Saturday 9 June, 2012

புதுப்பேட்டை எனும் உலகத்திரைப்படம்




பொழுது போகாதபோது, நேரத்தை தின்பதற்கு ஏதாவது படங்கள் பார்ப்பதுண்டு. இன்று அப்படி ஒருபொழுதில், “புதுப்பேட்டைபடத்தை திரும்பவும் பார்க்க நேர்ந்தது. இந்த படம் முதல் படம், முதல் ஷோ, பார்த்துவிட்டு..”சே..என்ன படம்டா..உலகமே கொண்டாடப்போகுது பாருஎன்று மனதில் எண்ணிக்கொண்டு வெளியே வந்தால், வந்த முதல் கமெண்டே, அந்த ஆவலுக்கு ஆப்பு அடித்தது..”ஐய்யோ..கலீஸு படம்டா..”. மிகையான வன்முறை மட்டுமே, இந்தப்படத்தில் நான் பார்த்த மைனஸ்.ஆனால், இந்த மாதிரியான கதைகளை வன்முறையில்லாமல் எப்படி எடுப்பது என்றும் தெரியவில்லை. கத்தியை எடுத்து, கழுத்தை தழுவிக்கொடுப்பது போல் எடுத்திருந்தால், ஒருவேளைஉலகப்படமாகஆயிருக்குமோ என்ற எண்ணம் வருகிறது.

என்னைப் பொறுத்தவரை, புதுப்பேட்டை, ஒருவகையில் ஆங்கிலப்படத்துக்கு நிகரான படமே. செல்வராகவனுக்கு வாய்ப்புகிடைத்தால், இதுபோன்ற பல தரமான படங்களை எடுக்கமுடியும். ஆனால்..எங்கே..இதுபோன்ற படங்களை ஓடவைக்காவிட்டால், அவரும், நாலு குத்துப்பாட்டு, மசாலா என்று செல்லவேண்டியதுதான். தரமான படங்களை எடுக்கும் பொறுப்பு, எவ்வளவு டைரக்டர்களுக்கு இருக்கிறதோ, அதே பொறுப்பு, பார்க்கும் நமக்கும் இருக்கவேண்டும். இல்லையென்றாம், தமிழ்திரையுலகமும், கூடிய சீக்கிரம், தெலுங்கு திரையுலகம் மாதிரி, தொடையைத் தட்டிக்கொண்டுஅர்ரேரே…” என்று மீசையை முறுக்கித் திரியும் மசாலா வாசத்துக்குள் மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

இந்தப் படத்தைப் பார்த்தபின்பு, செல்வராகவனுக்கு, “யுவன் சங்கர் ராஜாஎவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது..பிண்ணனி இசையில் அப்பாவை மிஞ்சியிருப்பார், இந்தப்படத்தில். குறிப்பாகநெருப்பு வானில்என்ற பாடலின் மேக்கிங்கும், படத்தொகுப்பும், மற்ற படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி கொடுத்திருக்கும். இந்தப் படத்தை செல்வராகவன் காட்டிய குறியீடுகள், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு சரியான பாடமாக இருக்கும். உதாரணமாக, எதிர்கூட்ட்த்தில் மாட்டிக்கொண்டு, கிழிபட்டு, ஒரு கணத்தில் வெறியாகி, எதிரியின் தம்பியை ஒரே குத்தில் போட்டுத்தள்ளி, திமிரும் தனுஷை, ஒரு மீன்பாடி வண்டியில் ஏற்றிக் கொண்டு போகும்போது, பின்னால் உதிக்கும் சூரியன், என்ற குறியீட்டை என்னாலே விளங்கிகொள்ள முடிகிறது என்றால், திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு வேறு என்ன வேண்டும்.
தன் கட்சிக்காரனை சென்னைப்பாஷையில் பயங்கரமாக திட்டிவிட்டு திரை விலகியவுடன்செந்தமிழ் பேசும் கவிஞன் நான்என்று சொல்லும் அரசியல்வாதி சிரிக்கவைத்தாலும், பல எண்ணங்களை விதைக்கிறது.

தமிழில் எனக்கு பிடித்த நடிகர் என்று கேட்டால் தயங்காமல்தனுஷ்என்று சொல்லுவேன். “கொக்கிகுமார் என்ற கேரக்டருக்கு இவரா என்று ஐயம் இருந்தாலும், தன்னுடைய உடல் மொழியாலும், அநாசயமான நடிப்பாலும் பல எல்லைகளைத் தொட்டிருப்பார். குறிப்பாகதொண்டையில் ஆபிரேசன், காசு கொடுஎன்று பிச்சை எடுப்பதாகட்டும், ஆக்சன் காட்சிகளில் காட்டும் ஆவேசமாகட்டும், குள்ளநரித்தனமாக, சோனியா அகர்வாலை மணப்பதாகட்டும், கடைசியில் பக்கா அரசியல்வாதியாக மாறுவதாகட்டும், கிடைத்த பாலில் எல்லாம், நடிப்பு சிக்சர் அடித்திருப்பார். இந்தப் படத்திற்கே, அவருக்கு தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும், பிண்ணனி இசை, இயக்கும், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று அனைத்தும் அருமையாக அமைந்திருது,, இந்தப் படத்திற்கு, ஒரு தேசிய விருது கொடுக்காதது, என்னைப் பொறுத்தவரைக்கும், “துரோகம்அல்லது, “ஏமாற்றம்

இரண்டரை மணிநேரம் வடசென்னையில், ஒரு ரவுடிகும்பலில் வாழ்ந்த, அனுபவத்தை இந்தப்படம் தருகிறது. ரவுடியிசம், கோஷ்டிமோதல், அரசியல் பிண்ணனி என்று ரவுடியசத்தை, இதுவரைக்கும் இவ்வளவு அருகாமையில் சென்று யாரும் படம்பிடித்ததாய் எனக்கு நினைவில்லை.

செல்வராகவன் என்ற இயக்குநர் மேல்சைக்கோத்தனாமாகஎடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுமேல் எனக்கு உடன்பாடு இல்லை. யாரிடத்தில் தான் சைக்கோத்தனம் இல்லை. தன்னைக் கடிக்கும், எறும்பை, விதவிதமாக சித்ரவதை செய்து கொல்லும், வதைக்கு என்ன பெயர். நண்பனோ, தெரிந்தவர்களோ, கஷ்டப்படும்போது, “சாவட்டும்டாஎன்று உள்ளூர மகிழும் குரூரத்திற்கு என்ன பெயர். அதைத்தான், செல்வராகவன் காண்பிக்கிறார். ஆனாலும், செல்வராகவன் கிளைமாக்ஸில் சுபமாக காட்டியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தால், கொக்கிகுமாரை, இரண்டுமுறை அமைச்சர் என்று ஸ்லைடு போட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும், “கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்என்ற மரபை எங்கள் டைரக்டர் உடைத்துவிட்டார் என்று வேணுமென்றால், செல்வராகவன் ரசிகர்கள் சந்தோசப்பட்டு கொள்ளலாம். ஆனால், அதே வேளையில், ரவுடியானால், அடுத்து அமைச்சராகலாம்என்று தவறான சிந்தனையை விதைத்தற்கு, செல்வாவுக்கு, ஒரு குட்டு

மற்றபடி, தமிழ்படத்திற்குரிய பல மரபுகளை, உடைத்த வகையில், என்னைப் பொறுத்தவரைக்கும், “புதுப்பேட்டைஉலகப்படமே.

9 comments:

ANaND said...

வணக்கம் நண்பா .....

எனக்கும் இந்த படம் ரொம்ம்ப புடிச்சுது

படம் பாத்துட்டு வெளிய வந்ததும் என் friend கிட்ட சொன்னேன், செம படம் மச்சி ... அவன் என்னை மேலயும் கீழையும் பாத்தான்.. அப்ப மூடுன வாய்தான்...

Unknown said...

எனக்கும் மிகவும் பிடித்த படம், ஆனால் அதை வெளியே சொல்லமுடியாத அளவுக்கு நண்பர்களின் கொலைவெறி பார்வை இருந்தது வேறு விசயம் :-)

ராஜ் said...

உண்மை தாங்க. என்னோட பிரண்ட் பாலன்ரவனுக்கு சென்னைல ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம். அது ஒரு காதல் திருமணம், வீட்டுக்கு தெரியாது, ரெண்டு பேரும் வெவ்வேறு காஸ்ட். அவன் பெங்களுர்ல ஒரு சாப்ட்வேர் கம்பனில டீம் லீடரா அப்போ இருந்தான். இது நடந்தது மூனு வருஷம் முன்னாடி. பெங்களுர்ல இருந்து அவன் வந்த டாக்ஸி கார் டிரைவர் பேரு முனிஸ். காதலர்களை சேர்த்து வைக்கறது முனிஸ்கு பிடித்த விஷயம். ஒரு ப்ரீ டைம்ல முனிஸ் என்கிட்ட கேட்டான் உங்களுக்கு தனுஸ் படத்துல எந்த படம் பிடிக்கும்னான்? புதுபேட்டை பிடிக்கும்னு நானும் வடிவேல் ரேஞ்சிக்கு அப்பாவியா சொல்லிட்டேன். ஆனா மூனு வருஷம் ஆகியும் அவனுங்களால நான் படுற கஷ்டம் ரொம்ப அதிகம்ங்க. உண்மைலேயே கொக்கி குமாரா தனுஸ் நடிச்சப்ப கூட அவ்ளோ கஷ்ட பட்டு இருக்க மாட்டாரு.

ராஜ் said...

தனுஷ் இந்த படத்துல பண்ணுனது ரொம்ப ரொம்ப ஓவர் ஆக்டிங். நல்லா ஓடி இருக்க வேண்டிய படம்.. படத்துல மொக்கை நடிகரை போட்டு செல்வா படத்தையே வேஸ்ட் பண்ணிட்டாரு...

அவிய்ங்க ராசா said...

நன்றி ஆனந்த்
நன்றி இரவுவானம்
நன்றி ராஜ்..எனக்கு ஒன்னும் புரியலை
நன்றி ராஜ்..என்னைப் பொறுத்தவரை தனுஷ்ஷின் நடிப்பு மிகையில்லாமல் இருந்தது..

Unknown said...

இந்த படத்தில் வரும் "ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
ஒவ்வொரு வரியும் உண்மையான வரிகள்.

Thuvarakan said...

////செல்வராகவன் என்ற இயக்குநர் மேல் “சைக்கோத்தனாமாக” எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுமேல் எனக்கு உடன்பாடு இல்லை. யாரிடத்தில் தான் சைக்கோத்தனம் இல்லை. தன்னைக் கடிக்கும், எறும்பை, விதவிதமாக சித்ரவதை செய்து கொல்லும், வதைக்கு என்ன பெயர். நண்பனோ, தெரிந்தவர்களோ, கஷ்டப்படும்போது, “சாவட்டும்டா” என்று உள்ளூர மகிழும் குரூரத்திற்கு என்ன பெயர். அதைத்தான், செல்வராகவன் காண்பிக்கிறார். ////

cruelty is always a hidden object...

லேபில் சங்கர் said...

என்னுடைய புக் லிஸ்டில் இந்த படம் இருந்தது. இம்பரசிவான இயக்குனர் என்பது மட்டுமில்லாமல் இவருடைய திறமையை ஏற்கனவே நான் கன்பர்ம் செய்து வைத்திருந்ததால் சாலிடான,கிரெடிபிலிட்டி உடன் இந்த படத்திற்கு சென்றேன்.

கண்ட்ரோல்டான மேக்கிங் இருந்தாலும், சில இடங்களில் லெதார்ஜிக்காக இருண்டது. அதே சமயம் ஹேண்டஹெல்ட் கேமரா மூலமே இந்த படம் இயக்கப்பட்டிருப்பது ஒரு புதிய விஷயம். சில அரசியல் நுணுக்கங்களை ஆப்டாய் இன்சர்ட் செய்து செகண்ட் ஹாப்ஃஐ பெப்பாக மாற்றி படத்தையே லைட்டினிங் ஸ்பீட் உடன் நகர்த்தியது சிறப்பு.

படம் நல்லா இருக்குன்னு சொல்லலை, ஆனால் நல்லா இருந்திருந்தா நல்லா இருக்குமே என்றுதான் நினைக்கிறேன்.

Unknown said...

Yuvan sankar raja ippadathiruku mikavum mukkiyana napar nanparkale konjam kavanikavum. Padathai vida padalkal mikavum yosika vaikirathu mukkiyamaka ore naalil paadal

Post a Comment