Wednesday, 7 December, 2011

என்னது திருமதி செல்வம் சீரியலுல செல்வம் செத்துட்டாரா..நேத்தைக்கு வீட்டுக்கு வர்றேன், வீட்டுக்காரம்மா ஒரே அழுகாச்சி..அழுது, அழுது கண்ணே, செவந்து போயிருச்சுன்னா பார்த்துக்கங்களேன். எனக்குனா கொஞ்சம் பயம் வேற..முந்தா நாளைக்குதான் சாம்பாருல உப்பு பத்தலைன்னு வேற சொல்லியிருந்தேன்..அதை மனசுல வைச்சிகிட்டு, ஏதாவது தப்பான முடிவுஆஹா..கிடைக்குற சோறும் கிடைக்காதே..அவ்வளவுதான் பதறி போயிட்டேன்

என்ன ஆச்சுமா..ஏன் இப்படி அழுதிருக்க..கண்ணு வேற வீங்கியிருக்குவீட்டுக்கு எதாவது கால் பண்ணினியா..”

இல்லீங்க..”

பஸ் டிக்கெட் விலை, பால் விலை, ஏத்துனது தப்புன்னு பீல் பண்ணி அரசு, திரும்பவும் பழைய விலைக்கே மாத்திட்டாய்ங்களா..ஆனந்த கண்ணீரா..”

ஐயோ..இல்லீங்க..”

பின்ன என்ன..வீட்டுல யாருக்கும் உடம்பு முடியலையா....”

அதுவும் இல்லீங்க..”

பின்ன…”

நம்ம செல்வம் இல்லீங்க..அவரு செத்துட்டாருங்க..”

அய்யய்யோ..அந்த ஆளு நமக்கு கடன் தரணும்டி..என்ன ஆச்சு…”

ஐயோ கொடுமையே..செல்வம்னா, திருமதி செல்வத்துல வர்ற செல்வம்ங்க..கடலுல போனவர், பொணமாதாங்க திரும்பி வந்தாரு..”

என்னால ஆச்சரியம் தாங்கமுடியலண்ணே..ஆச்சர்யம் ஒரு பக்கம்னா, செத்த சந்தோசம் வர்ற..என்னது செல்வம்னா யாருன்னு தெரியாதா..என்னண்ணே சொல்லுறீங்க..என்னைக் கேட்டா, இந்த உலகத்துலேயே ரெண்டு பேருதான் ரொம்ப நல்லவங்க..முதல்ல , இயேசுநாதர், ரெண்டாவது, திருமதி செல்வத்துல வர்ற நம்ம செல்வம். இயேசுநாதராவது, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுன்னுதான் சொன்னாரு..ஆனா, நம்ம செல்வம், ஒரு கன்னத்தில் அறைஞ்சா, தன் கன்னம் மட்டுமில்லாம, குடும்பத்துல இருக்குற எல்லார் கன்னத்தையும் காட்ட சொல்லுவாரு..தங்கம்னா தங்கம்..சொக்கத்தங்கம்னே..

அந்த நாடகத்துல நடிக்கிற எல்லோருடைய வேலையே, செல்வத்தை முறை வைச்சு கொடுமைப்படுத்துறதுதான்..பயபுள்ள் செல்வத்துக்கு இல்லாத கொடுமையெல்லாம் பண்ணியிருக்காய்ங்க..சொல்லும்போதே, எப்படி கண்ணு கலங்குது தெரியுமா..கட்டி வைச்சு, அடிச்சா கூட, பாட்ஷா இன்டெர்வேல் ரஜினி மாதிரி, ரத்தத்தை துடைச்சுக்கீட்டு, ஒரு சிரிப்பார் பாருங்க..பச்சைப்புள்ளைன்னே அது..

ஆனா, அவர் நாடகத்துல செத்ததுக்கு நான் ஏன் சந்தோசப்படுறேனா..நான் மட்டுமில்லைண்ணே..நாடகம் பார்க்குற எல்லாரும் சந்தோசப்படுவாய்ங்க..பின்ன, இம்புட்டு நல்ல பிள்ளையாய் இருந்தா, எதுக்கெடுத்தாலும்செல்வத்தை பாருங்க..வீட்டுக்காரிக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணுறாருன்னுநமக்குள்ள குத்து விழுகுது..

ஆனாலும் சந்தோசத்தை வெளிக்காட்டுனா, நாளைக்கு சோறு தண்ணி கிடைக்காதுன்னு, நானும் துக்கமா இருக்கற மாதிரியே நடிச்சேண்ணே..

பாவம்டி..வாழவேண்டிய வயசு..ஒருவேளை கால்ஷீட் கிடைச்சிருக்காதோ..இல்லாட்டி, டைரக்டருக்கும் அவருக்கு ஏதாவது லடாய் வந்து, “இருடா, உன் கேரக்டரையே கொன்னுறேன் சொல்லிட்டுஏதாவது பழி வாங்குராறோ..”

இருக்காதுங்க..நீங்க வேற..”

சரி..சோறு ஆக்குனியா..”

நானே துக்கத்துல இருக்கேன்..செல்வத்துக்கு 10 ஆம் நாள் காரியம் ஆகுற வரைக்கும் சோறும் இல்லை, ஒரு மண்ணும் இல்லை..

அப்படியே இடிஞ்சு போயிட்டேண்ணே..பின்ன என்ன பச்சை தண்ணியை குடிச்சிட்டு ஆபிஸ் தூங்கிட்டேன்..மறுநாள் ஆபிசை விட்டுட்டு வீட்டுக்கு வர்றேன்..வீட்டுவாசலிலேயெ பால் பாயாசாம் வாசம்..எதுவும் வீடு மாறி வந்துட்டமான்னு டவுட்டு வேற..எதுக்கும் கதவை தட்டிட்டு உள்ளே போறேன்..வூட்டுக்காரம்மாதான்..முகம் நிறைய சிரிப்பு வேற..

அடியே..என்ன ஆச்சு..”

செல்வம் சாகலியாம்க..அது வேற ஒரு ஆளாம்..செல்வம்னு நம்பி, அவுங்க குடும்பத்தில காரியம் பண்ணிக்கிட்டு இருக்காருங்க..செல்வம் தப்பிச்சுட்டாரா..இப்ப கேரளாவுல இருக்காரு..”

நம்மளுக்குதான் பால்பாயாசம்லாம் கிடைக்குதே..
ரொம்ப நல்லதுடி..ஏதோ நல்லா இருக்குறவரைக்கும் சரிதான்..”

ஏங்க..பாவம்க செல்லம்மா அக்கா..”

அய்யய்யோ..அது யாரு..”

அதுதாங்க..செல்லமே சீரியலுல வர்ற செல்லம்மா..அவுங்க ஹஸ்பெண்ட்வடமலைஹாஸ்பிடலுல உயிருக்கு போராடுறாரு..ஏங்க பிழைச்சுருவாருல்ல..”

டைரக்டர் சார்..வடமலையை தயவு செய்து கொன்னுராதீங்க..பல புருஷன்மார்களுக்கு நாளைக்கு கிடைக்கப்போற சோறு உங்க கையில தான் இருக்கு

32 comments:

யவனொ ஒருவன் said...

hahahahhahahahahahahahahahahahahahah........................

karthik said...

unga pathivu rempa nalla irukku thanks....

my atoz tamil mp3 songs 100% free site:

http://www.atoztamilmp3songs.blogspot.com/
http://www.tamilmp3songworld.blogspot.com/
please visit my sites.
thanks.

சேக்காளி said...

இது தொடர(செல்வம் சீரியல்)விட சுவராசியமால்ல இருக்கு.தெனமும் வீட்டுல தொடர பாத்துட்டு என்னென்ன நடக்குன்னு ஒரு தொடர் பதிவே போடலாம் போல இருக்கே.

Robin said...

:)

சேலம் தேவா said...

//இந்த உலகத்துலேயே ரெண்டு பேருதான் ரொம்ப நல்லவங்க..முதல்ல , இயேசுநாதர், ரெண்டாவது, திருமதி செல்வத்துல வர்ற நம்ம செல்வம்.//

Rofl...

விஜி said...

இந்த உலகத்துலேயே ரெண்டு பேருதான் ரொம்ப நல்லவங்க..முதல்ல , இயேசுநாதர், ரெண்டாவது, திருமதி செல்வத்துல வர்ற நம்ம செல்வம்//

சிரிச்சு முடியலை :))))))))))))

Lali said...

சிரிக்கறதா? இல்லை சீரியலுல வரமாதிரி அழுவறதா?
ஆனா உண்மைய பேசி இருக்கீங்க.. :)

http://karadipommai.blogspot.com/

கும்மாச்சி said...

செல்வம் வச்சி ஒரு அருமையான பதிவ போட்டுட்டிங்க, நல்ல காமெடி தான்.

Anonymous said...

:-)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்க வீட்டுலயும் இதே கதையா ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று ....

NotePad ல விளையாடலாம் வாங்க.

geetha said...

Very nice LOL:D

isaianban said...

ஹாஹாஹாஹாஹாஹா பாஸ் என்னல முடியல பாஸ் சூப்பரு கலக்கிட்டீங்க....

Tamilinaiyam said...

unmaiyaallum selvam sethuttara enakkum sollunga ..............

அத்திரி said...

ஒன்ன்ன்ன்ன்ன்ன்னும்ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்றதுக்கு இல்ல அண்ணே...............000

veedu said...

ராசா....எப்படி இப்படிங்க....அப்படியே தென்றல் அத்திப்பூக்கள் பார்க்க சொல்லுங்க...படு கலக்கல்

Thameez said...

நடை நன்றாக இருக்கு.
குடும்பத்துலே இருக்குற எல்லார் கண்ணையும் காட்டுவார்! superb !

rajasundar said...

HAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHHAHAHHAHAHAAHHAAHHAAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHHAHAHAAHHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

bandhu said...

நல்ல வேளை.. தமிழ் டி வி கனெக்ஷனை எடுத்ததினால் இந்த தொல்லை எல்லாம் இல்லை. நீங்களும் முயற்சி பண்ணுங்களேன்.. இல்லையென்றால் உங்களையே அடையாளம் தெரியாமல் போகவும் வாய்ப்பு உண்டு!

பூங்குழலி said...

ஆனா, நம்ம செல்வம், ஒரு கன்னத்தில் அறைஞ்சா, தன் கன்னம் மட்டுமில்லாம, குடும்பத்துல இருக்குற எல்லார் கன்னத்தையும் காட்ட சொல்லுவாரு..தங்கம்னா தங்கம்..சொக்கத்தங்கம்னே..


சரியடி இது ! :-)

Anonymous said...

super. super. super.

Anonymous said...

செம காமெடி!!!!!

கோவி.கண்ணன் said...

//டைரக்டர் சார்..வடமலையை தயவு செய்து கொன்னுராதீங்க..பல புருஷன்மார்களுக்கு நாளைக்கு கிடைக்கப்போற சோறு உங்க கையில தான் இருக்கு…//

செம நக்கலு :)

துளசி கோபால் said...

இந்த வடமலை யாருங்க??????????

அபி அப்பா கொளுத்திவிட்ட தீயில் வெந்து சாம்பலாகப்பார்த்தேன்:(

அவிய்ங்க ராசா said...

நன்றி யவனோ ஒருவன்
நன்றி கார்த்திக்
நன்றி சேக்காளி
நன்றி ராபின்
நன்றி தேவா
நன்றி விஜி
நன்றி லாலி
நன்றி கும்மாச்சி
நன்றி அனானி
நன்றி கீதா
நன்றி ராஜா
நன்றி தமிழினியம்
நன்றி இசையன்பன்
நன்றி அத்த்ரி
நன்றி வீடு
நன்றி சுந்தர்
நன்றி பந்து
நன்றி பூங்குழலி
நன்றி அனானி
நன்றி மொக்கராசு
நன்றி கோவி கண்ணன்

அவிய்ங்க ராசா said...

நன்றி துளசிடீச்சர்...))

கிருஷ்ணா said...

:))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிரிச்சு மாளலை பாஸ்

V.Radhakrishnan said...

ஹா ஹா! இது எல்லாம் கனவுன்னு காட்டுவாங்கனு இருந்தம். அதுக்குள்ளே எங்க வீட்டுக்காரம்மா ஒரு கதைய தயார் பண்ணி சொல்லிட்டாங்க. திருமதி செல்வம் எல்லா பயங்கரமா உழைச்சி நிறுவனத்தை சிறப்பா கொண்டு வருவாங்க. இந்த செல்வம் வந்து அப்புறம் நிப்பாருனு சொன்னாங்க. அடுத்த நாளே செல்வத்தை காட்டிட்டாங்க.

//இப்ப கேரளாவுல இருக்காரு//

அட கடவுளே, அது நெல்லூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம். செல்வம் பிழைச்ச சந்தோசத்தில உங்க வீட்டுக்காரம்மா மாநிலத்தை மறந்துடாங்க. யார் யார் சீரியலு பார்க்கிறாங்கனு சோதனைக்கு இப்படி எழுதினீங்களா.

Rishvan said...

nice review... thanks to share... please read my tamil kavithaigal in www.rishvan.com

குறை ஒன்றும் இல்லை !!! said...

செம காமெடி :)

safi said...

ஹஹஹஹஹஹஹஹஹா சூப்பர் சூப்பர்

Post a Comment