Sunday, 27 October, 2013

சென்னை எக்ஸ்பிரஸ் – மூடர் கூடம்


“என்னது காந்தி செத்துட்டாரா” என்பது போல, இப்போதுதான் இரண்டு படங்களை தாமதமாக பார்க்க நேர்ந்தது. ஒன்று கோடியில் சம்பாதிக்கும் ஷாருக்கானின் “சென்னை எக்ஸ்பிரஸ்” , இரண்டாவது, தெருக்கோடியில் வாழும் மக்களுக்காக எடுக்கப்பட்ட மூடர் கூடம்.

இரண்டும், இருவேறு அரசியல்களை முன்னிறுத்துகிறது, உதாரணமாக, சென்னை எக்ஸ்பிரஸில் வரும் ஒரு டயலாக்..

“கிட்ட வராதே தங்கபாலி..ஜோரா உதைச்சுடுவேன்..”

வசனம் எழுதிய அந்த புண்ணியவானைத் தான் ஜோரா உதைக்கணும்போல இருக்கிறது. அது என்னய்யா ஜோரா உதைக்கணும்.. என்னதான் வடஇந்தியாவிற்கு படிக்க சென்றாலும், ஒரு கிராமத்துப்பெண் இப்படியா பேசுவாள். மணிரத்னமும், வடஇந்தியாக்காரர்களும், கிராமத்து படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும், ராவணன், கடல் படம் போல.

அய்யா கனவான்களா..படம் எடுப்பதற்கு முன்பு, ஸ்டடி, ஸ்டடி என்று ஒன்று சொல்லுவார்களே..அதை பண்ணினீர்களா..அல்லது, உங்களுக்கு தமிழக கிராமம் அல்லது தமிழ்பேசும் கிராமம் இப்படித்தான் இருக்கும், என்று பைவ்ஸ்டார் ஹோட்டலில், பீர் அடித்துகொண்டு நீங்கள் நடத்தும், டிஸ்கசனில் யாராவது சொன்னார்களா. இதே பிரச்சனைதான் மணிரத்னத்திற்கும். ராவணன் படத்தில் காண்பிக்கும், ஒரு கிராமத்தை எங்காவது தமிழகத்தில் பார்க்கமுடியுமா..பாரதி கவிதை பேசி கொண்டு, “மே” என்று கேனத்தனமாக கத்தும்படியா எங்கள் கிராமத்து இளைஞர்கள் இருக்கிறார்கள்.

ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு, கருப்பு பெயிண்ட் அடித்துகொண்டு, “எலே..ஜோசப்பு..அங்க எங்கவுலே நிக்கீரு” என்றால் தூத்துக்குடி, கன்னியாகுமாரி கடல்பக்கமா..அய்யா மணிரத்னம் மற்றும் வடஇந்தியா இயக்குநர்களே, உங்களுக்கு கோடி புண்ணியம்..உங்களுக்கு ஏத்த மாதிரி “சக்தி.நான் உன்னை விரும்புறேன்னு நினைக்கல” என்று பல்லை கடித்து கொண்டு டயலாக் பேசும் மாதவன் மாதிரி, சிட்டி இளைஞர்களை வைத்தே படத்தை எடுங்கள்..எங்கள் கிராமத்தை விட்டுவிடுங்கள்..புண்ணியமா போகும்..

எனக்கென்ன கோபமென்றால், சத்யராஜ், சத்யராஜ் என்று ஒரு நடிகர் படத்தில் நடித்தாக சொன்னார்கள்..அவரை கடைசி வரைக்கும் கண்ணில் காட்டவில்லை...பல்லை கடித்துக்கொண்டு, எப்போது, அருவாளும் கையுமாய், எண்ணை வடிந்த முகத்தோடு, ரவுடி மாதிரி, வேட்டியை தூக்கிகொண்டுதான், எங்கள் கிராமத்து இளைஞர்கள் தெரிகிறார்கள் என்றால், எப்போதும், பான்பராக் போட்டுகொண்டு , புளிச், புளிச்சென்று கண்டபடி சுவற்றில் துப்பும், வடஇந்திய இளைஞர்கள்தான் எங்களுக்கு தெரிவார்கள்..அடுத்து பார்த்த படம் “நாய், பொம்மைக்கெல்லாம்” ப்ளாஷ்பேக் வைத்து புரட்சி செய்த “மூடர் கூடம்”. “படத்தில ஒரு ஜோக்கு கூட இல்ல மச்சி..மொக்கை” என்று புலம்பி கொண்டு பலபேர் தியேட்டரை விட்டு வெளியே வந்திருக்ககூடும், இந்த படத்தை நகைச்சுவை படமாக எண்ணி கொண்டு சென்றவர்கள். ஆனால், இந்த படம்போல ஒரு சீரியஸ் படம் சமீபத்தில் பார்த்ததில்லை. ஒவ்வொரு சீனிலும், செவிட்டில் அறைந்தார்போல ஒரு கருத்து சொல்கிறார், இயக்குநர் நவீன், ஆனால் கருத்து சொன்னது தெரியாமலே..அதுதான் அதகளம்..

முக்கியமாக, சென்ட்ராயன் பேசும் ஒரு உரையாடல்..

“ஒரு வெள்ளைக்காரண்ட தமிழ்ல பேசுவாயடா??”

“இல்லை சார்..”

“ஏன்..”

“ஏன்னா, அவனுக்கு தமிழ் தெரியாது..”

“என்னை பார்த்தா, இங்க்லீசுல 10 மார்க்குக்கு மேல எடுக்குற மாதிரி தெரியிதா..இல்லை, சீன் படம், சண்டை படத்தை தவிர, வேற ஏதாவது, இங்க்லீசு படம் பார்க்குறமாதிரி தெரியுதா..அப்புறம் ஏண்டா, எங்கிட்ட இங்க்லீசு பேசுற”

சும்மா பந்தாவுக்கு இங்க்லீசு பேசும், பயபுள்ளைகளை நிறுத்தி வைத்து, அறைந்தார்போல இருக்கிறது. நீயா நானாவில் பலமுறை கவனித்திருக்கிறேன்...நிகழ்ச்சிக்கு யாராவது ஒருத்தர், தமிழ் தெரிந்தாலும், வலுக்கட்டாயமாக இங்க்லீசில் பேசியே ஆகவேண்டும் என்று பேசுவார் பாருங்கள்..கொடுமையாக இருக்கும்..ஏண்ணா இப்படி..

சுருக்கமாக சொல்லவெண்டுமென்றால்


“ஏண்டா பார்த்தேன் என்று சிந்திக்கவைத்தது சென்னை எக்ஸ்பிரஸ்”

“ஏண்டா சிந்திக்கணும் என்று பார்க்கவைத்தது மூடர்கூடம்”

10 comments:

bandhu said...

நானும் நேற்றுதான் சென்னை எக்ஸ்பிரஸ் பார்த்தேன் (பார்க்க முயற்ச்சித்தேன்). கொடுமை! சகிக்கவில்லை! அதுவும், அந்த ஹீரோயின் 'நான் அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்திடுவேன்' ன்னு சொல்லும் சீன், சொன்னவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது என்று எல்லாருக்கும் தெரியும் அக்சென்ட்டோடு!

பாதியில் நிறுத்தி தப்பித்தேன்!

மூடர் கூடம் பார்க்கவில்லை. பார்க்கவேண்டும்!

அமுதா கிருஷ்ணா said...

முன்பெல்லாம் வட இந்தியா போனால் மதராஸியா என்பார்கள். இந்த படம் வந்த பிறகு மும்பாய் போக வேண்டியிருந்தது. எல்லோரும் சென்னையா என்று விசாரித்தார்கள். சென்னை எக்ஸ்பிரஸ் புடவை,சுடிதார் என்று எதற்கு எடுத்தாலும் அதே பெயர் தான்.அது ஒன்னு தான் இந்த படத்தால் யூஸ் என்று நினைக்கிறேன்.

Boobala Arun Kumaran said...

பாஸ், நீங்க மணிரத்தினத்தை குறை சொல்லலாம், ஆனால் மும்பை எக்ஸ்பிரஸ் எடுத்தவனை குறை சொல்ல முடியாது. ஏன்னா அவன் படம் எடுப்பது சம்பாதிக்க மட்டுமே. அவன் படத்தை தமிழில் வெளியிட்டால் நீங்க சொன்ன மாத்ரி ஸ்டடி பண்ணி இருக்கலாம். ஆனால் அவனோட ஸ்டடி என்னனா, இந்தி காரர்களுக்கு புரியும் தமிழில் வசனம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே.

மூடர் கூடம் மாற்றி நீங்கள் கூறிய எதற்கும் நான் மறுப்பு கூற மாட்டேன். ஏன்னா இதோட அந்த படாத தியேட்டர் மூணு முறை, வீட்டில் பத்து முறைக்கு மேலாக பார்த்துவிட்டேன்.

Anonymous said...

மூடர்கூடம்... படமாய்யா அது? செம போர்! ப்ளாக் காமெடி படம் என்றார்கள். ஒவ்வொரு சீனும் பார்க்க எரிச்சல் வந்தது!

Anonymous said...

nee ellam antha padatha paakkave thaguthi illaathavanpa, unakku ethukku intha aagatha vela?????
unakku ellam *****padamthan sari,po po poi veettula familiyoda ukkanthu paru nalla....

SAP basis Dude said...

I loved மூடர்கூடம் ... Sorry Anonymous , You need to check your Brains ... One of the best movie , what a script , classic timing , Best Music , Camera , new face's ... Every one did there role , Awesome , Team had guts to make this kind of movie .. 3 cheers , All the best for the future
projects

Anonymous said...

ஐயா அந்த தமிழ் கொலை பண்ணியது சுபாஷ் என்னும் தமிழ் இயக்குனர் தான் பல தமிழ் பட சீன்கள் உரிவியது,விஜயகாந்தின் சத்திரியன் டைரக்டர் என்று நினைக்கிறன் ,அவர் தான் தீபிகாவிற்கு தமிழ் உரையாடல் சொல்லி கொடுத்தது

Anonymous said...

You should see "Diamond Necklace" movie, one of the three main female character is a Nurse from South TamilNadu. Although I am not a big fan of the movie, this character is authentic, speaks correct tamil slang (with malayalam subtitles) till the end of the movie. Good director.
Moodar kudam is good but I can't appreciate it, since it is almost a carbon copy of the 1999 Korean film "Attack the Gas station". No credit to the original movie was given by the Tamil director. We should only promote original stories and ideas.

சே. குமார் said...

“ஏண்டா பார்த்தேன் என்று சிந்திக்கவைத்தது சென்னை எக்ஸ்பிரஸ்”

“ஏண்டா சிந்திக்கணும் என்று பார்க்கவைத்தது மூடர்கூடம்”

எதார்த்தமாகச் சொன்னீர்கள்.

அவிய்ங்க ராசா said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி...

Post a Comment