இங்கு வருவதற்கு ஒரு வாரம் முன்னதாக பழைய கல்லூரி நண்பர்கள் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். அதுவும் நான் படித்த கல்லூரியிலேயே..பயண வேலைகள் அதிகமாக இருந்தாலும் என்னால் இந்த சந்திப்புக்கு போகாமல் இருக்க முடியவில்லை..மனதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மதுரை நோக்கி பயணித்தேன்..
கொடுக்கப்பட்ட அரைமணி நேரம் முன்பே என் கல்லூரியை அடைந்தேன்..பழைய நினைவுகளை திரும்பி பார்க்கும் சுகமே அலாதியானது..அப்படி திரும்பி பார்க்கும்போது வரும் சுகத்தில் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்து திரும்பவும் கல்லூரி காலத்திற்கே செல்லலாமா என்று தோன்றும்..கல்லூரி வாசலை தொடும்போதே ஒரு இனம் புரியாத உணர்வு….நான் படித்த காமராஜர் கல்லூரியா இது….கிராமத்துப் பெண்ணுக்கு பியூட்டி பார்லர் அலங்காரம் செய்தது போல் இருந்தது..கல்லூரி வாசலில் எங்களுக்காகவே உடைந்து சிம்மாசனம் போல் இருந்த குட்டிச் சுவரைக் காணவில்லை..வகுப்பறையின் முதல் கிளாசை நாங்கள் அட்டெண்ட் பண்ணியதாக வரலாறு இல்லை..பேராசிரியர் அட்டெண்டன்ஸ் எடுக்கிறார்களோ இல்லையோ நாங்கள் இந்த குட்டிச் சுவரில் உக்கார்ந்து அட்டெண்டன்ஸ் எடுப்போம், எல்லா பிகர்களும் வந்து இருக்கிறார்களா என்று..அதுவும் எங்கள் வகுப்பறை தேவதை “அர்ச்சனா” வைத் தேடிதான் கண்கள் பயணிக்கும், ஒவ்வொருவருக்கும்..அவள் தூரத்தில் வரும்போதே எல்லோரும் சீப்பை எடுத்து தலை வாரிக் கொள்வோம்..
“மச்சான்..இன்னைக்கு அவ யாரை பார்க்குறாளோ..அவன் டிரீட் கொடுக்கனும்..”
டிரீட்ன்னா தாஜ் ஹோட்டலில் பபே இல்லை..எதிர்த்த “டான்” டீ கடையில் ஒரு புரையும், டீயும்..அர்ச்சனா வரும்போதே தென்றல் காற்று வருவது போல இருக்கும்..அந்த பெர்பியூம் வாசம் அவள் வந்த பேருந்தைக் கூட பின்னால் அழைத்து வரும்..அவள் அணிந்த ஹைஹீல்ஸ் கூட அவள் மனம் போலவே செருக்குடன் வரும்..எப்போதும் கண்களில் ஒரு அலட்சிய பார்வை…..”ஆமாண்டா நான் அழகுதான்..அதுக்கென்ன இப்ப” என்று கேட்பது போலத் தோன்றும்..அவள் நடந்துவரும் அழகைக் கண்டு குட்டிச்சுவரில் உள்ள கற்கள் கூட நாணி கீழே விழும்..அவள் எதேச்சையாக ஒருவனைப் பார்த்தால் அவன் தான் அன்று ஒரு நாள் ராஜா..கொடுமை என்னவென்றால் எல்லாருக்கும் ஒரு நாள் ராஜா பதவி கிடைத்தது நான் உள்பட..
“சார் என்ன வேணும்..காலேஜ் இன்னைக்கு லீவு..”
கனவைக் கலைத்தது போல் வாட்ச்மேன் குரல்….
“இல்ல..பழைய கல்லூரி மாணவர்கள் ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கோம்….நானும் பத்து வருசத்துக்கு முன்னாடி இங்கதான் படிச்சேன்..அதான் சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கேன்..”
சிறிய புன்னகையுடன் அங்கிருந்து சென்றார்..அவரும் பள்ளியில் படித்திருப்பாற்தானே..நடந்து சென்று நாங்கள் குதூகலிக்கும் இடமான “டான்” டீகடை சென்றேன்..பேர் மாறியிருந்தது “ஜாலி, சினாக்ஸ் பார்..” பழமை ஒன்று கூட இல்லை..ஓவன், பிரிஜ், கோக், பெப்ஸி என்று எல்லாம் மாறியிருந்தது, எங்கள் மனத்தைப் போல..நாங்கள் சில நேரம் வீட்டிற்கு கூட போகாமல் இருந்திருக்கிறோம்..இங்கு வராமல் இருந்ததில்லை..கையில் 10 ரூபா, வைத்துக் கொண்டு ஒன்பை டூ டீ வாங்கிட்டு “மச்சான்..நீ கொடேன்..நீ கொடேன்..” என்று கருணாஸ் போல சொன்ன காலங்களை நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பு வந்தது..இன்று அதே சட்டைப் பையில் 1000 ரூபாய், கிரெடிட்கார்ட் இருக்கிறது..…சுவை நிறைந்த டீ, மனசு நிறைந்த நண்பர்கள்தான் இல்லை….நேரே கடை நோக்கி சென்றேன்..
“அண்ணே..ஒரு டீ குடுங்க..”
“சாரி, சார்..கோக், பெப்ஸிதான் இருக்கு..கூலிங்க் வேணுமா, வித்தவுட் கூலிங்கா..”
ஹூம்..கால மாற்றத்தில் “அண்ணே” கூட “சார்” ஆகிவிட்டது மதுரையில்..
“இல்ல வேண்டாம்..” திரும்பி பார்க்காமல் என் கிளாஸ் ரூம் சென்றேன்..முழுவதும் மாறியிருந்தது..ஸ்டீல் இருக்கைகள் குஷன் இருக்கைகளாயிருந்தன..எப்போடா விழுவோம் என்று இருக்கும் மின்விசிறி கூட இப்போது பளபளப்பாய் இருந்தன்...
“மச்சான்..அர்ச்சனா எங்கடா..இன்னைக்கு ஆளைக் காணோம்..”
“டே..இன்னைக்கு நீதான்டா டிரீட்..”
“டே..நித்யா மிஸ் கலர்புல்லா வந்திருக்குடா..”
“டே மாப்பி..இந்த வாரம் எங்க டாப்பு..அரசரடியிலயா, கோரிப்பாளையத்திலையா..”
“மச்சான்..தீபா..ரூபால சூப்பர் சீன் படம் போட்டிருக்கான்டா..”
“மச்சான்….புத்தகம் ஜெராக்ஸ் எடுக்கணும்டா..காசு கலெக்ட் பண்ணணும்டா..இதுதான் நல்ல சமையம்..கவிதாகிட்ட லவ்வ சொல்லிடு..”
“மாம்ஸ்..குரூப் ஸ்டடி எங்கடா..”
“டே..வெண்ணை..அடிக்கடி என் லைனில குறுக்க வர்ற..புரிஞ்சுக்கடா..அவ என்னைத் தாண்டா லவ் பண்றா..”
அப்பப்பா..எத்தனை எத்தனை நினைவுகள்..அனைத்தும் கல்லூரியில் மட்டும்தான் கிடைக்கும்..நீங்கள் கோடி ரூபாய் கூட சம்பாதியுங்கள்..ஆனால் வாழ்க்கையில் இந்த காலங்களை என்ன சம்பாதித்தாலும் திரும்ப வாங்க முடியாது..எதிர்காலத்தைப் பற்றி ஒரு பயமும் இல்லை..ஒரு பிராஜெக்டும் இல்லை..டெட்லைனும் இல்லை..கையில் ஒரு பைசா கூட இருக்காது..ஆனால் மனசு நிறைந்து இருக்கும்..நண்பர்கள் இருப்பார்கள்..பார்க்கும் அனைவரும் தேவதைகளாக தெரிவார்கள்..”மச்சான்..அவங்கிட்ட இருப்பது பிரண்ஷிப்தான்டா..லவ் இல்லை..” தெரிந்தே பொய் சொல்லுவார்கள்..பிரண்ட்ஷிப்க்கும் லவ்வுக்கும் உள்ள இடைவெளி குறித்து பெரிய லெக்சரே எடுப்பார்கள்..சொன்னவனே லவ்வில் விழுந்து, தாடி வைத்து, தண்ணி அடித்து, ஒரு மாதம் தேவதாசாகி, அடுத்த மாசம் அடுத்த பிகரைப் பார்க்க போய் விடுவான்..பிரெண்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் உருட்டுக்கட்டை எடுத்து போலீஸ் வரைக்கும் போவார்கள்..அதே பையனே, பொண்ணைப் பார்க்கும் போது, “காதல்தேசம்” வினீத் போல் அப்பாவியாய் நோட்புக்கை தூக்கிக்கிட்டு “எக்ஸ்கியூஸ் மீ..கேன் ஐ ஹேவ் யுவர் பென் பிளீஸ்” என்று ஓட்டை இங்கிலிஸ் பேசுவார்கள்..அனைத்தும் கல்லூரியில்தான்..அது ஒரு தனி உலகம்..சுகமான அனுபவங்கள் நிறைந்த உலகம்..
நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள்…”மச்சான் எப்படி இருக்கடா..பார்த்து எவ்வளவு நாளாச்சுடா..எத்தனை குழந்தைகள் டா..எவ்வளவு சாலரி..டேக் ஹோம் எவ்வளவு..எப்படா யூ.எஸ் போற….”
பல கேள்விகள்…..பழைய நண்பர்களை பார்ப்பதே ஒரு வரம்..ஏதோ மீண்டும் பிறந்தாற் போல இருக்கும்..எல்லார் கையிலும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருப்பதாகத் தோன்றும்..எல்லோரும் மறக்காமல் கேட்ட ஒரே கேள்வி..
“மச்சான்..அர்ச்சனா எங்கடா..வந்திருக்காளா..”
முதலில் ரசித்த தேவதை அல்லவா….எல்லார் மனசிலும் அவளை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென்று ஆசை பபிள்கம் போல ஒட்டிக் கொண்டது….ஒரு நிமிடம், மனைவி, குழந்தைகள் எல்லாமே மறந்து போனது..
“வருவாடா..நான் போன் பண்ணி கூப்பிட்டேன்டா..பர்ஸ்ட் ரொம்ப பிகு பண்ணினா..என் புருசன் விடமாட்டாரு..குழந்தைகளைப் பார்த்துக்கனும்னு..நான் கண்டிப்பா வரனும்னு சொல்லிட்டேன்டா..இன்னும் அவளுக்கு தான் அழகுன்னு திமிருடா..அதுதான் இப்படி பிகு பண்றா..அவிங்க வீட்டுல கருப்புக் கலர் சுமோ இருக்காம்டா..அதுல வர்றாளாம்..”
ஆர்கனைசர் சொன்னான்..எல்லாருடைய கண்களும் கருப்புக்கலர் சுமோவைத் தேடியது..மனம் அலைபாய்ந்தது..
கருப்புக்கலர் சுமோ வரவே, மனம் குதூகலித்தது.. எல்லாரும் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்தோம்…
சுமோ கதவு திறக்கப்பட மனமும் சுமோ போலவே பறந்தது..எல்லோரும் அதிர்ந்தே போனோம்.. எலும்புக்கூடாய் அர்ச்சனா…நாங்கள் ஆப்பிள் என்று வர்ணிக்கும் கன்னங்கள் சூம்பி போயிருந்தன..ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தது போல் இருந்தாள்..கர்வமான அவள் பார்வை கொஞ்சம் கூட அவளிடத்தில் இல்லை..பார்வையிலே திமிரை சொல்லும் அவள் கண்கள் மண்ணைப் பார்த்தே நடந்தது…கூடவே கரை வேட்டி கட்டிய ஒரு ஆள், முறுக்கு மீசையுடன்..
“அடியே..நான் கட்சி அலுவலகம் வரைக்கும் போயிட்டு வர்றேன்..
சீக்கிரம் வந்துரனும்..புரியுதா..
குரலிலே ஒரு மிரட்டல் தெரிந்தது..கீ கொடுத்த பொம்மை போல் தலையசைத்தாள்..யாருக்கும் எளிதில் சரி என்று சொல்லாதா அர்ச்சனாவா இப்படி..எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது..அர்ச்சனா எல்லாரையும் நோக்கி வரவே, அனைவரும் நொறுங்கிப் போனார்கள்..சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்தது..சாப்பாடு முடித்து கைகழுவும் போது என்னிடத்தி வந்தாள்..
“ராசா..எப்படி இருக்க..ஆளே மாறிட்ட..”
“நல்லா இருக்கேன் அர்ச்சனா..”
என்னால் இதற்கு மேல் கேட்காமல் இருக்க முடியவில்லை..
“என்ன ஆச்சு அர்ச்சனா உனக்கு..தேவதை மாதிரி இருப்பயே..இப்படி இருக்க..ஏதாவது பிரச்சனையா….”
இந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை போலும்..அவள் கண்கள் கண்ணீரை நோக்கிச் செல்வது தெரிந்தது..
“விடு ராசா..எல்லாம் என் தலைவிதி….பணக்காரங்கிறதுனால என்னோட விருப்பமில்லாம ஒரு அரசியல்வாதிக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க….என்ன வாழ்க்கை இது..தினமும் நரகம்தான்..அடி, உதை, சந்தேகம்..சிகரெட் சூடு..எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிடுச்சு..ஏன் ராசா..நான் இங்கயே தற்கொலை பண்ணிக்கவா..எங்க வீட்டுல கூட சொல்லாம என்னை இந்த கல்லூரியிலேயே புதைச்சுடுறீங்களா…”
என்னால் ஒன்றும் பேச முடியவில்லை..
33 comments:
தம்பி. உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. உங்க இடுகைன்னு காலைல பறக்க பறக்க வரதும் இதயம் கனத்துப் போறதும். :((. பக்கத்துல உக்காந்து நீங்க சொல்றத கேக்குறாப்புல இருக்கு.
என்னானே இப்பிடி பண்ணிப்புட்டீக?
இன்னும் மேல படிக்கல.. இதோ படிச்சுட்டு வரேன்..
மீ த சீக்கண்டு..
//அதுவும் எங்கள் வகுப்பறை தேவதை “அர்ச்சனா” வைத் தேடிதான் கண்கள் பயணிக்கும்//
அர்ச்சனா [பாதுகாப்பு கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது.] - அப்பிடி இல்ல இருக்கணும்..
//................................
லவ் பண்றா..”
அப்பப்பா..எத்தனை எத்தனை நினைவுகள்.//
அப்பிடியே Spielberg/Manoj Night Shyamalan படத்தோட screenplay மாதிரி இருக்கு..[ I can visualize all these scenes. நல்லா இருக்கு]
//“மச்சான்..அர்ச்சனா எங்கடா..வந்திருக்காளா..//
தேவதை என்னும் பட்டாம்பூச்சி..
கொஞ்சும் தமிழ் பைங்கிளி... [உபயம்: "பொக்கிஷம்"]
//ஏன் ராசா..நான் இங்கயே தற்கொலை பண்ணிக்கவா..எங்க வீட்டுல கூட சொல்லாம என்னை இந்த கல்லூரியிலேயே புதைச்சுடுறீங்களா…”
//
அர்ச்சனாவின் வலியை உணர வைக்கும் வரிகள்.நேராக நடப்பது போன்ற உணர்வு.
//“மச்சான்..தீபா..ரூபால சூப்பர் சீன் படம் போட்டிருக்கான்டா....//
வாழ்க மதுரை மனித்திருநாடு..
//ஒரு நிமிடம், மனைவி, குழந்தைகள் எல்லாமே மறந்து போனது..//
மறக்கும்ல... மறந்து தானே போகும்...
//பழைய நண்பர்களை பார்ப்பதே ஒரு வரம்..ஏதோ மீண்டும் பிறந்தாற் போல இருக்கும்..//
மறுமுறை
கருவுற [ச்] -
செய்தது
உன் உரு....
அண்ணே Congratulations.... உங்களுக்கு சிறுகதை எழுதிறது அம்மா மெஸ் கொத்து பரட்டா மேரி வருதுண்ணே.... வாழ்த்துக்கள்..
NOTE: ராசாவோட தொடுதல் நெம்ப கம்மியா இருக்கு... [எப்ப பாரு வாழ்த்தியே சொல்றாய்ங்கனு ஒரு பிராது வந்துரப்பிடாதுல... ]["கீரர்" ஊராச்சே! அதான்..]
பாசு இது உங்க area இல்லியா? right ல கை போட்டு left indicator போட்டு ஒரு U"turn போட்டு இருக்க வேண்டாமா?
அருடையான கல்லூரி கதையை அழகான திரைப்படம் போன்று சொல்லி கொண்டு வந்து கடைசியில் ......
Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்
புனைவாக இருக்க வேண்டுகிறேன் :(
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
தமிழ்செய்திகளை வாசிக்க
(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்
(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சினிமா புக்மார்க்குகள்
சினிமா புகைப்படங்கள்
// உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. உங்க இடுகைன்னு காலைல பறக்க பறக்க வரதும் இதயம் கனத்துப் போறதும். :((. பக்கத்துல உக்காந்து நீங்க சொல்றத கேக்குறாப்புல இருக்கு///
Its absolutely rite...
அருமையான பதிவு சார் .
//அவிய்ங்க
என்ன அர்த்தம் எனக்கு சொல்லுங்க
victor,
namma classla archanaave illaye? enakku eppadi teriyaama pochu?
தினமும் நரகம்தான்..அடி, உதை, சந்தேகம்..சிகரெட் சூடு..எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிடுச்சு.
//ராசா உங்கள பாத்து பேசுனதுக்கு அப்புறம் இந்த முடிவை அர்ச்சனா எடுத்த மாதிரி இருக்கே அண்ணே
/////////////////////
வானம்பாடிகள் said...
தம்பி. உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. உங்க இடுகைன்னு காலைல பறக்க பறக்க வரதும் இதயம் கனத்துப் போறதும். :((. பக்கத்துல உக்காந்து நீங்க சொல்றத கேக்குறாப்புல இருக்கு.
15 September, 2009 8:51 PM
///////////////////////
நன்றி வானம்பாடிகள் அண்ணே..
//////////////////
taaru said...
அண்ணே Congratulations.... உங்களுக்கு சிறுகதை எழுதிறது அம்மா மெஸ் கொத்து பரட்டா மேரி வருதுண்ணே.... வாழ்த்துக்கள்..
NOTE: ராசாவோட தொடுதல் நெம்ப கம்மியா இருக்கு... [எப்ப பாரு வாழ்த்தியே சொல்றாய்ங்கனு ஒரு பிராது வந்துரப்பிடாதுல... ]["கீரர்" ஊராச்சே! அதான்..]
பாசு இது உங்க area இல்லியா? right ல கை போட்டு left indicator போட்டு ஒரு U"turn போட்டு இருக்க வேண்டாமா?
15 September, 2009 9:38 PM
/////////////////////
ஹீ,,,ஹீ,,இதுக்கு மேலே எழுதுனா கேபிள் அண்ணே..”ரொம்ப நெஞ்ச நக்காதீங்க” ன்னு பின்னூட்டம் போட்டுருவாரே..)))
வருகைக்கு நன்றி அண்ணே..
//////////////////////
சுரேஷ்குமார் said...
//ஏன் ராசா..நான் இங்கயே தற்கொலை பண்ணிக்கவா..எங்க வீட்டுல கூட சொல்லாம என்னை இந்த கல்லூரியிலேயே புதைச்சுடுறீங்களா…”
//
அர்ச்சனாவின் வலியை உணர வைக்கும் வரிகள்.நேராக நடப்பது போன்ற உணர்வு.
15 September, 2009 9:27 PM
/////////////////////
நன்றி சுரேஷ்குமார்
///////////////////
15 September, 2009 9:38 PM
யோ வாய்ஸ் (யோகா) said...
அருடையான கல்லூரி கதையை அழகான திரைப்படம் போன்று சொல்லி கொண்டு வந்து கடைசியில் ......
15 September, 2009 9:39 PM
///////////////////
வருகைக்கு நன்றி யோகா..
///////////////////////
//“மச்சான்..தீபா..ரூபால சூப்பர் சீன் படம் போட்டிருக்கான்டா....//
வாழ்க மதுரை மனித்திருநாடு..
//ஒரு நிமிடம், மனைவி, குழந்தைகள் எல்லாமே மறந்து போனது..//
மறக்கும்ல... மறந்து தானே போகும்...
//பழைய நண்பர்களை பார்ப்பதே ஒரு வரம்..ஏதோ மீண்டும் பிறந்தாற் போல இருக்கும்..//
மறுமுறை
கருவுற [ச்] -
செய்தது
உன் உரு....
15 September, 2009 9:29 PM
///////////////////////
தல..கவிதை எல்லாம் கலக்குறீங்க..ஏன் இதெல்லாம் உங்க பிளாக்குல போடக்கூடாது..உங்க பிளாக் லிங்க் அனுப்புங்க தலை..
/////////////////
☀நான் ஆதவன்☀ said...
புனைவாக இருக்க வேண்டுகிறேன் :(
15 September, 2009 11:32 PM
/////////////////
நானும் வேண்டிக்கொள்கிறேன்..)
//////////////////
Anonymous said...
// உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. உங்க இடுகைன்னு காலைல பறக்க பறக்க வரதும் இதயம் கனத்துப் போறதும். :((. பக்கத்துல உக்காந்து நீங்க சொல்றத கேக்குறாப்புல இருக்கு///
Its absolutely rite...
16 September, 2009 2:33 AM
/////////////////////
வருகைக்கு நன்றி அண்ணே..
/////////////////////
krishna said...
அருமையான பதிவு சார் .
//அவிய்ங்க
என்ன அர்த்தம் எனக்கு சொல்லுங்க
16 September, 2009 6:04 AM
/////////////////////
அவியிங்களைப் பத்தி எழுதறதுனாலே..))
idhu karpanaya? nijama?
nija kathai pola theriya vilai.................
//தல..கவிதை எல்லாம் கலக்குறீங்க..ஏன் இதெல்லாம் உங்க பிளாக்குல போடக்கூடாது..உங்க பிளாக் லிங்க் அனுப்புங்க தலை..//
என்னாது நான் தலையா? இனிமே நான் உங்களோட கடிஸி தொண்டன்... அம்புட்டுத்தேன்...
இது தான் ராசா touch... ஏதோ வாயிக்கு வரத, ஓரண்டை இழுக்கலாம்னு [உங்கள] அனுப்பிச்சா இப்புடி போட்டு தாக்கிட்டீங்களே.. anyway உங்கள் "கலக்குறீங்க" வுக்கு நெம்ப நன்றி... உங்களோட "நாறிப்போன பதிவுலகம்" பாத்ததுக்கு அப்புறம் எவனுக்காவது ஆசை வரும்?!!... ஊ ஹூம்...
// ஹீ,,,ஹீ,,இதுக்கு மேலே எழுதுனா கேபிள் அண்ணே..”ரொம்ப நெஞ்ச நக்காதீங்க” ன்னு பின்னூட்டம் போட்டுருவாரே..))) ///
அதுக்கில்லண்ணே... அம்ம ஊரு குசும்ப சேத்து விட்டு அடிச்சுருந்தா அருமையா இருந்திருக்கும்... நான் அத சொன்னேன்..
//பிரதீப் said...
victor,
namma classla archanaave illaye? enakku eppadi teriyaama pochu?//
ஹா ஹா ஹா ஹா ஹா... முடில...என்னால முடில..
நான் மொதல்லையே சொன்னேன்ல... பாதுகாப்பு கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது..!!!! கரை வேட்டிக்காரரை கதயோட கடேசில பாத்தாலும், இத எழுதினது என்னவோ ரெண்டு நாள் கழிச்சு தானே... !!!
நெகிழ்ச்சியான பதிவு
//ஏன் ராசா..நான் இங்கயே தற்கொலை பண்ணிக்கவா..எங்க வீட்டுல கூட சொல்லாம என்னை இந்த கல்லூரியிலேயே புதைச்சுடுறீங்களா//
கல்லூரியில் படித்த பெண் இவ்வாறு முடிவெடுப்பது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.
இது போன்ற முட்டாள்களை தூக்கி எறிந்து விட்டு நம் பெண்கள் தைரியமாக வாழும் நிலை என்று வருமோ ?!
யாருடா அந்த அர்ச்சனா, நீ லவ் பண்ணுன பொண்ணு தான. நானும் தான வந்து இருந்தேன் அந்த சந்திப்புக்கு. பாவம் டா மாப்பிளை நீ. எவ்வளவு வருத்தப்பட்ட.
அருமையான பள்ளிகாலக்கதையை சொல்லி கடைசியில் பசுமை நினைவுகளை...சோகமாகீடிங்க. மீண்டும் அர்ச்சனாவை கண்டீங்க்களே ..அதுவே போதும். .நடந்ததையே நினைத்திருந்தால் எங்கும் அமைதியில்லை....
//கால மாற்றத்தில் “அண்ணே” கூட “சார்” ஆகிவிட்டது//
//இந்த வாரம் எங்க டாப்பு //
//எல்லோரும் அதிர்ந்தே போனோம் யாருக்கும் எளிதில் சரி என்று சொல்லாதா //
உண்மை...உண்மை...சத்தியாமாய்...உண்மை.
நடை அற்புதம் ராசா!கலக்குறீங்க!அந்த புகை படத்தில் இருக்கிற கல்லூரி,நான் படிச்சது!சிவகங்கை மன்னர் அரசு கலை கல்லூரி.படம்:கல்லூரி.ஒளிப்பதிவு,செழியன்.அதே கல்லூரியில் படித்தவர்.எல்லாம் என்னோடது.மேட்டர் மட்டும் உங்களுது.என்னத்துக்கு வம்பு..நம்மிது!அற்புதம் மக்கா!
aah..kadaisila feelings ah poiduchae..
college life ae oru thani sugamnae..our kavalai illa oru kashtam illa..sorgam nae..hmmm 5 maasam achu coll mudichu..ipo feelings ah iruku..hmmm..
உங்க கல்லூரி நினைவுகளைப் படிக்கிறப்போ நானும் ஒரு ரவுண்டு கல்லூரிக்குள்ளே போய் வந்த மாதிரி உணர்வோட தடதடன்னு படிச்சிக்கிட்டு வந்தா இப்படி கடைசியிலே ஒரே அடியா அடிச்சு உட்கார வச்சிட்டிங்களே :-(
அசத்தலான எழுத்து பாஸ் உங்களோடது. அர்ச்சனாவுக்கு என் அனுதாபங்கள் (ரொம்ப சம்பிரதாயமா இருந்தாலும் மனசுல தோணினதச் சொல்லிட்டேன்)
Post a Comment