Wednesday, 1 May, 2013

எனக்கொரு கேர்ள் பிரண்ட்...கடந்த முறை "நீயா நானா" வில் விவாதிக்கப்பட்ட தலைப்பு என் மனதை கேசரி மாதிரி கிண்டிவிட்டது..அதாவது இன்றைய காலகட்டத்தில் "ஆண்-பெண் நட்பு சாத்தியமே.." என்று ஒரு அணியில், நொந்துபோன அப்பாக்களும், நூடுல்ஸ் ஆன அண்ணன்களும், எதிர் அணியில் "எனக்கொரு பாய் பிரண்ட்ஸ் வேண்டுமடா" என்று பாடிக்கொண்டு இந்த தலைமுறை பெண்களும் அமர்ந்திருந்தனர்..அந்த காலத்தில காலேஜ் படிக்கும்போது என்று நான் ஆரம்பித்தால் "யப்பே..ஆளை விடுடா..சொந்தக் கதைய சொரிய ஆரம்பிச்சுட்டாண்டா" என்று பலபேர் சொரிய..இது..எழுந்துபோக வாய்ப்பு அதிகம் உள்ளதால், படிக்கும் 48 பேரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில் மேற்கொண்டு தொடரவில்லை...

ஆனால் என் மனதை இன்னும் அரித்துக்கொண்டு இருக்கும் கேள்வி..தூய்மையான "ஆண்-பெண்" நட்பு சாத்தியமா அதுவும் இந்த காலகட்டத்தில்..எனக்கு கிடைத்த அனுபவங்கள் சாத்தியம் இல்லையோ என்று பயப்பட வைக்கிறது..

நான் சென்னையில் வேலை தேடியபோது கிடைத்த அனுபவங்கள் அப்படி...ஏ.சி காரில் சொகுசாக சென்னை ரோட்டுகளில் பயணம் செய்வதை விட, மிதமான கூட்டம் உள்ள பேருந்துகளில் பயணம் செய்து பாருங்கள்..உங்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை எடுத்து, மணிரத்னத்திடம் கொடுத்து, அடுத்த படமாவது நல்ல படமாக எடுக்க சொல்லலாம். அவ்வளவு அனுபவங்கள்..

அதுபோன்ற பேருந்துகளில் இளைஞர்கள் நடத்தும் உரையாடல்கள், அவ்வபோது காதில் விழுவதுண்டு...

"செம பிகர்டா மச்சி..எப்படியாவது கவுத்துடுணும்.."
"பிக் அப் ஆயிருமா.."
"மடிச்சுரலாமா.."
"லைட்டா நூல் விட்டு பார்க்கலாம.."

எந்தப் பையனும், எந்தப் பொண்ணிடமாவது, நட்பாக பேசி ஒருகாலும் பார்த்ததில்லை..ஓரக்கண்ணால் பார்ப்பது, சைடு பார்வை பார்ப்பது..எப்படியாவது காதலிக்கவைக்கவேண்டும் என்ற வெறி..என்ற அனைத்தும் காதலையோ அல்லது காமத்தையோ எதிர்நோக்கியே அமைந்திருப்பதாக உணர்ந்தேன்..அதாவது நான் பார்த்த அனுபவங்களில்..

சரி..ஒரு சின்ன சர்வே எடுக்கலாம், இதைப் படிப்பவர்களிடம்..."நாங்க எல்லாம் கடைசி வரைக்கும் "ட்ரூ" பிரண்ட்ஸ் என்று "ப்ரூ" காபி குடிப்பது மாதிரி சொல்பவர்களாக நீங்கள்.."இருக்கலாம்..ஆனால் ஒரு நிமிடமாவது..அல்லது, ஒரு நொடியாவது, அவனால் அல்லது அவளால் கவரப்பட்டு, "ச்சே..இவள்/இவன் வாழ்க்கை துணையாக வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று நினைத்திருப்பீர்கள்..அட..பொய் சொல்லதிங்க சார்..கண்டிப்பாக நினைத்திருப்பீர்கள் தானே...அப்ப சத்தம் போடாம என் பக்கம் வந்து உக்காருங்க..

ஓகே..மீதி யாருங்க அங்க கை தூக்குவது..ஓகே..உங்களிடம் இன்னொரு கேள்வி....உங்கள் நண்பி/நண்பர் வந்து "ம்..உங்கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தயக்கமா இருக்கு..ஐ.திங்க்..ஐ ஆம் இன் லவ் வித் யூ.." அப்படி சொல்லுகிறார்கள் என்று வைத்து கொள்வோம்..மனசைத் தொட்டு சொல்லுங்கள்..

"ந்நோ..நோ...யூ.ஆர்.மை.டியர் பிரண்ட்...உன்னை அப்படி நினைக்கவே இல்லை.."

இப்படி சொல்லிவீர்களா..மாட்டீர்கள் தானே..அப்புடின்னா என் சைடுல வந்து உக்காருங்க..

மீதி கையை தூக்கிக்கிட்டு இருக்கிறது..அப்பாவியா இருக்குற அந்த ரெண்டு பேரும்..

"ரியலி கிரேட் சார்..இந்த காலத்திலயும், உண்மையான நட்பா பழகுறீங்க பாருங்க..சூப்பர்..கொடுத்துவைச்சவங்க சார் உங்க பிரண்டு..என்னது..கல்யாணம் ஆகியும் இன்னும் ஒரு கேர்ள் பிரண்டு கூட கிடைக்கலையா...அதுக்கு நான்..ஹெல்ப்பு பண்ண..."

அடப்போங்கையா....

ஜோக்ஸ் அபார்ட்...மனதை தொட்டு சொல்லுங்கள்..நீங்கள் எந்த பெண்ணிடமாவாது, கடைசி வரைக்கும் நட்பாக பழகி இருக்கிறீர்களா..அதாவது, காதலாக மாற சந்தர்ப்பம் கிடைத்தும்...

ராயல் சல்யூட் சார்...

(எனக்கு பெண் நண்பிகள் கிடைத்தும் அனைத்தையும் நானே கெடுத்துக் கொண்டேன்..இப்படித்தான் நான் காலேஜ் படிக்கிறப்ப..ஹல்லோ..எங்க ஓடுறீங்க..கொஞ்சம் கேட்டுட்டு போங்க..ஹல்லோ..)

11 comments:

Muthukumaran said...

ha ha ha. nalla sonnenga

மலரின் நினைவுகள் said...

ஆண் - பெண்
என்னதான் நெஞ்ச நக்குற நட்பா இருந்தாலும் உச்ச்சம்ன்றது மேட்டர் தான்...
அந்த மேட்டர் கல்யாணத்துக்கு முந்தியா, பிந்தியா என்பதுதான் மேட்டர்...
இது ரெண்டுக்கும் நடுவுல ரெண்டுங்கெட்டானா இருக்கிறதுதான் காதல்ன்ற மேட்டர்...
இதுல ரெண்டே கோஷ்டி தான் இருக்கு... மேட்டர்க்கு சான்ஸ் கிடைச்சவங்க & கிடைக்காதவங்க...
இந்த ஆண் -பெண் நட்பு, காதல்-ன்றதெல்லாம் அனுபவிக்கும்போது என்னமோ நல்லாத்தான் இருக்கும். புள்ளைங்கள சந்தேகப் படறத விட்டுட்டு அவங்கள அவங்களே பாதுகாத்துக் கொள்ள தைரியத்தையும் தன்னம்பிக்கையும் பாலியல் சம்பந்த புரிதலையும் கொடுப்பதால் மட்டுமே ஓரளவுக்கு நிம்மதியாக இருக்க முடியம்.

சக்கர கட்டி said...

ராசா எனக்கு தெரிஞ்சு அப்படி யாரும் பழகி பார்த்தது இல்ல பிக் அப் பேக் அப் எஸ் கேப் தான்
இப்போது காதலை நட்பை விட காமமே தலை துக்கி உள்ளது

எனது தளத்தில் இன்று சூது கவ்வும் விமர்சனம்
http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post.html

சக்கர கட்டி said...

இன்னொன்னு நட்பா பழகவே பொண்ணு கிடைக்கலியே பா

IlayaDhasan said...

coed அப்படின்னாலே இப்படி தான் நடந்துக்கனுமின்னு நம்மக்கு தப்பு தப்பா ஐடியா கொடுத்த
சினிமாக்கள் தான் காரணம் , என் அவதானிப்பு...

பஸ்ஸ கொழுத்துங்கடா!

ANaND said...

ஒரு 40 வயசுக்கு மேலன்னா ,ஆண் பெண் தூய்மையான நட்பு ஏற்பட வாய்ப்பு இருக்கு , அதுக்கு கீழ ரொம்ப குஷ்டம் பாஸ்

இக்பால் செல்வன் said...

ஒவ்வோரு மனிதனுக்கும் மற்ற மனிதன் மீது எதோ ஒரு வித ஈர்ப்பு இருக்கும். பொதுவாகவே எதிர் பாலினத்தின் மீது அனைவருக்கும்,அனைத்து வயதிலும் வெவ்வேறு சதவீதங்களில் ஈர்ப்பு இருக்கும். இவ் ஈர்ப்பே அக்கறை, கழிவிரக்கம், அன்பு, பாசம், காதல், காமம் என மாறுபடும். சில சமயங்களில் பெண் குழந்தைகளுக்கு தந்தை மீதும், ஆண் குழந்தைகளுக்கு தாய் மீதும் ஈர்ப்பு இருக்கும். அது தான் அன்பாக முகிழும், காமமாக முகிழக் கூடாது, முகிழ்ந்தால் அபத்தமாகும். அதற்கு மரபியல் காரணங்கள் உண்டு. ஒத்த மரபணுக்களை கலப்படைச் செய்வது சந்ததிகளை தழைக்கப் பண்ணுவதில் இடர்பாடுகள் வரும்.

பருவம் எய்திய ஒவ்வோரு ஆணும், பெண்ணும் எதிர்ப்பாலினர் ஒவ்வொருவரையும் அளவிடுவார்கள், மூளை அளவிடும், அதில் சதவீதம் குறையும் போது அறிமுகமானவர் எனவும், சதவீதம் கூடும் போது நட்பு, நெருங்கிய நட்பு, காதலன், கணவன் என அது மாறுபடத் தொடங்கும்.

மனிதர்களில் சில மாற்றுப் பாலினத்தவரும் உண்டு. குறிப்பாக சில ஆண்களுக்கு - ஆண் மீது காதலும், காமமும் ஏற்படும். பெண்களுக்கு - பெண் மீது காதலும், காமமும் ஏற்படும். அது ஒரு பாலின் ஈர்ப்பு எனப்படும்.

அதனால் ஆணும், ஆணும். பெண்ணும், பெண்ணும் கூட பழகாமல் இருக்க முடியுமா சொல்லுங்கள். அக்கறை முதல் காமம் வரை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நிலையில் நாம் வைப்போம் அவ்வளவே வித்தியாசம்.

இயற்கை பரிணாமம் என்பதை தாண்டி மானுட சமூகக் கட்டமைப்பு என்ற ஒன்றும் உண்டு, அது சொத்துரிமை, வாழ்வியல் துணை என்பதை தேர்வு செய்ய திருமண முறைகள் ஏற்படுத்தியுள்ளார்கள். பொதுவாக ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஏற்கின்றோம், அங்கு சிக்கல்கள் எழும் வாய்ப்பு குறைவு. அதிலே சிக்கல்கள் எழுந்து விடுவதைப் பார்க்கின்றோம் அல்லவா.

இங்கு மனிதர்கள் அன்பு, காமம் என்பதுக் குறித்து மேலும் புரிந்து கொள்ளத் தொடங்கும் போது காமத்தை பகிர்ந்து கொள்வதன் நெறிகளையும், நட்பை பாராட்டும் யதார்த்த சூழலையும் புரிந்து, உறவு முறைச் சிக்கல்களையும் தவிர்த்து கொள்ளலாம்.

ஆண், பெண் நட்பை ஏற்காத சமூகங்கள், காலக் கட்டத்திலும் மதில் தாட்டும் பூனைகளும், எல்லை மீறுவோரும் இருந்தே வந்துள்ளனர். அதனால் அவர்கள் சமூக சிக்கல்களை எதிர்கொண்டதும் உண்டு, பலர் உள்ளத்தில் குற்றவுணர்வை பெற்றதும் உண்டு.

கிராமத்து இலக்கியங்கள், நாட்டார் பாடல்கள், புராணங்கள், கதைகள், கவிதைகள் என்பதில் இவை பிரதிபலித்தும் உள்ளன. இவை யாவும் மிகப் பெரிய விடயங்கள், ஒரு பதிவில் விளக்கி விட முடியாது.

இக்பால் செல்வன் said...

பலர் நினைக்கின்றேன் நாற்பது வயதுக்கு மேல் காமம் இல்லாத நட்பு வரும், இந்தக் காலத்தில் தான் காமம் பெருகுது என, அவ்வாறு இல்லை. எந்த வயதிலும் எந்தக் காலத்திலும் காமம் உள்ள நட்பும், காமம் குறைந்த நட்பும் உண்டு. பண்டு இவ்வாறான விடயங்கள் காதோடு காதாகவும், திரைமறைவாகவும், ஒரே கிராமத்துக்குள்ளும் முடங்கிப் போய்விடும். அவ்வளவே வித்தியாசம். சராசரியாக உலகம் முழுவதும் திருமணமாகிய பெற்றோருக்கு பிறக்கும் பிள்ளைகளில் 10 % வேறு தந்தைக்கு பிறந்தத்தாக இருக்கும் என கருத்துக் கணிப்புக் கூறுகின்றது.. ! மனிதர்களில் பொதுவாக Monogamous என்ற போதும், கணிசமானோர் polygamous அதற்கு சில காரணங்களும் உண்டு... !

அவிய்ங்க ராசா said...

நன்றி முத்துக்குமரன், மலரின் நினைவுகள்.இளையதாசன், சக்கர கட்டி, ஆனந்த்..

நன்றி இக்பால் செல்வன்..எனக்கென்னவோ, என்னுடைய பதிவை விட, உங்கள் கமெண்டே இதைப் பற்றி நன்றாகவும், விரிவாகவும் சொல்லியிருக்கிறது..))

kumar ja said...

உங்கள் கூகிள் ஆட்சென்ஸ் அப்ரூவல் 10 மணி நேரத்தில்...அக்கவுண்ட் விலை ரூ.500 மட்டும். அப்ரூவல் ட்ரிக் ரூ.3500 பேச ° 9626062173, திருவண்ணாமலை. http://uradsenseid.blogspot.in/

kumar ja said...

Blogger Ad Revenue Sharing Site

அன்பார்ந்த வலைப்பதிவர்களே வணக்கம். உங்கள் வலைப்பக்கங்களின் மீது கூகிள் விளம்பரங்களை சேர்த்து அதன்மூலமாக மாதம் ஒரு தொகையை (மாதம் குறைந்தது 1000 முதல் 20000 வரை) எளிமையாக பெறலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது கீழ் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதுதான். பின் உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பப்படும் விளம்பர கோடிங்கை உங்கள் வலைத்தளத்தில் சேர்க்க வேண்டும். உங்கள் வலைப்பதிவை காணவருவோர் அவர்களைக் கவரும் விளம்பரத்தை சொடுக்குவார்கள். அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் உங்களுக்கு பாதி தரப்படும்.

அதாவது ஆட்சென்ஸ் ரெவின்யு சேரிங் என்பார்கள். இந்த பணமானது 50 சதவீதம் ரூ.500 கிடைக்கும் பட்சத்தில் அந்தப்பணம உடனுக்குடன் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். 15 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பணம் அனுப்பப்டும். நீங்கள் கண்டிப்பாக உங்கள் விளம்பரங்களை நீங்களாகவோ அல்லது நண்பர்களிடம் கிளிக் செய்யச் சொல்லவோ கூடாது. வேறு நுணுக்கங்களையும் கையாண்டு விளம்பரங்களை கிளிக் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது உங்கள் கணக்கை துண்டிக்க ஏதுவாக அமையும். கவனமாக கூகிள் நிபந்தனைகளை (AdSense Terms and Conditions) படியுங்கள். பின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். வேறு சந்தேகங்களுக்கு எங்களை தொலைபேசி மூலமாகவும் கூகிள் டாக் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.


படிவத்தை பூர்த்தி செய்யுஙகள்
Email This BlogThis! Share to Twitter Share to Facebook
Home
Payout Details

Minimum Payout : Rs. 500

Payout : Monthly Twice

Payment Type : Bank Transfer

Clicks Statement : Mail Delivery Daily

http://www.bloggeradrevenue.org/

Post a Comment