Saturday 10 December, 2011

RISE OF THE PLANET OF THE APES - திரை விமர்சனம்




குரங்கு மாதிரி வால்சேட்டை பண்ணாம உக்காருடாஎன்று அம்மா செலலமாக திட்டுவதுண்டு..ஆனால் குரங்குகளுக்கு, மனிதனுடைய அறிவு வந்தால், என்ன நடக்கும் என்ற கற்பனையே இந்த திரைப்படம்.

சில திரைப்படங்களை பார்க்கும்போது, “ஏண்டா, இதை இவ்வளவு லேட்டா பார்க்குறோம்என்ற கடுப்பு வருவதுண்டு. அப்படி கடுப்பான படங்களில் இதுவும் ஒன்று. நேற்று நெட்பிளிக்சை மேயும்போது, எதைச்சையாக கண்ணில் பட, உடனே பார்க்க ஆரம்பித்தேன். கதை இதுதான்.

ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், தன்னுடைய ஆராய்ச்சிக்காக, சிம்பன்சி குரங்குகளை பயன்படுத்துகிறது. அதில் வேலை பார்க்கும் நம் ஹூரோ, “அறிவாற்றலை அதிகப்படுத்தும்ஒரு மருந்தினை கண்டுபிடிக்கிறார். அதை ஒரு சிம்பன்சிமேல் சரி பார்க்க, அந்த குரங்கு, மனிதனை விட புத்திசாலியாக மாறுகிறது. அதை, வெளி உலகுக்கும் சொல்லும் நேரத்துக்கு முன்பதாக நடக்கும் ஒரு கலாட்டாவில் எல்லா குரங்குகளும் ஒழித்துக்கட்டப்பட, புத்திசாலியான குரங்குக்கு பிறக்கும் குட்டியை மட்டும் ஹீரோ யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்து வளர்க்கிறார்.

அம்மாவின், அறிவாற்றல் அந்த குரங்குக்கும் ஜீன் வழியாக பரவ, வீட்டில் ஒரு செல்ல குழந்தையை போல் வளருகிறது. அதற்கு சீசர் என்று பெயரும் இடுகின்றனர். சீசர், அறிவைப் பார்த்து, ஹீரோ, மனநிலை சரியில்லாத, தன் அப்பாவிற்கும் அந்த மருந்தை கொடுக்க, அவருடைய மனநிலைமையும் முன்னேற்றமடைகிறது.


அப்போதுதான் பிரச்சனை வருகிறது. இந்த குரங்கால் தொல்லை என பக்கத்து வீட்டுக்காரன் கம்ப்ளெயின் கொடுக்க, அதை, விலங்குகள் காப்பகத்தில் அடைக்கின்றன. அங்கு ஒரு 50 குரங்குகள் இருக்கின்றன. அங்கு வேலை செய்பவர்கள்., அவைகளை கொடுமைப்படுத்த, நம் புத்திசாலியான குரங்கு, அங்கிருந்து வெளியேறி, ஹீரோ வீட்டுக்கு சென்று அங்குள்ள மருந்துகளை எடுத்து அனைத்து குரங்குகளுக்கும் கொடுக்க, அனைத்து குரங்குகளுக்கும், மனிதனை விஞ்சிய அறிவாற்றல் வர, அனைத்தும் காப்பகத்தில் இருந்து தப்பித்து, அந்த நகரத்தை அதகளம் பண்ணுவதே கிளைமாக்ஸ்.

இப்படியெல்லாம் நடக்குமா, என்று யோசிக்காமல், இப்படியெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசிப்பவனே, சிறந்த க்ரியேட்டர் என்பது என் கருத்து. அந்த விதத்தில், டைரக்டர்ரூபட்”, மற்றும் ரைட்டர்ரிக்”, “அமண்டாசிறந்த க்ரியேட்டர்கள் என்று சொல்லவேண்டும். இந்த படத்தைப் பார்த்து, விலங்குகள் காட்சியகத்திற்கு சென்றால் அங்குள்ள விலங்குகளை கண்காட்சி பொருட்களாக பார்க்க மாட்டார்கள். அதன் மேல் ஒரு பரிதாபம்தான் வரும்.

அடர்த்தியான காடுகளில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கும், விலங்குகளை, ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கும், நம் அரசாங்கம் மேல் கோபம்தான் வருகிறது. இங்கு உள்ள விலங்குகள் அருங்காட்சியத்துக்கு சென்றால், எதையும் கூண்டுக்குள் அடைத்திருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இங்குள்ள ஜூ க்கள், ஒரு காடு போலத்தான் இருக்கும். ஒவ்வொரு, விலங்குகளும், காட்டில் இருப்பது போன்ற உணர்வு இருக்க வேண்டும் என்பதற்கும், அவை, ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்கும், இவர்கள் எடுக்கும் சிரத்தையைப் பார்க்கும்போது, பிரமிப்பாக இருக்கும்.



ஆனால் நம்மூர் வண்டலூர் விலங்கியல் அருங்காட்சியத்துக்கு வந்த போது நொந்தே போனேன். காட்டில் சுதந்திரமாக திரிய வேண்டிய ஒரு புலியை இரு சின்ன கூண்டில் போட்டு அடைத்துள்ளனர். அதன் உடம்பு முழுக்க புண்கள். அதுவே இன்னைக்கு சாவோமா, நாளைக்கு சாவோமா, என்று இருக்க, அதை நம்ம பயபுள்ளைகள்வாவ், டைகர்என்று அதிசயமாக, அது கடுப்பாகி, “போங்கடா..போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா..பேப்பசங்களா..” என்று சொல்லுவது இருக்கும். அந்த கூண்டு பக்கத்தில் போவதும் ஒன்று, நாலு பேரரசு படம் பார்ப்பதும் ஒன்று..அப்படி இருக்கும்..அந்த அளவுக்கு சுகாதாரம்.
இதையெல்லாம பகுமானத்துக்கு சொல்லவில்லை. விலங்குகளும் பாவம்டா என்ற நினைப்பு எல்லாருக்கும் வரவேண்டும் என்ற ஆதங்கமேயன்றி வேறு இல்லை.

மற்றபடி, படத்தில் சிம்பன்சிகள் க்ளைமாக்சில் செய்யும் அதகளத்தைப் பார்க்க கோடி கண்கள்
வேண்டும். ஒரு கட்டத்தில் குரங்குகள் எல்லாம் பெரிய பாலத்தில் மேல் நிற்க “எல்லாத்தையும் 
சுட்டு தள்ளிருவோம் பாஸ்” என்று ஏளனமாக, காவல்துறை பாலத்தின் ஒரு மூளையில் நிற்க,
நம் குரங்குகள் செய்யும் டெக்னிக் இருக்கிறதே..யப்பாடி..பின்னி பெடல் எடுத்திருக்கிறார்கள்.


படமே க்ராபிக்ஸ்தானே, பின்னே எங்கு க்ராபிக்சை தனியாக பாராட்டுவது. சீசரின் ஒவ்வொரு 
மூவ்மெண்டையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். ஹீரோவோடு பாசம்
காட்டுவதாகட்டும், அழிச்சாட்டியம் பண்ணும் பக்கத்து வீட்டுக்காரனை ஒரு போடு 
போடுவதாகட்டும், காட்டைப் பார்த்து ஆசையாக, மரத்தின் மேல் ஏறி சூரிய உதயத்தைப் 
பார்ப்பதாகட்டும், குரங்குகளின் தலைவனாக, அவைகளை ஒருங்கிணைத்து 
ஆணையிடுவதாகட்டும், கடைசியில் “வீட்டுக்கு வந்துடு” என்று சொல்லும் ஹீரோவை 
அரவணைத்து அவன் காதின் அருகில் சென்று “இதுதான் சீசர் வீடு” என்று 
சொல்லுவதாகட்டும்…யப்பே ..க்ளாஸ்..எத்தனை முறை வேண்டுமானலும் பார்க்கலாம்…

இனிமேல் என்னை யாராவது “போடா குரங்கு” என்று திட்டினால் கோபப்படமாட்டேன், இந்த 
படத்தை பார்த்தபின்பு…. மனிதனேயே மனிதனாக பார்க்காத இந்த உலகத்தில் 
விலங்குகளையும் ஒரு ஜீவனாக பாருங்கள், என்று செவிட்டில் ஓங்கி அறைந்திருக்கும், இந்த 
படத்தை கண்டிப்பாக மிஸ் பண்ணிவிடாதிர்கள்

5 comments:

Anonymous said...

/// இதை இவ்வளவு லேட்டா பார்க்குறோம்” என்ற கடுப்பு வருவதுண்டு. அப்படி கடுப்பான படங்களில் இதுவும் ஒன்று ///

Same Blood

குலவுசனப்பிரியன் said...

ஒரு தினசரியில் 2/5 நட்சத்திரங்கள்தான் கொடுத்திருந்தார்கள். உங்கள் விமரிசனப்படி படம் நன்றாக இருக்கும் போல. அவசியம் பார்க்கிறேன்.

CrazyBugger said...

hey mr.monkey, late reviewu whyu?

ராஜ் said...

பாஸ்,
ரொம்ப நல்ல படம். படம் பார்த்தவுடன் என்னக்கு தோன்றிய எண்ணம்...
Rise of the Planet of the Apes- Caesar's Acting is far better than our "Ultimate Star" Ajith Kumar and "Doctur Thalapathi" Vijay.
இதுக்கு கிராபிக்ஸ் செஞ்ச கம்பெனி தான் "AVATAR" & "TINTIN" படங்களுக்கும் கிராபிக்ஸ் பண்ணி இருந்தாங்க

அவிய்ங்க ராசா said...

நன்றி அனானி
நன்றி பிரியன்..ஜாக்சென்வில்லா நீங்கள்..நானுந்தான்
நன்றி க்ரேஷி
நன்றி ராஜ்

Post a Comment