Monday, 2 January 2012

தனுஷின் கொலைவெறி – சிம்புவின் ஆல்பம் : எது பெஸ்ட்




சின்னபுள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுஎன்று ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி உள்ளது. அந்த பழமொழியில்லாம் இனிமேல் எடுபடாது போலிருக்கிறதுசின்னப்பிள்ளைகள் சேர்ந்து இசையமைத்துப் பாடிய கொலைவெறி பாடல் இந்த அளவுக்கு ஹிட் ஆகும் என்று அவர்களே எண்ணியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஹிட்டோ, ஹிட்.. இங்கு ஒரு அமெரிக்கரை சந்தித்த போது, அவர் ஒரு சிறிய தாளில் உள்ள ஒன்றை காண்பித்து, என்னவென்று விசாரித்தார். அதில் இருந்த வார்த்தைவொய் திஸ் கொலைவெறி”. 20 மில்லியன் ஹிட்ஸ் என்றால் சும்மா இல்லை. எல்லாவற்றையும் ஈர்த்த இந்த பாடலை இப்போது கேட்கவே கடுப்பாக இருக்கிறது..இனிப்பாக இருக்கிறது என்று அல்வாவை எவ்வளவுதான் சாப்பிடமுடியும். ஒரு கட்டத்தில் திகட்டுமல்லவா..அந்த அளவுக்கு கொலைவெறி ஆயிருக்கிறது..

ஆனாலும் ஒரு சந்தோசம். என்னதான், பாடல் வரிகளைப் பற்றி சர்ச்சைகள் எழுந்தாலும், ஒரு தமிழ்வார்த்தை, தமிழன் உலகளாவிய பெருமை அடைந்ததில் நமக்கும் ஒரு பெருமிதம். ஆனால் தனுஷ்க்கு இவ்வளவு பெருமையைப் பார்த்து, நகத்தை..சாரி..விரலைக் கடித்துக் கொண்டு ஒருவர் அமர்ந்திருப்பார் எனில், அவர்தான்எஸ்.டி.ஆர்என்று அவரே அழைத்துக்கொள்ளும் சிம்பு.

போட்டியாக அமைந்த அவருடைய ஆல்பத்தையும் பார்க்கநேர்ந்தது. இனிமேல், எது பெஸ்ட் என்ற விமர்சனம்

கொலைவெறி பாடலின் முக்கியத்துவமே அதனுடைய எளிமை..ஒரு ரெக்கார்டிங்க் தியேட்டருக்குள் ஒரு பாடலை இயக்குவதைப் பற்றி அவ்வளவு கேசுவலாக, ஜாலியாக, பெப்பாக எடுத்திருப்பார்கள். அங்கு நடக்கும், சிறு, சிறு கேலிகள், கிண்டல்கள், விளையாட்டுக்கள் எல்லாம் அவ்வளவு, இயல்பு..ஆனால் சிம்பு ஆல்பத்தில், அது மிஸ்ஸிங்க். ஆனால் சிம்புவையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. கொஞ்சம் ஸ்டைலிசாகவும், அதே நேரத்தில் மேக்கிங்கிலும், ஒரு லெவல் மேலே தான் இந்த பாடலை அமைத்துள்ளார். ஆனால், காதலை பற்றி அமைத்துள்ள பாடல் என்று, அவரே ஆடிக்கொண்டியிருப்பது சற்று எரிச்சலை தருகிறது. ஆனால், இது ஒருப்ரிவியூஎன்பதால் இன்னும் கொஞ்ச காலம் வெயிட் பண்ணலாம்.



அடுத்து கொலைவெறி பாடல், ஏறக்குறைய 99% ஆங்கிலத்தில் அமைந்தது. இந்த பாடல், இவ்வளவு ஹிட் ஆவதற்கு, இதுவும் ஒரு காரணம். ஆனால் சிம்புவின் ஆல்பத்தில் காதல் பற்றி அனைத்து மொழிகளிலும் வருவதாய் அமைந்துள்ளது. இது எவ்வளவுக்கு மக்கள் மனதில் அமரும் என்பதில் சந்தேகம்.

ஆனால் மேக்கிங்கை பொறுத்தவரை, டெக்னிக்கலாக, சிம்புவின் ஆல்பம் மிரட்டுகிறது. லைட்டிங்க் மற்றும், கொரியோகிராபி, மற்றுமில்லாது, பாட்டின் ட்யூனும் சற்று கிறங்கத்தான் வைக்கிறது. ஆனால்,, கொலைவெறி பாடலின் பலமே, திரும்ப திரும்ப முணுமுணுவைத்தல். அதனாலேயே, ஒவ்வொருவரும், அவரவர் வெர்ஷன்களில், கொலைவெறியைப் பாடி, மெகா ஹிட் ஆக்கினார்கள். ஆனால் சிம்புவின் ஆல்பத்தில் அது மிஸ்ஸிங்க். எந்த அளவுக்கு, இதை வேறு வெர்ஷன்களில் ஹிட் ஆக்கமுடியும் என்று தெரியவில்லை. இப்பவே எனக்கு தெரிந்து, தமிழ் மற்றும் சிம்புவை பற்றி தெரிந்தவர்களுக்கு தான் இந்தப் பாடலைப் பற்றி தெரிந்திருக்கிறது. அதனால் கொலைவெறி அடைந்த இண்டெர்நேஷனல் புகழை சிம்புவின் ஆல்பத்தால் அடையமுடியுமா என்று தெரியவில்லை.



இன்னொரு கோணத்தில், சற்று நகைச்சுவையாக பார்த்தாம், தனுஷை பிடிக்கிற அளவுக்கு சிம்புவை அவ்வளவாக யாருக்கும் பிடிப்பதில்லை. பக்கத்து வீட்டுப் பையன் போல் இருக்கும் தனுஷ், இவ்வளவும் பிரபலமாக இருந்தும், அவர் காட்டும் எளிமை, எல்லாருக்கும் பிடிக்கும் காரணி.

ஆனால் இதுவே சிம்புவுக்கு நெகட்டிவ் ஆக அமைகிறது. பெயிலியர் படமான “ஒஸ்தி” கேசட் வெளியிட்டு விழாவில் அவருடைய அப்பா, “தன்னடக்க” புகழ் டி.ஆர் பேசிய பேச்சைக் கேட்டே, பலபேர் ஜன்னி வந்து கிடக்கிறார்கள். இந்த பாடலும் ஹிட் ஆகிவிட்டால், டி.ஆர் “சி.என்.என்” தொலைக்காட்சியில் பேசப்போகும் அந்த அற்புத காட்சியைப் பார்ப்பதற்கு, இன்னமும் தமிழ்மனங்கள் தயாராகவில்லை. குடும்பம் குடும்பமாக தற்கொலை முயற்சியும் நடக்க வாய்ப்புண்டு என்பதால், “அய்யய்யோ, வேணாண்டா..” என்று பயப்படுவதால் இந்த ஆல்பம் ஹிட்டாகாமல் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு…..

ஆக, எல்லா, காரணங்களையும், காரணிகளையும் வைத்துப் பார்த்தால், விரல்வித்தை நடிகர் காட்டும் லைட்டிங்க் மாயாஜாலங்களை காட்டிலும், ஒல்லிக்குச்சி நடிகர் காட்டும் எளிமையே ஜெயிக்கிறது, என்று தீர்ப்புச் சொல்லி, வாய்ப்பு தந்த நல்ல உள்ளங்களுக்கு…(அடச்சே..இதுக்குதான் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பார்க்ககூடாதுங்கிறது….)

13 comments:

SATHISH said...

அருமை பங்காளி.. ஒரு வாரத்தில் நான்கு பதிவுகளா? அதிரடியாக கலக்குங்கள்...

Surya said...

அருமையா சொன்னிங்க மாமு.....


ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in

rajamelaiyur said...

நாட்டாமை தீர்ப்ப மாத்து

MANO நாஞ்சில் மனோ said...

கொலைவெறி ஆரம்பத்தில் ஆர்வமாக இருந்து இப்போது புளித்துப்போனது உண்மைதான்...!!!

Jayadev Das said...

கொலைவெறி பட்டு இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை பாடிய தனுஷ், இசையைமைத்தவர் உட்பட யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த பாடல் எல்லோருக்கும் பிடிக்கிறது, அது ஏன் என்று முன்கூட்டியே தெரியாது. இந்தப் பாடலின் உலகளாவிய வெற்றி பிளான் பண்ணி செய்யப் பட்டதல்ல, தானாக நடந்தது. அதை இமிடேட் செய்து அதே மாதிரி சக்சஸ் பண்ண வேண்டும் என்று முயன்றால் மண்ணைக் கவ்வ வேண்டியும் இருக்கலாம்.

kannan said...

எல்லா, காரணங்களையும், காரணிகளையும் வைத்துப் பார்த்தால், விரல்வித்தை நடிகர் காட்டும் லைட்டிங்க் மாயாஜாலங்களை காட்டிலும், ஒல்லிக்குச்சி நடிகர் காட்டும் எளிமையே ஜெயிக்கிறது, என்று தீர்ப்புச் ottu moththa thamil makkal saarpaka solvom.....

Dinesh Kumar A P said...

super sir........

Dinesh Kumar A P said...

i love dhanush sir............

சிவகுமார் said...

கொலைவெறி song Marketing ku 10 million paisa thanthu irugaa pa , oru movie ku than market panna num nu illa , single song kuda hit pannalam. Paisa pannatrathu ellam IIT karan brain pa.

Unknown said...

கொலைவெறியா..கொல்றாங்க..இந்தபாட்ட போட்டுகிட்டு நீங்க வேற தீர்ப்ப சாதகமா சொல்லிவிட்டிங்க...

Anonymous said...

பெயிலியர் படமான “ஒஸ்தி” கேசட் வெளியிட்டு விழாவில் அவருடைய அப்பா, “தன்னடக்க” புகழ் டி.ஆர் பேசிய பேச்சைக் கேட்டே, பலபேர் ஜன்னி வந்து கிடக்கிறார்கள். இந்த பாடலும் ஹிட் ஆகிவிட்டால், டி.ஆர் “சி.என்.என்” தொலைக்காட்சியில் பேசப்போகும் அந்த அற்புத காட்சியைப் பார்ப்பதற்கு, இன்னமும் தமிழ்மனங்கள் தயாராகவில்லை. குடும்பம் குடும்பமாக தற்கொலை முயற்சியும் நடக்க வாய்ப்புண்டு என்பதால், “அய்யய்யோ, வேணாண்டா..”
நான் இந்த நிகழ்ச்சியை நெட்டில் பார்த்துட்டே ரொம்ப டேர்றோர் ஆயிட்டேன்.. அந்த ஆடியோ பங்கசன் ல இருந்த எல்லாருக்கும் எப்புடி இருந்திருக்கும்.. நல்ல வேளை இன்னும் ஹிட் ஆகலை........!?

Riyas said...

//விரல்வித்தை நடிகர் காட்டும் லைட்டிங்க் மாயாஜாலங்களை காட்டிலும், ஒல்லிக்குச்சி நடிகர் காட்டும் எளிமையே ஜெயிக்கிறது//

க்ரெக்ட்!

Anonymous said...

/////என்று பயப்படுவதால் இந்த ஆல்பம் ஹிட்டாகாமல் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு…../// Because of the same reason i am very careful now a days while reading anything about Simbu's album. i don't want increase the hit count even by an accident. :-))).

theriyama konjam hit kuduththom avvalavuthaan thamilnattula oruththan irukka mudiyaathu....:-)))

Post a Comment