Saturday 5 October, 2013

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ரிஸ்வான் பாய்.


கண்கூசும் அளவுக்கு எங்கு பார்த்தாலும், மின்விளக்குகள். முகத்தில் ரெடிமேட் 
புன்னைகையோடு சிரிக்க. சிரிக்க இளம்பெண்கள். “ந்ன்னாயிட்டு பாடிட்டு.. எந்து செய்யுது..” மாநிலம் மாறி வந்து விட்டோமோ என்று எண்ணம் வரவைக்கும் அளவுக்கு வீசப்படும் வார்த்தைகள். பேஷன் ஷோவையும் மிஞ்சும் உடை அலங்காரங்கள். நுனிநாக்கு ஆங்கிலங்கள்..ஒப்பனைகள்..உலகத்தமிழர்கள் உற்றுநோக்கும் பிரமாண்டமேடை..இவ்வளவு கலர்புல்லான ஒரு அரங்கத்தில், அவரை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்..

வெள்ளைத்தோல் இல்லை. துள்ளல் நடை இல்லை, சவரம் செய்த பொலிவான முகம் இல்லை. ஸ்டைலான ஜீன்ஸ், டிசர்ட் இல்லை. உடலை சுற்றி முழுவதுமாக போர்த்தப்பட்டாற் போன்ற ஜிப்பா உடையில், நான்கு பேர் தூக்கி வீல் சேரில் வைத்து, மெதுவாக வீல்சேரை தள்ள, அரங்கின் நடுவில் வந்து , அமைதியாக முதல் பாடலை அவர் பாட ஆரம்பித்தபோது, அரங்கமே ஒரு நிமிடம் அதிர்ந்து போனது..

அவர்தான் விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கரின் ஒரு பங்கேற்பாளரான “ரிஸ்வான் பாய்” என்று செல்லமாக அழைக்கப்படும் “ரிஸ்வான்..”

மாற்றுத்திறனாளிகளும் யாவருக்கும் சளைத்தவர்களில்லை என பலதுறைகளில் இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது..பொதுவாக, இசையில் அவர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அபரிதமானது. பஸ்ஸ்டாண்ட்களில் நிற்கும்போது, எங்கிருந்தோ வரும் “கடல் மேல் பிறக்கவைத்தான்” என்ற பாடல் சட்டென்று ஈர்க்கும். யாரென்று திரும்பி பார்த்தால், ஒரு போர்வை மேல் அமர்ந்து கொண்டு நான்கு மாற்றுத்திறனாளிகள். போர்வை முழுக்க சிதறிய சில்லறைகள். கையில் ஒரே ஒரு ஆர்மோனியம், மற்றும், சின்னதாய் ஒரு டிரம். அவ்வளவுதான்,..ஆனால், மனம் முழுக்க நம்பிக்கையோடு பாடப்படும் அந்தப் பாடலை கேட்கும்போது, மனதை ஏதோ செய்யும்..இவ்வளவு திறமை இருக்கிறதே..ஏன் இவர்களுக்கு, ஒரு மேடை கிடைப்பதில்லை என்று எண்ணத்தை, அரங்கேற்றிய விஜய் டிவிக்கு ஒரு ராயல் சல்யூட்..

ரிஸ்வான் பாய் கர்நாடக சங்கீதம் படித்த்தாய் தெரியவில்லை..”வீட்டில் உக்கார்ந்து கொண்டு, ஏதோ திரையிசை பாடல்களை முணுமுணுத்து கொண்டே, இசையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட்தாக” சொல்கிறார். தன் உடலில் உள்ள குறைபாட்டை இதுவரை அவர் ஒரு பொருட்டாக கூட நினைத்த்தில்லை..அவர் மனதில் உள்ள ஒன்றே ஒன்றுதான், அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது..அது, “நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை..”



அவருடைய “இளங்காத்து வீசுதே..” பாடலை கேட்டபோது, நம்மை இன்னொரு உலகத்திற்கு எடுத்து சென்றது..அருமையான கஜல் பாடல் ஒன்றை பாடியபோது, அவருக்கே அந்த பாடல் படைக்கப்பட்ட்து போல் இருந்த்து..கிராமாத்து பாடலான “வெட்டிவேரு வாசம்” பாடலை பாடியபோது, கிராமத்து மணம் நமதருகில் வந்த்து..
அனைத்து பாடல்களிலும், அவருடைய குரலில் இருந்த்து ஒன்றே ஒன்றுதான்..உறுதியான நம்பிக்கை.

பக்தி பாடல்கள் சுற்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, “கடவுளிடம் என்ன வேண்டி கொள்வீர்கள்..அடுத்த நொடி தாமதிக்காமல், அவர் அளித்த பதில்..”நான் இருக்கிறேனா, இல்லையோ..ஆனால், உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் என் பாடல் ஒலித்து கொண்டிருக்கவேண்டும்..”

ரிஸ்வானின் பலமே, ஒரு பாடலை ஒப்புக்கு பாடாமல், அந்த பாடலின் உணர்வை அப்படியே கொண்டுவருவதுதான்..இந்த வாரத்தில் அவர் விரும்பி பாடிய “உயிரே, உயிரே” பாடலில் அவர் சில தவறுகள் செய்தபோதும், நடுவர்களால், அவர் பாடலில் கொண்டு வந்த உணர்வை குறை சொல்ல முடியவில்லை..

ஆனாலும், தவிர்க்க முடியாமல் அவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட போது, யாரையும் அவர் நிந்திக்கவில்லை. அழுது வடியவில்லை, மாறாக புன்னகையையே பதிலாக தந்தார். அவர் முகத்தில் சின்ன சோகத்தை கூட பார்க்கமுடியவில்லை..
“எனக்கு மிக சந்தோசம்..விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள்..எனக்கு நீங்கள் கொடுத்த வீல் சேரை இங்கு விட்டு செல்கிறேன்..எதற்கு தெரியுமா..அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், என்னைப்போல ஒருவன் வரவேண்டும்.. வந்து ஜெயிக்க வேண்டும்” என்று சொல்லிய வார்த்தைகளுக்கு மேல் என்ன வேண்டும்..அனைத்து மாற்று திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட உற்சாக டானிக் அல்லவா..

கடைசியாக, அனைவரிடம் விடை பெற்று, கைகூப்பி விட்டு, வாகனத்தில் தவழ்ந்து சென்று அவர் ஏறியபோது, மனதை ஏதோ செய்த்து. அதுவரை அடக்கிகொண்டிருந்த அழுகை, வெட்கத்தை விட்டு வெளிவர, அதை அடக்க்கூட மனமில்லாமல் அழுதேன்...

அவர் ஒரு போட்டியில் பாடிய அருமையான பாடல் ஒன்று மனதில் இன்னமும் சன்னமாக என் காதுகளில் ஒலிக்கிறது...

“ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது..”

போய் வாருங்கள் ரிஸ்வான் பாய்...


12 comments:

Feroz said...

உணர்வுப்பூர்வமாய் ஒரு பதிவு. கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் நண்பரே. நட்புடன்

Anonymous said...

myself also cry for rizwan

'பரிவை' சே.குமார் said...

கடைசியில் கண் கலங்க வைத்துவிட்டீர்கள்...
நானும் அவரது பாடல்களைக் கேட்டிருக்கிறேன்... அருமையாகப் பாடுகிறார்.

Anonymous said...

Superb..

Bala said...

Nice One Raja..it touched

Unknown said...

நான் பார்த்தது இல்லை இப்போது பார்த்து விடுகிறேன்

Anonymous said...

உணர்வுப்பூர்வமாய் ஒரு பதிவு.

கார்த்திக் சரவணன் said...

அந்த நிகழ்ச்சியைப் பார்க்காமலே எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது...

Losh said...

More than Riswan bhai's magnanimity, your unbiased comments are heart warming. Riswan bhai is a true human being, an example on how the human race should be and i salute you sir for this wonderful post. i am from malaysia and i follow this excellent program without fail. GOD bless all of us.

வர்மா said...

முயற்சிசெய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு ரிஸ்வான் உதாரணம்.ரிஸ்வான் இல்லாதது கவலையாகத்தான் உள்ளது. தனது வீல் சேரை அன்பளிப்புச்செய்த அவரது எதிர்பார்ப்பு நிறைவேறவேண்டும்.

Ganapathi DCW said...

தங்களின் வரிகள் உண்மை காவியமாய் மலர்ந்துள்ளது.ரிஸ்பான் பாய் இங்கு பின்னேறியிரிருக்கலாம்.வாழ்க்கையில் கண்டிப்பாய் முன்னேறி நம் முன் தோன்றுவார் எண்பது மட்டும் திண்ணம்.அவரின் தற்போதய சூப்பர் சிங் பாடலின் கடைசி நிகழ்ச்சியை பார்தவர்களிள் நானும் ஒருவன்.

Anonymous said...

கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் நண்பரே

Post a Comment