Sunday, 1 January, 2012

கன்னிராசிக்கார நேயர்களே…..காலங்காத்தால பல்லு வெளக்குறாய்ங்களோ இல்லையோ, பயபுள்ளைங்க போனைப் போட்டு, “ராசா..என்ன புத்தாண்டு சபதம் எடுத்திருக்கன்னு ஒரே டார்ச்சர்ணே..சரி, பயபுள்ளைங்க ரொம்ப ஆசைப்படுறாய்ங்களே, நம்மளும் புத்தாண்டு சபதம் எடுக்கலைனா, ஊருக்குள்ள ஒரு மாதிரி பார்ப்பாய்ங்கன்னும், பயந்துக்கிட்டே எடுத்தேண்ணே ஒரு புத்தாண்டு சபதம். அது என்ன தெரியுமா..”இந்த வருசமாவது காலையில 6 மணிக்கு எந்திரிக்கணும்…”

உலகத்துலயே புத்தாண்டு நைட்டு குறட்டைவிட்டு தூங்குன ஆளைப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா..அது நான்தாண்ணே..நைட்டு, 10 மணிக்கெல்லாம் தூக்கமுன்னா தூக்கம் அப்படி ஒரு தூக்கம்முரட்டுத்தூக்கம்..காலங்காத்தால காதுக்குள்ளகொய்ங்கிற மாதிரி ஒரு சத்தம். கண் முழிச்சு பார்த்த, அலாரம்..ஆஹா..புத்தாண்டு சபதம்னு அவசரம், அவசரமா டையத்த பார்க்குறேன்மணி 10..அவசரத்துல 6 மணிக்கு வைக்கிறதுக்கு பதிலா, 10 மணிக்கு வைச்சிட்டேன் போல..கரெக்டா வூட்டுக்காரம்ம கேக்குறா..

ஹேப்பு நியூ இயர்ங்க..உங்க புத்தாண்டு சபதம் என்னங்க..”

அது செத்து 4 மணி நேரமாச்சு..அது கெடக்கு கழுதை விடு..ஒரு சூடா காபி ஒன்னு கொடேன்…”

அப்படின்னு எந்திருக்க டிரை பண்ணுறேன்

கன்னி ராசி நேயர்களேஅப்படின்னு ஒரு சத்தம்..

அடியே, டி.வி ஏதாவது போட்டியா..”

ஐய்யோ..அது நாந்தாங்க..”

ஏன்..ஏன் இப்படி..”

டி.வியல சொன்னாய்ங்க..கன்னி ராசி நேயர்களேஉங்களுக்கு இந்த வருடம் கை, காலில் சுளுக்கு, வலி போன்ற உபாதைகள் வர்ற வாய்ப்புண்டு..அதனால் பார்த்து நடந்து கொள்ளவும்..நீங்க மெதுவா, பார்த்து கைய ஊன்றி எழுந்திருங்க

அடியே..நான் என்ன ஹாஸ்பிடல் பேஷண்டா..அதெல்லாம் ஒன்னுமாகாதுகாபி கொண்டு வா..ப்ளீஸ்,,”

ஏங்க..நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்..சூப் கொண்டு வர்றேன் குடிங்க..”

அடியே கன்னி ராசி நேயர்கள் டீ.காபி குடிக்க கூடாதுன்னு சொல்லியிருக்காய்ங்களா…”

அப்படியே நேரிடையா சொல்லலை..ஆனால் பித்த நோய்கள் வர சான்ஸ் இருக்காம்..அதனால டெய்லி உங்களுக்கு சூப்பு தான்..”

அடிப்பாவி..கன்னி ராசி என் வாழ்க்கையில் குத்த வைச்சு கும்மி அடிக்குதே..சரி..பல்லு விளக்கிட்டு வர்றேன்,..இட்லியாவது பண்ணி கொடு..அப்படியே எனக்கு புடிச்ச தேங்கா சட்னி கண்டிப்பான்னு

சொல்லிட்டு பல்லு வெளக்கிட்டு, டைனிங்க் டேபிளுக்கு வந்தா சுடசுட இட்லி..உக்கார்ந்து ஆசை, ஆசையா, சட்னியப் பார்த்தா, சட்னியக் காணோம்..ஒன்லி பொடியும், எண்ணையும்

அடியே..சட்னி எங்க..”

ஏங்க..கன்னி ராசிக்காரங்களுக்கு நேரம் சரியில்லையாம்கிட்னி பெயிலியர் வர சான்ஸ் இருக்காம்..அதனால, இனிமேல் பொடிதான்..”

அடிப்பாவி..கிட்னிய காரணம் காட்டி சட்னிக்கு ஆப்பு வைச்சிட்டியா..சரி..இவ்வளவு பேசுறியே..உன்னோட ராசிக்கு என்ன போட்டிருக்கு…”

அத ஏன் கேக்குறீங்க..என் ராசிக்கு இந்த வருஷத்துல குடும்பத்தில பிரச்சனை வருமாம்..”

ஆமா..இப்படி புருசனக்கு இட்லி பொடியும் குடுத்தா, உன் ராசிக்கு மட்டுமில்லடி, எந்த ராசியா இருந்தாலும் குடும்பத்துல பிரச்சனைதான்..சரி கடைப்பக்கம் போயிட்டு வர்றேன்..கதவ பூட்டிக்க

அப்படினுட்டு காரை எடுக்குறேன்காரை மறிச்சிக்கிட்டு நிக்குறா..

ஏங்க…”

இப்ப என்ன…”

கன்னி ராசிக்காரங்களுக்கு, வாகனத்தால ஆபத்து இருக்காம்…”

அய்யயோ..காரும் பிரச்சனையா..காலுல வேற காயம் வரும்னு சொல்லுறா..நான் வேணா, கோயிலுல அங்கபிரதட்சணம் பண்ணுற மாதிரி, உருண்டுகிட்டே கடை வரைக்கும் போயிட்டு வரவா…”

விளையாடாதீங்க..மெதுவா ஓட்டுங்க

வேற என்ன பண்ணுறதுட்டு நொந்துக்கிட்டே காரை எடுக்குறேன்..காரை 40 மைலுக்கு ஓட்டினாலே அசரீரி மாதிரிகன்னி ராசிக்கார நேயர்களேஅப்படினுதான் சவுண்டு கேக்குது..அப்புறம் எங்கிட்டு..இந்த ஊருல நம்ம இஷ்டப்பட்ட வேகத்துல கார் ஓட்ட முடியாது..ஸ்லோவா போனாலும் பிரச்சனைதான்..

நம்மளுக்கு வேற வழியில்லாததால, மெதுவா ஓட்டிட்டு போறேன்..பின்னாடி ஒரே ஹார்ன் சத்தம்..கண்ணாடி வழியா பார்க்குறேன்..பிரதமர் காருக்கு பின்னாடி வருமே, அது மாதிரி, ஒரு 50 காருண்ணே..வருசையா வருது..ஆக்சிலேட்டர மிதிச்சாலும் “கன்னி ராசிக்கார நேயர்களே” அப்படின்னு வேற சவுண்டு..சகிச்சுக்கிட்டு ஒரு இடத்தில காரை நிறுத்தினா..சடனா ஒரு 4 காரு என் பின்னாடி..அம்புட்டு பேரும் என் பின்னாடி வந்தவய்ங்க…அவிங்க கண்ணு முழுக்க கொலைவெறி..வந்து திட்டுனாய்ங்க பாருங்க..இங்கிலீசுல அம்புட்டு கெட்டவார்த்தை இருக்குன்னு அன்னிக்குதானே தெரிஞ்சுச்சு..

எனக்கே ரொம்ப டயர்டாயிட்டதால ஒரு கட்டத்துல அவிங்களே நிறுத்திட்டு கிளம்பிட்டாய்ங்க..எல்லா திட்டையும் வாங்கிட்டு காது வலியோடு வீட்டுக்கு வர்றேன்..வூட்டுக்காரம்மா சொல்லுறா…

“ஏங்க..சொல்ல மறந்துட்டேன்..கன்னிராசிக்காரங்களுக்கு தெரியாத நபர்களால் பிரச்சனை வருமாங்க..பார்த்து சூதானமா நடந்துக்குங்க…”

ஏண்ணே…கன்னிராசிக்காரய்ங்க, இந்த வருசத்துல உசிரோட இருப்பாய்ங்களா…???

5 comments:

ஜெய்லானி said...

//ஏண்ணே…கன்னிராசிக்காரய்ங்க, இந்த வருசத்துல உசிரோட இருப்பாய்ங்களா…??//

கொலை பட்டினி போட்டு சாகடிக்கிற பலனாதானே எல்லா ராசி பலன் மலரிலும் இருக்கே ஹா..ஹா...


ஒரே ஒரு சந்தேகம் .... கல்யாணம் ஆகாதவங்களுக்கு .......> ஹி..ஹி....

SATHISH said...

பங்காளி ராசா.....

கன்னி ராசி காரங்க எழுதுற ப்ளாக் படிக்கிறவங்களுக்கு / கமெண்ட் போடுறவங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே...

யாரும் கமெண்ட் போடலியே அதான் கேட்டேன்..


சதீஷ்

SATHISH said...

அட பாவமே.. ஜெய்லானி அதே டைம் ல போட்டுடாரு..

பரவாஇல்லை

bala said...

அடடா இவ்வளவு இருக்க சாமீ கன்னி ராசி காரங்களுக்கு, பிரச்சணை வேற எங்கேயும் இல்ல வீட்டுல தான் முதல்ல சத்தியமான உண்மை , ரசி பலன் பண்றது ஒரு பக்கம் இருக்கட்டும் , அத சொல்லியே பண்ற தொல்லைகள் தான் அதிகம் எனக்கும் இந்த கொடுமைகள் கொஞ்சம் நடக்குது ஆனால் சட்னி அளவுக்கு இல்ல நா தப்பிச்சேன் அட நானும் கன்னி ரசி தானுங்கோ !

KSB said...

chance illa boss....kalakittinga...

Post a Comment