Wednesday, 15 June, 2011

சமச்சீர் கல்வியாமுல்ல…

ஏண்ணே..இது ரொம்ப அநியாயமல்ல இருக்கு..பள்ளிக்கூட பசங்க, அவிங்க பாட்டுக்கு நினைச்சவுடனே எந்த பாடப்புத்தகத்தையும் படிச்சுறதா என்ன..அப்புறம் என்னத்துக்கு ஓட்டு போட்டிருக்கோம்.. எந்த ஊரு நியாயம் இது..கவர்மெண்டு என்னைக்கு சொல்லுதோ, அன்னைக்கு படிச்சாப்போதும். இவிங்களா போவாய்ங்களாம். புஸ்தகம் வாங்குவாயிங்களாம்..படிப்பாய்ங்களாம்..எல்லாம் எதிர்க்கட்சி சதிண்ணே..அவிங்க எழுதுன கவிதை, கதை எல்லாத்தையும் மாணவர்களைப் படிக்கவைச்சு அவிங்க தொண்டர்களா ஆக்கணும்னு சதின்னே..அதுதான் உச்சநீதிமன்றம் தெளிவா வைச்சிருச்சு ஆப்பு..குழந்தைகளா..கவர்மெண்டு சொன்னா கேட்டுக்கணும்..அதுக்குத்தான், உங்க வீட்டுல ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துக்குறாயிங்க..

ஒன்னுல இருந்து ஆறாப்பு படிக்கிற புள்ளைங்க எல்லாம், நல்ல பிள்ளையா, போனவாட்டி என்ன படிச்சீங்களோ, அதுவே படிங்க..அதுல எதையாவது..”கருணா..”, “கலைஞ”, இல்லாட்டி “கனிமொ..” அப்படின்னு தெரிஞ்சா, உடனே இன்பார்ம் பண்ணிடுங்க..”க” அப்படிங்குற வார்த்தைக்கு பதிலா இப்பதைக்கு “அம்..” என்று சேர்த்துட்டு படிங்க..ஒரு பிரச்சனையெல்லாம் வராது..அப்படியே வந்தாலும் நிபுணர்குழு பார்த்துக்குரும்..

அடுத்து 6ம் வகுப்புக்கு மேல படிக்கிற கண்ணுங்க ராசா..வீட்டுல உக்கார்ந்து சமத்தா, ஒரு 3 வாரத்துக்கு நம்ம ஜெயா டீவி பாருங்கயா..இதோ..மூணு வாரத்துக்குதான்..அப்புறம் நம்ம நிபுணர்குழு எல்லாத்தையும் படிச்சுட்டு, எதுவாச்சும் எதிர்கட்சி ஆளுங்க ஏதாவது எழுதியிருந்தா, எல்லாத்தையும் நீக்கிட்டு, பிரஸ்ஸா, ஒரு பாடத்திட்டம்…அது போனவாட்டி படிச்சதா..இல்லாட்டி, புதுசா, அப்படிங்குறதெல்லாம், அப்புறம் பார்த்துக்கலாம்.. உங்களுக்கு பிடிச்ச தேங்காய் சட்னியை, இலவச மிக்சில அரைச்சு, அந்த இலவச மின்விசிறியைப் போட்டுவிட்டு, இலவச லேப்டாப்புல, “நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளேன்னு”, புரட்சித்தலைவர் பாட்டு கேட்டுட்டு, ஜெயா டிவி நிகழ்ச்சி பார்த்துட்டு தூங்குங்க ராசாக்களா..கண்ணுங்கள்ள…ஒருபயமும் வேணாம்..எப்போதும் போல நீங்க சிரிச்சிக்கிட்டே இருக்கணும்….ஓகேயா..

இன்னும் கொஞ்சநாளுல பச்சைக் கலர் அட்டை போட்டு புஸ்தகமெல்லாம் கிடைக்கும்பா..நல்லா படிக்கணும் கண்ணுங்களா..அடுத்த 6 மாசத்துக்கு சனிக்கிழமை, ஞாயித்துக்கிழமை எல்லாம் மறந்துரணும் ராசாக்களா..எல்லாம் ஒழுங்கா, பள்ளிக்கூடத்துக்கு வந்தரணும்..உங்க வீட்டுல யாரும் கேள்விகேட்க மாட்டாய்ங்க..ஒன்னும் கவலையேபடாதீங்க….ஏன்னா, அவிங்கதான ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்துருக்காய்ங்க..

அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் நாமம் வாழ்க…

4 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

தமிழ்வாசி - Prakash said...

செமயா அவிச்சிருக்கிங்க...

அமுதா கிருஷ்ணா said...

கலைஞர் பற்றி பாடம் இருந்தால் பின்குறிப்பாக அவர் தோற்று போனதையும், மகள் ஜெயில் போனதையும் பாடத்தில் இணைத்து விடவேண்டியது தானே...

கார்த்திகேயன் said...

உங்கள் வலைப்பூவின் பதிவுகள் மிகவும் அருமை. தொடர்ந்து படித்து வருகிறேன். எழுத்து நடை ரசிக்கும்படி உள்ளது. வாழ்த்துக்கள்.

Post a Comment