Sunday, 10 January, 2010

புத்தக கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்நேற்று புத்தக கண்காட்சிக்குப் போவது என்று முடிவெடுத்து, கிளம்பியபோது சுவற்றில் இருந்த பல்லி கத்தியது. போக வேண்டாம் என்று சொல்லியதா, சீக்கிரம் இடத்தை காலி பண்ணுடா என்று சொல்லியதா என்று தெரியவில்லை..என்னுடைய பல்சரை எடுத்துக் கொண்டு கிளம்பி போய் முதலில் கோயம்பேடு சென்றேன். கோயம்பேடு இன்னும் கேவலமாக மாறி விட்டது..பொங்கலுக்கு மதுரை செல்வதற்கு ஒரு டிராவல்ஸில் கூட டிக்கெட் கிடைக்கவில்லை..பொங்கல் விடுமுறையாதலால், ஒரு இடத்தில் கூட காது கொடுத்து கேட்பதில்லை.உதாரணமாக டிராவல்ஸ் அலுவகத்தில் டிக்கெட் கேட்டபோது நடந்தது..

“அண்ணே..மதுரைக்கு போறதுக்கு..”
“டிக்கெட் காலியாயிடுச்சு சார்..”
“13 ஆம் தேதி..”
“டிக்கெட் இல்லை சார்…”
“14 ஆம் தேதி..”
“இல்லை சார்..”
“சரிண்ணே..அடுத்த நாளில..”
“டிக்கெட்டெல்லாம் இல்லை சார்..”

இடையில் அவர் கேர்ள் பிரண்டிடமிருந்து போன் வந்து இருக்க வேண்டும் போல..

“ஹாய் டா..கண்ணம்மா..எப்படி இருக்க..”
“சார்..பொங்கலுக்கு முன்னாடி டிக்கெட்..”
“இல்லைன்னு சொன்னா கேளுங்க சார்..”

இடத்தை காலி பண்ணி தொலையேண்டா என்று சொல்லாதுதான் பாக்கி..
“ஏ..கண்ணம்மா..நீ கேளுடா..கடைசி டைம் நம்ம மீட் பண்ணனுப்ப..”
“சார்..மதுரையில இருந்து சென்னை வர்றதுக்காவது..”
“இல்ல சார்..”

இதற்கு மேல் நின்றால் இரண்டு கெட்டவார்த்தை சராமரியாக விழும் என்று தெரிந்தாலும், என்ன பண்ணுவது..நமக்கு டிக்கெட் வேண்டுமே..

“சார்..பரவாயில்லை..எந்த தேதி டிக்கெட் கிடைத்தாலும் பரவாயில்லை..கொடுங்க சார்..”

“இரு கண்ணம்மா..இங்க ஒருத்தன் சாவடிக்கிறான்..ஏய்..உனக்கு இன்னா வேணும்..

அப்படியே அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகினேன்..நல்ல கஸ்டமர் சர்விஸூங்கயா..நல்லா இருங்க..

அங்கிருந்து கிளம்பி புத்தக கண்காட்சி வந்தேன்..நல்லா விசாலமான இடத்தில் பார்க்கிங்க்..ஆனால் பார்க்கிங்க்தான் கிடைக்கவில்லை..உள்ளே விட அனுமதிக்கவில்லை..வண்டியை எடுத்துக் கொண்டு பக்கத்தில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தான் இடம் கிடைத்தது..அதுவும் கக்கூஸிலில்..இதில் எப்படி வண்டியை நிறுத்துவது என்று யோசித்தபோது பின்னால் 10 பேர் லைனில் நின்றுருந்தார்கள்..

“சார்..நீங்க போறீங்களா..போகலைன்னா வழியை விட்டு நில்லுங்க..”

அடப்பாவிங்களா..அம்மன் கோவிலுல கூழ் ஊத்துற மாதிரியே நிக்கிறாயிங்க..கஷ்டப்பட்டு பார்க்கிங்க் செய்து விட்டு வந்தால்
உள்ளே செல்வதற்கு டிக்கெட் வாங்க திரும்பவும் ஒரு க்யூ…டிக்கெட் வாங்கிவிட்டு உள்ளே செல்ல எத்தனித்தபோது சைடில் இன்னொரு க்யூ நின்றிருந்தது..ஆஹா..ஏதோ..பிரபலமான புத்தகம் விக்கிறாயிங்க போல என்று முதலில் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தேன்….சரி..நாமும் ஒரு புத்தகம் வாங்கலாம் என்று க்யூவில் நிற்க ஆரம்பித்தேன்..

ஒவ்வொருத்தர் கண்ணிலும் அப்படி ஒரு வெறி..இன்று அதை வாங்கியே தீருவது என்று..ஆஹா..நான் இதை மிஸ் பண்ணவே கூடாது என்று சபதம் செய்து கொண்டேன்..ஒருவேளை எஸ். ராமகிருஷ்ணன் புத்தகமாக இருக்குமோ..இல்லெயென்றால் ஜெய மோகன்...ம்ம்ம்…யாராக இருக்கும்..யாராக இருந்தால் என்ன..இவ்வளவு பேர் வியர்த்துக் கொண்டு கண்ணில் வெறியோடு நிற்கிறார்கள்..கண்டிப்பாக வாங்கிவிட வேண்டும்..

கடைசியாக என் முறை வந்தது..என்னவென்று ஆசையாக தேடினேன்..

“சார்..என்ன..வெங்காய பஜ்ஜியா..போண்டாவா..”
“அது வந்து..என்ன இருக்கு..”

மேலும் கீழும் பார்த்தார்..

“அங்க போர்டு இருக்கு பார்க்கலையா..ஸ்ரீகிருஷ்ணா கேண்டின் சார்..”

சரி ஒரு காபி தண்ணியை வாங்கிதான் பார்ப்போமே என்றால் 10 ரூபா என்றார்கள்..குடித்து விட்டு(காபிதாண்ணே..) உள்ளே வந்தபோது..யப்பா..என்னா கூட்டம்..அண்ணே..பரவாயில்லைண்ணே..பீச்சுக்கு போற கூட்டமெல்லாம் இங்கதாண்ணே இருக்கு..

முதலில் கிழக்குப் பதிப்பகம் சென்றேன்..உண்மையை சொல்லப்போனால் எனக்கு இலக்கியம் பிடிப்பதில்லை..ஏனென்றால் எனக்கு ஆணவம் பிடிப்பதில்லை..எவ்வளவுதான் பெரிய பிஸ்தாக இருந்தாலும் எல்லாரும் சரிவது ஆணவத்தில்தான்….இதனாலயேதான் எனக்கு ஜெயகாந்தன், சுஜாதா, வைரமுத்து, இளையராஜா இவர்களை பிடிப்பதில்லை….படைப்பாளிகளுக்கு கர்வம் இருக்கத்தான் செய்யும் என்று சொன்னாலும் அந்த கர்வம்தான் எனக்கு பிடிப்பதில்லை…

கிழக்கு பதிப்பகத்தில், எனக்குப் பிடித்த அரசியல் வரலாறு புத்தகங்களை வாங்கினேன்..வாங்கி கொண்டு அந்தப் பக்கம் நடந்து வந்தால்..அட..லக்கிலுக், அதிஷா..மற்றும் ஒரு பெரியவர் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார்கள்..லக்கியைப் பார்த்து பேசலாம் என்றால் தயக்கமாக இருந்தது..அதுவும் ஏதோ ஒரு நல்ல விவாதத்தில் இருந்தது போல இருந்தது..அவர்களை கலைக்க விரும்பவில்லை..கிழக்குப் பதிப்பகத்தில் இயக்குநர் சரண், வசந்த், ராம் அவர்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது..பேசத்தான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது..

லக்கிலுக் மார்க்கெட்டிங் செய்த..சாரி..சொல்லிய லிச்சி ஜீஸ் அருந்தினேன்..சும்மா சொல்லக்கூடாது..அவருடைய பதிவு மாதிரியே அதுவும் கிக்காக இருந்தது..திரும்பவும், கிழக்கு பதிப்பகம் வந்தபோது..நிறைய பதிவர் கூட்டம்..பார்க்க சந்தோசமாக இருந்தது..கேபிள் சங்கர் அண்ணனைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டேன்..சும்மா சொல்லக்கூடாது..அண்ணன் நிஜமாகவே யூத்துதான், மனதளவில்..அவர் இருந்த இடமே முழுவதும் கலகல..சென்டர் ஆப் அட்ராக்ஷன்..கேபிள் சில நண்பர்களிடம் அறிமுகம் செய்தார்..

எல்லாப் பதிவர்கள் முகத்திலும் மகிழ்ச்சி..ஒரே கேலி, கொண்டாட்டம் என்று அந்த இடத்தைப் பார்க்கவே சந்தோசமாக இருந்தது..

இனிய அதிர்ச்சி..ஜாக்கி சேகர் சந்திப்பு..பார்த்தவுடனே கண்டு பிடித்துவிட்டேன்..பழகுவதற்கு நல்ல எளிமையாக இருந்தார்..”பேச கொஞ்சம் தயக்கமாக இருந்தது..” என்று சொன்னவுடன்..”அட..என்ன சார்..தயக்கம்..” என்று கைகளை குலுக்கியபோது நேசம் தெரிந்தது..மற்ற பதிவர்கள் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லாததால் முழுவதும் பேச முடியவில்லை..பக்கத்தில் கார்க்கி நின்றிருந்தார்..பேசத்தான் முடியவில்லை..

இன்னொரு இனிய ஆச்சர்யம்..நர்சிம்..படு ஸ்டைலாக இருந்தார்….தயங்கி சென்று அறிமுகப்படுத்தியபோது..”அட..வாங்க..வாங்க..” என்று என்னை கட்டிப்பிடித்தபோது அவருடைய அன்பு சிலிர்க்க வைத்தது..என்ன இருந்தாலும் மதுரைக்காரயிங்கள்ள....என்னை அறியாமல் எனக்கு என் அண்ணன் ஞாபகம் வந்தது….என் அண்ணனும் இப்படித்தான்..நான் ஊருக்கு செல்லும்போதெல்லாம் என்னை கட்டிப்பிடித்துதான் வெளிப்படுத்துவார்..

“அது என்ணண்ணே..கட்டிபிடி வைத்தியமா..”
“ஹா..ஹா..நான் கட்டிபிடிக்கும்போது உன் நெஞ்சில் அன்பை உணர்ந்தாயா..”
“ஆமாண்ணே..ஏதோ ஒரு அதிர்வு இருக்கதான் செய்கிறது..”
“அதுதான் அன்பு..”

எல்லாரும் கலகலப்பாக இருந்தார்கள்..சந்தோசமாக இருந்தார்கள்..எவ்வளவுதான் வேறுபாடுகள் இருந்தாலும், இப்படி எல்லாரோயையும் ஒரு இடத்தில் பார்க்கும் அனுபவமே தனிதான்..என்னது..எப்படியா..ஒருமுறை வந்து பாருங்களேன்..புத்தக கண்காட்சிக்கு..இன்று கடைசி நாள்..நானும் வருகிறேன்., சாயங்காலம் 4-7 மணிக்குள்..

அங்கிட்டு வந்துருங்கண்ணே..நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்…

13 comments:

சங்கர் said...

வந்தீங்க, கையை குடுத்தீங்க காணாமலே போயிட்டீங்களே

Cable Sankar said...

கேபிள் சங்கர் அண்ணனைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டேன்..சும்மா சொல்லக்கூடாது..அண்ணன் நிஜமாகவே யூத்துதான், அவர் இருந்த இடமே முழுவதும் கலகல..சென்டர் ஆப் அட்ராக்ஷன்..கேபிள் சில நண்பர்களிடம் அறிமுகம் செய்தார்..

நன்றி.. ராசா.. ஏதோ தப்பா எழுதிட்ட ஒரு வார்தை அத எடிட் பண்ணிட்டேன். எதன்னு கண்டுபிடி..:))

KVR said...

//நன்றி.. ராசா.. ஏதோ தப்பா எழுதிட்ட ஒரு வார்தை அத எடிட் பண்ணிட்டேன். எதன்னு கண்டுபிடி..:))//

:-)

வானம்பாடிகள் said...

மனசத் திருடிட்டீங்களே எசமான். கேபிளச் சொன்னேன்:))

அவிய்ங்க ராசா said...

Thanks Sankar. Konjam Work Irunthathu...

Nandri Cable Anna. Kandu pidichutten. Aanaalum kusumbu romba athigamthaan..))

Thanks KVR Anna...

Nandri Vanampadigal Sir..I expect you there..Will you come today??

பலா பட்டறை said...

அதிகம் பேச முடியவில்லை எனினும் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பரே..:)

குப்பன்.யாஹூ said...

saw yr photo in brundavanamum nondakumaranum blog, nice, thanks for sharing

Anonymous said...

:)

அதிஷா said...

எனக்கு உங்களை அறிமுகம் இல்லை. நீங்களாவது சொல்லியிருக்க கூடாதா நண்பா! நிச்சயம் பேசியிருக்கலாம்.

அவிய்ங்க ராசா said...

Thanks Athisa,

We will meet one day Sure.. I am keen to meet you..

Thanks Sankar, Cable Anna, Kuppan, KVR, Vaanampaadi, Manipakkam, Palapattrai

ஜாக்கி சேகர் said...

ரொம்ப கூச்சசுபாவம் போல இருக்கு நீங்க... இருப்பினும் நேரமின்மை காரணமாக அதிகம் பேச முடியவில்லை

அடுத்த முறை சந்திப்பில் பொலந்து கட்டலாம்...

அன்புடன்
ஜாக்கி..

அவிய்ங்க ராசா said...

KAndippa Jackie Anna..

துளசி கோபால் said...

உங்களுக்கு அதிர்ஷ்டமுங்க. நான் முதல்முறை போனபோது பதிவர்கள் யாருமே கண்ணில் படலை.
அதான் ரெண்டாம் முறை போனப்பக் கையோடு ஒரு பதிவரையும் கூட்டிக்கிட்டுப்போனேன்:-)))))

Post a Comment