ஆணி அதிகமாகிவிட்டதால் இப்போதெல்லாம் வாரத்திற்கு ஒரு பதிவு கூட போடமுடிவதில்லை(சந்தோசமா இருக்குமே..) அட்லீஸ்ட் மாதத்திற்கு ஒரு பதிவு எழுதாவிட்டால், செம்மொழி மாநாட்டை நடத்தவே மாட்டேன் என்று கலைஞர் அடம்பிடித்ததால், பதிவை தவிர்க்க முடியவில்லை(கடுப்பா இருக்குமே..) ஆணி அதிகம் இருந்தாலும், திரைப்படங்களைப் பார்ப்பதை குறைக்க முடியவில்லை(குழப்பமா இருக்குமே..). அப்படி சென்ற வாரம் பார்த்த படங்களின் விமர்சனம் இதோ.
மதராசப்பட்டினம்
டைட்டானிக் பார்த்திருக்கீறீர்களா..பார்க்காவிடில், உங்களுக்கு ஏதோ ஹார்மோன் கோளாறு இருக்கிறது என்ற பயத்திலாவது பார்த்திருப்பீர்கள். அதில் இரண்டு கிலோ எடுத்துக் கொள்ளுங்கள், லகான்?? ஹிந்தி தெரியாவிட்டாலும், சேட்டு பிகர்களை சைட் அடிப்பதற்காகவே, ஈகா தியேட்டருக்கு சென்றிருப்பீர்கள். அதிலிருந்து இரண்டு கிலோ எடுத்துக் கொள்ளுங்கள். நாடோடித் தென்றல்?? என்னது பார்க்கலையா..அப்பறம் எப்படியா உங்களுக்கு ரஞ்சிதாவை தெரியும்..? என்னது யாரது ரஞ்சிதாவா..? இப்படி கேட்டால் நீங்கள் இன்னும் காற்று வர கதவை திறக்கவில்லை என்றாகும். அதிலிருந்து (அண்ணே..படத்திலிருந்து..) இரண்டு கிலோ எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்குங்கள். சுவை சேர்க்க, கொஞ்சம் காமெடி, சுதந்திர போராட்ட வரலாறு..என்று சேர்க்கலாம்..நன்றாக கலக்குங்கள்..இப்போது சுவையான மதராசப்பட்டினம் ரெடி..என்னது ஸ்டவ்வை பத்த வைக்கலையா..போங்கையா….
என்னதான் பலபடங்களின் கலவையாக இருந்தாலும், சுவையான பண்டம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். சுதந்திர போராட்ட காலத்தில் சூப்பர் பிகரான வெள்ளைக்காரப் பொண்ணு(பரம்பரை புத்தி போகலை பாரு..) எமி ஜாக்சனுக்கும் எப்போதும் கீச்சு குரலில் பேசும் சலவைத்தொழிலாளி ஆர்யாவுக்கும்..அதாண்ணே..அந்த இது..அந்த இது..பேர் என்ன..ம்..சூப்பர் பிகர்களைப் பார்க்கும்போதெல்லாம் வயசு பசங்களுக்கு வருமே..ம்..காதல்..அது பற்றிக் கொள்கிறது. நம்ம ஊருன்னா அருவாளை தூக்குவோம்.இவிங்க துப்பாக்கி தூக்கி ஆர்யாவையும், எமி ஜாக்சனையும் துரத்து துரத்துன்னு துரத்துறாயிங்க..படம் பார்க்குற நமக்கே மூச்சு வாங்குதுன்னா பார்த்துங்களேன். கடைசியா ஆர்யா கொடுத்த தாலியை எடுத்துக்கொண்டு ஆர்யாவைப் பார்ப்பதற்காக லண்டனில் இருந்து சென்னை வருகிறார், கேத் வின்ஸ்லெட்..சாரி..வெள்ளைக்காரப்பெண். அப்போது அவர் நினைவுக்கு வருவதைப் படமாக எடுத்திருக்கிறார்கள்.,
ஆனால் படம் போரடிக்காமல் போகிறது. படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டரும்(விமானம் பறந்தாலே குண்டு போடுறாயிங்க என்று ஓடும் நபரும், எப்போது தூங்கி கொண்டே இருக்கும் கிராமத்து ஆளும், அந்த பள்ளிக்கூட வாத்தியாரும், குஸ்தி வாத்தியார், பரிதாபமாக சாகும் அந்த சுதந்திரப்போராட்ட வீரரும் பச்சக்கென்று மனதில் ஒட்டி விடுகிறார்கள். முதல் பாராட்டு ஆர்ட் டைரக்டருக்கு..நம்ம சென்னைதானா, என்று வியப்பூட்டும் வகையில் கலைநயமிக்க செட்டுகள். கண்டிப்பாக விருது உண்டு. அடுத்து டைரக்டர் விஜய்..இப்படி ஒரு படத்தை தந்ததற்காவே முதலில் பாராட்டு. போரடிக்காமல் திரக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த பாராட்டு, வெள்ளைக்காரப்பெண் எமிஜாக்சனுக்கு. கிஸ் அடிக்க நிறைய வாய்ப்புகள் இருந்தும் டீசன்டாக நடித்து பலபேர் வயிற்றில் எரிச்சலை கிளப்பியிருக்கிறார். ஆர்யா நடிப்பில் இரண்டு படி முன்னேற்றம். இந்தப் படம் கண்டிப்பாக அவருக்கு ஒரு மைல் கல்.
இன்னும் கொஞ்சகாலம் இருந்திருக்காலமோ என்று வருந்த வைக்கும் அனிபாவின் நடிப்பு, அந்த குஸ்தி சண்டை, நீரவ்ஷாவின் கேமிரா.. ஜீவி பிரகாஷின் இசையில் உதித்நாராயணன் கொல்லும் “வாம்மா துரையம்மா..” என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
இறுதியாக மதராசபட்டினம்..டைட்(டா) டானிக் குடிச்ச மாதிரி ஒரு கிக்கு..
பா.ரா பழனிச்சாமி
முதலில் எனக்கு கைகொடுத்து விடுங்கள். இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்..ஐயோ..தமிழ் பதிவுலகிலே முதல் முறையாக யாருமே விமர்சனம் எழுதாத ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதிகிறேன்.சத்யராஜ் ஒரு படத்தில் சொல்லுவார்..ஆப்பு என்பது யாரும் நமக்கு ஸ்பெசலாக வைப்பதில்லை..அங்கெங்கு பிக்ஸ் ஆகி இருக்கும்.அதில் நாமாக சென்று அமர்ந்து கொள்வோம். அப்படி நானாக தேடி சென்ற ஆப்புதான் இந்த படம். விவசாய விஞ்ஞானியான சுந்தரம் மாஸ்டர் தன் குடும்பத்தை அழித்தவர்களையும், தியட்டரில் பொறுமையின் சிகரமாக அமர்ந்திருக்கும் நாலு பேர்,ஆபிரேட்டர், முறுக்கு விற்பவர் என்று அனைவரையும் கொல்வதே உதை..சாரி கதை..இந்த படம் நடித்ததற்கு பதில் சுந்தரம் மாஸ்டர் “சூப்பர்..சூப்பர்..சூசூசூசூப்பர்” என்று கடித்து குதறும் ஜோடி நம்பர் ஒன்னுக்கு ஜட்ஜாகவே இருந்திருக்கலாம். ஒரே ஆறுதல், படத்தின் இசை. சில பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன.
இறுதியாக பா.ரா பழனிச்சாமி..ப்ரீயா டிக்கெட் கிடைச்சா கூட போயிடாதீங்க(படம் இன்னும் ஓடுதா..??)
அம்பாசமுத்திரம் அம்பானி
காமெடி கருணாஸை ஹீரோவாக்கியிருக்கும் படம். அம்பானியாக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வரும் ஒருவன், அம்பானியானானா அல்லது போனியானான என்பது கதை. கதையின் ஹீரோவாக கருணாஸ் ஜெயித்து விட்டார் என்றே சொல்லாம். உண்மையிலேயே மனிதர் நடிக்கிறார். அதுவும் அனைத்தையும் இழந்து விட்டு, ரயில் நிலையத்தில் புலம்பும் நடிப்பு கலக்கல். கலகலப்பாகவும், அதே நேரத்தில் லாஜிக்காவும் கதையை அமைத்து டைரக்டர் ஜெய்த்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் வரும் ஹீரோயின் கவர்ச்சியும், பாக்யராஜ் பாணி காட்சிகளும், குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களை முகம் சுழிக்க வைக்கின்றன. இசையமைப்பாளராக கருணாஸ் ஜஸ்ட் பாஸ். வித்தியாசமான அதே நேரம் ஆச்சர்யமான கிளைமாக்ஸ் படத்தை வெற்றி படமாக்குகிறது. கருணாஸ் கூடவே இருக்கும் பொடிப்பையன், திடிரென்று வில்லனாக மாறுவது யாருமே எதிர்பார்க்காத ஒன்று.
இறுதியாக அம்பாசமுத்திரம் அம்பானி – ஏலே..அசத்திப்புட்டாயிங்கல்ல..
9 comments:
ஏலே..அசத்திப்புட்யில்ல.
எல்லா படமும் பார்க்க எப்டி பொறுமை இருக்கு.......!!!
அண்ணன் இப்போ எங்க இருக்கீங்க, அவனியாபுரம, அமெரிக்காவா
விடாம டவுன் லோடு பண்ணி பாக்குறீங்க போல.
விமர்சனங்கள் அருமை.
அமெரிக்கா மண்ணை மிதிச்சாதான் உங்க எழுத்துல நகைச்சுவை வருகிறது.
//பா.ரா பழனிச்சாமி//
பாத்ரூம்ல வில்லன குத்துரதுக்காக கைய நீட்டி நீட்டி ஒரு act கொடுத்திருப்பார் பாருங்க. கமலால கூட முடியாது....
தாராவோட மாமனார் படத்த இப்படி விமர்சனம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்
நன்றிலே வெறும்பய..))
சாந்தினி, என்ன பண்றது..வேலை நேரம் போக, மத்த நேரத்தில்தான்
நன்றி ராம்ஜி..இப்போது அமெரிக்காவில் புளோரிடாவில்தான் வாசம்
ரமேஷ்..குசும்பு உங்களுக்கு ஜாஸ்தி..)))
கரிசல்காரன்..அப்ப நயந்தாரா..???
பா ரா என்றவுடன் நம்ம கருவேல நிழல் பா ரா என்று ஓடி வந்தேன் :-) (இப்போதான் அனல் காற்று, சாரு, பாலுமகேந்திரா என்றெல்லாம் கலந்து கட்டி தலைப்பு வைக்கிறார்களே ) BTW, பா ர பழனிச்சாமி போல பாஸ் - பா ரா இல்லை.
ராசாண்ணே, நல்ல இருக்கீயளா? ரொம்ப நாளுக்கு பொறவு எழுதி இருக்கிக. நெம்ப சந்தோசம். - பயபுள்ள.
Annae, Inception padam review podunga..
Post a Comment