படையினருக்கு, அமைச்சரவையிலிருந்து புல்லட்ப்ரூட் ஜாக்கெட் கொடுக்கிறார்கள்..ஆனால்..அதில்..ஊழல்..அதன் காரணமாக, ராணா..அது வந்து..அது வந்து..அது..முதல்ல கழுத்துல இருந்து கத்திய எடுங்க பாஸ்..கதையெல்லாம் சொல்ல மாட்டேன்..

இனி பட்த்தில் உள்ள நல்ல விஷயங்கள் மட்டும்..
·         
முடிந்தவரை ஸ்டைலிஷாக எடுக்க விஷ்ணுவர்த்தன் எடுக்க முயற்சி செய்திருக்கிறார்..அஜீத் ஸ்டைலிஷாக நடக்கும்போது, தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளப்பது உறுதி..
·         கதை வித்தியாசமா இருக்கிறது..நண்பனுக்காக பழிவாங்கும் கதை, இதுவரை தமிழ்சினிமாவில் சொல்லப்படவில்லை எனவே நினைக்கிறேன்..இன்னும் சொல்லப்போனால், பழிவாங்கும் கதைகளையே தமிழில் பார்த்த்தாக நினைவில்லை.

·         அஜீத், மிகவும், ஸ்டைலிஷாக, அழகாக இருக்கிறார்..அடிக்கடி ஸ்டைலிஷாக கண்ணாடியை மாட்டும்போதும், கழட்டும்போதும், நடக்கும்போது செமையாக இருக்கிறார்..பில்லா, மங்காத்தா படங்களிலும் இதே போன்று நடந்து இருந்தாலும், இந்த நடை வித்தியாசமாக இருப்பது மிக்ச்சிறப்பு..இந்த முறை எடை குறைத்து மிகவும் சிலிம்மா இருப்பது நன்றாக இருக்கிறது..

·         ஆர்யா பற்றி சொல்லியே ஆகவேண்டும். முதல் பாதியில் கம்யூட்டர் தட்டி, 10 நிமிட்த்தில் ஒரு சானலையே ஹாக் செய்வது, “வாவ்..” கிளைமாக்ஸ் காட்சியில், துப்பாக்கி எடுத்து, ராணுவ வீர்ர் போல அவர் சுடும் சண்டை காட்சிகள் அப்படியே ஆக்சன் மூவி ப்ளாட்

·         நயன்தாரா மிகவும் சீரியசாக நடித்திருப்பது சிறப்பு.. கொடுத்த பாத்திரத்தை சிரத்தை எடுத்து செய்திருக்கிறார். குறிப்பாக வில்லனை கவர்ச்சி காட்டி ஏமாற்றும் இட்த்தில், கைதட்டல் பெறுகிறார்

·         பட்த்தில் நடித்த அமைச்சர் வில்லன் கிளைமாக்ஸ் காட்சியில் சந்தானம் இல்லாத குறையை போக்குகிறார்..குறிப்பாக அவருடைய முகபாவனையும், டயலாக்குகளும், “ஹா..ஹா.”

·         டாப்சி, ராணா, அப்புறம் அதுல் குல்கர்னி போன்றோர், பட்த்தில் இருப்பது, பட்த்திற்கே இன்னுமொரு சிறப்பு

·         யுவன்சங்கர் ராஜா பாடல்கள் முணுமுணுக்க வைக்கிறது..குறிப்பாக “ப்ப்ரப்ப்ப..ப்ப்பரப்ப..ப்ப்பரப்ப..பான்..ப்ப்பரப்ப..பான்..ப்பரப்பான்” என்ற தீம் ம்யூசிக் கேட்க கேட்க காதுகளுக்கு இனிமை..

·         முதலில் இருந்து கடைசிவரைக்கும், விறுவிறுப்பாக கொண்டு சென்று, ஏதோ ஹாலிவுட் பட்த்தை பார்த்த திருப்தி தருகிறார் இயக்குநர்

·         தியேட்டரில், பார்கார்ன், கூல்டிரிங்க்ஸ் நன்றாக இருந்த்து..குறிப்பாக கொக்க்கோலாவில் ஐஸ் கேட்காமலே, அவர் ஐஸை போட்டு அன்பாக கொடுத்த்து அவருக்கு என்மேல் இருக்கும் அன்பை புரியவைத்த்து. எனக்கு ஜலதோசம் இருக்கிறது, வேண்டாம் என்று திருப்பி கொடுத்தாலும், “இல்லை சாப்பிட்டே ஆகவேண்டும்” என்று அன்பு கட்டளையிட்டபோது, என் கண் கலங்கியது..

முடிவாக, இந்த தீபாவளி சிறப்பாக தொடங்கப்போகிறது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு..சிந்திக்க தூண்டும் படங்கள், இப்போதெல்லாம் வர துவங்கியிருப்பது, தமிழ்சினிமாவை எங்கயோ கொண்டு போகப்போகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்..


முடிவாக படம் சிறப்பு..சிறப்பு..சிறப்பு..இந்த வருட்த்தின் ப்ளாக்பஸ்டர் என்பதை சொல்லத் தேவையில்லை..

16 comments:

RITHVIK said...

super boss awesome comments

RITHVIK said...

only aarambam is nothing like anything

அமுதா கிருஷ்ணா said...

ஐஸ் கோக் குடித்தது முதல் கொண்டு என்ன ஒரு கடமை உணர்ச்சி..அட்டகாசம்..

கவிதை வானம் said...

இப்போதெல்லாம் விமர்சனம் எழுதவே பயமாக இருக்கிறது...பதிவு கடைசிவரை திகிலுடன்....அருமை

Manimaran said...

//இப்போதெல்லாம் விமர்சனம் எழுதவே பயமாக இருக்கிறது,// இது உண்மையான விமர்சனமா .. இல்ல உள்குத்தா ;-))

Anonymous said...

//இப்போதெல்லாம் விமர்சனம் எழுதவே பயமாக இருக்கிறது,// இது உண்மையான விமர்சனமா .. இல்ல உள்குத்தா ;-))

Unknown said...

பயமா இருக்குதுன்னு சொல்லிக் கிட்டே உள்க்குத்து குத்தி இருக்கிறீரே. விமர்சனம் நல்ல இருக்கு.

ராஜ்குமார்
www.comicsda.com

Anonymous said...

Ava Ava Kodi Kanakukula Kasu pottu edukuran .. Nee enna da na !! Poda dai... Apudi irukkava nee poye nadiyen .. Mudiathula Apo mu iru

Anonymous said...

padam super...

Anonymous said...

வணக்கம்
ஆரம்பம் நல்ல தீபாவளி விருந்தாக உள்ள படம்
பதிவு அருமை வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரம்பம் said...

".நண்பனுக்காக பழிவாங்கும் கதை, இதுவரை தமிழ்சினிமாவில் சொல்லப்படவில்லை எனவே நினைக்கிறேன்..இன்னும் சொல்லப்போனால், பழிவாங்கும் கதைகளையே தமிழில் பார்த்த்தாக நினைவில்லை.

HA...HAH....HA.....

ரம்பம் said...

ஆர்யா பற்றி சொல்லியே ஆகவேண்டும். முதல் பாதியில் கம்யூட்டர் தட்டி, 10 நிமிட்த்தில் ஒரு சானலையே ஹாக் செய்வது, “வாவ்..” கிளைமாக்ஸ் காட்சியில், துப்பாக்கி எடுத்து, ராணுவ வீர்ர் போல அவர் சுடும் சண்டை காட்சிகள் அப்படியே ஆக்சன் மூவி ப்ளாட்

VANJAPUKAZCHI......................

ஆம்பலபட்டி அரசன் said...

அவிய்ங்க ராசா, தலைய இப்படி அவுச்சிபுட்டியலே.....

Anonymous said...

testing123

Unknown said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

Anonymous said...

mokka,copy film

Post a Comment