Saturday, 8 September, 2012

வலைப்பதிவர்களுக்கான சங்கம் எப்போது...இரண்டு ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன்..நான் வலைப் பதிவில் வாரத்திற்கு ஒருமுறையாவது எழுதிக்கொண்டிருந்த கொடுமையான காலகட்டம். 100 பதிவு எழுதி, பிரபல பதிவர் என்று என்னை நானே சொல்லி, மற்றவர்களை திகிலூட்டிய காலம். அப்போது சென்னையில் இருந்தேன்(ஒரு சிறுகதை மாதிரி இருக்குல்ல)

சும்மா இருந்தவனை சொரிஞ்சுவிடுற மாதிரி வூட்டுக்காரிதான், “ஏங்க..நீங்க ஏன் வலைப்பதிவர் சந்திப்புக்கெல்லாம் போகக்கூடாதுஎன்று சொரிஞ்சு..இது..கிண்டிவிட்டாள். எனக்கு என்ன பயம்னா..நம்ம அங்க போய், எல்லாரும் ஆட்டோகிராப் வாங்குறேன்னு சொல்லி, பெரிய டிராபிக் ஜாம் ஆகி, அப்புறம் முதல்வர் அலுவலகத்திலிருந்தெல்லாம் நியூஸ் போயி, கமிஷனருக்கும், பப்ளிக்கும் பிரச்சனை ஆகக்கூடாது பாருங்க….நமக்கெல்லாம், பட்டாசு ஆலையில போட்டு கொன்னாலும், போகுற பஸ்ஸூல ஓட்டைய போட்டு தள்ளிவிட்டாலும், பாதுகாவலரே இல்லாத நீச்சல் குளத்துல அமிழ்த்திப் போட்டாலும், டிரெயினுல தீயைக் கிளப்பி விட்டு, கூட்டமா கொன்னாலும், பவர்ஸ்டார் படம், முதல் ஷோ, முதல் டிக்கெட் எடுத்து பார்த்தாலும், பப்ளிக் ரொம்ப முக்கியம். பப்ளிக்கு ஒரு கொடுமைன்னா, அன்னிக்கு டாஸ்மார்க் போய், தண்ணியப் போட்டு, சமூகக்கடமை ஆற்ற தயங்க மாட்டேன்..

அந்த பப்ளிக்குக்கு எதுக்கு சிரமம்னு தயங்கினப்பதான், “அட சும்மாதான் போய் பார்ப்போமேன்னுகிளம்பினேன்..இடம் டிஸ்கவரி பேலஸூன்னு நினைக்கிறேன்..உள்ளே போன, மயான அமைதி..மொத்தம் பதினோரு பேரு, ஐஞ்சு குழுவா உக்கார்ந்து பேசுக்கிட்டு இருக்காய்ங்க..ஒருத்தர் மட்டும் தனியா..எனக்குன்னா அதிர்ச்சின்னா, அதிர்ச்சி அப்படி ஒரு அதிர்ச்சி..ஒருவேளை இடம் மாறி வந்துட்டமோ, அப்படின்னு, அங்குட்டு, அவசரமா, பாத்ரூம் பக்கம் போய்க்க்கிட்டி இருந்த நண்பரை புடிச்சு..

அண்ணே…”

எரிச்சலுடன்..”என்னய்யா..” (பாவம்..அவர் அவசரம் அவருக்கு)

இந்த பதிவர் சந்திப்பு..”

அதெல்லாம் இதுதான்..இனிமே தான் வருவாய்ங்க…”

அப்படின்னு ஓடினார்..சரி, யாருகிட்ட போய் பேசுறதுன்னு பார்த்தா, எல்லாரும், குழு, குழுவா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்க, ஒரே ஆளு மட்டும், தனியாய் உக்கார்ந்ந்திருக்காரே, என்ற அந்த அப்பிராணி நண்பரை செலக்ட் செய்தேன்..

ஹி..ஹி..வணக்கம்ணே..”

மேலேயும், கீழேயும் பார்த்து..

வணக்கம்..” அப்படின்னு அங்குட்டு திரும்பிக்கிட்டார்.. எனக்குன்னா, என்னடா, ஒரு பிரபல பதிவரை, இப்படி கண்டுக்காம இருக்காய்ங்களேன்னு ஒரு கோபம்..ஒருவேளை, முன்னாடியே இன்பார்ம் பண்ணியிருக்கனுமோன்னு ஒரு டவுட்டு வர்ற..

அண்ணே..” (மீண்டும் நான்தான்)

சொல்லுங்க..”

எந்த பிளாக்கு” (அப்படியாவது நம்ம பிளாக்கு என்னன்னு கேப்பாருன்னு ஒரு முயற்சி தான்)

“*********.பிளாக்ஸ்பாட்.காம்..”

..வாவ்..அவரா நீங்க..நல்லா படிச்சிருக்கேனே..ஒரு வருசா நீங்க எழுதுற பதிவு ஒன்னு கூட படிக்காம இருந்ததேயில்லை..”

அப்படியே மேலும் கீழும் பார்த்தார்..ஓவர் ரியாக்ட் பண்ணிட்டமோன்னு எனக்குன்னா டவ்ட்டு..

யோவ்..நான் நேத்துதான்யா பிளாக்கே ஆரம்பிச்சேன்..” அப்படின்னு சொல்ல, எனக்கு அடிவயிறு கலங்கி, ஆஹா..எஸ்கேப் ஆகிரு கைபுள்ளன்னு ஓடிப் போய் சுவரு பக்கத்துல உக்கார்ந்துகிட்டேன்..

அப்புறம்..நாலு, ஐஞ்சு பேரு வந்தாய்ங்க..அவிங்களுக்குள்ள பேசிக்கிட்டாய்ங்க..கடைசியா, நம்ம உண்மைத்தமிழனோ, கேபிள் சங்கர் அண்ணனோ..

ம்..எல்லாரும்..உங்கள இண்டிரியூஸ் பண்ணிக்கங்க..”

அப்படின்னு சொல்ல..எனக்குவாவ்..” நம்மள யாருக்கும் தெரியாதுனால தான், இப்படி அமைதியா இருக்காய்ங்க..நம்ம பிளாக்கை சொல்லிட்டோம்..ஆய்ஞ்சிருவாய்ங்க..கையெழுத்து போடுறதுக்கு இப்பவே ரெடி ஆகிக்கணும்னு சொல்லி தயாரா உக்கார்ந்தேன்..ஒவ்வொருவரும் தங்கள் பெயர் சொல்ல, என் முறை வந்ததுஇப்ப பாருங்க கைதட்டல அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு..

நான் ராசா..அவிங்க பிளாக் வைச்சிருக்கேன்..”

அப்படிங்குறேன்..”வைச்சிட்டு போ..அதுக்கென்ன..” அப்படிங்குற மாதிரி பயபுள்ளங்க பார்க்குறாய்ங்க..ஒருவேளை, யாருக்கும் கேக்கலையோ, வால்யூம் ஏத்தனுமோங்குற டவுட்டு..இன்னும் சத்தமா..

நான் ராசா..அவிங்க பிளாக் வைச்சிருக்கேன்..”

டக்குன்னு பக்கத்துல உக்கார்ந்திருந்த் பயபுள்ள சொல்லுறாப்புல,

முடிச்சிட்டிங்கல்ல..மைக்க கொடுங்க..”

எனக்குனா..அம்புட்டு அசிங்கமா போச்சு..அப்ப நான் பிரபலபதிவர் இல்லையா..இத்தனை நாளா நம்மளாதான் பார்ம் ஆகிக்கிட்டமா அப்படின்னு ஒரு அதிர்ச்சி..இதுக்குமேல இந்த இடத்துல ஒரு நிமிஷம் இருந்தா, நம்மளுக்கு மருவாதை இருக்காது, அப்படிங்குறதுனால, எந்திருச்சு போலாம்னு பார்த்தா, சுவத்து பக்கத்தில வேற உக்கார வைச்சிட்டாய்ங்களா..அந்தப் பக்கம் வழி இல்லை..

அப்புறம். அங்க இருந்தவய்ங்ககிட்ட கெஞ்சு கூத்தாடி..”அண்ணே..ஒன்னுக்கு போகணும்அப்படின்னு சொல்லிஒட்டம், ஓட ஆரம்பிச்சு, பக்கத்து டீ கடையில வந்து நின்னேன்..நின்னு, “அண்ணே..ஒரு டீய போடுங்கஅப்படின்னு சொல்ல, டீ போடுறவரு..”தம்பி..உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேஅப்படின்னாரு..

ஆஹா..இவரும் வலைப்பதிவரா இருப்பரோ..அட..நம்ம வலைப்பதிவு டீக்கடைக்காரர் வரைக்கும் ரீச் ஆகியிருக்கேன்னு ஆச்சரியம் வேற..

ஆமாண்ணே..நான் அவிங்கன்னு ஒரு பிளாக்கு நடத்திட்டு வர்றேன்..இந்த உலகத்துல நடக்குற சமுகக்கொடுமைகள, தட்டி கேட்டு, ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கிற நோக்கத்துல, இந்த பிளாக் ஆரம்பிச்சு..”
அப்படிங்குறேன்..

தம்பி..தம்பி..ஒன்னுமே புரியலயே..பிளாக்குங்குறீங்க..அவிங்கக்குறீங்க..அப்படின்னா என்ன தம்பி..நான் திருவல்லிக்கேணியில இருக்குறப்ப, பிரியாணி கடையில வந்து சாப்பிட்டு, காசு கொடுக்க மறந்துட்டு, கடைக்காரர்கிட்ட திட்டு வாங்குனீல்ல..அப்ப கூட..நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணி…”

அதுண்ணே..அது வேற ஆளா இருக்கும்..எனக்கு கொஞ்சம் அர்ஜெண்டா ஒன்னுக்கு வருது..”

அப்படின்னு ஓட ஆரம்பிச்சவன், வீட்டுக்கு வந்துதான் நின்னேன்..என் பொண்டாட்டி, ஏற்கனவே நக்கல் புடிச்சவ..இப்ப பதிவர் சந்திப்புக்கெல்லாம் போய்ட்டு வந்துருக்கேன்..சொல்லவா வேணும்..

என்னங்க..பதிவர் சந்திப்புக்கெல்லாம் போய்கிட்டு வந்திருப்பீங்க..ஒரு மாலையை காணாம்..துண்டை காணாம்..சால்வைய காணோம்…”

அது..கொடுத்தாய்ங்க..அதெல்லாம் குஜராத் வளர்ச்சி நிதிக்கு கொடுத்துட்டேன்..”

அது ஏங்க குஜராத்துக்கு கொடுத்தீங்க..”

அங்கதான் மோடி, குஜராத்தை வளர்க்குறதுக்கு ரொம்ப கஷ்டப்படுறாராம்..”

ஒருவேளை நம்பிட்டாளோ..

சரி..சாப்பிடுங்க..” அப்படின்னா..
சாப்பிட்டுக்கிட்டே இருக்கும்போது..

ஏங்க..உங்களுக்குத்தான் பதிவுலகத்துல நிறைய பேர் தெரியுமுல்ல..(....)..என்னையும் பதிவர் சங்கத்துல சேர்த்து விடக்கூடாது..”

எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை..அவளே ஆரம்பித்தாள்..

ஆமா..மறந்துட்டேன்..பதிவர் சங்கம் ஆரம்பிச்சுட்டீங்கல்ல

ஏண்ணே..ஆரம்பிச்சிருவீங்கல்ல

15 comments:

Mattai Oorukai said...

http://mattaioorukai.blogspot.com/2012/09/blog-post.html

பழனி.கந்தசாமி said...

பதிவர் சங்கம் கண்டீப்பா ஆரம்பிச்சுடறோம். ஆரம்ப விழாவை எங்க வைக்கறதுன்னுதான் சண்டை. வாஷிங்க்டனிலா இல்லை லண்டனிலா என்பதில்தான் சிக்கல். நீங்க ஒரு எடத்த சொல்லுங்களேன்?

நிலவன்பன் said...

அவ்வ்வ்! செம!

காப்பிகாரன் said...

ஹிஹிஹி சூப்பர் ராசா

விச்சு said...

பதிவர் சங்கத்தினை நீங்களே ஆரம்பியுங்களேன்.

Anonymous said...

Good comedy sense.

வவ்வால் said...

//ஏண்ணே..ஆரம்பிச்சிருவீங்கல்ல…//

அல்லோ சார்,

சங்கம்,குழுமம் எல்லாம் ஆரம்பிச்சு ரொம்ப நாளா ஓடிக்கிட்டு இருக்கு, 2007இல் ஆரம்பிச்சு எல்லாம் ஓடிட்டாங்க நான் தான் அநாதைய விட்டுப்போன சங்கத்தை கட்டிக்காப்பாத்திக்கிட்டு இருக்கேன், விரைவில் முதன் முறையாக ஒரு மாபெரும் மாநாடு நடத்தவுள்ளோம் அதற்கு 1001 ரூவாய் விருப்பமிருந்தால் மொய் அனுப்பவும் , அடுத்தவாரம் ஒபாமாவை இது குறித்து சந்திக்கவுள்ளேன் விரைவில் மற்ற விபரம் தெரிவிக்கிறேன்!

இப்படிக்கு ,

வவ்வால்,
தலைவர், செயலாளர், பொருளாலர், மற்றும் உறுப்பினர்,

அகில உலக தமிழ்ப்பதிவர் பேரவை,
உலகம்,
பால்வெளி மண்டலம்,
பிரபஞ்சம்.

Kalidoss Murugaiya said...

நெசமாத்தான் கேக்குறேன்.நீங்களே ஒரு பதிவர் சங்கம் ஆரம்பிக்க ஏற்ப்பாடு பண்ணுங்களேன். முட்டுக் கொடுக்க நாங்க இருக்கோம்.

அவிய்ங்க ராசா said...

நன்றி காளிதாஸ், விச்சு..ஊருப்பக்கம் வந்தா, முதல் வேலையே அதுதானே..

நன்றி மட்டை ஊறுகாய்..))))
நன்றி நிலவன்பன்...
நன்றி கந்தசாமி சார்..ஒபாமா வெள்ளைமாளிகை வசதியா..))
நன்றி காப்பிகாரன்..அனானி,
நன்றி வவ்வால் அண்ணே..ஒபாமாட்டே பேசுறப்ப, அப்படியே, நம்ம வளர்ச்சி நிதி பத்தி மறக்காம பேசிடுங்க...))

Babu said...

Neenga US level-la famous anne..naama US-laya pathivar sangam aarambikkalam..neenga thaan thalaivar ! Enna solreenga?

bandhu said...

//Neenga US level-la famous anne..naama US-laya pathivar sangam aarambikkalam..neenga thaan thalaivar ! Enna solreenga?//
அது தான் சரி. ஆரம்பிச்சுடுங்கண்ணே. நான் உங்க அகில உலக ரசிகர் மன்றத்தலைவர் ஆகிடறேன். உங்களோட ஒவ்வொரு பதிவு ரிலீஸ் பண்ணும்போதும் போஸ்டர்லாம் போட்டு கலக்கிடலாம். அதுக்கான செலவெல்லாம் வேணாம்னாலும் நீங்க தான் பண்ணுவேன்னு அடம் பிடிக்க நினக்கறதால அந்த செலவு மட்டும் உங்களோடதா இருக்கட்டும்!

Babu said...

Maavatta seyalalar pathavai enakku thann..solliten !

bandhu said...

//Maavatta seyalalar pathavai enakku thann..solliten !//

சரி சரி..நமக்குள்ள எதுக்கு தகராறு? அண்ணனா பாத்து எவ்வளவு குடுத்தாலும் நமக்குள்ள 50-50 . சரியா?

அவிய்ங்க ராசா said...

பாபு, பந்து..வருகைக்கு நன்றி...(எப்படி எஸ்கேப் ஆனேன் பார்த்தீங்களா..))))

Kollywood movie gallery said...

ha ha .. nalla seithi.. arumaiyana comedy..

Post a Comment