உலகத்துலயே எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம் என்ன தெரியுமா….பணம், காசு, கார், பங்களா..ம்..ஹூம்..துக்கம்தாண்ணே..அதுவும் இங்க அமெரிக்காவுல அடிக்கிற குளிருல நல்லா கால் வரைக்கும் இழுத்து போர்த்திகிட்டு முரட்டு தூக்கம் போடுறதில்ல நம்மளை அடிச்சுக்க ஆளே இல்லைண்ணா பார்த்துங்களேன். அந்த நேரத்துல கத்திய எடுத்து யாரும் குத்துனாக்கூட ஏதோ கொசு கடிக்குதுன்னு தட்டிவிட்டுட்டு தூக்கத்தை கண்டினியூ பண்ணுவோம்ல..போன வாராம் இப்படி ஒரு அசதியில தூங்குறேன்..காதுக்குள்ள கொய்ங்கினு ஒரு சத்தம்…
எனக்கு கடுப்பா வந்துருச்சுண்ணே..வேண்டா வெறுப்பா கண்ணைத் தொறந்து பார்த்தா என் வீட்டுக்காரிதாண்ணே..நல்லா ஏழு ஊருக்கு கேட்குற மாதிரி பாடிக்கிட்டு இருந்தா…
“ச…ச…ரி…..ரி….க..ம…ப..த..நி…சா…”
“அடியே..இது என்ன கொடுமை..மணி என்ன தெரியுமா..நாலரைடி..”
“ஓ..எந்திரிச்சுட்டேளா…செத்த நாழி இருங்கோ…நன்னா ஸ்நானம் பண்ணிண்டு ஒரு காபி எடுத்துண்டு வர்றேன்..”
“அடிப்பாவி..நேத்து வரைக்கும் நல்லாதாணடி பேசிக்கிட்டு இருந்த…அதுக்குள்ள என்னடி..”
“ஏண்ணா..அப்படியெல்லாம் சொல்லப்படாது..ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல பாடப்போறோன்னோ இல்லியோ…”
“அய்யயோ..இந்தக் கொடுமை எப்ப..நாம அமெரிக்காவுலலே இருக்கோம்..”
“நேக்கு எல்லாம் தெரியும்..அதுக்கென்ன இப்போ..அதுதான் அவாளே சொல்லிட்டாளே..உலகத்துல இருக்குற எல்லாம் கலந்துக்கிடலாம்னு சொல்லி…”
“அடியே அபிஷ்டு..அய்யயோ..கொஞ்ச நேரம் பேசினா எனக்கும் பாஷை மாறுதே..நாமதான் சென்னை போகமாட்டமே…”
“நாமன்னு சொல்லப்படாது..நீங்கன்னு சொல்லுங்கோ..”
“இது என்ன கூத்து..”
“ஆமாங்க..போன வாராமே..என் குரலை சிடில பதிவு பண்ணி விஜய் டிவிக்கு அனுப்பிட்டேன்..”
“செத்தான் விஜய் டிவிக்காரான்…”
“என்ன..என்ன சொன்னேள்…”
“தயவு செய்து எப்போதும் போல பேசுறியா..இப்படியெல்லாம் பேசுனா உடனே செலக்ட் பண்ணிருவாய்ங்களா..நல்லா பாடுனாதான் செலக்ட் பண்ணுவாயிங்க..”
“ஒரு முயற்சிதாங்க..சரி..நான் ஒரு பாட்டு பாடுறேன்..ஸ்ருதி நல்லா இருக்கா பாருங்கோ..”
“ஸ்ருதி பக்கத்து வீட்டு பொண்ணாச்சே…நல்லாதான் இருக்கும்..”
“உதைபடுவேள்..நான் என் குரலோட ஸ்ருதிய சொன்னேன்..”
“சரி பாடி தொலை..”
“மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன…”
“அய்யோ கடவுளே..நாலரை மணிக்கு எனக்கு ஏழரையா…”
“ஏங்க..என் பாடல் பற்றி உங்கள் கமெண்ட்ஸ்..”
“நல்லாதான் பாடுற..என்ன..ஸ்ருதி அங்கெங்க போயிடுது..லாண்டிங்க் நோட்ஸ் சரியில்ல..”
“அந்த நோட்ஸ் வேணுன்னா இண்டியன் ஸ்டோர்ஸ்ல வாங்கி வந்துடுறீங்களா..”
“அப்புறம்..மேல் ஸ்தாயில பாடுறச்ச..மூச்சு வாங்குது..நல்லா மூச்சை இழுத்துப் புடி..”
“ஏங்க செத்துற மாட்டோமா..”
“அதெல்லாம் மாட்டே..அப்புறம்..பிரத் கண்ட்றோல் இல்ல..”
“என்னது பெர்த் கண்ட்றோலா..”
“அடியே..அது பிரெத் கண்ட்ரோல்லு..அப்புறம்..கமகம், இன்னும் நல்லா இருக்கணும்..”
“நான் வேணுன்னா ப்ரூ போடட்டுங்களா..”
“அய்யோ..இது வேற கமகம்..அப்புறம்..வாய்ஸ் அப்ப்பப கிராக் ஆகுது…”
“யாரைப் பார்த்து கிராக்கென்னு சொன்னீங்க..” ன்னு சொல்லிட்டு அழுக ஆரம்பிச்சுட்டா….
“சூப்பர்..யூ.ஆர்..செலக்டட்..”
“என்ன..உண்மையாதான் சொல்லுறீங்களா…”
“பின்ன...நம்ம ராகினிஸ்ரீ எப்படி அழுதுச்சு தெரியுமா….”
“வாவ்..அப்ப நானும் செலக்ட் ஆகிடிவேன் போலிருக்குங்க…”
“சரி..முதல் ரவுண்டுல செலக்ட் ஆனா உன்னோட பீலிங்க் எப்படி இருக்கும்…”
“பின்ன..ஞான் செல்க்ட் ஆனால்..குறைச்சு குறைச்சு சந்தோசம் படும்..எண்ட குருவாயூரப்பன் அருளாலதான் ஞான் செலக்ட் ஆனேன்..இப்படிதான் ஞான் கொச்சின்ல..”
ஆஹா..அண்ணே..பைனல் வரைக்கும் வந்துருவா போலிருக்கே…
17 comments:
விழுகாம விழுகாம சிரிச்சேன் ராசா.. அதகளம் பண்ணிருக்கீங்க!
யய்யா...ர்ராசாஆஆ...........கலக்கியிருக்கய்யா.....
:))
பேஷ் பேஷ், பின்றேள் அம்பி !!
நான் பல இடங்களில் தங்களோடு முரண் படுகிறேன்.
இந்த நிகழ்ச்சி இனம், மொழி என்ற பாகுபாடுகள் தாண்டியே நடத்த படுகிறது. மலையலாளிகலுகோ, பார்ப்பனர்களுக்கோ முன்னுரிமை எல்லாம் அளிப்பது இல்லை.
எனவேதான் பல தரப்பட்ட நடுவர்கள் பங்கு பெறுகிறார்கள் பல சுற்றுக்களில். உதாரணம்:
விநாயகம் நடராஜான், அனிதா குப்புசாமி, மகதி, ஜென்சி, சிதம்பரம் ஜெயராமன் மகன்....
இத்தனை குறைகள் வலைப்பதிவுகளில் நாம் எழுதி கொண்டு இருக்கும் பொழுதே , அங்கே விடியல் காலை நாலு மணிக்கே படித்த, படிக்காத நகர, கிராமம், நார்வே, கனடா, இளைஞர்கள், வயதானோர், மாற்று திறனாளிகள் என்று பலரும் கலந்து கொண்டே இருக்கின்றனர்.
சமீபத்தில் இரு காவல் துறை காவலர்கள் மிகுந்த ஆவலுடனும், ஆரவத்துடனும் கலந்து கொண்டனர்.
பல போட்டியாளர்கள் பாடும் பொழுது நாம் (me and my wife, me and my Hyd friend) எடுக்கும் முடிவும் நடுவர்கள் (ஷாலினி, ஷைலஜா, உன்னி மேனன், சௌம்யா) எடுக்கும் முடிவும் ஒத்து போகிறதே.
இது வரை வெற்றி பெற்ற ஜோசப், அனீஸ், ALKAA போன்றோர் என்ன சாதி என்றே எனக்கு தெரியாது, அறியவும் விரும்ப வில்லை. தமிழ்நாட்டில் பிறந்து படித்த என்னை விட அனீஸ் அழகாக தமிழ் பேசுகிறார்.
thalaivare.. ennaalum ithai nagaichuvaikkaakkuuda.. eetrukolla mudiyavillai.. apadi paaku paadu paarthu.. yaaraiyum select seiyvathillai.
sorry that judge,trainer name is Maanikka vinaaygam not vinayagam natarajan.
almost 5 to 6 contestants have failed in last year but again they have participated, it shows the success of that programme. If there has been a partiality they would not have turned back.
இதை படிக்கும் பொழுதுதான் ராம் இன் பழைய பதிவில் , தீராநதியில் வந்து இருந்த வண்ண தாசனின் பேட்டி படித்து கொண்டு இருந்தேன். அதை அப்படியே காப்பி செய்கிறேன்
http://azhiyasudargal.blogspot.com/2010/03/blog-post_29.html
ராநதி : திருநெல்வேலி என்றாலே பிள்ளைமார் சாதியைத் தவிர்க்கமுடியாது. பல தமிழ் எழுத்தாளர்கள் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சாதிக்கும், எழுத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
வண்ணதாசன் : பல இசைக் கலைஞர்கள் பிராமணர்களாக இருந்தார்கள். நீங்கள் சொல்வது போல எழுத்தாளர்களாக அவர்களும், பிள்ளைமார்களும் இருந்தார்கள். அதெல்லாம் ஒரு காலம் வரை. அல்லது கல்வியறிவின் ஒரு கட்டம்வரை. மாரார்கள் செண்டை வாசிப்பது மாறி, உவச்சர்கள் மேளம் வாசிக்கிறது மாதிரி, எழுத்தும் சில பேர் கைகளுக்குள் இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது அப்படியில்லை. எல்லாக் கலையையும் எல்லோரும் கற்கிறார்கள். அபாரமான வீச்சுடன் நிகழ்த்துகிறார்கள். தாண்டிச் சென்று சிகரங்களைத் தொடுகிறார்கள். வாழ்வுக்கும், எழுத்துக்கும் இடையில்தான் தீராத தொடர்பு. அந்த வாழ்வுக்கும் சாதிக்கும் தொடர்புகளிருக்கிறதென்பதால், எழுத்துக்கும் சாதிக்கும் தொடர்பு இருப்பது போல ஒரு இணையான கோடு விழுகிறது. ஆனால், அந்தக் கோடு சமூகத்தில் அல்லது அரசியலில் விழுந்து விட்டிருப்பவை போன்று, அழுத்தமானவையோ, அழிக்க முடியாதவையோ அல்ல.
தீராநதி : சாதி, மதம் பற்றிய உங்களுடைய நிலைப்பாடு என்ன?
வண்ணதாசன் : இதுபோன்ற கேள்விகள் ஒரு படைப்புலகம் சார்ந்தஒருவனிடம் கேட்கப்படுவதில்கூட, ஏதோ ஒரு வகையில் சாதியைப் பற்றிய மதத்தைப் பற்றிய வலியுறுத்தல் அல்லது தேவையற்ற நினைவூட்டல் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. இயல்பாகவே மற்றெல்லோரையும்விட, அடிப்படை அடையாளங்களிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறவனாகவே, எழுதுகிறவனும், வரைகிறவனும், இசைக்கிறவனும், செதுக்குகிறவனும், இருப்பான். எது நிலைக்க அவசியமற்றதோ, அதுபற்றிய நிலைப்பாடு குறித்த கேள்விகளுக்கும் அவசியமில்லை. நான் ஒருபோதும் தேர்தலில் நிற்கப்போவதில்லை. தமிழ்நாட்டின் சாதி அரசியலில், எழுத்தாளர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலே அதிகபட்சம்.
///////////////////////////
பரிசல்காரன் said...
விழுகாம விழுகாம சிரிச்சேன் ராசா.. அதகளம் பண்ணிருக்கீங்க!
24 July 2010 11:35 PM
///////////////////////////
விழுந்து விழுந்து ஒரு நன்றிங்கோ..)))
///////////////////////////
கண்ணா.. said...
யய்யா...ர்ராசாஆஆ...........கலக்கியிருக்கய்யா....///////////////////////////
யய்யா..நன்றிய்யா....
/////////////////////////
வினையூக்கி said...
பேஷ் பேஷ், பின்றேள் அம்பி !!
24 July 2010 11:53 PM
///////////////////////
ஷேமமா இருங்கோ..))
///////////////////////////////////
ராம்ஜி_யாஹூ said...
நான் பல இடங்களில் தங்களோடு முரண் படுகிறேன்.
இந்த நிகழ்ச்சி இனம், மொழி என்ற பாகுபாடுகள் தாண்டியே நடத்த படுகிறது. மலையலாளிகலுகோ, பார்ப்பனர்களுக்கோ முன்னுரிமை எல்லாம் அளிப்பது இல்லை.
எனவேதான் பல தரப்பட்ட நடுவர்கள் பங்கு பெறுகிறார்கள் பல சுற்றுக்களில். உதாரணம்:
விநாயகம் நடராஜான், அனிதா குப்புசாமி, மகதி, ஜென்சி, சிதம்பரம் ஜெயராமன் மகன்....
இத்தனை குறைகள் வலைப்பதிவுகளில் நாம் எழுதி கொண்டு இருக்கும் பொழுதே , அங்கே விடியல் காலை நாலு மணிக்கே படித்த, படிக்காத நகர, கிராமம், நார்வே, கனடா, இளைஞர்கள், வயதானோர், மாற்று திறனாளிகள் என்று பலரும் கலந்து கொண்டே இருக்கின்றனர்.
சமீபத்தில் இரு காவல் துறை காவலர்கள் மிகுந்த ஆவலுடனும், ஆரவத்துடனும் கலந்து கொண்டனர்.
பல போட்டியாளர்கள் பாடும் பொழுது நாம் (me and my wife, me and my Hyd friend) எடுக்கும் முடிவும் நடுவர்கள் (ஷாலினி, ஷைலஜா, உன்னி மேனன், சௌம்யா) எடுக்கும் முடிவும் ஒத்து போகிறதே.
இது வரை வெற்றி பெற்ற ஜோசப், அனீஸ், ALKAA போன்றோர் என்ன சாதி என்றே எனக்கு தெரியாது, அறியவும் விரும்ப வில்லை. தமிழ்நாட்டில் பிறந்து படித்த என்னை விட அனீஸ் அழகாக தமிழ் பேசுகிறார்.
25 July 2010 12:15 AM
Cable Sankar said...
thalaivare.. ennaalum ithai nagaichuvaikkaakkuuda.. eetrukolla mudiyavillai.. apadi paaku paadu paarthu.. yaaraiyum select seiyvathillai.
////////////////////////////
ராம்ஜி..மற்றும் கேபிள் அண்ணா..முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நான் எந்த மதத்திற்கோ, சாதிக்கோ எதிரானவன் இல்லை..என் பதிவுகளைப் படிக்கும் உங்களுக்கே இது தெரிந்திரிக்கும்.
ஆனால் சூப்பர் சிங்கர் ஜூனியரில் நடப்பது நியாயமாக இல்லை. அது தமிழகத்தின் மிகப் பிரமாண்ட குரல் தேடலா?? சங்கீதம் தெரியாத கிராமத்தில் இருந்து ஒரு பையன் இதுவரை பைனல்ஸ் வர முடிந்ததா?? அப்படியே வந்தாலும் சங்கீத ரவுண்டில் எப்படி ஜெயிக்க முடியும்..நீங்கள் இரண்டொரு பெயர்களை சொல்கிறீர்கள்..நானும் சொல்ல முடியும்..நிகில் மேத்யூ, அஜீஸ், ராகினிஸ்ரீ, அல்கா, ரேணு, விக்னேஷ்,ரவி,சந்தோஷ், பிரசன்னா, உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன், சுஜாதா,ஸ்ரீநிவாஸ், ஹரிஹரன், மாதங்கி, சின்மயி, சுபா, மகதி..இன்னும் 100 பேர் சொல்லலாம்..இதற்காக திறமை உள்ள இவர்கள் எல்லாம் சூப்பர் சிங்கரில் பங்கேற்க கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், தினக்கூலி வாங்கிக் கொண்டு, தெருவிளக்கில் படித்துக் கொண்டும், தள்ளுவண்டி தள்ளும் எவ்வளவோ உழைப்பாளிகளின் பிள்ளைகள், சங்கீதம் தெரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறான். இந்த நிகழ்ச்சி அவர்களுக்காக என்ன செய்திருக்கிறது. மாற்று திறனாளிகள், பலதுறையினர் வருகிறார்கள் என்று சொல்கிறீர்களே..எத்தனை ரவுண்ட்..
மனதை தொட்டு சொல்லுங்கள்..ராகினிஸ்ரீ பாடும்போது எத்தனை தடவை ஒழுங்காக இருந்தது. முதல் ரவுண்டிலே நீக்கப்படவேண்டிய ஒருவர் அழுகுனி ஆட்டம் ஆடி, செமிபைனல் வரை வந்தது எப்படி..வயது என்ற ஒரே காரணத்தை தவிர ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் பாடியதை விட தரமாக பாடிய சிறுவர்க்ள் எவ்வளவோ பேர் நீக்கப்பட்டனரே..
ஒரு சாமான்யன் அட்லீஸ்ட் செமிபைனல் வரைக்கும் வரட்டும், பின்னர் நான் சொல்கிறேன்..தமிழகத்தின் பிரமாண்ட குரல் தேடல் என்று..அதுவரை இது மேட்டுக்குடியனர்க்கான(ஜாதி அல்ல) ஒரு தேடலே..
மனதை தொட்டு சொல்லுங்கள்..ராகினிஸ்ரீ பாடும்போது எத்தனை தடவை ஒழுங்காக இருந்தது. முதல் ரவுண்டிலே நீக்கப்படவேண்டிய ஒருவர் அழுகுனி ஆட்டம் ஆடி, செமிபைனல் வரை வந்தது எப்படி..வயது என்ற ஒரே காரணத்தை தவிர ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் பாடியதை விட தரமாக பாடிய சிறுவர்க்ள் எவ்வளவோ பேர் நீக்கப்பட்டனரே..
ஒரு சாமான்யன் அட்லீஸ்ட் செமிபைனல் வரைக்கும் வரட்டும், பின்னர் நான் சொல்கிறேன்..தமிழகத்தின் பிரமாண்ட குரல் தேடல் என்று..அதுவரை இது மேட்டுக்குடியனர்க்கான(ஜாதி அல்ல) ஒரு தேடலே..
//////
அப்பட்டமான உண்மை.
//
மனதை தொட்டு சொல்லுங்கள்..ராகினிஸ்ரீ பாடும்போது எத்தனை தடவை ஒழுங்காக இருந்தது. முதல் ரவுண்டிலே நீக்கப்படவேண்டிய ஒருவர் அழுகுனி ஆட்டம் ஆடி, செமிபைனல் வரை வந்தது எப்படி..வயது என்ற ஒரே காரணத்தை தவிர ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் பாடியதை விட தரமாக பாடிய சிறுவர்க்ள் எவ்வளவோ பேர் நீக்கப்பட்டனரே.
//.
உண்மங்க. இருவரின் திறனை மற்றவர்களோடு ஒப்பிடும்போது சரியான கூற்று...
போனவாரம் ஒளிபரப்பான முதற்கட்ட தேர்வில் வர்னனையாளர்களாக வந்த அஜீஷ், ராகினிஸ்ரீயை பார்த்து "நம்ம ஸீஸன்ல நீ அழுது அழுது ஸெலெக்ட் ஆகிட்டப்பா" என்று உண்மையை கிண்டலாக சொன்னார்.
//மனதை தொட்டு சொல்லுங்கள்..ராகினிஸ்ரீ பாடும்போது எத்தனை தடவை ஒழுங்காக இருந்தது. முதல் ரவுண்டிலே நீக்கப்படவேண்டிய ஒருவர் அழுகுனி ஆட்டம் ஆடி, செமிபைனல் வரை வந்தது எப்படி..வயது என்ற ஒரே காரணத்தை தவிர ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் பாடியதை விட தரமாக பாடிய சிறுவர்க்ள் எவ்வளவோ பேர் நீக்கப்பட்டனரே..//
இதை ஒத்துக் கொள்கிறேன். எனக்கும் இவர்கள் இருவரின் தேர்வும் மற்ற பலரின் தேர்வு குறித்தும் பல கருத்து வேறுபாடுகள் உண்டு.
//ஒரு சாமான்யன் அட்லீஸ்ட் செமிபைனல் வரைக்கும் வரட்டும், பின்னர் நான் சொல்கிறேன்..தமிழகத்தின் பிரமாண்ட குரல் தேடல் என்று..அதுவரை இது மேட்டுக்குடியனர்க்கான(ஜாதி அல்ல) ஒரு தேடலே.//
ஆனால் இதை ஒத்துக் கொள்ள முடியாது. போட்டி என்று வந்த பிறகு இவன் சாமான்யன் தெரியாது அதனால் இவனுக்கு சலுகை கொடுக்க வேண்டும் என்பது எப்படி சரியாகும். தேசிய ஒட்டப் பந்தய போட்டியில் இவன் மேல்குடி சேர்ந்தவன் நல்ல பயிற்சி எடுத்து சத்தான உணவு உண்டு முதல் இடத்தை பிடித்தான், ஒரு சாமான்யன் போதிய சத்தும் பயிற்சியும் இல்லாதால் இரண்டாம் இடம் பிடித்தான் என கூற முடியுமா சொல்லுங்க.... போட்டியில் திறமைக்கு தான் முதலிடம். அவர்களின் சுழல் கணக்கில் வராதே.
//நாகை சிவா said...
ஆனால் இதை ஒத்துக் கொள்ள முடியாது. போட்டி என்று வந்த பிறகு இவன் சாமான்யன் தெரியாது அதனால் இவனுக்கு சலுகை கொடுக்க வேண்டும் என்பது எப்படி சரியாகும். தேசிய ஒட்டப் பந்தய போட்டியில் இவன் மேல்குடி சேர்ந்தவன் நல்ல பயிற்சி எடுத்து சத்தான உணவு உண்டு முதல் இடத்தை பிடித்தான், ஒரு சாமான்யன் போதிய சத்தும் பயிற்சியும் இல்லாதால் இரண்டாம் இடம் பிடித்தான் என கூற முடியுமா சொல்லுங்க.... போட்டியில் திறமைக்கு தான் முதலிடம். அவர்களின் சுழல் கணக்கில் வராதே.//
உண்மை..
//ஒரு சாமான்யன் அட்லீஸ்ட் செமிபைனல் வரைக்கும் வரட்டும், பின்னர் நான் சொல்கிறேன்..தமிழகத்தின் பிரமாண்ட குரல் தேடல் என்று..அதுவரை இது மேட்டுக்குடியனர்க்கான(ஜாதி அல்ல) ஒரு தேடலே..//
இது சுத்த பேத்தல்..
// ஆனால், தினக்கூலி வாங்கிக் கொண்டு, தெருவிளக்கில் படித்துக் கொண்டும், தள்ளுவண்டி தள்ளும் எவ்வளவோ உழைப்பாளிகளின் பிள்ளைகள், சங்கீதம் தெரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறான்.//
சார்...அது பாட்டு போட்டி..கோலிகுண்டு விளையாடும் இடம் இல்லை...
போட்டி என்று வந்த பிறகு திறமை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்(அது விளையாட்டு ஆனாலும் சரி கலை ஆனாலும் சரி )
இந்த போட்டியில் TRB ரேட்டிங் காக பல கூத்துக்கள் நடந்தாலும் (உ ம்) ஸ்ரீகாந்த்..... கடைசியில் திறமை மட்டுமே வெல்லும்...வென்றது..
(even though i dont like alka becoz a malali singing in a "தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்".....she deserve that victory for the song on her finals..agree or not???
நகைசுவை என ஜாதியை இழுத்து அதுக்கு ஒரு ///சாமான்யன் அட்லீஸ்ட் செமிபைனல் வரைக்கும் வரட்டும்//, என சப்பை கட்டு..ம்ம்...
என்னதான் மறைச்சாலும் குடுமி (நன்றி லக்கி) ஆடுது ..பாத்து ராசா...
நாராயண.... நாராயண.....
நன்றி குமார், வழிப்போக்கன், நாகை சிவா, நந்தன், சாந்தினி..
Post a Comment