Thursday, 10 September, 2009

லாஸ்வேகாஸ் எனும் கேளிக்கை உலகம்

ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, பிறந்த நாள் தெரிவித்த எல்லாருக்கும் நன்றிங்கண்ணே..நிறைய பேர் இமெயிலிலும் வாழ்த்து சொல்லியிருந்தாயிங்க..கண்ணுல தண்ணி வந்திருச்சுண்ணே..எம்மேல இம்புட்டு பாசமாண்ணே..இதுக்கு பதிலா நான் என்ன பண்ண போறேன்னு தெரியலைண்ணே(வரப் போகும் பின்னூட்டங்கள் – (ரொம்ப நெஞ்ச நக்காதீங்க ராசா)..(ஒன்னும் பண்ண வேண்டாம்…வர்ரப்ப ரெண்டு ஐபாட் மட்டும் வாங்கிட்டு வந்துருங்க)..எதுனாலும் பேச்சு பேச்சா இருக்கனும்னே..

இங்கு தொழிலாளர் தினம் என்பதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது..எங்கயாவது போகலாம்னு முடிவெடுத்தப்ப லாஸ்வேகாஸுக்கு குறைந்த விலையில் டிக்கெட் கிடைத்தது..நான், என்னோட வீட்டுக்காரம்மா, கோவாலு, கணேசு, மற்றும் இன்னொரு குடும்பம்..ஜோரா தயாரானோம்..லாஸ்வேகாஸ் கேள்விப்படதாவர்களுக்கு சிறு குறிப்பு..அமெரிக்காவில் நிவேதா மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்..இதை சூதாட்ட உலகம் என்றே சொல்லலாம்..நகரம் முழுக்க, சூதாட்டம் விளையாடுவதற்கு என்றே ஏகப்பட்ட கேசினோக்கள் இருக்குண்ணே..இதை தூங்கா நகரம்ன்னு சொல்லுவாய்ங்க..சின்(குற்றம்) சிட்டி என்றும் இதை அழைப்பர்..இரவு முழுவதும் கேளிக்கைகள்தான் இந்த நகரில்..பார்ட்டி, சூதாட்டம், கேளிக்கைள் இவைதான் அங்கு வியாபாரம்..

கோவாலு லாஸ்வேகாஸ் என்றதுமே 2 நாளைக்கு முன்னமே ரெடியாகி விட்டான்..பேச்சிலர்களுக்கான நகரமாச்சே..”ராசா..இந்த தடவை எப்படியாவது இரண்டு பிகர்களுடவாவது பழகி போன் நம்பர் வாங்கிரனும்டா..” ன்னு சொல்லிக்கிட்டே இருந்தான்..ராசா பிளைட்டுல இருந்தே ஆரம்பிச்சரனும்டான்னு சொன்னான்..அப்பவே அவன் அடிவாங்காம வரமாட்டான்னு தோனிச்சுன்னே..

எல்லாத்தையும் கரெக்டா பிளான் பண்ணிட்டு பிளைட் எத்தனை மணிக்கு என்பதை மட்டும் கரெக்டா மறந்துட்டோம்னே..எல்லாரும் 10:30 மணிக்கு நினைச்சுக்கிட்டே சர்வசாதரணமா போறோம்..10:00 மணிக்கு பிளைட்டாம்..விமான பணியாளர்கள் கொலைவெறியோட பார்க்குறாயிங்கண்ணே..பிரதமர் மாதிரி எங்களுக்காக விமானமே வெயிட்டிங்க்..கோவாலு பெருமையா காலர தூக்கி விட்டுக்கிட்டான்..எல்லாரும் அவசரம் அவசரமா விமானத்துக்குள்ள போறோம்..எல்லாம் கொலைவெறியோட பார்க்குறாயிங்க..பாவம், காலையில சாப்பிடல போலிருக்கு..திரும்பி கோவால பார்க்குறேன்…முகம் இருண்டு போயிருந்தது..எனக்கு புரியவேயில்லை..அவனுக்கு பின்னாடி கொஞ்சம் எட்டிப் பார்த்தா, சுமார் 60 வயசுல விமான பணிப்பெண்..நம்ம ஆளு முதல் பாலிலே டக் அவுட் ஆன மாதிரி ரியாக்சன் கொடுத்தான்..

“ராசா, 12பி ல ஏறினா கூட ரெண்டு மூணு பிகர் பார்க்கலாம்டா..ஏண்டா எனக்கு மட்டும் இப்படி நடக்குது..”

ரொம்ப சலிச்சுக்கிட்டாண்ணே..இது லோக்கல் விமானமாதலால் சீட் நம்பர் கொடுக்கப்படவில்லை..தேடிப் பிடிச்சு ஒரு சீட் பிடிச்சு உக்கார்ந்துட்டு கோவாலை பார்த்தேன்…அவனுக்கு சீட் இல்லை..

“ராசா..பிளைட்ல புட்போர்டு அடிக்க வைச்சிருவாயிங்க போலிருக்குடா..”

கடைசியில் ஒரே ஒரு சீட்தான் இருந்தது..கோவாலு ஆசை, ஆசையாக போய் பார்த்தால், பக்கத்தில் திரும்பவும் 60 வயதுமிக்க ஒரு குண்டான பாட்டி..ஒன்றரை சீட்டில் உக்கார்ந்து இருந்தது..கோவாலு அலறிட்டான்..இதுல அந்தப் பாட்டி வேற “பேராண்டி….நல்லா கம்பர்டிபிளா உக்காருப்பா..” ன்னு அரைசீட்டைக் காட்டா..கோவாலு முகம் இருண்டே போச்சுண்ணே..

“ராசா..தயவு செய்து சீட்டை மாத்திக்கலாம்டா..இங்க வந்துருடா..” கெஞ்சுறான்…விமான பணிப்பெண் வேறு விமானம் கிளம்புவதாக சொல்லி உக்கார சொல்லி விட்டதால் என்னால் ஒன்றும் முடியவில்லை..நம்ம ஊரு ஏர்டெக்கானை விட மோசமாக இருந்தது விமானம்..ஆட்டோ மாதிரி குலுங்கி குலுங்கி சென்றதில் எனக்கு பெருங்குடலு டான்ஸ் ஆடுறமாதிரி இருந்துச்சுண்ணே..

அப்படி, இப்படின்னு லாஸ்வேகாசை அடைந்தோம்..எங்கு பார்த்தாலும் கேசினோ, இளம்பெண்கள்..விமான நிலையத்தில் கூட கேசினோ இருக்குன்னே..விமானத்தில் ஏறுரதுக்கு முன்னாடி ஒரு ரவுண்ட் விளையாடலாம்..பயணக் களைப்பில் ஹோட்டலில் சென்று தூங்கி விட்டு இரவு கதவைத் திறந்து பார்க்கிறேன்..அம்மாடியோவ்..எல்லாம் விளக்குகள்..ஜெகஜோதியாய் காட்சி அளிக்கிறது...எங்கு பார்த்தாலும் வானுயர்ந்த கேசினோக்கள்..கிளப்புகள், பார்ட்டி..பப்புகள்..சொர்க்க பூமியாக இருக்கிறது உங்கள் கையில் டாலர் இருந்தால் மட்டும்..இரவானால்தான் அங்கு வேலையே ஆரம்பிக்கிறது..வீதிகளில் நடந்து சென்று அந்த அலங்காரங்களைப் பார்ப்பது சுகமான அனுபவம்..ஆனால் வீதிகளில் எங்கு பார்த்தாலும் கையில் மதுவுடன் பெண்கள், ஆண்கள்..நாளை வாழ்க்கையை மறந்து திரிகிறார்கள்..பாலியல் தொழில் அங்கு சட்டப்பூர்வமாக உள்ளது..வீதிகளில் நடந்து சென்றால், விசிட்டிங் கார்டுகளை கையில் வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள்..நீங்கள் மனைவியோடு நடந்து சென்றாலும் கவலைப்படுவதில்லை..

வீதிக்கு வீதி நிர்வாணக் கிளப்புகள்..பெண்களை காட்சிப் பொருளாக்குகிறார்கள்..நம்ம ஊரில் கொட்டகை தியேட்டரில் போடப்படும் படத்திற்கு வண்டியில் விளம்பரம் செய்வார்களே..அது போல ஊரெங்கும் வண்டிகள்..நிர்வாண கிளப்புகளுக்கு அழைப்பதற்கு..இதெல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும்..இல்லையெனில் மனமும், உடம்பும்தான் கெட்டுப் போகும் சில டாலர்களில்..

அடுத்து லாஸ்ஏஞ்சல்ஸ் சென்றோம்..லாஸ்வேகாஸின் குழந்தை போல இருக்கிறது..டிஸ்னி லேண்ட் தீம்பார்க் சென்று நேரத்தைக் கழித்தோம்..அடுத்து, நான் மிகவும் எதிர்பார்த்து கார்த்திருந்த “ஹாலிவுட்” சென்றோம்..படத்தில் பார்த்திருப்பீர்கள்...மலையில் ஹாலிவுட் என்று எழுதியிருக்குமே..அங்கு எல்லாம் செல்ல முடியாது..அது ஒரு அடையாளத்துக்காக..ஹாலிவுட் என்பது ஒரு பெரிய வீதி..அதில் நிறைய ஸ்டூடியோக்கள் இருக்குதுண்ணே..வீதி முழுக்க ஹாலிவுட் நடிகர் வேஷத்தில் நிறைய நாடக நடிகர்கள்..மடோனா, டாம் க்ரூஸ்..இப்படி பல..அவர்களுடன் நின்று படம் எடுத்துக் கொள்ளலாம்..நான் “300” படத்தில் நடித்த வீரர்கள் போன்று உடையணிந்தவர்களுடன் படம் எடுத்துக் கொண்டேன்..ஹாலிவுட் வீதியில் தரை முழுக்க ஹாலிவுட் பிரபலங்களின் பெயர்களை பொறித்து வைத்திருக்கிறார்கள்..அதற்கு பெயர் “ஹால் ஆப் பேமஸ்”..ஒவ்வொருவரும் அவருக்கு பிடித்த நடிகர்கள் பெயருக்கு முன்னால் படம் எடுத்துக் கொள்கிறார்கள்..நான் “புரூஸ்லி, சாமுவேல் ஜாக்சன், புரூஸ் வில்லிஸ், டீசல் வாஷிங்க்டன்” பெயருக்கு முன்னால் படம் எடுத்துக் கொண்டேன்….அடுத்து புகழ்பெற்ற வெனிஸ் பீச் சென்றோம்..

எல்லாம் பார்த்து முடித்த பிரிய மனமில்லாமல் விமான நிலையம் அடைந்தோம்..என்ன.. கோவாலுக்கு என்ன ஆச்சுண்ணா கேக்குறீங்க..பக்கத்து சீட் பாட்டி கொடுத்த அதிர்ச்சியில மூணு நாளைக்கு மந்திரிச்சு விட்ட மாதிரியே அலைஞ்சான்..வீடு வந்து சேர்ந்தபின்பு ஏதோ, ஒரு உலகத்தில் இருந்து மற்றொரு உலகத்திற்கு வந்தது போல் இருந்துச்சுண்ணே..கட்டிலில் வந்து சாய்ந்த போது கண்களிலிருந்து இன்னும் மின் விளக்குகள் அணையவில்லை….செல்பேசி அழைத்தது..அண்ணன் ஊரிலிருந்து..

“எப்படியிருக்கீங்க அண்ணே..”

“நல்லா இருக்கேன்டா….லாஸ்வேகாஸ் பயணம் எப்படி இருந்துச்சு..”

“ம்..நல்லா இருந்துச்சு….என்ன பின்னாடி ஏதோ திருவிழா சத்தம் போல கேக்குது..”

“ஆமாடா..நம்ம ஊருல திருவிழால….ஊரே ஜெகஜோதியா இருக்குடா..எங்க பார்த்தாலும் சொந்த பந்தங்களோட கொண்டாட்டம்தான்..நம்ம வீட்டுல எல்லாரும் கட்டுச்சோறு கட்டிக்கிட்டு திருவிழாவுக்கு போயிருந்தோம்..ஆத்துல நிலா வெளிச்சதுல எல்லோரும் உக்கார்ந்து பகிர்ந்து சாப்பிட்டது எவ்வளவு சந்தோசமா இருந்துச்சு தெரியுமா..இந்த சமயத்துல நீ இங்க இல்லாத ஒரு குறைதாண்டா..அம்மா கூட அத நினைச்சு கண் கலங்கிட்டாங்கடா..”

நம்ம ஊரு, நம்ம ஊருதாண்ணே…

11 comments:

taaru said...

மீ த பர்ஸ்ட்டு...

taaru said...

என்னடா வெறும் வேகாஸ் வாடை[யா] அடிக்குதேன்னு பாத்தேன்... மூணு நாளைக்கு ரெண்டு ஊரா?
வீட்டுக்காரம்மாவோட வேகாஸ் போன ஒரே அமெரிக்க சிட்டிசன் / பதிவுலக பக்கிரி நீங்களாகத்தான் இருக்கும்...

//“300” படத்தில் நடித்த வீரர்கள் போன்று உடையணிந்தவர்களுடன் படம் எடுத்துக் கொண்டேன்..//
இனிமே அது 300 இல்லை 301 or பிம்பிளிக்கி பியாப்பி....

அது சரி .. தொழிலாளர் தினதன்னிக்கி தொழில் நகரம் தான் போய் இருக்கீங்க..

நோட்: டென்செல் வாஷிங்க்டன்.. தானே.. ?!! பூ வ பூவுன்னும் சொல்லலாம் புய்ப்பம்னும் சொல்லலாம் நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாமா?? :-) :-P.... Juz for fun...

வானம்பாடிகள் said...

இடுகை தப்பாம எங்க சுத்தினாலும் கள்ள ப்ளைட் புடிச்சி ஊரு பக்கம் விசிட் அடிக்கிறீங்களே. அசத்துறீங்க ராஜா.:))

சூரியன் said...

/இடுகை தப்பாம எங்க சுத்தினாலும் கள்ள ப்ளைட் புடிச்சி ஊரு பக்கம் விசிட் அடிக்கிறீங்களே. அசத்துறீங்க ராஜா.:)//

உடம்பு அங்க இருந்தாலும் மனசு இங்க தான் போல...

இராகவன் நைஜிரியா said...

எல்லாம் சொல்லிட்டு கடைசியில் சுஜாதா மாதிரி முடிச்சீங்க பாருங்க ஒரு பன்ச் அதுதான் உங்க எழுத்துகளில் எனக்கு ரொம்ப பிடிச்சதுங்க.

என்னதான் ஊர் ஊரா சுத்தினாலும், நம்ம ஊர் நம்ம ஊர்தாங்க..

ராஜா said...

////////////////
taaru said...
என்னடா வெறும் வேகாஸ் வாடை[யா] அடிக்குதேன்னு பாத்தேன்... மூணு நாளைக்கு ரெண்டு ஊரா?
வீட்டுக்காரம்மாவோட வேகாஸ் போன ஒரே அமெரிக்க சிட்டிசன் / பதிவுலக பக்கிரி நீங்களாகத்தான் இருக்கும்...

//“300” படத்தில் நடித்த வீரர்கள் போன்று உடையணிந்தவர்களுடன் படம் எடுத்துக் கொண்டேன்..//
இனிமே அது 300 இல்லை 301 or பிம்பிளிக்கி பியாப்பி....

அது சரி .. தொழிலாளர் தினதன்னிக்கி தொழில் நகரம் தான் போய் இருக்கீங்க..

நோட்: டென்செல் வாஷிங்க்டன்.. தானே.. ?!! பூ வ பூவுன்னும் சொல்லலாம் புய்ப்பம்னும் சொல்லலாம் நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாமா?? :-) :-P.... Juz for fun...

///////////////////////
வாங்கண்ணே..நீங்க இல்லாம கமெண்ட் செக்சனே களை கட்ட மாட்டீங்குது..

அண்ணே..301 ஆ??..இது நீங்க புதுசா எடுக்கப் போற மூவியா..ஹி..ஹி..

இந்த ஊருல டீசல் வாஷிங்க்டந்தான் சொல்றாயிங்கண்ணே..ஒருவேளை பெட்ரோல் வாஷிங்க்டன்னா இருக்குமோ..??..)))

ராஜா said...

//////////////
வானம்பாடிகள் said...
இடுகை தப்பாம எங்க சுத்தினாலும் கள்ள ப்ளைட் புடிச்சி ஊரு பக்கம் விசிட் அடிக்கிறீங்களே. அசத்துறீங்க ராஜா.:))
10 September, 2009 10:06 PM
//////////////
நன்றிண்ணே..நம்ம ஊரை மறக்க முடியுமா??

ராஜா said...

/////////////////
சூரியன் said...
/இடுகை தப்பாம எங்க சுத்தினாலும் கள்ள ப்ளைட் புடிச்சி ஊரு பக்கம் விசிட் அடிக்கிறீங்களே. அசத்துறீங்க ராஜா.:)//

உடம்பு அங்க இருந்தாலும் மனசு இங்க தான் போல...
10 September, 2009 11:40 PM
//////////////////
நன்றிண்ணே..நம்மளுக்கெல்லாம் ஊருப்பாசம் கொஞ்சம் ஜாஸ்திண்ணே..

ராஜா said...

/////////////////////
இராகவன் நைஜிரியா said...
எல்லாம் சொல்லிட்டு கடைசியில் சுஜாதா மாதிரி முடிச்சீங்க பாருங்க ஒரு பன்ச் அதுதான் உங்க எழுத்துகளில் எனக்கு ரொம்ப பிடிச்சதுங்க.

என்னதான் ஊர் ஊரா சுத்தினாலும், நம்ம ஊர் நம்ம ஊர்தாங்க..
11 September, 2009 3:16 PM
////////////////////////
கரெக்டா சொன்னீங்க அண்ணே..சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போலாகுமா.,,

துபாய் ராஜா said...

மூணு நாள் பயணத்தை இன்னும் கொஞ்சம் விலாவாரியா சொல்லியிருக்கலாம்ணே.....

என்னதான் ஃபிளைட் பிடிச்சு ஊர் ஊரா சுத்தினாலும் நம்மூர்ல கட்டுச்சோறு கட்டிகிட்டு திருவிழா போற சுகம் வரவே வராதுண்ணே...

அவிய்ங்க ராசா said...

////////////////////
துபாய் ராஜா said...
மூணு நாள் பயணத்தை இன்னும் கொஞ்சம் விலாவாரியா சொல்லியிருக்கலாம்ணே.....

என்னதான் ஃபிளைட் பிடிச்சு ஊர் ஊரா சுத்தினாலும் நம்மூர்ல கட்டுச்சோறு கட்டிகிட்டு திருவிழா போற சுகம் வரவே வராதுண்ணே...
12 September, 2009 3:52 PM
//////////////////////
பதிவு பெரிசா போய்விடும் என்பதால் சொல்லவில்லை அண்ணே..வருகைக்கு நன்றி..

Post a Comment