Saturday, 24 April 2010

தேவடியா பசங்க……

இந்த கொளுத்தும் வெயிலில், எல்லோரும் ஏ.சி காரில் செல்லதான் ஆசைப்படுவார்கள், சந்தர்ப்பம் கிடைத்தால். எனக்கு என் பல்சர் பைக்தான் ஏ.சி கார். என்னுடைய உற்ற தோழன் என்று கூட சொல்லலாம். நான் நினைத்த மாத்திரத்துக்கு என்னை கொண்டு சேர்த்து விடும். அதுவும் பத்திரமாக..நான் என்ன சொன்னாலும் கேட்கும். என் பயணம் முழுவதும், என் மேல் ஒட்டிக்கொண்டு எப்போதும் நேசத்துடன்.

நம்மை மாதிரி நடுத்தர வர்க்கத்தின் செலவீனங்களைப் புரிந்து கொண்டு இதுவரை ஒருமுறை கூட எனக்கு செலவு வைத்ததில்லை. சைடு ஸ்டாண்ட் போட்டு அது நிற்கும் அழகைப் பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கும். ஒரு மாதிரி கர்வத்துடன் நிற்பது போல் இருக்கும். காலை ஆறு மணி போல பைக்கை எடுத்துக் கொண்டு கொஞ்சம் ஆள் நடமாட்டமில்லா இடங்களில், தென்றலை அனுபவித்துக் கொண்டு ஓட்டிப்பாருங்கள். அனைத்தையும் மறந்து விடுவீர்கள்…காலை பேப்பர், பால் பாக்கெட், மாத சம்பளம், அப்ரைசல், ஹிட்ஸ், பின்னூட்டம் எல்லாம் தூசி போல இருக்கும்.

அப்படிப்பட்ட என் தோழனுக்கு நேற்று என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. மக்கர் செய்தான். ஆபிஸிலிருந்து கிளம்ப முடியவில்லை. நான் என்றும் அவனை உதைத்து ஸ்டார்ட் பண்ணியதில்லை, அவனுக்கு வலிக்கும் என்பதால். எப்போதும் பட்டன் ஸ்டார்ட்தான். முதல் முறையாக அவனை உதைத்தேன், மனதைக் கல்லாக்கிக் கொண்டு. அப்படியும் அமைதியாக இருந்தான்.

எனக்கு எப்போதும் பிடிக்காத சென்னையின் நெரிசல் நிறைந்த பஸ் பயணத்திற்கு ரெடியானேன். வேளச்சேரி வழியாக செல்லும் பஸ்ஸில் ஏறினேன். எனக்கு எப்போதும் நெரிசல் நிறைந்த பஸ் பயணம் பிடிப்பதில்லை. ஆண்களையே கற்பழித்து சக்கையாக தூக்கி எறிந்து விடும் நீங்கள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தத்தில். அதனால், ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.

அப்போதுதான் அவளைப் பார்த்தேன். ஒரு 22 வயது இருக்கும். மாநிறம். சென்னை வெயிலின் கொடுமை அவள் முகத்தில் தெரிந்தது. வியர்த்து வழிந்து கொண்டிருந்தாள். அவளுடைய அழுக்கேறிய உடை அவள் ஏழ்மை நிலைமையைக் காட்டியது. கலைந்த முடி அவள் வேலைக் கொடுமையைக் காட்டியது. தலை முழுக்க தூசி. கண்டிப்பாக ஏதோ தொழிற்சாலையில் வேலை பார்க்க வேண்டும். வேலை முடித்து வீடு செல்கிறாள் போலும்.

கையில் சற்று கிழிந்து போன மலிவு விலை ஹேண்ட்பேக் வைத்திருந்தாள். கண்டக்டரிடம் டிக்கெட் வாங்க ஹேண்ட்பேக்கை திறந்தாள். ஹேண்ட்பேக் சற்று சரியவே , அதில் உள்ள அனைத்து சில்லறைகளும் சிதறின. கதறி விட்டாள்..”அய்யோ..என் காசு..” பாவம், அந்தக் காசை சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படிருப்பாள். வேலையில் எவ்வளவு அவமானங்களை தாங்கிக்கொண்டு…ஒரு கணம் பெண் என்பதை மறந்து, எல்லோரையும் கை வைத்து தள்ளினாள். குனிந்து எல்லாவற்றையும் பொறுக்க ஆரம்பித்தாள், ஆடை விலகுவதை கூட மறந்து. எல்லாக் கழுகு பார்வைகளும் அவள் மேலேயே இருந்தன சில பேர் உதவ முயற்சி செய்தார்கள். சில பேர்,மனசாட்சியை அடகு வைத்துக் கொண்டு, சாக்காக அவளை தொட முயற்சித்தார்கள். அவளுக்கு அதெல்லாம் பெரியதாக தெரியவில்லை. எப்படியாவது எல்லாக் காசுகளையும் எடுத்து விடவேண்டுமென்பதே அவள் நோக்கமாக இருந்தது. கண்டிப்பாக அந்தக் காசுதான் அவள் குடும்பத்திற்கு இரவு சாப்பாட்டுக்கு என்று தெரிந்தது.

ஒரு வழியாக எல்லாக் காசுகளையும் எடுத்த பின்புதான் நிம்மதியானாள். எதையோ சாதித்த திருப்தி தெரிந்தது. அவள் ஆடைகளை சரி செய்து கொண்டாள். “1 பாரிஸ் கார்னர்” என்று டிக்கெட் வாங்கும்போது அவள் குரலில் ஒரு உற்சாகம் தெரிந்தது. திடிரென்று அவள் முகம் ஒரு மாதிரியானது. சற்று நெளிந்தாள். முன்னே வர முயற்சித்தாள். ஆனால் கூட்டம் அவளை விடவில்லை. அப்போதுதான் கவனித்தேன். அவள் பின்னால் நின்று கொண்டு ஒரு மனித மிருகம் அவளை உரசிக் கொண்டு இருந்தது. அந்த மிருகத்திற்கு ஒரு 40 வ்யது இருக்கும். அவனுக்கு அவள் வயதில் கண்டிப்பாக ஒரு பெண் இருக்க வேண்டும். முகத்தில் கேவலமான ஒரு புன்னகை. அவளை உரசுவதன் மூலம் அப்படி என்ன சாதித்தானோ என்று தெரியவில்லை., அவன் அம்மாவிற்கும் தங்கச்சிக்கும் இருப்பதுதான் இவளுக்கும் இருக்கும் என்பதை மறந்து.

அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டாள். முடிந்த வரை தள்ளிப்போக முயற்சித்தாள். ஆனால் இருக்கும் கூட்டத்தில் முடியவில்லை. அவனும் இதையே சாக்காக எடுத்துக் கொண்டு மேலும் உரசினான். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போனாள். திரும்பி அவனை ஒரு முறை முறைத்தாள். அவன் தள்ளிப்போனான். ஆனால் திரும்பவும் அவளருகிலேயே வந்தான். எனக்கு அவனை அடிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் நான் ஏதாவது சொன்னால் திரும்ப கிடைக்க போகும் பதில்,”அப்படி சொகுசா வரணும்னா ஏ.சி காரில் வரவேண்டியதுதான..பஸ்ஸுனா அப்படிதான்பா இருக்கும்..” அதற்குள் என் ஸ்டாப் வந்ததால் அவசரமாக இறங்கினேன், என் கையாலாகதனத்தை நொந்து கொண்டு..

இறங்கி திரும்பி பார்த்தால், அவளும் என் ஸ்டாப்பில் இறங்கியிருந்தாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. “பாரிஸ் கார்னர்” என்றல்லவா டிக்கெட் எடுத்திருந்தாள். யோசனையுடன் நான் கிளம்ப எத்தனித்த போது அவள் என்னை நோக்கி வருவது தெரிந்தது….நான் நின்றேன்..

“அண்ணா..ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..”

அப்போதுதான் அவள் கண்களைக் கவனித்தேன். கண்கள் கலங்கியிருந்தன. முகம் பஸ்ஸில் நடந்த அவமானத்தை காட்டியது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கூனி குறுகி போயிருந்தாள்..எனக்கு ஒரு தங்கை இல்லை. ஆனால் அவளை பார்க்கும்போது என் தங்கையாக நினைக்க தோன்றியது..

“சொல்லுமா…”

“நான் பாரிஸ் கார்னர் போகணும்..இந்த ஸ்டாப்புல பாரிஸ் கார்னர் பஸ் நிக்குமான்னு தெரியுமா..”

“நம்ம வந்த பஸ்ஸே பாரிஸ் கார்னர் போகுமே..தெரியாம இறங்கிட்டியா..”

“இல்லைண்ணே..பஸ்ஸில கூட்டம் அதிகம்...ரொம்ப இடிக்கிறாயிங்க..இடுப்பில கை…”

அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அதுவரை அவள் கண்ணில் அடங்கியிருந்த கண்ணிர் அவளை அறியாமல் வெளியே வந்தது..அவசரமாக துடைத்துக் கொண்டு அந்த வார்த்தையை சொன்னாள்…

“தேவடியா பசங்க…”

41 comments:

Anand said...

ஐயோ ... கத்தரி வெயில விட சூடா இருக்கு .....

Unknown said...

பஸ் ஏத்தி உட்டீங்களா இல்லையா ?

Anonymous said...

சென்னை போன்ற செக்ஸ் வறண்ட ஊர்களில் வாழ்பவர்கள் எல்லோருமே ஒரு விதத்தில் தே.பசங்க தான். அப்படி இருப்பது கூட பரவாயில்லை, ஆனால் அப்படி இருப்பது தான் தமிழ் பண்பாடு என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர்கள் தான் நாட்டை ஆள்கிறார்கள் என்னும் போது...சென்னை வாழ் ஆண்களே உங்களுக்கெல்லாம் எதுக்கு உடம்பில் அந்த எக்ஸ்டிரா ஃபிட்டிங்...வெட்டி எடுத்துவிடுங்கள்...அது உங்களிடம் இருக்கத் தகுதியில்லை என்றே சொல்லலாம்.

சரவணகுமார் said...

வணக்கம் அவிய்ங்க ராசா..ஒரு அபலைப் பெண்ணுக்கு நேரும் அவலம் பற்றி நன்றாக அக்கரைப்பட்டு இருக்கிறீர்கள் ஆனால் ஒரு ஆண் தவறு செய்தாலும் அவனைத் திட்ட நீங்கள் தேர்ந்தெடுப்பது அவனது அன்னையான பெண்ணைத்தான் என்பது நல்ல நகை முரண். இது போல நம்மை அறியாமலேயே நிறைய விட(ய)ங்களளில் பெண்மையை களங்கப்படுத்தும் ஆணாதிக்க சமுதாய தாக்கத்தை நாமே முனைந்து தான் திருத்திக் கொள்ளவேண்டும்.

அவிய்ங்க ராசா said...

வருகைக்கு நன்றி ஆனந்த்..

அவுங்களே போயிக்கிரேன்னு சொல்லிட்டாங்கண்ணே..

அனானி..காரத்தை கொஞ்சம் குறைத்து கொள்ளலாமே..

சரவணன்..நிகழ்வை நான் பதிவாக எழுதியிருக்கிறேன். எந்த இடத்திலும் நான் அந்த வார்த்தையை நியாயப்படுத்தவில்லை மற்றும் நான் சொல்லியதாக எங்கும் எழுதவில்லை. என்னதான் கோபத்தில் விழுந்த வார்த்தைகள் என்றாலும், அந்த வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை.

MaduraiMalli said...

Thambi no words after reading this article..

ஜெய்லானி said...

ச்சே.... யாரை குறை சொல்ல ..வர வர மனுசன் மிருகத்தை விட கேவலமாயிட்டே வரான்.

sheik.mukthar said...

Real article with real feelings.A really a good one.

puduvaisiva said...

Rautharam Pazhaku Rasaa

பாவக்காய் said...

>>ஆனால் ஒரு ஆண் தவறு செய்தாலும் அவனைத் திட்ட நீங்கள் தேர்ந்தெடுப்பது அவனது அன்னையான பெண்ணைத்தான் என்பது நல்ல நகை முரண். இது போல நம்மை அறியாமலேயே நிறைய விட(ய)ங்களளில் பெண்மையை களங்கப்படுத்தும் ஆணாதிக்க சமுதாய தாக்கத்தை நாமே முனைந்து தான் திருத்திக் கொள்ளவேண்டும்.>>
Arumai....

Raja, Written the experiencce very well..

Anonymous said...

My name is Banu...

What ever you have written, its happening everyday and everywhere. 1 thing if you watch closely, the person who is teasing the womens their age is more then 35. bcoz personaly i had exprienced 3 times.
1. when i was doing schooling, 1 guy(35 yr) teased the gril was doing 6th std. realy i become schocked, oongi oru arai veten, he steped out in next stop.

Anonymous said...

தேவடியா பசங்க

Anonymous said...

கண்டிப்பாக அந்தக் காசுதான் அவள் குடும்பத்திற்கு இரவு சாப்பாட்டுக்கு என்று தெரிந்தது.
தேவடியா பசங்க

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

இப்படி ஒரு தலைப்பா என்று கடிந்து பின்னூட்டம் இடலாமென நுழைந்தேன்... சொல்வதறியாது திகைத்து இருக்கிறேன்.... இருந்தாலும் அந்த மிருகம் செய்த குற்றத்திற்காக, அவனது தாயான, மற்றொரு பெண்ணையும் களங்கப்படுத்த விரும்பவில்லை.... பிறகு அந்த காமுகனுக்கும் எனக்கும் ஏது வேறுபாடு?

? said...

NANTRI

குடுகுடுப்பை said...

அப்போதுதான் அவளைப் பார்த்தேன். ஒரு 22 வயது இருக்கும். மாநிறம். சென்னை வெயிலின் கொடுமை அவள் முகத்தில் தெரிந்தது. வியர்த்து வழிந்து கொண்டிருந்தாள். அவளுடைய அழுக்கேறிய உடை அவள் ஏழ்மை நிலைமையைக் காட்டியது. கலைந்த முடி அவள் வேலைக் கொடுமையைக் காட்டியது. தலை முழுக்க தூசி. கண்டிப்பாக ஏதோ தொழிற்சாலையில் வேலை பார்க்க வேண்டும். வேலை முடித்து வீடு செல்கிறாள் போலும்.
//

சம்பவத்தை நன்றாக எழுதியுள்ளீர்கள், ஆனால் உங்களுடைய கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளும் இது போன்ற கேரக்டர்களை பற்றியே வருகிறது, எல்லாவற்றிலும் நீங்கள் எம்ஜியார் மாதிரி நல்லவராகவே இருக்கிறீர்கள் அதுதான் இவைகளெல்லாம் புனைவோ என்று தோன்றவைக்கின்றது.

வெத்து வேட்டு said...

why you didn't slap that animal?
that would have been a lesson to all animals in the bus...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இது அன்றாடம் ஒவ்வொரு நாளும் நடக்கும் சாதரண விசையமாகிவிட்டது தமிழ்நாட்டில், பல சினிமாக்களில் அடிக்கடி இவைபோன்ற நிகழ்வுகளை காட்சிகளாக்கி மனித இனத்தை காமகொடுங்கூட்டமாக்கி விட்டார்கள்.இந்த பேருந்து நிகழ்வு போல் அலுவலகங்களிலும், பொது இடங்களிலும், மார்கோட் பகுதிகளிலும் ரொம்ப சர்வ சாதாரணம கமவெறியாட்டம் ஆடுகிறார் அயோக்கியர்கள். இவர்கள் மனநோயளிகள், இவனுகளை திட்டினால் மட்டும் போதாது. அவன்களுடை ??????????? எனத்த செல்றது இந்த கேடுகேட்ட உலகில்.

எங்கோ போச்சு ஈவ் டீசிங் சட்டம்? இது தான் பெண்ணுறிமையா?

Unknown said...

ரௌத்திரம் பழகுங்கள் சார்...

Unknown said...

இது அன்றாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது, பெண்கள் செருப்பை பயன்படுத்த வேணும்,

கண்ணா.. said...

பதிவும், சரவணகுமாரின் பின்னூட்டமும் அருமை..

பதிவை படித்து அதே வார்த்தையை பின்னூட்டமாக போடலாம் என கோபத்துடன் வந்தால் அங்கே வித்தியாசமான பார்வையில் பின்னூட்டம்.

நர்சிம் said...

;)

செந்தில்குமார் said...

இப்படி ஒரு தலைப்பா என்று
நுழைந்தேன்

கண்டிப்பாக அந்தக் காசுதான் அவள் குடும்பத்திற்கு இரவு சாப்பாட்டுக்கு என்று தெரிந்தது

அருமை..

சிநேகிதன் அக்பர் said...

பெண்களுக்கு எதிரான இது போன்ற வன்முறைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்த மாதிரி ஜென்மங்களுக்கு எந்த கெட்டவார்த்தையில் திட்டினாலும் உறைக்காது.

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு, இதில் கொடுமை என்ன என்றால், படித்த படிக்காத , ஏழை பணக்காரன் என்ற பாகுபாடே இல்லாமல் எல்லா வித ஆண்களும் இந்த கொடுமையை செய்கிறோம்.

நம் குழந்தைகள, சகோதரர்களிடம் இந்த கொடுமையை தவிர்க்குமாறு கற்று கொடுப்போம்.

பேருந்துகள், ரயில், திரை அரங்கு போன்ற இடங்களில் அருகில் நிற்கும் பெண்களை சகோதரிகள் போல நினைக்க சொல்லி கொடுப்போம்.

மின்சார ரயில் பெட்டியில், பொது பயணிகள் பெட்டியில் மனைவியோடு அல்லது சகோதரியோடு பயணம் செய்து பாருங்கள் ஒரு முறை.

Jabar said...

மிருகத்தைவிட கேவலமான மனிதர்கள்.... இவிங்கள எல்லாம் நந்தா ஸ்டைல்ல நறுக்கனும்னே

Anonymous said...

அருமையாகச் சொன்னீர்கள்.. தவறாகப் பிறந்த அற்பப் பதர்கள்..

அவிய்ங்க ராசா said...

மதுரை மல்லி, சந்தோசப்படுகிறேன். உங்கள் நல்ல பின்னுட்டத்தைப் பார்த்து..))

ஜெய்லானி, சரியாக சொன்னீர்கள்..

நன்றி ஷேக்..

கண்டிப்பாக சிவா..

நன்றி பாவக்காய்..

பானு..பாரதி கண்ட புதுமைப்பெண்…

அனானி..அவளிடம் இருந்து கோவத்தில் வந்த வார்த்தைகள் அது. என்னதான் கோபம் இருந்தாலும், அந்த வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை..

பழமைபேசி..நான் ஏற்கனவே சொல்லியது போல், அந்த வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை.

நன்றி கேள்விக்குறி

குடுகுடுப்பை..நான் எம்.ஜி.ஆராக இருந்திருந்தால் இந்நேரம் அவனை எதிர்த்து அடித்திருப்பேன். மற்றும் எந்தப்பதிவிலும் என்னை நான் ஹீரோவாக உருவகப்படுத்தியதில்லை. என்னுடைய பழைய பதிவுகளைப் பாருங்கள்..என்னுடைய கையாலாகதனத்தை தான் வெளிப்படுத்தியிருப்பேன். அதைத்தவிர என் பதிவுகள் புனைவுகளாகவே இருக்கட்டும். அதிலிருந்து ஏதாவது நல்ல கருத்துக்கள் கிடைத்தால், அது எனக்குப் போதும்..

வெத்துவேட்டு, நீங்கள் சென்னையில் இல்லை என்று நினைக்கிறேன்

கண்டிப்பாக முகிலன்

செந்தில்..கை போதும்..பளார் என்று அறையலாம்..

நன்றி கண்ணா..

நன்றி நர்சிம்..( என்று இருக்கவேண்டுமோ..??

நன்றி செந்தில்

நன்றி அக்பர்

நன்றி ராம்ஜி..

நன்றி கனவுகள்

நன்றி அனானி..

Anonymous said...

உங்களுடைய (ellarudaiya) கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளும் இது போன்ற கேரக்டர்களை பற்றியே வருகிறது, எல்லாவற்றிலும் நீங்கள் எம்ஜியார் மாதிரி நல்லவராகவே இருக்கிறீர்கள் !!

Nidarsanamana unmai. 98 out 100% bloggers postings are in this category. This is one of the primary reason i don't like blogging. Blog ID vechirukkira ov ovoruthanum, MGR, Rajini madiri thannai karpanai pannikittu eluthara padikirathu romba boring aa erukuthu. edi ediyil Saravanakumaran madiri causal bloggers vathuporathu satrru aruthalana visayam.

Muhammad Ismail .H, PHD., said...

@ ராம்ஜி_யாஹூ

// நல்ல பதிவு, இதில் கொடுமை என்ன என்றால், படித்த படிக்காத , ஏழை பணக்காரன் என்ற பாகுபாடே இல்லாமல் எல்லா வித ஆண்களும் இந்த கொடுமையை செய்கிறோம். //

என்னையா இது ? போற போக்கில் இந்த கூட்டு களவாணித்தனத்தில் ராம்ஜி எல்லோரையும் சேர்த்துவிட்டு போகிற மாதிரி தெரியுதே? இதையெல்லாம் கவனிக்கம என்னத்த புளாக்குறிங்களோ போங்க !!! வெயில்ல முடியல...

ngoppan said...

To whomsoever wrote a sorry ass comment for this Article
--Watching porn video & half naked actress with luscious Eyes does not qualify you to write an emotional comment--

எல் கே said...

miga koduamayana nigalchi. thinamum ovvoru perunthilum nadakum ondru

இளைய கவி said...

ராசா உண்மையாலுமே அவனுங்க தேவடியா பசங்க தான், அவனங்கள அப்படித்தான் சொல்லனும், அத சொல்றதுகுள்ள , பெண்மைய களங்கப்படுத்துற மயிரு மட்டை, நீ என்ன எம்ஜியாரன்னு எத்தனை கேனத்தனமான கேள்விகள் ? இவனுங்க வீட்டு புள்ளைக்கு இப்படி நடந்தா இவனுங்க கேள்வியா கேட்டு கிட்டு இருப்பானுங்க? நல்லா வாயில வருது....

இளைய கவி said...

//// நல்ல பதிவு, இதில் கொடுமை என்ன என்றால், படித்த படிக்காத , ஏழை பணக்காரன் என்ற பாகுபாடே இல்லாமல் எல்லா வித ஆண்களும் இந்த கொடுமையை செய்கிறோம். //
ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம், ஆனா அதையும் பகிரங்கமா ஒத்துக மாட்டனுவ மானமுள்ள மவராசனுங்க.பின்னூட்டத்துல மட்டும் பீத்தீகிட்டு என்னாட பண்ண போறீங்க ???

Anonymous said...

Dei Palaya Kavi -

Sollrathukku oru thaguthi venmda! Evanoda profile photo va parunga? Entha magarasiyo ava!

Appruam - evan podura post parugappu...
http://dailycoffe.blogspot.com/2010/04/blog-post.html?showComment=1271035144047#c673371561192078377

இளைய கவி said...

டேய் அனானி நான் தான் ஒத்துகிறேனேடா அப்புறம் என்ன ? பொட்ட நாயே பேர சொல்ல கூட வக்கில்ல நீ எல்லாம் பின்னூட்டம் போட்டு என்னடா பண்ண போற ? போடா பதிவின் தலைப்பு!!!! முடிஞ்சா உன் பேரோட பின்னூட்டம் போடு

- யெஸ்.பாலபாரதி said...

:))

Anonymous said...

Yen peroda comment potta mattum panratha nirutheera poraya?? pora pokka partha antha bus lla neethen thadaveeruppa pola erukku?

Polaya Kooovi!#@!$#@$! - ellathaiyum mootai katti vechittu, poi polaikira valiya paru.

Anonymous said...

Polaya Koovi - Nee othukarathalla, ennai vida unakkuthaan yintha post oda title nalla fit aagum!

இளைய கவி said...

டேய் பெயரில்லாம விருந்தாளிக்கு பொறந்த .............. வனுக்கெல்லாம் பதில் சொல்ல தேவை இல்லாடா பதிவின் தலைப்பு.

Post a Comment