Saturday 31 December, 2011

பதிவர் சந்திப்பு – எனது பார்வை



சும்மா இருக்கறவனை சொரண்டி விடுறதே, இந்த கோவாலுக்கு வேலையாகிப் போச்சுண்ணே..கரண்ட் அடிச்ச மாதிரி, வருச கடைசி அதுவுமா, அந்த கேள்வியைக் கேட்டுப்புட்டான்

ராசாபதிவர் சந்திப்பு பார்க்கணும்னு ஆசையா இருக்குடா..எங்கிட்டாவது அது நடந்தா, என்னையும் கூட்டிட்டு போடா..”

அவ்வளவுதேன்..எனக்கு நடுங்கிருச்சு..

கோவாலுஅது ரத்த பூமிடா..உன்னை மாதிரி பச்சைப் புள்ளைங்களெல்லாம் உள்ள விடமாட்டாய்ங்க..”

டே..ராசாஎன்னடா இப்படி சொல்லிப்புட்டஅப்படி என்னதாண்டா அங்க நடக்கும்…”

கோவாலு..நீ தண்ணி அடிப்பியா…”

ச்சீ..ச்சீ..ச்சீ…”

அடங்கொன்னியா..அங்கயே பாதி தகுதி அடிபட்டு போச்சு..”

என்னடா சொல்லுற…”

ஆமாண்டா..கிளம்புறதுக்கு முன்னாடி, நல்லா புல் ரவுண்டு ஏத்திக்கணும்..இன்னும் ரெண்டு மூணு பேரைச் சேத்துக்கணும்முந்தா நாளு ரூமு போட்டு செமக்கூத்து அடிக்கணும்….”

அய்யயோ..ரூம் போடுற அளவுக்கு எங்கிட்ட காசு இல்லைடா..”
அடிங்கதமிழுல மட்டுமில்ல ஆல் லாங்குவேஜ்ஜூல எனக்கு பிடிக்காத வார்த்தையே, “செலவழிக்கிறது”..அதெல்லாம் கவலைப்படாதேராத்திரியும் பகலுமா கஷ்டப்பட்டு சேத்துவைச்சிருக்கிற காசை வைச்சு, அவிங்களே நமக்கு ரூம் போட்டு தருவாய்ங்கநம்ம வேலை, சோக்கா, சட்டையப் போட்டமா, சண்டையப் போட்டாமாண்ணு இருக்குறதுதான்…”

அவ்வளவுதான் கோவாலு அழுவ ஆரம்பிச்சிட்டாண்ணே..குழந்தை மாதிரி கேவி, கேவி அழுவுறான்..

கோவாலு..இப்ப என்ன நடந்துச்சுன்னு கேவி, கேவி அழுவுற..”

ராசா..ஊருக்குள்ள இம்புட்டு நல்ல பேரு இருக்காய்ங்கன்னு ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லியிருந்தேன்னா, நானும் எப்பவோ, பதிவுலகத்துக்கு வந்திருப்பேனடாபோடா துரோகி..கஷ்டப்பட்டு சேர்த்த காசை வைச்சு, நம்ம தண்ணி அடிக்கிறதுக்காக, ரூமெல்லாம் போட்டு..அழுகை, அழுகையா வருதுடா…”

டே..கோவாலு..அழுவாதடா..”

அப்பறம் என்னடா நடக்கும்…”

நேரா பதிவர் சந்திப்பு போகணுமா..அதுக்கப்பறம், அங்கயே ப்ரேக்பாஸ்ட்..”

அட..சூப்பரு..”

டே..டேஅப்படியெல்லாம் பாராட்டுனா..ஊருக்குள்ள நாலு பய மதிக்க மாட்டாய்ங்க..முட்டை பணியாரத்துல முட்டைய காணாம்..மைசூர் பாக்குல மைசூரை காணோம்..காபியில கொசு கிடந்துச்சுன்னு ரெண்டு மூணு அடிச்சு விடணும்…”

டே..ராசா..அதெல்லாம் பாவம் இல்லையா…”

கோவாலு..நீ பதிவரா ஆகனுமா இல்லையா..”

ஆவணும்டா..ஆவணும்…”

அப்படின்னா சொல்ற பேச்சைக்கேளு..ப்ரேக்பாஸ்ட் முடிஞ்சப்புறம்..அங்கிட்டு இங்கிட்டு ஸ்டைலா ரெண்டு வாக்கிங்கை போடணும்..அவசரப்பட்டு, நீயா யாருகிட்டயும் பேசிரக்கூடாது..அவிங்களா கூப்பிடுவாய்ங்கஹல்லோ..சார்..நீங்க எந்த ப்ளாக்கு…”

நான் B பிளாக்கு..”

“டே…ஒன்னும் தெரியாதவேனே..பிளாக்குடா..பிளாக்கு..அப்புறம், அங்க இருக்குறவய்ங்க கூட ஒரு டிஸ்கசனைப் போட்டுட்டு ஒரு காபி தண்ணியக் குடிச்சுப்புட்டு, மாலையில டைரக்டா லஞ்சுதான்…”

“வாவ்..மச்சி…செமடா..லஞ்சுக்கெல்லாம் காசு..”

“அதெல்லாம்..அவிங்க பார்த்துக்குருவாய்ங்க..நம்ம வேலை..பதிவைப் போட்டாமா..பதிவர் சந்திப்பு போனாமான்னு இருக்குறதுதான்…அப்புறம் சாப்பிட்ட சாப்பாடு கொஞ்சம் அசதியா இருக்குமில்லையா..ஒரு குட்டித்தூக்கத்தை போட்டுட்டு, அப்படியே ஒரு பஸ்ஸோ, ஆட்டோவா புடிச்சுட்டு வீட்டுக்கு வந்துரு..”

“வாவ்..சூப்பருடா…அவ்வளவுதான் பதிவர் சந்திப்பா…”

“நோ..நோ..அப்புறம்தான் முக்கிய கட்டம் இருக்கு…”

“அய்யய்யோ..என்னாது..”

“வந்து முதல் வேலையா, லேப்டாப்பை தொறந்து, “பதிவர் சந்திப்பு…”ன்னு ஆரம்பிச்சு..”

“ஆரம்பிச்சு…”

“நம்ம தண்ணி அடிக்குறதுக்காக ரூம் போட்டு கொடுத்த நல்லவய்ங்களுக்கு ஒரு தேங்க்ஸ சொல்லிப்புடணும்..பாராட்டுறோமோ இல்லையா..என் கண்ணில் கண்ட குறைகள்..இதையெல்லாம் அடுத்த பதிவர் சந்திப்புல சரிசெய்தா நன்றாக இருக்கும்..அப்படின்னு மறக்காம சொன்னாத்தான் அடிச்ச போதை இறங்கும்..”

“ஆஹா..ராசா…அம்புட்டுதானா..”

“என்னடா கோவாலு..இப்படிச்சொல்லிப்புட்ட..டெய்லி வயித்தை கலக்குற மாதிரி..இது..மனசை கலக்குற மாதிரி டெய்லி ஒரு பதிவைப் போடணும்…”

“போட்டா..”

“மதுரைப் பக்கம் ரெண்டு ஏக்கரு வாங்கிரலாம்…”

“ராசா..நான் புதுசுதான்..அதுக்காக, இப்படியெல்லாம் அடிச்சு விடாதே..பதிவு எழுதுனா..ரெண்டு ஏக்கரெல்லாம் எப்படிடா..ரொம்பத்தான்..”

“அதுக்குத்தான் முதல்லயே சொன்னேன்..நீ குழந்தை மாதிரின்னு..டே..ஊருக்குள்ள எம்புட்டு நல்லவய்ங்க இருக்காய்ங்க தெரியுமா..டெய்லி உருக்கமா, பதிவு போட்டுக்கிட்டே இருக்கணும்..”

“அப்படி போட்டா..”

“இந்த நல்லவய்ங்க இருக்காய்ங்க தெரியுமா..”அண்ணே..இந்தாங்கண்ணே, 50 ஆயிரம்..அண்ணே..இந்தாங்கண்ணே..ஒரு லட்சம்ணு குடுத்துக்கிட்டே இருப்பாய்ங்க..”

“பார்றா..அவிங்க பாவம் ராத்திரி பகலுமா நெத்தி வியர்வை சிந்தி சம்பாதிக்கிற காசை எதுக்குடா, நம்மக்கிட்ட கொடுக்கணும்..”

“எல்லாம் உன்னோட எழுத்துக்குதாண்டா…உன்னோட வேலை..தண்ணியப் போடுறது, எலக்கிய சந்திப்பு எதுவாச்சு நடந்துச்சுனா கலந்துக்குறது..டெய்லி பதிவைப் போடுறது..மப்புல தூங்குறது..திரும்பவும் பதிவைப் போடுறது…”

“டெய்லி பதிவா ரொம்ப கஷ்டமாச்சேடா..”

“ஒன்னியும் கவலப்படாதே..இப்ப ரோட்டுப் பக்கம் போற,..மழை பெஞ்சு தண்ணியா கிடக்கு..என்ன பண்ணுவ…”

“தாண்டிப் போவேன்..”

“அங்கதான் தப்பு பண்ணுற..தாண்டி போவியோ இல்லையோ..முதல்ல வந்து பதிவப் போடு…”ரோட்டில் தண்ணீர் தேங்கியிருந்தது..நான் தாண்டிப் போனேன்..அந்தப் பக்கம் போன பாப்பா, என்னை பார்த்து சிரித்தாள்..ரெண்டு வீடு தாண்டி தங்கியிருக்கும் அந்தப் பெண் இந்தப் பக்கம் சென்றாள்…”

“அட..சூப்பரு..அப்படி போட்டா..”

“நீ போட்டு பாரு..கமெண்டு வரும் பாரு..”நல்ல பதிவுண்ணே..சமூக விழிப்புணர்வுள்ள பதிவு..உங்க பதிவப்பார்த்த பிறகுதான் எனக்கு காலையில வெளிக்கி வருது..”

“ஆஹா..அம்புட்டு நல்லவய்ங்களா..”

“ம்..ஹீம்…இவிங்கள்ளாம் இல்லை..உண்ணாம, கொள்ளாம, கஷ்டப்பட்டு மாசா, மாசம் சேர்த்த காசை நம்மளுக்கு அனுப்பி…”அண்ணே..வைச்சுக்குங்கண்ணே..” உரிமையோட அனுப்புறாய்ங்க பாரு..அவிங்கதான் ரொம்ம்ம்ம்ப நல்லவய்ங்க…”

கோவாலு டக்குன்னு எழுந்து கெளம்புறான்…

“ராசா..நான் போறேன்…”

“கோவாலு..இப்ப என்ன நடந்துச்சுன்னு கிளம்புற..”

“இப்பவே….நான் பார்த்துக்கிட்டு இருக்குற வேலைய ராஜினாமா பண்ணுறேன்..நாளையில இருந்து ஆகுறேண்டா பதிவரு…”

“ஆஹா..கோவாலு…என்ன வேணும்னாலும் பண்ணிக்க..ஆனா, அந்த காபி டம்ளரை வைச்சுட்டு போ…”

“காபியாடா போட்டுருக்கிங்க,..உங்க வீட்டுல…காபில பாலே காணோம்….இட்லி சாம்பாருல, உப்பைக் காணோம்…தண்ணில கலரே இல்ல…”

ஆஹா..அண்ணே..விட்டா விருதே வாங்கிருவான் போலிருக்கே…

10 comments:

அமுதா கிருஷ்ணா said...

ha ha ha ha ha ha .......

Anonymous said...

Fantastic Humour Sense!

IlayaDhasan said...

அசத்தல் ....அடுத்து சென்னையாமே ...ஒரு கூத்தோட தான் ஆரம்பிக்குது 2012....அந்த குஸ்தி இந்த குஸ்தி இல்ல ,
இது ஒஸ்தி மாமே!

Anonymous said...

Classic..
You really have got a taste of humour..
New year wishes..

-Ramesh.

வில்லவன் கோதை said...

fine
pandiang /verhal

Anonymous said...

HElbow comment en remove paneenga?

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Anonymous said...
HElbow comment en remove paneenga?
31 December 2011 1:49 PM
/////////////////////////
நண்பர் மன்னிக்கவும்..யாரையும் குறிப்பிட்டு எழுதவேண்டாமே..யாருடைய மனதையும் புண்படுத்துவதும் இந்தப் பதிவின் நோக்கமல்ல..புரிதலுக்கு நன்றி,,,,

அவிய்ங்க ராசா said...

நன்றி அமுதா,ரமேஷ், சிவகுமார், இளையதாசன், பாண்டியன்...

Unknown said...

மனச விட்டு சிரிச்சேன்.....நகைச்சுவையில் நிதர்சனம் கூட.......

MANO நாஞ்சில் மனோ said...

ஹை ஜாலி ஜாலி ஜாலி ஹை....!!!

Post a Comment