படத்தில் ஒரு காட்சி..காட்டு
வாழ்க்கையை படம்பிடிக்க செல்லும், தனுஷ் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்போது,
அந்த மரத்தில் உள்ள இலை ஒன்று அப்படியே தவழ்ந்து, வந்து அவருடைய முகத்தில்
மென்மையாக வருடும். அப்போது கண்ணை மூடிக்கொண்டு அதை அனுபவிப்பார்..அந்த காட்சியைப்
பார்க்கும்போது, அந்த மெல்லிய உணர்வு உங்களுக்குள்ளும் இறங்காவிட்டால், தியேட்டரை
விட்டு எழுந்து வந்து விடுவது நலம். இருக்கவே இருக்கிறது, வேலாயுதம், குருவி
படங்கள்..விசிலுக்கு விசிலுமாச்சு, குத்துப்பாட்டுக்கு குத்துமாச்சு…
மெல்லிய உணர்வுகளை
படம்பிடிப்பதில் ஒன்று, இரண்டு இயக்குநர்களே, வெற்றி பெற்றதுண்டு., பாலுமகேந்திரா
போல், அவரும், சிலநேரங்களில் அதில் சறுக்கி, காம்பரமைஸ் பண்ணிய படங்கள்
இருக்கின்றன. ஆனால் செல்வராகவன், காதல் படங்களை இயக்கும்போது, அந்த உணர்வுகளை
அப்படியே கொண்டு வந்துவிடுகிறார்.
படத்தின் கதையை சொல்லி உங்களை
போரடிக்கவிரும்பவில்லை. வைல்ட் லைப் போட்டோகிராபராக விரும்பும் தனுஷ்ஷின்
வாழ்க்கையில் காதல் குறுக்கிடுவதே கதை. இல்லை, அனுபவங்களின் தொகுப்பே இந்த படம்.
எந்த ஊருலடா, இப்படி ஆணும் பெண்ணும் ஒன்னா டேட்டிங்க் பண்ணுறாய்ங்க என்று
கேட்டால், “சாரி சார்..இதோ பக்கத்தில், பக்கத்து ஊர் பெங்களூரில், நிறைய
டேட்டிங்குகள்..சென்னைக்கும் வந்துவிட்டது..கூடிய சீக்கிரம் அதுவும் நம்
கலாசாரத்துக்குள் புகுந்துவிடும், நாம் அருவருப்பாக நினைத்தாலும் கூட..
இந்த பயலுக்கு எப்படிடா
நேஷனல் அவார்டு கொடுத்தாய்ங்க..ஒருவேளை அரசியலா இருக்குமோ, என்று நினைத்தவர்கள்
இந்த படத்தைப் பார்த்தால் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். இதற்கு மேல் என்ன நடிப்பு
வேண்டும் ஒரு நடிகனுக்கு..”ஏதோ தப்பா இருக்குதே..” என்று நாயகியை பார்த்துவிட்டு
முணங்குவதாக இருக்கட்டும், நண்பன் காதலியை ஏற்றுக்கொள்ள முடியாமல்
தவிப்பதாகட்டும்,..”மச்சி, அவ வேணாண்டா..” என்று தண்ணியைப் போட்டு புலம்புவதாகட்டும்,
மனைவியாய் அமைந்த காதலியை, கொடுமைப்படுத்தவதாகட்டும், பின்னி
பெடலெடுத்திருக்கிறார்.
நாயகியாக ரிச்சா…மாடர்ன் நாயகியாக
திடுக்கிடவைத்தாலும், மனைவியாய் அசத்துகிறார். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நண்பன்
“நீ அவனை விட்டுட்டு என் கூட வந்துடு..” என்று சொல்லும்போது, “நீ என்ன
பண்ணுவ..நீயும் ஆம்பளைதான” என்று கேட்கும்போது, பலபேருக்கு சுருக்கென்று
இருக்கும். எத்தனை பேர், இந்த சந்தர்ப்பத்தில் நல்லவராக இருப்பார்கள் என்று
அவரவரர் மனசாட்சியை கேட்டால் தெரியும்..முதல் பாதியில் அவர் கொடுக்கும்
எக்ஸ்பிரஷன்கள் தான் எனக்கு புரியவில்லை..ஒருவேளை பின்நவீனத்துவமாக இருக்குமோ…
ஒளிப்பதிவாளர் ராம்ஜியைப்
பற்றி சொல்லாவிட்டால் கண்டிப்பாக, கொடுத்த காசுக்கு புண்ணியம் வராது. ஹூரோ,
புகைப்பட கலைஞன் என்பதே, ஒளிப்பதிவாளருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..ராம்ஜி
மாதிரியான கலைஞனுக்கு சொல்லவா வேண்டும்..காட்டுக்குள் சென்று கேமிரா கவிதை பேசியது
போல் இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும்..அட..அட..
பிண்ணனி இசை, மற்றும் பாடல்கள்
படத்தின் பெரிய பலம். ஜி.வி பிரகாஷுக்கு அநேகமாக 21 வயதுதான் இருக்கும் என
நினைக்கிறேன்..ம்..நம்மெல்லாம், அந்த வயசுல….அநேகமாக, இனிமேல் செல்வா படங்களுக்கு,
யுவன் இசை அமைக்கும் வாய்ப்பு கஷ்டம்தான்..”நான் சொன்னதும்.,”, “காதல் என்
காதல்..” , “ஓட, ஓட..தூரம்” போன்ற பாடல்கள் ஏற்கனவே ஹிட்..காட்சியமைப்புகளோடு
பார்க்கும்போது, இன்னும் ஸ்வீட்..இடைவேளைக்கு பின்வரும் காட்சிகளில் டயலாக்குகளை,
பிண்ணனி இசை அழகாக நிரப்புகிறது..அப்படியே மனத்தையும்.
செல்வராகவன்..காதல், நட்பு,
போன்ற அழகியல் உணர்வுகளை படம்பிடிப்பதில் முதலிடத்தில்..இந்த படமும் அதற்கு
சாட்சி..இவரை தமிழ்சினிமா புறம்தள்ளினால், இது போன்ற உணர்வுகளை சொல்லும் படங்கள்
வாய்ப்பது மிகக்கடினம்.
படத்தில் குறைகளும் இல்லாமல்
இல்லை. கொஞ்சம் மெதுவாக செல்லும் திரைக்கதை..அண்ணாமலை பட டைப் பல்லி
காட்சிகள், டேட்டிங்க்னாலும், இது ரொம்ப
ஓவரோ, என எண்ணத் தோன்றும் காட்சிகள், செல்வராகவனுக்கேயுரிய சில கிளிஷேக்கள்..என்று
ஆங்காங்கே…
இறுதியாக செல்வராகவன் படங்களை
பிடிக்காதவர்களுக்கு, வழக்கம் போல, இது “மொக்கைப் படமாக” இருக்கலாம்…ஆனால்,
அனுபவங்களில் லயிப்பவர்களுக்கு, இது மறக்கமுடியாத படம்..எனக்கும்தான்
15 comments:
மயக்கம் என்ன?
CLICK LINK AND READ.
ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?
விமர்சனம் அருமை....உண்மையா இருக்கு...
நல்ல விமர்சனம்
அன்புடன் :
ராஜா
.. இன்று
பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்
இந்த பயலுக்கு எப்படிடா நேஷனல் அவார்டு கொடுத்தாய்ங்க..ஒருவேளை அரசியலா இருக்குமோ, என்று ninetheen இந்த படத்தை parthu எண்ணத்தை matrikkonden.
நல்ல விமர்சனம் ராஜா... என்னுடைய பார்வையும் கிட்டத்தட்ட இதே போல்தான் அமைந்திருந்தது. நல்லதொரு உணர்வுப்பூர்வமான படம். இங்கே வாசிக்கலாம்...
http://nellainanban.blogspot.com/2011/11/blog-post_25.html
நன்றி அனானி, வீடு, ரமேஷ், ராஜா, பார்த்தா, அமுதன்..
படம் ஹிட்டாகுமா? நல்ல படம் யாருக்கு சார் வேணும்? ஹிட்டா இல்லையா அத சொலுங்க?
அனுபவங்களில் லயிப்பவர்களுக்கு, இது மறக்கமுடியாத படம்..எனக்கும்தான்/
பாராட்டுக்கள்..
Nalla review. Naan innum parkala...Endha theater la indha padam partheenga??
என்ன ராசா... தினத்தந்தி விமர்சனம் மாதிரி அநியாயத்துக்கு புகழ்ந்து எழுதியிருக்கீங்க...
லக்கிலுக் விமர்சனத்தில் மயக்கம் என்ன - சைக்கோக்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்... அதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க...???
நாயகன் என்றால் மெண்டலாக இருந்துத் தொலைக்க வேண்டுமென்று செல்வராகவனுக்கு என்னதான் வேண்டுதலோ? 1999ல் பாலா ஆரம்பித்து வைத்த இந்த சைக்கோ பேய், தமிழ் சினிமாவை பிடித்து ஆட்டு, ஆட்டுவென்று ஆட்டித் தொலைக்கிறது. கருக்கலைந்து நாராய் விழுந்து கிடக்கும் நாயகியை நாலு நிமிஷத்துக்கு வெறித்துக் கொண்டே இருக்கிறான் நாயகன்.
மொக்கராசு..கலெக்சன் எடுத்தால்தான் உங்கள் பாணியில் ஹிட் என்றால், இந்தப்படம் ஹிட் ஆகுமா என்று தெரியவில்லை. கேபிள் அண்ணே, கலெக்சன் ரிப்போர்டுக்கு அப்புறம் தான் தெரியும்...))
நன்றி அனானி..
நன்றி பிரபாகர்.மோசமான படத்தை கீழே போட்டு மிதிக்கும் போது, நல்ல படத்தை பாராட்டுவதில் தப்பில்லை என நினைக்கிறேன். உணர்வுப்பூர்வமான படைப்பை, சைக்கோ மட்டும் தான் ரசிக்கவேண்டுமென்றால், இரண்டரை மணிநேரம் சைக்கோவாக இருப்பதற்கு சந்தோசப்படுகிறேன்..
ஹலோ, க்ரேஷி சார்..சைக்கோ நாயகன் பின்ன எப்படிதான் இருப்பான்..ஏன் நாயகன், எல்லாவற்றையும் காப்பாற்றும் சூப்பர்மேனாகத்தான் இருக்கவேண்டுமா என்ன...??
//ஹலோ, க்ரேஷி சார்..சைக்கோ நாயகன் பின்ன எப்படிதான் இருப்பான்..ஏன் நாயகன், எல்லாவற்றையும் காப்பாற்றும் சூப்பர்மேனாகத்தான் இருக்கவேண்டுமா என்ன...??// Super Like
Aveenga annae.. Yaen ella selva padathulaeyum Hero psychova irukkaaru? May be this can attract Psycho ppls but not others? Also some scenes should be limited(obortion,nude torture etc), TN films has some restriction to followup and present. Athu sari, neenga US kaararu..ungalukku engae puriyum :)
good review, good movie, padam parthu enjoy pannunga, athavittutu kalacharam kettupochu ethu ketupochu, athu ketu pochunu sollathinga. selvaragavan mattumthan kalasaratha kedukira ra vera yarum appadi padam edukalaya.
Post a Comment