Sunday 2 September, 2012

நீதானே என் பொன் வசந்தம் – பாடல்கள் ஒரு அலசல் – ஏமாற்றிய ராஜா



நீங்கள் இரவினில் இளையராஜாவின் இசைத் தாலாட்டு கேட்காமல் தூங்க மாட்டீர்களா..மனம் கஷ்டமாக இருக்கும்போது, இளையராஜா, இசைதான் ஆறுதலா..இளையராஜாவுக்கு இன்னும் உலக அளவில் அங்கிகாரம் கிடைக்கவில்லையே என்று, சமோசா சாப்பிட்டுக்கொண்டே வருந்துகிறீர்களா..அட நானும்தான்யா..ராஜாவின் 80களின் இசைமீது அவ்வளவு வெறியன் நான்..கோபுரவாசலிலேயில், “காதல் கவிதைகள் படித்திடும் நேரம்..தாலாட்டு பூங்காற்று”, அலைகள் ஓய்வதில்லையில், “காதல் ஓவியம்..” நீங்கள் இரவில்தானே கேட்பீர்கள்..ஆனால் நான், அலுவலகம் செல்லும்போதும் கேட்பேன்..

ஆனால் அதற்காக அவருடைய சமீபத்திய இசை எதுவும் என்னை கவரவில்லை என்பதை சொல்லுவதற்கு எந்த தயக்கமும் இல்லை. அவரின் சமீபத்திய படங்களுக்குரிய(அதென்ன சமீபத்திய..காதலுக்கு மரியாதை படத்துக்கு அப்புறம்) இசை, அவ்வளவாக(திரும்பவும் பாருய்யா..அவ்வளவாக இல்லை..சுத்தமாக) என்னை ஈர்க்கவில்லை..விதிவிலக்காக, பிதாமகனில்இளங்காத்து வீசுதேஎன்ற பாடலை கேட்கும் போது, இளையராஜா திரும்பவும் பிறந்துவந்ததாக உணர்ந்தேன்.

ஆனால் அதற்கு அடுத்து, கலைஞர் கதைவசனத்தில்பொன்னர் சங்கர்பாடல்களை கேட்டபோது, படத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு வசனம் பேசி நடித்த பிரசாந்த் மேலே கோபம் வந்ததோ இல்லையோராஜா மேல் கோபம் வந்தது. “சரிதான்..தலைவரு ரெஸ்ட் எடுக்கலாம்என்ற எண்ணம் உறுதியாக தோன்றியது. ஆனால், சமீப காலமாக, சானல்களிலும், டி.விகளிலும், இணையதளங்களிலும், கவுதம் மேனன் உண்டாக்கியிருந்த பரபரப்பினால், “நீதானே என் பொன் வசந்தம்பாடல்கள் வந்தவுடன், “வாவ்..இளையராஜா இஸ் பேக்என்று பதிவு போடலாம் என்று ஆசையாக பாடல்களை கேட்க ஆரம்பித்தவன்தான், இப்போ என்ன சொல்லுறதுன்னு தெரியவில்லை. வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட, வடிவேலு மாதிரி ஆகிவிட்டேன்..இளையராஜா, இஸ் பேக் இல்லை..இளையராஜா இஸ் டிஸ்அப்பாயிண்டிங்க்

சாய்ந்து சாய்ந்து  - யுவன், ரம்யா

யூடியூப்பை, கலக்கிய பாடல்..பாடல்கள் மீது, ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியதில் இந்த பாடலுக்கு பெரும் பங்கு உண்டு. யுவனின் கரகரகுரலில்சாய்ந்து, சாய்ந்து என்று ஆரம்பிக்கும்போதுகண்ணை மூடினால், இளையராஜாவின், 95களின் இசை ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.ஆனால், ஒரே மாதிரியான, வயலின்களின் இசையும், பல்லவி, சரணத்திற்கும் இடையேயான இசையை, இதற்குமுன்பு இளையராஜாவிடமே பலமுறை கேட்டிருப்பதாக ஞாபகம். ஆனால் சரணம் மற்றும் பல்லவி முடியும்போது, இசையோடு, கலந்து, அமைதியாகும், அந்த வயலின் நோட்ஸ், இளையராஜாவுக்கு மட்டுமே சாத்தியம்.

காற்றை கொஞ்சம் - கார்த்திக்

என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. பாடகர் கார்த்திக் பாடியிருந்தாலும், பழைய நடிகர் கார்த்திக் பாடலை கேட்பது போல் இருக்கிறது..சிலநேரம் அழகி பாடலை கேட்பது போலவும், இருக்கிறது..பாடலை கேட்ட கன்பூயசனில் பாடல் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று கூட சொல்லமுடியவில்லை. எனக்கென்னமோ, இளையராஜா ரசிகர்களுக்கு பிடிக்கலாம்ஆனால் எனக்கு பிடிக்கவில்லை..கவுதம் மேக்கிங்கில் ஏதாவது மேஜிக் செய்தால், ஹிட் ஆகலாம். “என்னை கொஞ்சம் மீட்கத்தான் உன்னைத் தேடி வந்தேன்என்று முத்துகுமார் இளகியிருந்தாலும், அனைத்து, விழலுக்கு இரைத்த நீரோ என்று ஐயம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.



முதல் முறைசுனிதா சௌகான்

அடப்போங்க சார்..துக்கம் வருது என்று சொல்லலாம் போல் இருக்கிறது, இந்தப் பாடலை கேட்கும்போது..பொதுவாக இளையராஜவின் இசையில் எனக்கு கோரஸ் குரல்களைப் பிடிப்பதில்லை. இந்தப் பாடலின் வரும் கோரஸ்குரல்களை கேட்கும்போது, ஒரு குவார்ட்டர் அடித்துவிட்டு குப்புறப் படுத்துவிடலாமோ என்று தோன்றுகிறது..முழுவதும் எழுதாவிட்டால் எங்கே, கவுதம் மேனன் போன் பண்ணி திட்டுவாரோ என்று பயத்தினால்….அட விடுங்கப்பா..பாட்டுல சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை..

வானம் மெல்லஇளையராஜா, பெலா ஷிண்டே

ராஜாவின் மெஸ்மரிச குரலில் ஆரம்பிக்கும்போதுவாவ், இளையராஜா இஸ் பேக்என்று டைப் பண்ண ஆரம்பித்தேன்..”உந்தன் மூச்சுக்காற்றைத்தான், எந்தன் சுவாசம் கேட்குதேஎன்ற மயக்கும் வரிகள், சற்று கிறக்கத்தை தருகின்றன். ஆனால், ஏதோ, மிஸ்ஸுங்க் என்று சொன்னால், யாராவது, “ஞான சூன்யம்என்று சொல்லிவிடுவார்களோ, என்ற பயத்தினால்..”குமாரு..ராசா(இளையராசா) இருக்காருய்யா..”,இப்படிக்கு பயத்துடன் அவிங்க ராசா

பெண்கள் என்றால் - யுவன்

அப்பா, வெளியே போனால்தான் இந்தப் பாடலைப் பாடுவேன்என்று யுவன் சொன்னதாக, கவுதம் மேனன் ஒரு பேட்டியில் சொல்லியபோதே, மைல்டா டவுட் வந்தது. முழுப்பாட்டைக் கேட்கும்போது, டவுட் புல் கிளியர்..யுவன் பயபுள்ள, அப்பா வெளியே இருந்தபோது, பாடல் பாட மட்டுமல்ல..நைசா கம்போசிங்க் செய்திருக்கார் போல..கொஞ்சம் வெஸ்டன், கொஞ்சம் ராசா என்று கலந்துகட்டி, ஒரு யுவன் பாடல் செய்ததுபோல் இருக்கிறது. “என்ன சொல்லி என்ன பண்ண பெண்ணே..நெஞ்சம் ஒரு காத்தாடிஎன்ற வரிகளின் முடிவாக வரும் இசை மட்டும் அருமை..மற்றபடிஆவ்..

என்னோடு வா..வா - கார்த்திக்

எஸ்..இளையராஜா இஸ் பேக், இன் திஸ் சாங்க்..இது, இதைத்தான் இளையராஜாவிடம் எதிர்பார்த்தோம்..அப்படியே கண்ணை மூடிக்கேட்டால், இளையராவின் 80களின் இசையை அப்படியே கேட்பது போல் இருக்கிறதுலைவ் ஆர்க்கெஸ்ட்ரா எதற்கு உபயோகிக்க வேண்டும், என்று இந்தப் பாடல் ஒரு பாடமே நடத்துகிறது.ஊடே வரும், துள்ளல் இசையும், கார்த்திக்கின் பெப்பும் (பெப்புய்யா..பெப்பு) சேர்ந்து கொடுக்கும், அனுபவத்தில் சொல்லுகிறேன்..பாடல்..சூப்பர் ஹிட்

புடிக்கலை மாமுசூரஸ் ஜெகன்

ஆஹா..ஆரம்ப இசையை கேட்டபோது, “அடஎன்று நீங்கள் சொல்லாவிட்டால், நீங்கள் உண்மையிலேயே ஞான் சூன்யம்தான்..”ஹேய்..ஹேய்…” என்று சூரஜ் ஜெகன் குரல் மட்டுமல்ல, இசையும் துள்ளல் நடை போடுகிறது..நடுநடுவே வரும், கித்தாரின் இசை கேட்கும்போது மயங்கும் நேரத்தில் கோரஸ் குரல்கள் வந்து பண்ணும் ஒரு டார்ச்சர் இருக்கிறதே..யப்பா..ஆனால் கார்த்திக் நடுநடுவே வந்து, பாடும்போதும், ஊடாக வரும், அந்த கிளாரினெட், இசையும், டாப்டக்கர் என்று சொல்லத்தோன்றினாலும், கோரஸ் குரல்கள் பண்ணும் அராஜகத்தால், எனக்கு கொட்டாவி வருவதை அடக்கமுடியவில்லை.சாரி..ராஜா பேன்ஸ்..

சற்று முன்புரம்யா..

ஓகேங்க் கிளம்புறேன்..என்னது..இன்னும் ஒரு பாட்டு இருக்குதா..அதுதான் கேக்குற மாதிரி இருந்தா சொல்லியிருப்பேன்ல..நத்திங்க் ஸ்பெசல்..

ராஜா ரசிகர்கள் அடித்தாலும் பரவாயில்லை..ஒரு புல் மீல்சை எதிர்ப்பார்த்துப் போன, என் போன்ற ரசிகர்களுக்கு, இலை ஓரத்தில் ஒரு சின்ன ஸ்வீட்டை வைத்துவிட்டுசாரி சார்..அவ்வளவுதான்என்று கவுதம் மேனன் சொன்ன மாதிரி இருக்கிறது..

சரி விடுங்க..இருக்கவே இருக்கு, இளையராஜாவின், 80களின் இசை..

6 comments:

raja said...

உண்மையான விமர்சனம்... ரொம்பவும் எதிர் பார்த்து ஆர்வமா கேட்டு ... அந்த அளவுக்கு திருப்தி தரல.

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் கேட்கவில்லை... நல்ல அலசல்...

Unknown said...

At age of 69, if you can do whatever you are best at now with same stamina, then I will agree with you. Moreover, he is in a business of entertaining people and he is stilling attracting fans. I don't think that is possible for everyone. I loved the album and yes, I am his fan.

பராசக்தி said...

இளையராஜாவின் இசையை ஏதோ ஒரு மூன்றாம்தர சினிமாவை விமர்சிப்பது போல எழுதியிருப்பது வருத்தமளிக்கிறது. அந்த இசையை சமகாலத்தில் இருக்கும் சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதை உணர்த்து கொள்ள ஒரு 100 வருடங்கள் போனபின்பு தான் 'பொக்கிஷம்' என்பது கொண்டாடப்படப்போகிறது. என்ன... அந்த நேரம் நாம் யாவரும் தான் இருக்கமாட்டோமே! அதை இதைப் போலில்லாமல் தனியாக தெரிய வேண்டுமென செய்த இசைக்கோர்ப்பு - இசையை முறையாக கற்றுக் கொண்டவர்களுக்கே புரிகிற விடயம். இளையராஜா ரசிகர்கள் மன்னிக்கவும் என அடிக்கடி
எழுதி உங்கள் மேல் கோபம் வராமல் மாறாக பரிதாபப் படும் படி ஆயிற்றே ராசா அவர்களே!

அவிய்ங்க ராசா said...

நன்றி வலைஞன்
நன்றி திண்டுக்கல் தனபால்
நன்றி ராஜா
நன்றி பராசக்தி, அனானி நண்பர்

சாமன்யர்களுக்கும் புரியும்படி இசையமைத்தவர்தான் இதே இளையராஜா..இசையை முறையாக புரிந்தவருக்குதான் இது புரியும் என்றால், சாரி, சார்..50 ரூபாய் டிக்கெட் எடுத்து பார்ப்பவன் சாமான்யன் தான். மற்றபடி, சினிமா, மூன்றாம்தரமாக ஆவதும், முதல்தரமாக ஆவதும், ரசிகர்களின் கையிலேதான்...இளையராசாவும், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட்டவர் அல்லவே..

Prem S said...

அவ்வளவு சிறப்பு இல்லை பாடல்கள் உங்கள் விமர்சனம் நன்று

Post a Comment