Friday 1 June, 2012

பவர் ஸ்டார், நித்தியானந்தா, பெட்ரோலும், பின்ன ஞானும்


இந்த வாரம் வந்த மூன்று செய்திகள் என் கவனத்தை கவர்ந்தன. முதலில், தமிழகத்தின் குழந்தை பவர்ஸ்டார், டாக்டர், சீனிவாசனை, கூப்பிட்டு வைத்த அசிங்கப்படுத்திய நீயா நானா, கோபிநாத்.

இதுவரை பவர்ஸ்டாரை, குழந்தை என்றுதான் நினைத்திருந்தேன்...ஆனால் தான் ஒரு மீசை வைத்த பச்சைக்குழந்தை என்று நிரூபித்தார். கோபிநாத் ஏமாற்றி கோல் போடும்போதெல்லாம் லாவகமாக சிரித்துக்கொண்டே, கோல்கீப்பர் மாதிரி தடுத்த அருமையை என்ன சொல்ல..
ஆனால் கோபிநாத் ஏதோ, புதிதாய் இதை செய்வது மாதிரி பதிவர்கள் சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை. நீயா நானா முழுவதும் இதைத்தானே செய்கிறார். யாராவது ஒரு ஏப்பை
சாப்பை கிடைத்துவிட்டால் போதும், அவரை கேள்வி, மேல் கேள்வி எழுப்பி, அவரைப் போதும்போதுமென அவமானப்படுத்திவிட்டு, தன் அறிவுஜீவித்தனத்தை காட்டிவிட்டு, கடைசியாக அவருக்கு
ஒரு டி.வியை கொடுத்துவிடுவதுதானே(கிடைக்குதோ இல்லையோ) நடைமுறை.


பவர்ஸ்டார், கொள்ளை, கொள்ளையாய் அடித்து வீட்டுக்குள் பதுக்கிவைத்தாற்போன்று கேட்ட கேள்விகள் எல்லாம் அவ்வளவும் அமெச்சூர்தனத்தின் உச்சம்..பாவம் பச்சக்குழந்தை, அதுவே, ரெண்டு மூணு படம் நடிச்சிக்கிட்டு அப்பிராணியாய் காலம் தள்ளுது..அதப்போய்...பச்சக்குழந்தை, பவர்ஸ்டார் தற்கொலைப்படை
சார்பாக, கோபிநாத்துக்கு கண்டனமோ, கண்டணம்டோய்..


அடுத்து என்னை கவர்ந்தது, நம்ம சி.டி புகழ் நித்தியானந்தா, நடத்திய
"ஆதினம் எனக்குதாண்டி" பட வெளியீட்டு விழா..எனக்கு என்ன கடுப்புனா, ஏதோ, மதுரை ஆதினம், தமிழ்தொண்டாற்றி,
சோர்ந்து போன மாதிரியும், நித்தியானந்தா வந்து அப்படியே ஆதினத்தை அப்படியே கெடுத்துட்ட மாதிரியும் என்னா பில்டப்பு..பாவம் நித்தியானந்தாவே, ரெண்டு மாத்திரையப் போட்டமோ,
ஒரு ஆட்டத்தைப் போட்டமா, நாலு சி.டியப் போட்டமோன்னு காலந்தள்ளிக்கிட்டு இருக்கு..


அந்தப்பக்கம், நம்ம ஆதினம் பதவியற்றதினத்தன்னைக்கு கேட்ட இங்கிலீபீச கேட்டா வெள்ளைக்காரன் என்னைக்கோ தற்கொலை பண்ணிக்கிட்டு இருப்பான். ஆனாலும், இம்புட்டையும் செஞ்சுட்டு, கள்ளம் கபடமில்லாம, சிரிக்காரய்யா, தமிழகத்தின் அடுத்த பச்சக்குழந்தை,
நித்தியானந்தா...அதப்போயி..ச்சே...சமீபத்தில் பேஸ்புக்கில் பார்த்த கமெண்டுதான் செம காமெடி..

"கஞ்சிக்கு உழைச்சா, மேதினம்..ரஞ்சிக்கு உழைச்சா ஆதினம்.."

இதையெல்லாம் விட செம கடுப்பு என்ன தெரியுமா.."ஐய்யய்யோ..பெட்ரோல் விலை ஏறிடுச்சு" ன்னு கூப்பாடு போட்டதுதான்..ஆமா தெரியாமத்தான் கேக்குறேன்..விலை ஏறிடுச்சு..நம்மால என்ன செய்ய முடிஞ்சுச்சு..இல்ல நம்மால என்ன செய்ய முடிஞ்சுச்சுன்னு கேக்குறேன்..
"இப்படி ஏத்திட்டாய்ங்களே" அப்படின்னு புலம்பிக்கிட்டு, கூட 7 ரூபாயை கொடுத்து பெட்ரோல் போடலாமுன்னு அதுக்கும் வைச்சாய்ங்க பாருங்க ஆப்பு..எல்லா பங்கும் சொல்லிவைச்ச மாதிரி, அடைக்க நம்மாளுங்க, ரேஷன் கடைக்கு அப்புறம், க்யூவுல நின்னதுதான் செம கூத்து.
அதுவும்..தண்ணி புடிக்கிற மாதிரி, ஒரு ஆளு, குடத்தை எல்லாம் தூக்கிட்டு வர்றாருண்ணே.. கடுப்பாகி, "ஏன் சார்..இப்படி..முதல்ல, வாகனத்துக்கு போடட்டும் சார்" ன்னு சொன்னா, சொல்லுறாரு
பாருங்க்ண்ணே டயலாக்கு.."தம்பி..நான் ஒரு மாசத்துக்கு முன்னாடியே ரிசர்வ் பண்ணிட்டேன்.." அடங்கொன்னியா, தட்டுப்பாடு வந்தே 3 நாளுதானய்யா ஆகுது..சத்யம் தியேட்டருக்கு மாதிரி,
இதுக்கும் ரிசர்வ் பண்ணிட்டாய்ங்களே..நல்லா இருங்கடேய்...


இப்ப பாருங்க...அப்படியே நிலைமை தலைகீழ்.."பெட்ரோல் விலையே ஏத்தாதே" என்ற போராட்டம் போய் "யோவ்..நீ 10 ரூபா வேணுன்னா ஏத்திக்க..தயவுசெய்து, பெட்ரோலை கொடுத்திருய்யா" என்று கதறும் நிலைக்கு கொண்டுவந்த ராஜதந்திரத்தை.."நீ செத்தாலும் பரவாயில்லை.உன் நெத்தியில் உள்ள ஒரு ரூபா எனக்குத்தாண்டி" என்று எங்கு பார்த்தாலும்
காசு, காசுதான்..இந்த காசவைச்சி என்னதான்யா..ஐய்யய்யோ..என் சட்டையில உள்ள 10 ரூபாயைக் காணோம்ணே..யாராவது பார்த்தீங்காளா..

வழக்கம்போல, புலம்பிவிட்டு, இன்னும் 3 வருடங்கள் கழித்து, ஓட்டுப்போடுற க்யூவுல நின்னு, "இரட்டை இலைக்கோ", "உதயசூர்யனுக்கோ" குத்தப்போறோம், எல்லாத்தையும் மறந்துட்டு..இல்ல..
யாராவது, ஆயிரம் ரூபாய் கொடுத்தா, புல்ல்லா தண்ணியப்போட்டுட்டு.."டே..எ..ங்க.டா..அந்த...
ஓட்டு..ச்..சீட்டு.." என்று காசு கொடுத்தவனுக்கு, ஓட்டைப் போடப்போறோம்..நம்மளுக்கெல்லாம்
விலையேற்றத்தை பத்தி பேச தகுதி இருக்குங்குறீங்க..???


அதையும் மீறி கேட்டா, டாலருக்கு நிகரா ரூபாய் மதிப்பு குறையுது அதனாலதான் ஏத்துறோம்ங்குறாய்ங்க..
அடடா..அப்ப ஒரே ஒரே கேள்வி..ரூபாய் மதிப்பு குறையுறப்பெல்லாம், பெட்ரோல் விலைய ஏத்துறீங்களே..
அதெப்படிங்கணா, ரூபாய் மதிப்பு ஏறுறப்ப, பெட்ரோல் விலை அப்படியே நட்டகுத்தலா
நிக்குது..சர்வேதச மார்க்கெட்டுங்கள பாரேன்ன்னு எங்களுக்கு புரியாத மொழியெல்லாம் பேசுறீங்களே..
அதையெல்லாம் தாண்டி, விலையேற்றத்த கட்டுப்பாட்டுக்குள்ள வைக்குணும்தானய்யா உங்களுக்கு
ஓட்டுப்போடுறோம்..அதப்பண்ணமுடியலைன்னா..அப்புறம்..(வேணாம்யா..வூட்டுக்கு ஆட்டோ, அனுப்புறாதீங்க..
ஐய்..அனுப்பமுடியாதே..பெட்ரோலுக்கு எங்க போவீங்க..)


விலையேற்றத்தை எதிர்த்து, அம்மா போராட்டம் அறிவிக்குறது, அய்யா, "கசப்புடன் கூட்டணியில் தொடர்கிறோம்" ன்னு சொல்லுவதும், தமிழ்நாட்டில, காமெடிப்படமெல்லாம்
பிச்சிக்கிட்டு ஓடுதுடோய்...

3 comments:

MaduraiGovindaraj said...

இப்ப பாருங்க...அப்படியே நிலைமை தலைகீழ்.."பெட்ரோல் விலையே ஏத்தாதே" என்ற போராட்டம் போய் "யோவ்..நீ 10 ரூபா வேணுன்னா ஏத்திக்க..தயவுசெய்து, பெட்ரோலை கொடுத்திருய்யா" என்று கதறும் நிலைக்கு கொண்டுவந்த ராஜதந்திரத்தை.."நீ செத்தாலும் பரவாயில்லை.உன் நெத்தியில் உள்ள ஒரு ரூபா எனக்குத்தாண்டி" என்று எங்கு பார்த்தாலும்
காசு, காசுதான்..இந்த காசவைச்சி என்னதான்யா..ஐய்யய்யோ..என் சட்டையில உள்ள 10 ரூபாயைக் காணோம்ணே..யாராவது பார்த்தீங்காளா..
வழக்கம்போல, புலம்பிவிட்டு, இன்னும் 3 வருடங்கள் கழித்து, ஓட்டுப்போடுற க்யூவுல நின்னு, "இரட்டை இலைக்கோ", "உதயசூர்யனுக்கோ" குத்தப்போறோம், எல்லாத்தையும் மறந்துட்டு..இல்ல..
யாராவது, ஆயிரம் ரூபாய் கொடுத்தா, புல்ல்லா தண்ணியப்போட்டுட்டு.."டே..எ..ங்க.டா..அந்த...
ஓட்டு..ச்..சீட்டு.." என்று காசு கொடுத்தவனுக்கு, ஓட்டைப் போடப்போறோம்..நம்மளுக்கெல்லாம்
விலையேற்றத்தை பத்தி பேச தகுதி இருக்குங்குறீங்க..??? !!!!!!!!!!!!!!!!!

Thuvarakan said...

///நம்மளுக்கெல்லாம்
விலையேற்றத்தை பத்தி பேச தகுதி இருக்குங்குறீங்க..???//

top line.....

YUVA said...

sema comedy :) i was laughing without control :)

Post a Comment