Friday, 21 May, 2010

அவிங்க ராசா தளம் ஹேக்கிங்க் – வெளிநாட்டு சதியா????

கடந்த ஒரு வாரமா என்னோட தளத்திற்கு சென்றால், அழைப்பிதழ் இல்லாமலே தமிழர்ஸ் என்ற தளத்திற்கு இட்டு சென்றது. சரி, நம்ம தளத்தையும் ஒரு தளமா மதிச்சு ஹேக் பண்ணிட்டாயிங்களோன்னு பயமா இருந்தாலும், உள்ளுக்குள்ளாற பிரபல பதிவரா ஆயிட்டமோன்னு ஒரு சந்தோசம் வேறண்ணே. ஒருவேளை வெளிநாட்டு சதியான்னு நினைச்சுப் பார்த்தால், உள்நாட்டுலேயே நமக்கு சோத்துக்கு வக்கில்லை(ஒன்லி பர்கர்தான்,.,,ஹி..ஹி..), சரி ப.சிதம்பரம் சார்கிட்ட கேட்கலாமுன்னு நினைச்சா, அவரு தளத்தையே ரெண்டு மூணு நாளா காணோமாம்...

அந்த சந்தோசம், ஒரு வாரம் கூட நீடிக்கலைண்ணே..ஒரு நண்பரின் அறிவுரையின் பேரில், தமிழர்ஸ் மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையை நீக்கினால் இந்தப் பிரச்சனை திர்ந்து பொசுக்குன்னு போயிடுச்சு…வேலியில போற ஓணானை எடுத்து கக்கத்துல விட்ட கதையா, இந்த தமிழர்ஸ் மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையை வைச்சுக்கிட்டு ஒரு வாரமா இல்லாத பாடு பட்டுட்டேண்ணே(என்னது..ஒரு வாரமா ரொம்ப சந்தோசமா இருந்திங்களா..)

ஆனாலும் ஒரு வாரமா எத்தனை மெயில்கள், எத்தனை போன் கால்கள்..அவிங்க ராசா..உங்க தளத்தை பார்க்க முடியவில்லையே என்று..கண்ணுல தண்ணி வந்திருச்சுண்ணே..(ஒரு பயபுள்ள மெயில் அனுப்பல..நானே என்னோட தளத்தைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்…ஏண்ணே..எம்மேல இம்புட்டு பாசமா..)..ஆனாலும் விடமாட்டோமில்ல..மாசத்துக்கு ஒரு பதிவாவது போட்டு உங்களை சாகடிக்காம எப்படி விடுவோம்..ஹி..ஹி..

அப்புறம்..சொல்ல மறந்து விட்டேன்..சுறா படம் பார்த்ததிலிருந்து இப்படிப்பட்ட நாட்டில் வசிக்க கூடாது என்று திரும்பவும் அமெரிக்கா வந்து விட்டேன். கடந்து வாரம்தான்..இங்கு வந்து பார்த்தால், இங்கேயும் சுறா ரிலிஸ்..ஏண்ணே..அண்டார்டிகாவில் சுறா ரிலீஸ் ஆயிருக்கா???

(அலும்பு தொடரும்)

24 comments:

முகிலன் said...

வாங்க வாங்க.. வெல்கம் டு அமெரிக்கா..

ஜெய்லானி said...

ஒரு வார , வெளிநாட்டு பயன வேளையில் பிஸி அதுக்கு இப்படி ஒரு பில்டப்பா ? நடத்துங்க..

ராம்ஜி_யாஹூ said...

back to farm a (Ulavar Sandhai), good

ச.செந்தில்வேலன் said...

ஓ.. சரி..

அப்ப இனி கோவாலு வந்துடுவாரு உங்க கூட அலும்பு பண்ண..

dheva said...

//அப்புறம்..சொல்ல மறந்து விட்டேன்..சுறா படம் பார்த்ததிலிருந்து இப்படிப்பட்ட நாட்டில் வசிக்க கூடாது என்று திரும்பவும் அமெரிக்கா வந்து விட்டேன். கடந்து வாரம்தான்..இங்கு வந்து பார்த்தால், இங்கேயும் சுறா ரிலிஸ்..ஏண்ணே..அண்டார்டிகாவில் சுறா ரிலீஸ் ஆயிருக்கா???///

உண்மைதாங்க...!

கரிகாலன் said...

யோவ்.. அண்டார்டிகாவுல காவல்காரன ப்ரிவியூ போட்டுப் பாத்துட்டு இருக்காங்களாம்... பாத்துப் போய்யா...

மோனி said...

புள்ள இம்புட்டு பயந்து போயி அமெரிக்கா ஓடிடுச்சா..?
எத்தனை எத்தனை படங்களடா...?
அதனால்தான் எத்தனை எத்தனை தற்கொலைகளடா..

Anonymous said...

anne unga site-ku thenamum vanthu poren. site ellam nallathan open ahuthu.. neengathan onnum eluthama iruntheenga... rasaane poi solla koodathu.. neraya eluthunganne kaathitturukom.

philosophy prabhakaran said...

We miss u rasa...

பாலா said...

தமிழிஷ் மற்றும் தமிழ்மணம் தவிர அனைத்து பட்டைகளும் நம்பகத்தன்மை இல்லாதவை. வைரஸ் உள்ளவை.

SShathiesh-சதீஷ். said...

//நம்ம தளத்தையும் ஒரு தளமா மதிச்சு ஹேக் பண்ணிட்டாயிங்களோன்னு பயமா இருந்தாலும், உள்ளுக்குள்ளாற பிரபல பதிவரா ஆயிட்டமோன்னு ஒரு சந்தோசம் வேறண்ணே//

அப்படி எல்லாம் தப்பாய் நினைக்கப்படாது.

//பாலா said...
தமிழிஷ் மற்றும் தமிழ்மணம் தவிர அனைத்து பட்டைகளும் நம்பகத்தன்மை இல்லாதவை. வைரஸ் உள்ளவை//

வழிமொழிகின்றேன்.

Anonymous said...

தமிழிஷ் மற்றும் தமிழ்மணம் தவிர அனைத்து பட்டைகளும் நம்பகத்தன்மை இல்லாதவை. வைரஸ் உள்ளவை.

------------

i am just a reader. i use tamilish. so all these issues will not come to me hehehehe

senthil kumaran said...

ராசா நீங்க எங்க இருந்தாலும் மாறப்போறது இல்லை .இடம் மாறினாலும், உங்கள் அலும்புகளின் தடம் மாறாது. பதிவுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி எங்களை கொடுமை படுத்துங்கள்.(எனக்கு ஒருகண் போனாலும் பரவாயில்லை என்றநல்ல மனதுதான்)

பேநா மூடி said...

hmm.... continue :-)

Anonymous said...

Eppadinne.. ungalukku neengale comment pottukireenga?

Anonymous said...
anne unga site-ku thenamum vanthu poren. site ellam nallathan open ahuthu.. neengathan onnum eluthama iruntheenga... rasaane poi solla koodathu.. neraya eluthunganne kaathitturukom.
22 May 2010 1:45 AM

kanavugal said...

நடக்கட்டும் நடக்கட்டும் !!!!

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

அவிய்ங்க ராசா said...

நன்றி முகிலன்,ஜெய்லானி,
நன்றி ராம்ஜி,
கோவாலு இல்லாம எப்படி செந்தில் அண்ணே..))
ஆமா தேவா...
மீ த எஸ்கேப்பு கரிகாலன்..
கண்டிப்பா அனானி அண்ணே..
நன்றி பிரபாகரன்
தகவலுக்கு நன்றி பாலா..இனிமேல் எச்சரிக்கையுடன் இருப்பேன்..
வருகைக்கு நன்றி சதிஷ்
தப்பிச்சிட்டீங்க அனானி
நன்றி பேனாமூடி,
அனானி அண்ணே..இருக்குற நொம்பலத்துல இது வேறயா..
நன்றி கனவுகள்,
விருதுக்கு நன்றி ஜெய்லானி..

Anonymous said...

விஜயை இழுத்து முதல மொக்க போடுறத நிறுத்துங்க...... உங்களுக்கு ஹிட்டு வேணும்னா விஜயை இழுக்கலாம் .ஆனா அவரு படம் ஹிட் ஆக ஏன் மசாலா படத்துல நடிக்க கூடாது.அவிங்க தேவா வலை பூக்களை நான் படிப்பவன் ...
நீங்களும் இப்டி ஆயிடீங்களே!!!!!!!

nilalgal said...

super appu nalla comedy

M.S.E.R.K. said...

அமெரிக்கா போனதும் சந்தோசத்த பாரு.....!

மக்கள் தளபதி said...

//அண்டார்டிகாவில் சுறா ரிலீஸ் ஆயிருக்கா???//
தியேட்டர் இல்லாத ஊரில் வசிக்க வேண்டாம் :-)

மோதி said...

unga siteku naan daily visit panren... poi sollatheengappu... pathivu nalla iruku :)

Anonymous said...

எங்கண்ணே மறுபடியும் விர்ஜீனியாவுக்கே வந்துட்டீங்களா?

Post a Comment