நேற்று ஒரு வேலை விஷயமாக அவசரம், அவசரமாக கிளம்பி சென்றேன். கூடவே என் மனைவியும். போகும் வழியில் நிறைய சிக்னல்கள். சொல்லிவைத்தாற் போல் அனைத்தும் சிவப்பையே காட்டின. எனக்கு எரிச்சல் வருவதற்கு பதில் மிகவும் ஆனந்தம்.
“பாரேன்..போற வேலை நல்லபடியா முடியும் பாரேன்..” என்றேன். மனைவி வியந்தாள்.
“ஏங்க..போற வழியெல்லாம் தடங்கல் மாதிரி சிவப்பு சிக்னல் விழுது..இப்படி சொல்லுறீங்க..” சிரித்தாள்..
“ப்ச்..சொல்லுறேன் பாரு..போற வேலை நல்லபடியா முடியும்..”
மீண்டும் மீண்டும் சிவப்பு சிக்னலை பார்க்கும்போது எனக்கு சென்னையில் வேலைதேடிய ஞாபகங்கள் நினைவுக்கு வந்தது. 10 வருடத்திற்கு முன்பு சென்னையில் வேலை தேடி வந்தபோது ஏதோ காகத்திடம் மாட்டிக்கொண்ட கோழிக்குஞ்சு போல இருந்தேன். எழுந்து நிற்கும் ஐ.டி கட்டிடங்கள் என்னை ஒருபுறம் பயமுறுத்தினாலும், நுனிநாக்கில் புரளும் ஆங்கிலம் இன்னும் நிலைகுலையவைத்தது. தமிழையே தட்டுதடுமாறி பேசும் எனக்கு ஆங்கிலம் “ஹல்லோ..ஹவ் ஆர்..யூ” என்ற அளவிலேயே இருந்தது.
தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஐ.டி அலுவலம் என்று நினைக்கிறேன். முதலில் நான் இண்டர்வியூ சென்ற இடம். காலையில் எழுந்து நல்ல பிள்ளையாய் “C” “C++” புத்தகங்களை இரண்டு புரட்டி புரட்டிவிட்டு என்னை நானே தைரியபடுத்திக்கொண்டே சென்றேன். அலுவலகத்தில் சென்றவுடன் முதலில் என்னை கலவரப்படுத்தியது, மேலைநாட்டு ஸ்டைலில் அமைந்த ரிஷப்சன். அயல்தேசத்தில் வந்தது போல , ஹைஹீல்சும், லிப்ஸ்டிக்கும் அணிந்த ரிசப்சனிஸ்ட் என்ன வேண்டும் என்பதுபோல பார்த்தாள். அவள் பார்வையில் இருந்த அலட்சியம் என்னை சங்கடப்படுத்தவே, “ஐ வாண்ட் டூ மீட் ஹெச் ஆர்” என்று நான் மனப்பாடம் செய்திருந்தது கூட வருவதற்கு அடம்பிடித்தது..வேறு வழியில்லாமல்
“ஹெச். ஆர் பார்க்கலாங்களா..” என்றேன்..சிரித்தே விட்டாள்.இன்னும் மஞ்சப்பை எடுத்து வராததுதான் பாக்கி..
“go..and take your seat..” என்றாள். வெட்கத்துடன் சென்று அமர்ந்தேன். நான் அழைக்கப்படவே, மெல்ல, மெல்ல அடியெடுத்து சேர் நுனியில் அமர்ந்தேன். என்னைப் பார்த்ததுமே கண்டுபிடித்துவிட்டார்..
“ok..can you explain about yourself” என்றார். எனக்கு கைகள் நடுங்கியது. மனப்பாடம் செய்த அனைத்தும் மறந்து போனது.. முதுகுபக்கம் வியர்க்க ஆரம்பித்தது பயத்தால்..
“சார்..தமிழிலே சொல்லவா சார்..” என்றேன்..திடுக்கிட்டு பார்த்தவர்..ஒருநிமிடம் சிரித்தே விட்டார்..அசிங்கமாக போய்விட எழுந்து போய்விடலாமா என்று நினைத்தவேளையில்
“என்ன ஊர்ப்பக்கமா” என்றார்.
“ஆமா சார்..நல்லா படிச்சிருந்தேன்..முதல் இன்ட்ர்வியூ..மறந்துடுச்சு..”
“ஹா..ஹா..டீ சாப்பிடுவீங்களா..” என்றார்..எனக்கு ஆச்சர்யம்..
“ஐயோ..இல்ல சார்..பரவாயில்லை..”
“அட வாங்க..வெளியே, ஒரு டீ கடை இருக்கு.. ஒரு டீ அடிச்சுட்டு வருவோம்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வெளியே என்னை அழைத்து சென்றார்..
ஒரு மரத்தடியில் உள்ள ஒரு டீக்கடையில், இரண்டு டீயும் வடையும்..அதுதான் என்னை, என் வாழ்க்கையை, மொத்தமாக திருப்பி போட்டது. அவர் என்னை, ஒரு நொடிகூட அவமதிக்கவில்லை. மாறாக, ஆங்கிலம் என்பது, ஒரு மாயை இல்லை. தைரியம் இருந்தால் போதும், தெளிவாக ஆங்கிலம் பேசலாம் என்ற உண்மையை உணரவைத்தார். நிறைய ஆங்கில பத்திரிக்கைகளையும், திரைப்படங்களையும் அறிமுகம் செய்தார். அவரிடம் பேசி வெளியே வரும்போது, புதியமனிதனாக வெளியே வந்தேன்..வாழ்க்கையை பற்றிய பயம் போய் நம்பிக்கை வந்தது.
அதிலிருந்து முடிந்த வரை ஆங்கில பத்திரிக்கைகள் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கில திரைப்படங்களை உற்று நோக்கினேன்.தட்டுதடுமாறி நண்பர்களிடம் ஆங்கிலம் பேசினேன். அவமானப்பட்டாலும் பராவாயில்லை..எல்லா இண்ட்ர்வியூக்களும் சென்றேன், ஆங்கிலத்தில் பேசுவதற்காவது. அநேகமாக சென்னையில் உள்ள எல்லா கம்பெனிகளிலும் என் பாதம் பதிந்திருக்கும்..மெல்ல, மெல்ல எனக்கே ஒரு நம்பிக்கை வந்தது..
அப்போதுதான், ஒரு பெரிய கம்பெனியில் எனக்கு ஒரு இண்டர்வியூ வந்தது. கஷ்டப்பட்டு ப்ரிப்பேர் செய்து, வெளியே வந்து பார்க்கிறேன்..அப்படி ஒரு மழை. என்னுடைய டி.வி.எஸ் 50 க்கு மழை வந்தால் ஜன்னி பிடித்துவிடும். பாதி வழியில் படுத்துவிடும். பயத்துடன் வண்டியை ஸ்டார்ட் செய்தேன்..முன்னால் சென்ற வாகனங்கள் எல்லாம், அன்போடு என்மேல் வாரிய சகதி, புள்ளி, புள்ளியாக என் சட்டைமேல். நான் ஜாலியாக மழையும் மழை எனக்கு எதிரியாக தோன்றியது. முதல்முதலாக “ஏண்டா..இந்த மழை” என்று தோன்றியது..முதல்முறையாக போகும் வழி எங்கும் சிகப்பு சிக்னல். பாழய்ப்போன மனது, சகுனம் பார்க்க ஆரம்பித்தது, மூடநம்பிக்கை என்று மூளை சொன்னாலும்.
அரைமணிநேரம் லேட்டாக சென்றேன்..அதுவும் சட்டை முழுவதும் சகதியோடு.பயத்துடன், இண்ட்ர்வியூ அறைக்குள் செல்ல, மேனேஜர் என்னைப் பார்த்து சிரித்தார்.அதே சிரிப்பு..ஆனால் எனக்கு இந்தமுறை பயம் வரவில்லை.எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை..அப்படி ஒரு வெறி..தவறாக இருந்தாலும் சரி..முழுவதும் ஆங்கிலம்தான்.கடைசியாக அந்த வார்த்தை அவரிடமிருந்து வந்தது,.,
“you are selected. Come and get the offer”
ஏதோ சொர்க்கத்தில் பறப்பது போல இருந்தது. எத்தனை நாட்கள் தவம்..நாக்கு அப்படியே ஒட்டிக்கொண்டது..
“pardon sir” என்றேன்.அவர் சொன்னது காதில் விழுந்திருந்தாலும், இன்னொருமுறை கேட்க ஆசை..
“man..you are selected. Can’t you believe” என்றார்..வெளியே வந்தேன்..டி.வி.எஸ் 50 யை சந்தோசமாக மிதித்தேன். இந்த முறை அனைத்து சிக்னல்களிலும் சிவப்பு...
“என்னங்க..என்ன யோசிக்கிறீங்க” என்றாள் மனைவி..
“இல்ல சென்னையில் வேலை தேடுறப்ப…ப்ச்..ரொம்ப நாளாகிடுச்சுல்ல..வேலை கிடைச்சு, கல்யாணம் ஆகி, அமெரிக்கா வந்து..குழந்தை பிறந்து..இந்த சிவப்பு சிக்னல் பழைய ஞாபகத்தையெல்லாம் கிளறிடுச்சு” என்றேன்..
“ம்..சீக்கிரம் காரை ஓட்டுங்க..இன்னைக்கு வேலை முடியாது போல.” என்றாள்.
“இல்ல முடியும் பாரேன்.போற வழியெல்லாம் சிவப்பு சிக்னல்” என்றேன்..
முதல்முறையாக என் மனைவி, என்னை கேலியாக பார்த்தாள்..
18 comments:
அருமை அருமை
பயனுள்ள படைப்பு அனைத்து விதத்திலும்
அவரவர்கள் அவர்கள் நிலை பொருத்து
புரிந்து கொள்ள முடியும்
படைப்பின் வெற்றி மட்டும் அல்ல
படைப்பின் ரகசியம் கூட அதுதானே
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
நிஜம் மாதிரி இருக்கிறதே..கதையா?
கலக்கறே தலை.
swami.
Super . . Super . .
மனம் விரும்பினாலும் வீணான வறட்டு கௌரவம் தானே கீழே உள்ள உரையாடலில் சம்பந்தப்பட்ட HR போல நம்மை இருக்க விடாமல் தடுக்கிறது.
“என்ன ஊர்ப்பக்கமா” என்றார்.
“ஆமா சார்..நல்லா படிச்சிருந்தேன்..முதல் இன்ட்ர்வியூ..மறந்துடுச்சு..”
“ஹா..ஹா..டீ சாப்பிடுவீங்களா..” என்றார்..எனக்கு ஆச்சர்யம்..
“ஐயோ..இல்ல சார்..பரவாயில்லை..”
“அட வாங்க..வெளியே, ஒரு டீ கடை இருக்கு.. ஒரு டீ அடிச்சுட்டு வருவோம்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வெளியே என்னை அழைத்து சென்றார்..
ஒரு மரத்தடியில் உள்ள ஒரு டீக்கடையில், இரண்டு டீயும் வடையும்..அதுதான் என்னை, என் வாழ்க்கையை, மொத்தமாக திருப்பி போட்டது. அவர் என்னை, ஒரு நொடிகூட அவமதிக்கவில்லை. மாறாக, ஆங்கிலம் என்பது, ஒரு மாயை இல்லை. தைரியம் இருந்தால் போதும், தெளிவாக ஆங்கிலம் பேசலாம் என்ற உண்மையை உணரவைத்தார். நிறைய ஆங்கில பத்திரிக்கைகளையும், திரைப்படங்களையும் அறிமுகம் செய்தார்.
super
http://funny-indian-pics.blogspot.com/
தாழ்வு மனப்பான்மையை புறந்தள்ளி வாழ்வில் முன்னேற ஊக்கபடுத்தும் பதிவு .அருமையா எழுதிருக்கீங்க .
சிலரை கவனிச்சு பார்த்தா நிதானமா ரொம்ப மெதுவா I WOULD LIKE TO HAVE
A ... என்று இடைவெளி விட்டு பேசுவாங்க அதையே வேகமா பேசினா அவ்ளவுதான் !!!!!. நிதானமாக டென்ஷன் இல்லாமல் பேசினால் போதும் .
இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .
முடிந்த வரை... கோவையில் ஷரோன் சாப்ட்வேரில் நான் வேலைக்கு செலக்ட் செய்த ஆட்கள் சரியாக ஆங்கிலம் பேசாவிட்டாலும், தையிரியம் பார்த்து ஓனரிடம் சஜெஸ்ட் செய்தேன்.
நீங்க என்ன டி.சி.எஸ்ஸா? பாரீன் அனுப்பிட்டாங்க?
anna good post ...
இந்த மாதிரி எழுதுறது தான் உங்க பலம்..ராசா, யு ஆர் பேக்!
-
வெங்கடேஷ்
நல்லா எழுதியிருக்கீங்க! நீங்க முதல்ல சந்திச்ச எச் ஆர் போல சிலர் இருப்பதால் பலர் வாழ்வில் மகிழ்ச்சியை சந்திக்கிறார்கள்!
///////////////////////////////
Ramani said...
அருமை அருமை
பயனுள்ள படைப்பு அனைத்து விதத்திலும்
அவரவர்கள் அவர்கள் நிலை பொருத்து
புரிந்து கொள்ள முடியும்
படைப்பின் வெற்றி மட்டும் அல்ல
படைப்பின் ரகசியம் கூட அதுதானே
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
22 June 2011 12:52 AM
/////////////////////
நன்றி ரமணி..
///////////////////////////
அமுதா கிருஷ்ணா said...
நிஜம் மாதிரி இருக்கிறதே..கதையா?
22 June 2011 12:55 AM
////////////////////////////
கதையல்ல நிஜம்..
////////////////////////
Anonymous said...
கலக்கறே தலை.
swami.
22 June 2011 2:21 AM
"என் ராஜபாட்டை"- ராஜா said...
Super . . Super . .
22 June 2011 2:30 AM
////////////////////////
நன்றி சுவாமி..ராஜா..
///////////////////////////
சேக்காளி said...
மனம் விரும்பினாலும் வீணான வறட்டு கௌரவம் தானே கீழே உள்ள உரையாடலில் சம்பந்தப்பட்ட HR போல நம்மை இருக்க விடாமல் தடுக்கிறது.
“என்ன ஊர்ப்பக்கமா” என்றார்.
“ஆமா சார்..நல்லா படிச்சிருந்தேன்..முதல் இன்ட்ர்வியூ..மறந்துடுச்சு..”
“ஹா..ஹா..டீ சாப்பிடுவீங்களா..” என்றார்..எனக்கு ஆச்சர்யம்..
“ஐயோ..இல்ல சார்..பரவாயில்லை..”
“அட வாங்க..வெளியே, ஒரு டீ கடை இருக்கு.. ஒரு டீ அடிச்சுட்டு வருவோம்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வெளியே என்னை அழைத்து சென்றார்..
ஒரு மரத்தடியில் உள்ள ஒரு டீக்கடையில், இரண்டு டீயும் வடையும்..அதுதான் என்னை, என் வாழ்க்கையை, மொத்தமாக திருப்பி போட்டது. அவர் என்னை, ஒரு நொடிகூட அவமதிக்கவில்லை. மாறாக, ஆங்கிலம் என்பது, ஒரு மாயை இல்லை. தைரியம் இருந்தால் போதும், தெளிவாக ஆங்கிலம் பேசலாம் என்ற உண்மையை உணரவைத்தார். நிறைய ஆங்கில பத்திரிக்கைகளையும், திரைப்படங்களையும் அறிமுகம் செய்தார்.
22 June 2011 3:29 AM
/////////////////////////////
கரெக்ட் சேக்காளி..
/////////////////////////////
gonzalez said...
super
http://funny-indian-pics.blogspot.com/
22 June 2011 5:38 AM
angelin said...
தாழ்வு மனப்பான்மையை புறந்தள்ளி வாழ்வில் முன்னேற ஊக்கபடுத்தும் பதிவு .அருமையா எழுதிருக்கீங்க .
சிலரை கவனிச்சு பார்த்தா நிதானமா ரொம்ப மெதுவா I WOULD LIKE TO HAVE
A ... என்று இடைவெளி விட்டு பேசுவாங்க அதையே வேகமா பேசினா அவ்ளவுதான் !!!!!. நிதானமாக டென்ஷன் இல்லாமல் பேசினால் போதும் .
இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .
22 June 2011 5:50 AM
//////////////////////////
நன்றி கானல்ஸ், ஏஞ்சலின்..
///////////////////////////////
Savitha said...
முடிந்த வரை... கோவையில் ஷரோன் சாப்ட்வேரில் நான் வேலைக்கு செலக்ட் செய்த ஆட்கள் சரியாக ஆங்கிலம் பேசாவிட்டாலும், தையிரியம் பார்த்து ஓனரிடம் சஜெஸ்ட் செய்தேன்.
நீங்க என்ன டி.சி.எஸ்ஸா? பாரீன் அனுப்பிட்டாங்க?
22 June 2011 6:36 AM
ரமேஷ் கார்த்திகேயன் said...
anna good post ...
22 June 2011 8:50 AM
Anonymous said...
இந்த மாதிரி எழுதுறது தான் உங்க பலம்..ராசா, யு ஆர் பேக்!
-
வெங்கடேஷ்
22 June 2011 1:55 PM
bandhu said...
நல்லா எழுதியிருக்கீங்க! நீங்க முதல்ல சந்திச்ச எச் ஆர் போல சிலர் இருப்பதால் பலர் வாழ்வில் மகிழ்ச்சியை சந்திக்கிறார்கள்!
22 June 2011 2:17 PM
////////////////////////////
ஆமாம் சவிதா..
நன்றி ரமேஷ்
நன்றி வெங்கடேஷ்
நன்றி பந்து..
Nice post.
Post a Comment