Sunday, 4 December, 2011

சசிக்குமாரின் போராளி விமர்சனம்
எங்க ஊருக்காரரு சசியண்ணனுக்குயண்ணே..நல்லா இருக்கீகளா..நாந்தாண்ணே..நம்ம ஊருக்காரப்பய ராசா..நேத்துதாண்ணே சொன்னாய்ங்க, நீங்க ஆக்ட் கொடுத்த போராளி படம் வந்துருக்குண்ணுநம்மளுக்கு நம்ம ஊரு மருதை(மதுரை) ண்ணாவே ஒரு இதுண்ணே..அதுதாண்ணே, மூக்கம்புட்டு பாசம்..நம்ம ஊருக்கார பயபுள்ளைக தும்முனாலே பதறி போயிடுவோம்ணே..

நீங்க, ராத்திரி பகலுன்னு பார்க்காம, உழைச்சு படம் எடுத்து விட்டுருக்கீக..பாக்காம இருந்துருவோமேஅப்புறம் இந்த கட்டை வேகாதுலண்ணே..அதுவுமில்லாம, அங்காளி, பங்காளிகளைப் பத்தி ஒரு படம் எடுத்தீங்களண்ணே..ஏண்ணே..மறக்ககூடிய படமாண்ணே அது..ஆத்தி..பிரிச்சி மேய்ஞ்சுபுட்டீங்கள்ளே..என்னா ஆக்டு..அதுல கூட, நெட்டையா ஒரு பய, பேரு கூடஜெய்யோ..கொய்யோ..” தலையை ஆட்டிக்கிட்டுகண்கள் இரண்டால்ன்னு பேக்கிரவுண்டு மியூசிக்கு போட்டுகிட்டு வர்றப்ப விழுந்தவன் தானே..அதுக்க்கப்புறம், உங்களை பத்தி மதிப்பு எங்கயோ போயிருச்சுண்ணே..

அதே, க்ருதியோடத்தேன், “ஈசன்போணேன்ணே….கொஞ்சம் ஏமாத்தம் தாண்ணே..மண்ணு வாசனை இல்ல பாருங்கா..ஆணான்னே, எடுத்துக்கிட்ட கான்செப்ட் சூப்பருண்ணே..
அப்புறம் நேத்துதாண்ணே நீங்க நடிச்சபோராளிபார்த்தேன். முதல் சீனுல ரெட்டைக்குதுரையில ஆவேசமா வர்றப்ப குலை நடுங்கிடுச்சுண்ணே..ஆத்தாடி, படம் மாறி வந்துட்டமான்னு..அப்புறம், நீ சென்னை அபார்ட்மெண்டுக்கு வர்றப்பதானே உசுரே வந்துச்சு..

சும்மா சொல்லக்கூடாதுண்ணே..சென்னை வாழ்க்கையை நல்லாத்தேன் எடுத்திருக்கீருஎப்ப பார்த்தாலும் பொண்டாட்டியோட சண்டை போடுற படவா கோபி, தண்ணியப்போட்டுட்டே திரியும் அந்த அண்ணே..அப்புறம், “நாந்தேன் முடிவெடுப்பேன்எப்ப பார்த்தாலும் நம்ம ஊருக்காரரு ஞானசம்பந்தன் ஐயா அப்படின்னு எல்லாரும் அப்படியே கேரக்டாவே இருக்காய்ங்கண்ணே..கஞ்சா கருப்பு காமெடி கூட நொம்ப நாளைக்கப்புறம் நல்லாத்தாண்ணே இருக்கு..

                                    

யாருண்ணே அவன்..தமிழை தூக்கலா பேசிக்கிட்டு ஆந்திராக்கார பய, நரேஷ்ஷூ..அவன் கூட நல்லாத்தாண்ணே நடிச்சுக்குறாப்புல..எல்லாம் நல்லாத்தாண்ணே போய்கிட்டு இருந்துச்சு..ஆனா, இடைவேளைக்கு அப்புறம்தாண்ணே..பைத்தியக்கார ஆஸ்பத்திரி, அது, இதுண்ணு..கொஞ்சம் கன்ப்யூஸ் ஆகிப் போயிட்டேண்ணே..

ஆனாலும், வந்தியே பாரு, திரும்ப மதுரைக்கார மண்ணுக்கு..அதுதாண்ணே ஊருப்பாசங்கிறது..யாத்தே..நம்ம ஊரைப் பாத்த மாதிரியே இருக்குண்ணே..ஆம்பிளை மாதிரி சண்டை போடுற அந்த நடிகை செம ண்ணே..அய்யோ அண்ணே..நடிப்பைச் சொன்னேன்..


ஆனாண்ணே..திரும்பவும், ஏதோ சுப்புரமணியபுரம், நாடோடிகள் பார்க்குற மாதிரி இருந்துச்சுண்ணே..அதை விட்டுட்டு நீ வெளியே வரணும்ணே..கத்தியை கையில் வைச்சுக்கிட்டு, நீ அடியாளை விரட்டுறப்ப, பக்கத்து சீட்டுல இருந்த ரெண்டு பேரு எந்திருச்சாய்ங்கன்னா பார்த்துக்கயேன்..நம்ம புரோட்ட சூரியாண்ணே அது..தக்காளி கலக்கிபுட்டாப்புல.. சில சீனுல சமுத்திரக்கனியண்ணே திறமை தெரியுதுண்ணே..அவரு டாப்பா வருவாருண்ணே..

ஆனா தப்பா எடுத்துக்காதண்ணே..உனக்குத்தான் மதுரைக்காரய்ங்கள பத்தி தெரியுமுல்ல.உள்ள ஒன்னை வைச்சிக்கிட்டு வெளியே ஒன்னு பேசுற டவுனு காரய்ங்க இல்லைண்ணே..மனசுல இருக்குறத அப்படியே டக்குன்னு சொல்லிப்புடுவோம்..புல் மீல்ஸ் எதிர்ப்பாத்த்து போன நமக்கு, ஒரு பாதி வயிறுதாண்ணே நிறைஞ்சுச்சு..திடீருன்னு எட்டுக்கட்டையில் ஒரு பொண்ணு பாடுறப்ப கடுப்பா வருதுண்ணே..அப்புறம்சம்போ, சிவசம்போமியூசிக்கு, குத்துப்பாட்டுன்னு அப்படியே நாடோடிகள் ஜெராக்சுண்ணே..ஏண்ணே..இசையமைப்பாளருக்கும் நம்மளுக்கும் ஏதாவது கொடுக்கல் வாங்கலுன்னு…. அப்புறம் கிளைமாக்சுல எல்லாத்தையும் அடிக்கிற நீயி, பயந்துக்கிட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இருக்குறது, என்னமோ கரெக்டா இல்லைண்ணே..அதே மாதிரி, இவ்வளவு புத்திசாலியா இருக்குற நீ  அம்புட்டு நாளு ஆஸ்பத்திரியில இருக்குறதும் லாஜிக்கா இல்லண்ணே..சிலநேரம் திடிரின்னு, இது மன நலம் சரியில்லாதவங்களைப் பத்தி கதையோன்னு சந்தேகம் வருதுண்ணே..அதே மாதிரி, நரேஷ், கேரக்டர் பத்தி, இன்னும் சரியா சொல்லலையோன்னு கூட ஒரு நெருடலுண்ணே..

மத்தபடி பாதி சாப்பாடு போட்டாலும், சுவையாத்தாண்ணே இருந்துச்சு..கடைசியில சுவீட்டு பீடா போட்ட மாதிரி நல்லாத்தாண்ணே முடிச்சிருக்க..நாக்குமேல பல்ல போட்டுஇந்த படம் மொக்கைன்னுகூசாம பொய்யா விமர்சனம் பண்ண முடியும்ணே..ஆனா. நம்ம ஊருக்காரய்ங்கள்ளாம் அப்படியாண்ணே..எதிரியா இருந்தாலும், மனசு விசனப்படக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்போம்ணே..


நம்ம என்னா, காத்து வெளிய போகாத மாதிரி, கதவை அடைச்சிக்கிட்டு .சி ரூமுல பேனைப் போட்டுக்கிட்டாண்ணே வளர்ந்தோம்..மதுரை மண்ணுல, புழுதிய கிளப்பிக்கிடு, பம்பரம் கோலி விட்டுதானண்ணே வளர்ந்தோம்..என்னைக்கின்னே, வெயில, வெயிலுண்ணு பார்த்துருக்கோம்..தக்காளி, மருதையில, தெரு அம்ம்புட்டுக்கும் சுத்தி, புழுதியில புரண்டு, சேக்காளிகளோட சண்டை போட்டு, அப்புறம்வாங்க பாஸ்ஸூன்னு கட்டிப்பிடிச்சு தண்ணிய போட்டு அலப்பறை போட்டுட்டு, நல்லா வெட்டவெளியில மல்லாந்து தூங்குன சுகத்தை, இந்த ஏ.சி ரூமு தருமாண்ணே..அப்படி வளர்ந்த மதுரைக்கார பயபுள்ளைங்க..என்னைக்குன்னே அடுத்தவன் மனசு புண்படுற மாதிரி நடந்துருக்கோம்..


படம் ஹிட்டா இல்லையாண்ணு தெரியலண்ணே..ஆனா, குடும்பத்தோட படம் பார்க்க வர்ற அண்டு சிண்டுக, பொண்டாட்டி புள்ளைங்க, முகம் சுழிக்காம, படம் எடுத்துருக்க பாருண்ணே..அங்கதாண்ணே, நிய் நிக்குற..இது போதும்ணே..நீ நல்லா வருவண்ணே..இன்னும் நாங்க ரசிக்குற மாதிரி நல்ல படம் எடுப்பண்ணே. ஒம்பாட்டுக்கு எங்கிட்டும் போயிராதண்ணே...

எனக்கு நம்பிக்கை இருக்குண்ணே..ஏன்னா, நீ பொறந்த மண்ணு அப்படிண்ணே…

இப்படிக்கு

ஊருக்கார பயபுள்ள
அவிய்ங்க ராசா..6 comments:

அத்திரி said...

ok..............

Anonymous said...

படத்த விமர்சனம் பண்ணுவாங்கன்னு பார்த்தா ஊர் பாசத்த பொழிஞ்சு இருக்காங்களே,,, நீங்க மதுர காரன்னா, அப்ப நாங்க எல்லாம் என்ன மலேசியா காரனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:))

இளைய கவி said...

rasa you r always the great madurai tamil is killing me bro. i m missin it badly man. with my bro r my frnd man. u r great man. i dont knw whe u hav born n wht u do. but whn evr i read you blog blog i felt tht i m vit u man. uv u bro. convy my regrds to anni also rasa luv u bro

இளைய கவி said...

cal me@ 9894916242

அவிய்ங்க ராசா said...

நன்றி அத்திரி
நன்றி மொக்கராசு...அப்ப நீங்களும் மருதையா..
நன்றி ரமேஷ..
தங்கள் அன்பிற்கு நன்றி இளையகவி..உங்கள் ப்ரோபைல் புகைப்படம் மிகவும் அருமை..கண்டிப்பாக ஒருநாள் உரையாடலாம்...

Post a Comment