Wednesday, 8 May, 2013

வீடு வாடகைக்கு - நான் வெஜிடேரியன் ஒன்லிசென்னை வந்து வேலை தேடும்போது, முழுக்க மேன்சன் வாசம்தான்..கக்கூஸ் அளவே உள்ள ஒரு ரூமில், மூன்று பேர்..ஓனருக்கு தெரிந்து இரண்டு பேர், தெரியாமல் ஒருவர் என்று..இருக்கு இரண்டு பெட்களில், ஆளுக்கு ஒருவர்..இரண்டு கட்டிலுகளுக்கு இடையே இன்னொருவர்.. தரையில் தூங்கி கொண்டிருப்பவரிடம்.."பாஸ்.கொஞ்சம் இடம் கொடுக்குறீங்களா" என்று அனுமதி கேட்டுத்தான் வெளியே செல்லவேண்டும்..அவ்வளவு அருமையான வசதி..

காலமாற்றத்தில், ஒரு சின்ன கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து, ஒரு நாலாயிரம் சம்பளம் வாங்கும்போது..

"ஓ..மை..காட்..வாட் எ டெர்ட்டி பிளேஸ்" என்று பகுமானமாக சொல்லிக்கொண்டு, நானும் என் நண்பனும் வீடு பார்க்க துவங்கியபோது, எங்களை மேலும் வெறியேற்றியது...

"வீடு வாடகைக்கு - வெஜிடேரியன் ஒன்லி.."

என்ற வாசகம் தான்..அதுவும் எப்படியும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிவிடவேண்டும், அப்பதான் ஊருக்குள்ளாற நாலு பேரு மதிப்பாய்ங்க என்று  கிடைக்கும் நாலாயிரத்தில், மூவாயிரத்துக்கு வேட்டு வைக்கும் முடிவோடு, ராவும் பகலுமா அலைந்ததில், கடைசியாக ஒரு வீடு கிடைத்தது..

"கரெக்டா நாலு மணிக்கு வீட்டுக்கு வந்துருங்க" என்ற ஓனரிடம் இரண்டு மணிக்கெல்லாம் வந்துருவோம் சார்..என்று, ஹி..ஹி த்தபோது, ஒரு மாதிரியாக பார்த்தார்..வேறு வழி..வீடு வேண்டுமே..அதுவும் ஐந்தாயிரம் ருபாய்க்கு...

அவர் வீட்டு அரண்மனையை சுற்றி காட்டிவிட்டு..அட்வான்ஸ் ஐம்பதாயிரம் என்று சொன்னபோது, நண்பன்.."ஹவுஸிங்க் லோன் போடலாமா சார்" என்று அப்பாவியாக கேட்டான்.. கடைசியாக அடித்து பிடித்து இருபத்தைந்தாயிரத்து ஒப்புகொண்டு..புரட்டிகொடுக்கும்போது, வாங்குவதற்கு முன் அவர் கேட்ட ஒரே கேள்வி..

"ஓ..கேட்க மறந்துட்டேன்..நீங்க வெஜிடெரியன்தானே..."

எனக்கு குப்பென்று வேர்த்தது..ஆமா என்று சொல்லலாமலும்..இல்லை என்று சொல்லாமலும், இருபக்கம் தலையை ஆட்ட..நண்பன் கூச்சப்படாமல்.."நான் வெஜிடேரியன் சார்" என்றான்..எனக்கு படு குழப்பம்..ஒரு நாளைக்கு சிக்கன், அல்லது முட்டை கிடைக்காவிட்டால், அந்தப் பக்கம் அதுபாட்டுக்கு போகும் பல்லியை பிரை பண்ணி சாப்பிடும் அளவுக்கு நண்பன் நான் வெஜ் பார்ட்டி..

வெளியே வந்தவுடனே..

"டே..மச்சி..ஏண்டா வெஜிடேரியன்னு பொய் சொன்ன்ன" என்றேன்...

"டே..நா எங்கடா பொய் சொன்னேன்.."நான்-வெஜிடேரியன்" தான்னு சொன்னேன்..உண்மைதானே.." அப்படிங்குறான்..

அப்பவே தெரிஞ்சுபோச்சு..பயபுள்ள பெரிய ஆளா வருவான்னு..சென்னையிலே வாய் இல்லைன்னா நாய் கூட மதிக்காதுங்குறத கரெக்டா புரிஞ்சுவைச்சிருக்கிற ஒரே ஜீவன், அவன் தான்..

அதற்கப்புறம் சொன்ன பொய்யை மறைக்க நாங்க பட்ட பாடும்...முக்கு கடையில் வாங்கி வந்த சிக்கனை சாப்பிட்டு எலும்பை மறைக்க நாங்க பட்ட பாடும்,காலத்தால் அழியாத ஒரு சரித்திரம்..அதுவும் முக்கியமாக, சிக்கன் மஞ்சூரியனை சரியாக டிஸ்போஸ் பண்ணாமல், ஒருதுண்டு தெருவில் விழ..ஓனர் பார்த்துவிட்டு...

"என்னப்பா புள்ள நீங்க...காலி பிளவர் பிரையை இப்படியா கீழ போடுறது.."
என்று கேட்கும் அளவுக்கு போனதை நினைத்தால், இன்றும் புரை ஏறும் அளவுக்கு சிரிப்பு..கடைசியாக காலி பண்ணும்போது பொறுக்க மாட்டாமல்..

"சாரி..சார்..நாங்க சுத்த நான் வெஜிடேரியன்..அதுவும் இந்தப் பய நண்டு, மீன் இல்லாம சாப்பிடவே மாட்டான்னா பார்த்துக்குங்களேன்..அதுவும்..உங்க வீட்டு அடுப்பறையில் சமைச்சா, அப்படி ஒரு டேஸ்ட்டுன்னா பார்த்துக்குங்களேன்.." என்று கலாய்த்து..அவர், "ஐயோ..".. என்று அவர் அலறுவதற்குள்.."சும்மா கலாய்ச்சோம், சார்..வெளியில் தான் சாப்பிடுவோம்.." என்று சொன்னாலும்,..அவர் முகம் கலவரம் ஆனது, இன்னும் அடங்கவில்லை..நூறு ரூபாயை எடுத்துக்கொண்டே அட்வான்சைத் திருப்பி கொடுத்தார்..ஒருவேளை "ஊதுபத்தி" வாங்க செலவுபோல என்று எண்ணி கொண்டு ஒன்றும் சொல்லவில்லை...

இப்போதெல்லாம், பேப்பரை புரட்டும்போது.."வெஜிடேரியன் ஒன்லி" என்பதை பார்த்தால், "நான்-வெஜிடேரியன் சார்" என்று சொன்னது மனசுக்கு வந்து, சிரிக்க ஆரம்பித்துவிடுகிறேன்..

இதற்காகவே, சென்னையில் ஒரு வீடு சொந்தமாக வாங்கி, நான் வாடகை வீட்டிலாவது தங்கி..இப்படி போர்டு மாட்ட வேண்டும் என்று ஆசை..அல்லது வெறியாக உள்ளது..

"வீடு வாடகைக்கு - நான் வெஜிடேரியன் ஒன்லி.."

8 comments:

சக்கர கட்டி said...

"நான்-வெஜிடேரியன் சார்"/////////
ஹஹ ஹாஆ சூப்பர் தல சீக்கிரம் வாங்குங்க நான் நான் வெஜிடேரியன் தான்

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா சூப்பர் ஆசை.தாம்பரத்தில் ப்ராமின்ஸ்களுக்கு கிறிஸ்டியன்கள் வீடு கொடுக்க மாட்டார்கள்.ஒரு வேளை நான் - வெனிடேரியன்களுக்கு மட்டும் தானோ.

ஹோட்டலில் போய் ஒரு வெட்டு வெட்டிட்டு வீட்டில் மட்டும் வெஜிடேரியன் ஒன்லி என்று போர்டு மாட்டும் சிலரை என்ன செய்றது??

கோவை நேரம் said...

ஆமாம்..சென்னையில் மட்டும் ஏன் இப்படி வெஜிடேரியன் கேட்கிறார்கள்...

Anonymous said...

"தாம்பரத்தில் ப்ராமின்ஸ்களுக்கு கிறிஸ்டியன்கள் வீடு கொடுக்க மாட்டார்கள்"

ஆமாம், பிராமின்ஸ்கள் அதிகமாக கழிப்பதால், சீக்கிரமாக செப்டிக் டாங்கை நிறைத்து விடுவார்கள்.

மருதநாயகம் said...

அண்ணே! என்ன இப்படி சொல்லிட்டீங்க, வீடு எல்லாம் பத்தாது. ஒரு அபார்ட்மெண்ட் பில்டிங்க விலைக்கு வாங்கி அந்த பில்டிங்குக்கு நீங்க சொன்ன மாதிரி போர்டு வைக்கணும்

அவிய்ங்க ராசா said...

நன்றி சக்கரகட்டி, கோவை நேரம், அமுதா, மருதநாயகம்..

Anonymous said...

Hi,

I feel it is the basic right of the house owner to decide to whom he is giving it for rent, as you say "Only Non-Veg".

I don't know what is there for us to annoy ourselves when we don't get a house owner to accommodate us.

ஸாதிகா said...

இதற்காகவே, சென்னையில் ஒரு வீடு சொந்தமாக வாங்கி, நான் வாடகை வீட்டிலாவது தங்கி..இப்படி போர்டு மாட்ட வேண்டும் என்று ஆசை..அல்லது வெறியாக உள்ளது..

"வீடு வாடகைக்கு - நான் வெஜிடேரியன் ஒன்லி.."
//ஒன்றுக்கு இரண்டாக பக்கத்திலேயே வாங்கி ஒன்றில் நீங்கள் இருந்துகொண்டு,மற்ற ஒரு வீட்டில் இப்படி போர்ட் மாட்டி,பிறகு கிடைக்கும் அனுபவங்களை பதிவாக சீக்கிரம் போடுங்கள் சார்.

Post a Comment