Sunday, 10 January, 2010

லொள்ள்ள்ள்ள்ள்ள்ள்…….

எங்க ஏரியாவில் தெருநாய் கொஞ்சம் ஜாஸ்திண்ணே..எப்ப பார்த்தாலும் ஒரு வெறியோடே திரியுங்க….அதுவும், தெருவுல பிகர் போறப்ப அதுக பண்ற அலப்பறை இருக்கே..ஆத்தாடி… இளவட்ட பசங்க பண்ற மாதிரியே ஒரே அலும்பு..பொண்ணுங்க பக்கத்துல கடிக்கிற மாதிரியே போய் “உர்ருன்னு” ஒரு சத்தம் கொடுக்குங்க..பயத்துல பொண்ணுங்க “ஓ மை காட்” அப்படின்னு அலறி அடிச்சுட்டு ஓடுறதுல அதுகளுக்கெல்லாம் அப்படி ஒரு சந்தோசம்..

யாராவது ரோட்டோரமா ஒரு பிகர் கூட கடலை போட்டிக்கிருந்தா அதுக பார்க்குற நக்கல் பார்வை இருக்கே..சீ..சீ..உடம்பே கூசிடுமுண்ணே(அப்படின்னு நண்பன் சொன்னான்னே..ஏதாவது கமெண்ட் எழுதி, குடும்பத்தை நாசம் பண்ணி விட்டுறாதிங்கண்ணே,.,.), என்னமோ அதுக எல்லாம்,
“காபிடே” யில காப்பி குடிச்சுக்கிட்டு லவ் பண்ற மாதிரி..ஏரியாவுக்குள்ள ஒரு பெண்நாய் வந்துற கூடாதுண்ணே..இதுக பண்ற அட்டூழியம் தாங்க முடியாது..அப்படியே ஸ்டைலா யூ.டர்ன் போட்டு திரும்பி, வாலை அப்படியே டான்ஸ் மாஸ்டர் மாதிரி ஆட்டிக்கிட்டு “எங்க ஆளு டோய்..” ன்னு பந்தாவா போறப்ப அப்படியே பத்திக்கிட்டு வருமுண்ணே..அன்னைக்கு எல்லாம் காலரை சாரி, வாலை பெருமையா ஏத்தி விட்டுக்கிட்டே அலையுங்கண்ணே..

இதெல்லாம் எனக்கு கடுப்பு இல்லைண்ணே..ஆபிஸ்ல வேலை பார்த்துட்டு நைட் 1 மணிக்கு வர்றது குத்தாமாண்ணே..பஸ்ஸ்டாண்ட் வாசலில இருந்து, வீடு வரைக்குமுண்ணே..சும்மா, வெறி புடிச்ச மாதிரி துரத்தும் பாருங்கண்ணே..உசிரே போயிடுமுண்ணே..அதுகளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்ணே..சரி, ஹெல்மெட் போட்டதனால்தான் துரத்துதுன்னு, ஹெல்மெட்டை கழட்டினா, ஏதோ, பேயைப் பார்த்தமாதிரி, அதுக எல்லாம் அலறி அடிச்சுட்டு ஓடுறத பார்க்குறப்ப எப்படி இருக்குமுண்ணே..சரியான நக்கல் புடிச்சதுங்கண்ணே..

இதுகள எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்குறப்ப, நண்பன் ஒரு ஐடியா சொன்னான்..நாய் துரத்துறப்ப 2 பாக்கெட்டு நாய் பிஸ்கட் மறறும் புரை எடுத்து வீசினோமுன்னா, அதுக பிஸியா இருக்குற சமயம் பார்த்து நம்ம எஸ்கேப் ஆயிடலாமுல்ல,,காலையில ஆபிஸ் கிளம்புறப்பயே, தயாரா 2 பிஸ்கெட் பாக்கெட், புரை வாங்கி வைச்சுக்கிட்டேண்ணே..நைட் வழக்கம்போல துரத்த ஆரம்பிச்சவுடனே, ஒரு இடமா பார்த்து வண்டியை நிறுத்துக்கிட்டேன்..ஒவ்வொரு பிஸ்கெட்டா தூக்கி போட்டேன் பாருங்க..வொர்க் அவுட் ஆகிடிச்சுண்ணே.அப்படியே தூரம் தூரமா பிஸ்கெட்டை எறிய, அதுக எல்லாம் பிஸ்கெட் தேடுறதுல மும்மரமாக, நான் அப்படியே பைக்கை ஸ்டார் பண்ணி கிளம்பு வந்துட்டேண்ணே..என் நேரம் பாருங்கண்ணே..எல்லா நாய்களும் டின்னர்ல பிசியா இருக்குறப்ப, ஒரு நாய் மட்டும் வெறி புடிச்ச மாதிரி துரத்துதுண்ணே..ஒருவேளை நான் வெஜ் எதிர்பார்க்குதோ..ஆத்தாடி, இந்த ராத்திரி வேளையில நான் வெஜ்ஜுக்கு எங்கே போவேன்..இப்ப கறி குடுக்கலைன்னா, அதுவே உடம்புல இருந்து எடுத்துக்கும் போலேயே..

எனக்கு குலையே நடுங்கிருச்சுண்ணே..சரி ஆனது ஆகட்டுமுன்னு, பைக்கை விரட்டுனா, என்னா துரத்தல்..நான் என் பைக்குல 80க்கு மேல போனதில்லைண்ணே..அன்னைக்கு 90 கி,மீ வேகம்ணே..வீட்டுக்கு போய் தண்ணி குடிச்சப்பறம்தான் உசிரே வந்தது..அப்புறம் அதே நாய்..தினமும் துரத்தல்..அது என்னன்னு தெரியலைண்ணே..ஒரு நாய் மட்டும்தான் எதுக்கும் மசிய மாட்டிங்குது..நல்லா பழுப்பு கலருல இருக்குமுன்னு அந்த நாய்…அது கொட்டாவி விடுறப்ப, பல்லைப் பார்த்தோமுன்னா, ரெண்டு நாளைக்கு தூங்க மாட்டோமுண்ணே..சரி, ஒரே வழியா வந்தால்தான் துரத்துதுன்னு, வேற வழியா வந்தா, கரெக்டா கடன் குடுத்த மாதிரி, வீட்டு வாசலுல நிக்குது..இதுல கேலியா ஒரு பார்வை வேற..எப்படித்தான் கண்டுபிடிக்குதோ..ஒருவேளை கூகில் செர்ச் போட்டிருக்குமோ..எனக்கு கடுப்பா இருந்ததுண்ணே..ஒரு நாளைக்காவது அது கூட ஒரு மீட்டிங் போட்டு, பேசி தீர்த்துக்குலாமுன்னு நினைச்சேண்ணே..

அந்த நேரத்துலதான் எங்க அபார்ட்மெண்ட்ல ஒவ்வொரு மாதமும் நடக்கும் மீட்டிங் நடந்தது..நான் இந்த மீட்டிங்குல எல்லாம் கலந்துக்குறது இல்லைண்ணே….பப்ஸ், சமோசா சாப்பிடமுன்னா பேக்கரிலயே சாப்பிட்டிக்கிறது..இன்னைக்கு பார்த்து அபார்ட்மெண்ட் செகரட்டரி, ஒரே அடம்..வேற வழியில்லாம போய் உக்கார்ந்தேன்..வழக்கம்போல் இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம் தவிர எல்லாத்தையும் பேச ஆரம்பிச்சாயிங்க..மெல்ல, மெல்ல பேச்சு சூடு பிடிக்க ஆரம்பித்தது..

“சார்..இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டணும்..”
“என்ன பிரச்சனை..”
“என் பொண்ணு அபார்மெண்ட்ல நடக்கவே முடியலைங்க..கீழ் வீட்டுல உள்ள இருக்குற பையன் போற வர்றப்ப எல்லாம்,ஒரே கிண்டலுங்க..”
கீழ் வீட்டுக்காரர் கொதித்தார்..
“ஆமா..உங்க பொண்ணு பெரிய ஐஸ்வர்யாராய் பாரு….போயா..”
“யோவ்..நாக்கை அடக்கி பேசு..மரியாதை கெட்டு போயிடும்..”
“யோவ்..உனக்கென்ன மரியாதை..நீயெல்லாம் பெரிய மனுசன் மாதிரியா இருக்க,,”
“டே.,,கையை நீட்டக்கூடாதுன்னு பார்க்குறேன்..”
“அடிச்சுடுவியா..நீ மட்டும் அடிடா பார்ப்போம்..அடிச்சுட்டு உசிரோட இருக்க முடியாதுடி..நான் எல்லாம் ரவுடியா இருந்துட்டுதான்டா இங்க வந்துருக்கேன்..”
“த்..தூ..உன்னை பத்தி எனக்கு தெரியாதாடா..தெருவுக்கு ஒரு பொம்பளை வைச்சிருக்கேயேடா..சொன்னா நாறிப் போகும்..”

அவ்வளவுதான்னே..ஒரே கெட்ட வார்த்தை..தமிழுல இவ்வளவு வார்த்தை இருக்குறதே எனக்கு அப்பதாண்ணே தெரியும்..

“போடா..நீதாண்டா மாமா வேலை பார்க்குற..”
“டே..மொள்ளமாறி….நீதாண்டா முடிச்சவிக்கி…பக்கத்து தெருல பிச்சைக்காரன்ட புடிங்கி தின்னவந்தான நீ..”
“போடா..நாயி…”
“நீதாண்டா சொறி நாய்..
“நீதாண்டா வெறி நாய்..”

காது மட்டுமல்ல, கண்ணையும் மூடிக்கொண்டேன்..சத்தம் அதிகம் ஆகி, “லொள்..லொள்” ன்னு சத்தம் மட்டும் கேட்டது..அது வெளியிலிருந்து வந்ததா..உள்ளிருந்து வந்ததா என்று எனக்கு ஒரு சந்தேகம்..சன்னல் வழியா எட்டிப் பார்த்தேன்..என்னை எப்பவும் துரத்தும் நாய் சன்னல் அருகில் நின்று கொண்டிருந்தது..ஒருவேளை அதையும் மீட்டிங்க்கு கூப்பிட்டுருப்பாயிங்க போல..ஆனால், என்னைப் பார்த்து ஏளனமா ஒரு சிரிப்பு..”நீங்க எல்லாம் மனுசங்களாடா..இதுக்கு நாங்க எவ்வளவோ பரவாயில்லைடா..” என்று கேட்பது போல இருந்தது..தலையை குனிந்து கொண்டேன்..

அடுத்த நாள், பக்கத்து ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன்..அங்கே ஒரே, பரபரப்பு..எல்லா நாய்களும் தெருவில் தறி கெட்டு ஓடுக்கொண்டுருந்தன..சாப்பாட்டை அப்படியே விட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தேன்..அங்கு ஒரு நாய் பிடிக்கும் வண்டி நின்று கொண்டிருந்தது..அங்கிருந்து 3 தடியான ஆட்கள், நாய்களை விரட்டி, விரட்டி பிடித்து கொண்டிருந்தனர்..

தூரத்தில் எங்கயோ எனக்கு பழக்கப்பட்ட குரல் போல கேட்டது..அவசரமாக பார்த்தால்..எனக்கு தூக்கி வாரி போட்டிருச்சுண்ணே..என்னை தினமும் விரட்டும் அதே நாய்..
நாய் பிடிப்பவர் அதன் கழுத்தில் ஒரு பெரிய வளையத்தை போட்டு இறுக்கியிருந்தார்….அப்படியே அதை தெருவில் அதை தரதரவென்று கல், மண் பார்க்காமல் இழுத்துக் கொண்டு போனார்..அந்த நாய் முடிந்த வரைக்கும் போராடியது..வெறி கொண்ட போராட்டம்..உயிருக்கான போராட்டம் அது..ஆனால் முடியவில்லை..அந்த ஆள் லாவகமாக அதை இழுத்துக் கொண்டு போனார்..தன் காலை எடுத்து தலையில் மாட்டிய கம்பியை எடுத்து விட முயற்சித்தது..முடியவில்லை..

அப்போதுதான் அதை கவனித்தேன்..கல், மண் பார்க்காமல் இழுத்துக் கொண்டு போனதில், நாய் உடம்பு முழுவதும் காயம்..அதிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது..உயிருக்கான போராட்டத்தில் களைப்புற்று அதன் நாக்கு வெளியே தள்ளிக் கொண்டிருந்தது..சன்னமாக அதனுடை மூச்சு காற்று மட்டும் வெளியே கேட்டது..கொஞ்ச நேரத்தில் அடங்கிப் போனது..அமைதியாகி அப்படியே நின்றது..நாய் பிடிப்பவர், அதை அப்படியே இழுத்துக் கொண்டு போய் வேனுக்குள் தள்ளினார்..அதன் சன்னல் வழியே எட்டிப் பார்த்தது..என்னைப் பார்த்ததுமே, குரைத்தது,,”என்னைக் காப்பத்துடா..” என்று கெஞ்சுவது போல் இருந்தது..நான் அப்படியே தலையை குனிந்து கொண்டேன்..நாய் வண்டி மெதுவாக நகர, நகர என்னை விட்டு ஏதோ ஒன்று போனது போல இருந்தது..தலையை தூக்கி வண்டியின் சன்னலைப் பார்த்தேன்..அந்த நாய் இன்னும் என்னை வெறித்துக் கொண்டே இருந்தது..அதன் கண்களை என்னால் தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை..நாய் வண்டி தூரமாக செல்ல செல்ல, ஒரு புள்ளியாக தெரிந்தது..கடைசியாக பார்வையிலிருந்து அகலும் முன் அந்த நாயின் குரல் மட்டும் சன்னமாக கேட்டது…


“லொள்ள்ள்ள்ள்ள்ள்ள்…….”

20 comments:

பாவக்காய் said...

kalakkal thaliava !! climax tochinga irunthutchu !!

பலா பட்டறை said...

கலக்கிட்டீங்க ராசா...::))

Vijayashankar said...

Super writing. It is a phenomenon in India. They have to take care.

கண்ணா.. said...

எப்பவும் நெஞ்ச நக்கற மாறியே கத சொல்லுறியேண்ண...

எங்கண்ண படிச்ச இந்த வித்தைய...

அருமை ராசா

:)

taaru said...

எனக்கென்னமோ இது உங்க தெரு நாய[ய்கள] பத்தின பதிவு போல தெர்லண்ணே...
ஆனா வேற .......என்னோட இயலாமை,கையாலாகாத தனம்.. அப்போ[2009] போலவே ;இங்ஙனக்குள்ளையும் சுதந்திரமா யாருன்னு கமெண்ட் போட முடியல..
என் நெஞ்சைத் தொட்ட பதிவு..

KVR said...

ஒரே இடுகையிலே இத்தனை விஷயம் சொல்ல முடியுமா!!!!!!! excellent

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல ரசனையான பதிவு.......வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

எப்பவும் போல ராஜா எழுத்து.:(

Anonymous said...

நல்ல கதை

அவிய்ங்க ராசா said...

Thanks Paavakkai, Pala Pattrai, Vijay shankar, Kanna, Taru, KVR, Vetri , Aruran,Vanambadi, Anony...Sorry for not able to write in Tamil since i am using browsing center still..

நர்சிம் said...

பிடித்திருந்தது.

சிங்கக்குட்டி said...

அண்ணே...நம்ம நண்பர்களை குறை சொல்லாதிங்க :-)

படிச்சு முடிச்சு நல்ல வேலை கிடைக்கும் முன் நமக்கு (எனக்கு) இவர்களை போல ஒரு நல்ல நண்பர்கள் யாரும் இல்லை.

வீடு, உறவுன்னு யாரு விரட்டினாலும், ராத்திரி எவ்வளவு லேட்டா சரக்கடிச்சிட்டு ஆடிகிட்டு வந்தாலும் நம்மள யாரும் நெருங்க முடியாம சுத்தி கூடவே (வால ஆட்டிகிட்டு) வீடு வரை கொண்டு வந்து விடுவர்ர்கள்.

இதில் குறிப்பிட வேண்டியது, சில நேரங்களில் நம் சாப்பாட்டில் அவர்களுக்கும் ஒரு பங்கு, பல நேரங்களில் அவர்கள் சாப்பாட்டில் (என் வீட்டு பைரவிக்கு வைத்த முட்டைபரோட்டாவில்) நமக்கும் ஒரு பங்கு :-) )

சில மனிதர்களை விட நம்ம நண்பர்கள் எவ்வளவோ தேவலாம் அண்ணே, திரும்ப ஒருமுறை நம்ம நண்பர்களை குறை எதுவும் சொல்லாதிங்க .

மணிப்பக்கம் said...

அருமை! :)

அவிய்ங்க ராசா said...

Thanks Narsim,

You are correct Singakutti..))

Thanks Manipakkam

அன்புடன்-மணிகண்டன் said...

அந்த நாயைக் காப்பாத்தி விட்ருக்கலாமே அண்ணே..

Anonymous said...

Anne unmaya sollunga, yenga thiruduna?

Anonymous said...

The moment you introduce nai pudikiravan, it is easy to predict the climax

அவிய்ங்க ராசா said...

Mani,

Tried, but not able to do anything.

Thanks Anony for your comments

Sriram said...

Rasa

I faced the same problem for 4 months when I was in india. I used to come back from office by 1AM. I used to call my dad 3-4 minutes before I reach my house.. He used to switch on all lights.

One day, he slept and didnt open the door. I asked the cab driver to make one more round.. It was horrible to round for 2 kms at the place during wee hours.

But your line of story is so touching. I felt bad about the climax.. Sorry for that dog..

Post a Comment