Monday, 3 May, 2010

சுறா – பார்றா….

சுறா படம் ரிலீஸ் என்று தெரிந்தவுடன் முதலில் நான் செய்த காரியம் என்ன தெரியுமா..கோவாலு கண்ணில் படாமல் ஒளிந்ததுதான்..கோவாலு, விஜய்யின் தீவிர ரசிகர் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் வெறியன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். கோவாலுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு, தான் சாகும்போது கூட, நானும் சாக வேண்டும் என்று எதிர்பார்ப்பான். அதனால், எப்போது விஜய் படம் பார்த்தாலும் எனக்கும் ஒரு டிக்கெட் ரெடியாகவே எடுத்து வைத்திருப்பான். நாங்கள் இரண்டு பேரும் ஜோடியா, செத்து, செத்து விளையாடுவோம்.

ஆனால் இந்தமுறை நான் சுதாரித்துக் கொண்டேன். போன் எடுத்தாதானே கோவாலு வரச்சொல்லுவான். அவனிடம் வரும் எந்த போன் காலும் அட்டெண்ட் பண்ணக் கூடாது என முடிவு பண்ணினேன். அதானல் போனை ஆப் பண்ணிவிட்டு நல்லா தூங்குறேன்…யாரோ காலங்காத்தால காலிங்க் பெல் அடிச்சாயிங்க..சரி பேப்பர்காரந்தான்னு நம்பி போய் கதவைத் திறந்ததுதான் நான் அன்னிக்கு பண்ணின பாவகாரியம். சனி, சந்துக்குள்ளயும் புகுந்து துரத்துவாயிங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். அன்னைக்குதான் நேரில பார்த்தேன். கோவாலு நல்லா 2 கோட்டிங்க் பவுடர் போட்டிக்கிட்டு நிக்கிறாயிங்கண்ணே(ஐநாக்ஸ் போறாராம்மா…)

“டே ராசா..என்ன போன் டெட்டா..”

“இல்ல ஆளுதான் டெட்டு..”

“சரி..அதை விடு..டக்குன்னு கிளம்பு..இன்னும் ஒரு மணி நேரத்துல் ஷோ போட்டுருவாயிங்க..”

“கோவாலு..ஒரு மாதிரி தலை வலிக்குதுடா..இன்னைக்கு வேணான்டா..”

“டே ராசா..சொன்னா கேளு..என்ன கத்த வைக்காத..”

“வேணான்டா..நான் உண்மைத்தமிழன் விமர்சனத்தைப் படிச்சிக்குருவேன்…காவல்காரன் வேணும்னா வர்றேன்டா..தயவு செய்து..”

“டே..ராசா..சொன்னா கேளு..படம் ஹிட்..நம்பலைன்னா பாரேன்..உங்க பதிவர் லக்கிகூட சூப்பர் ஹிட்டுன்னு எழுதுவார்..”

“கோவாலு..அவர் என்னைக்கு வேட்டைக்காரனை சூப்பர்ஹிட்டுன்னு சொன்னாரோ, அப்பவே அவர் விமர்சனத்தை படிக்கிறத நிப்பாட்டிட்டேன்..”

“ராசா..அப்ப நண்பன் கூப்பிட்டா வர்றமாட்ட..”

“யாரோ நண்பன்னு சொன்னியே கோவாலு..வெளியே நிக்கிறானா..தள்ளு பார்க்கணும்..”

அவ்வளவுதான் கோவாலு டென்சனாகிட்டான்..

“நீ..இப்ப வரலைன்னா டிக்கெட்டை கிழிச்சிப் போட்ருவேன்..”

கூட்டமா சாகுறதுல எவ்வளவு விருப்பம் பாருங்கண்ணே..அன்னைக்கு எனக்கு ஏழரை நாட்டு சனிதான் சட்டை போட்டு விட்டது..போற வழியில ஏதாவது ஆக்சிடெண்ட் நடக்காதான்னு கடவுளை வேண்டிக்கிட்டே பைக்குல உக்கார்ந்தேன். அன்னைக்கு கடவுளும் சதி பண்ணிட்டார்,..

விஜய்யின் ஓபனிங்க் சீனைப் பார்த்தவுடன் கோவாலு துள்ளி குதிக்கிறான்..

“ராசா..பார்த்தியாடா..இளைய தளபதிய..பின்னுராருல்லா..”

“கோவாலு..லைட்டா வயித்த கலக்குற மாதிரி இருக்கு..நீ வேணா பார்த்துட்டு வர்றியா..”

“ராசா..கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறியா..தளபதி பஞ்ச் டயலாக் பேசப் போறாரு..”

“மேல கை வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு…”

எனக்கு முதல்முறையாக வாமிட் சென்சேசனாக இருந்தது. அப்படியே அவர் இந்த டயலாக்கையும் சொல்லி இருக்கலாம்..

“படத்தைப் பார்க்குறதுக்கு முன்னாடி, ஒரு தடவைக்கு முன்னாடி..”

கோவாலு, தமன்னா டான்ஸ் பார்த்து மும்மரமாக, அப்படியே எழுந்து ஓடினேன்..ஓட்டம்னா ஓட்டம் அப்படி ஒரு ஓட்டம்..வீடு வந்தவுடன் கொஞ்ச நேரம் டி.வி பார்க்கலாமுன்னு ஆன் பண்ணினா..

“மேல கை வைக்கிறதுக்கு முன்னாடி..”

என்னது விமர்சனமா…???

வேட்டைக்காரனுக்கு நான் எழுதிய விமர்சனம்..

“விஜய் திருந்தவில்லை.திருந்தவும் மாட்டார்..”

சுறாவுக்கு விமர்சனம்..

“இந்த ஜென்மமில்லை..ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் விஜய் திருந்த மாட்டார்.”

26 comments:

வரதராஜலு .பூ said...

அய்யோ பாவம்.

//“இந்த ஜென்மமில்லை..ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் விஜய் திருந்த மாட்டார்.”//

காவல்காரனுக்கு என்ன எழுதுவிங்க?

damildumil said...

மீன் புடிக்கிறவர் அம்பது லட்ச ருபாய் audi கார்ல தான் வராராமே? அப்படியா?? பக்வதி படத்துல மாட்டுன அந்த கருப்பு லெதர் ஜாக்கெட்டை மனுசன் கழட்ட மாட்டேங்குறார். ஹீரோயினை வச்சு தான் படம் பேரை நியாபகம் வச்சுக்க வேண்டியதா இருக்கு. கதையை தான் மாத்தல அதையாச்சும் மாத்தறாரே

VijayRasigan said...

Padam paathuttu vimarasanam panra yen goiyalae...
nee enna ajith kitta kaashu vaangita yaeluthurae?

damildumil said...

//Padam paathuttu vimarasanam panra yen goiyalae...
nee enna ajith kitta kaashu vaangita yaeluthurae//

ஓ...இப்படி எழுதுனா அஜித் காசு வேற கொடுப்பாரா??? அந்த மனுசன் மட்டும் அப்படி கொடுக்க ஆரம்பிச்சாருன்னா இந்நேரம் நடு ரோட்டுல பிச்சை தான் எடுத்திட்டு இருப்பாரு.

வெறும்பய said...

தங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,

இப்படிக்கு:
சுறாவால் பாதிக்கப்பட்டவன்,

அப்பாவி said...

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

அப்பாவி said...

ராசா....... கோவால எந்த வார்டுல அட்மிட் பண்ணிருக்காங்க?

philosophy prabhakaran said...

/* Padam paathuttu vimarasanam panra yen goiyalae...
nee enna ajith kitta kaashu vaangita yaeluthurae? */

இப்படி மரியாதை கெட்டத்தனமா எழுதுறதுதான் உங்க தலைவன் உங்களுக்கு கத்துகொடுத்த நாகரிகம் போல...

philosophy prabhakaran said...

நல்ல புனைவு... பட், இதெல்லாம் ஒரு தன்னம்பிக்கை வளர்க்க உதவும் விஷயங்கள் ராசா... சுறா படத்தையே தான்கிக்கொண்டவன், நாளைக்கு சுனாமியே வந்தாலும் தாங்குவான்...

tamil-inimai.blogger.com said...

விஜய் திருந்தினா அது உலகத்துல இருக்கிற கடவுள் மற்றும் மனிதர்கள் அனைவருக்கும் நல்லது.ஆனா அது நடக்காது ஏன்னா அவருக்கு இத விட்டா வேறமாதிரி நடிக்க தெரியாது ............
உங்களை நினைத்தாள் பாவமாக இருக்கிறது நிங்கள் அன்று 108-அவசர உதவிக்கு அழைத்து தப்பித்திருக்கலாம்

மோகன் குமார் said...

தலைப்பு மட்டும் பார்ரா-ன்னு வச்சிருக்கீங்க? :))

senthil kumaran said...

ராசா உங்களுக்கு மட்டும் இல்லை வெளியிலே சொல்லிக்க முடியலைனாலும் விஜய் ரசிகனுகளுக்கும் இதே நிலைமைதான், பாவம் அவனுகளும் மனுசபிறப்புதானே. ரசிகர்களின் எதிர்ப்பு குரல் தியேட்டரி கூடுதலாக ஒலித்ததை வைத்து அவர்கள் திருந்திகொண்டுருக்கீறார்கள் என்பது தெரிகிறது . விஜய்க்குதான் நன்றி சொல்ல வேண்டும். இதே மாதிரி படங்களையே திரும்ப திரும்ப ரசிகர்களை திருத்த வேண்டும்.

Anonymous said...

ipdi patta padha nama vimarsanam panna namakuthan kevalam pesama 60rs koduthu quarter adichutu utlayae paduthurukalam

Anonymous said...

“டே..ராசா..சொன்னா கேளு..படம் ஹிட்..நம்பலைன்னா பாரேன்..உங்க பதிவர் லக்கிகூட சூப்பர் ஹிட்டுன்னு எழுதுவார்..”

“கோவாலு..அவர் என்னைக்கு வேட்டைக்காரனை சூப்பர்ஹிட்டுன்னு சொன்னாரோ, அப்பவே அவர் விமர்சனத்தை படிக்கிறத நிப்பாட்டிட்டேன்..”
-------------------------------

ha ha... u r ri8.

SANTHOSHI said...

இருந்தாலும் பாவம் சார் விஜய்! இந்த மாதிரியா போட்டுத் தாக்குறது!!!! படிச்சுட்டு வயிறு குலுங்க நான் மட்டும் சிரிக்கவில்லை. என் அலுவலக நண்பர்களிடமும் நீங்கள் எழுதியதை காண்பித்து அன்று முழுவதும் ஒரே சிரிப்புதான் போங்கள்.

"உழவன்" "Uzhavan" said...

அருமை :-) (நான் சொல்றது சுறாவை இல்ல)

ராமுடு said...

Kalakkarenga rasa.. Its mistake of Mr.Fazil and Mr.Sangili murugan to give a life to vijay thro film "Kathalukku mariyathai".. Otherwise this guy will pair only with sangavi..

Anonymous said...

semma adi vijaykku

சதீஸ் கண்ணன் said...

damildumil said...
// ஹீரோயினை வச்சு தான் படம் பேரை நியாபகம் வச்சுக்க வேண்டியதா இருக்கு. //

அசத்தல்... :)

taaru said...

அப்டி எல்லாம் பொசுக்குன்ட்டு சொல்லிட்டா எப்பூடி ... பாடல் வெளியீட்டு விழாவுல தளபதி கே.எஸ்.ஆர் கிட்ட உறுதி மொழி கொடுத்திருக்காரு.. அடுத்த படம் சும்மா பின்னு பின்னும்... படத்துக்கு பேரே "பாடி காட் முனீஸ்வரன் [இர்]"
note: //அன்னைக்கு எனக்கு ஏழரை நாட்டு சனிதான் சட்டை போட்டு விட்டது//
என்னாது சனியா? யார சொல்றீரு?!!!

இளைய கவி said...

ஹா ஹா ஹா நல்ல கமெடி...

தமிழன் தாயகத்திலிருந்து said...

நேற்றுதான் சொந்தக்காசில சூனியம் வைச்சிக்கிட்டேன்,அதான் சுறா பார்த்தேன்ணை ,போகும் போதே எண்ட மனுசி போகாதே போகதே என்கணவா எண்டு பாட்டு பாடினாளே கேட்காம படம் பார்க்க போனேனே,இது வேணும் .பாவிப்பயலுக படம் தொடங்கின உடனேயே தியட்டர வெளிப்பக்கமா பூட்டிட்டானுக. மல்ரி பரல் செல் அடில கூட தப்பின நமக்கு சுறாவிட்ட தப்பமுடியல ஜயோ காசும் போச்சே...

சுனாமி வருது சூறாவளி வருது எண்டு சொல்லுறானுக பார்த்தா பயபுள்ள கையைக்கட்டிக்கிட்டு நடந்து வாறாரு,யெப்பா இது உலக மகா நடிப்புடா சாமி, அமெரிக்கா உலக பயங்கரவாத பட்டியல்ல நம்மாளை ஏன் இன்னும் சேர்க்காம வைச்சிருக்கானுக,ராஜபக்ஸ பரவாயில்லையே, நம்மாளு உலகம் பூரா உள்ள தமிழர்களோட ஸ்பீகர அவுட்டாக்கி அங்கவீனமாக்கப்போறானே...

Anonymous said...

Watch This.
http://www.scubeproductions.com/jakkuboys.html

ramya said...

sollama kollama america pona stupid olzhika

ramya said...

sollama kollama america pona stupid olzhika onnai friendship vittu thalli vaikiraen or else watch sura thousand times

theepan said...

//ராஜபக்ஸ பரவாயில்லையே, நம்மாளு உலகம் பூரா உள்ள தமிழர்களோட ஸ்பீகர அவுட்டாக்கி அங்கவீனமாக்கப்போறானே... // wow nice

Post a Comment