“ஏங்க…காலங்காத்தால அப்படி என்ன தூக்கம்..சீக்கிரம் எந்திரிங்க..10 மணிக்கு “உன்னைப் போல் ஒருவன்” போகனும்..”
“மணி என்ன..”
“7”
“10 மணிக்குதானே..நிம்மதியா மனுசனை தூங்க விடு..”
“அதுக்கில்லீங்க..1 மணி நேரமாவது வண்டி ஓட்டனும்..8 மணிக்காவது கிளம்பனும் இல்ல..”
“சரி கிளம்புவோம்..ஒரு அரை மணியாவது தூங்க விடு..”
07:30 மணிக்கு அதே பல்லவி..இதற்கு மேல் தூங்க பிடிக்காமல் எழுந்தேன்..
“சீக்கிரம் கிளம்புங்க..டைம் ஆகிடப் போகுது..”
“08:30 மணிக்கு கிளம்பினா போதும்..மனிசனை நிம்மதியா குளிக்க விடு..”
மணி பார்த்தால் 08:30..வந்து காரை ஸ்டார்ட் செய்து..சிறிது தூரம் செல்ல..
“என்னங்க..நிறுத்துங்க…நிறுத்துங்க..”
“என்ன ஆச்சு..”
“வீட்டுல ஸ்டவ்வை ஆப் பண்ணிட்டேனான்னு தெரியல..எதுக்கும் ஒரு தடவை போய் செக் பண்ணிக்கிருவோமா..”
“ஒரு மனுசனை, நிம்மதியாய்..” இதற்கு மேல் சொல்லவில்லை..மதியம் சோறு வேண்டுமே..
“சரி வா…”
ஒரு யூ டர்ன்..மணி 09:00..வீட்டிற்கு போய் போர்த்தால்..ஸ்டவ் ஆப் ஆகித்தான் இருந்தது..கொலை வெறியுடன் மனைவியைப் பார்க்க..
“ஏங்க..வந்ததும் நல்லதாப் போச்சு..அப்படியே தண்ணிப் பாட்டிலில் தண்ணி பிடிச்சுக்குருவோம்..”
“மணி என்ன தெரியுமா..09:15..”
“ஒரு 15 நிமிசம் கழிச்சுப் போனா கமல் ஒன்னும் கோவிச்சுக்க மாட்டரு..நான் தண்ணி பிடிச்சுக்குறேன்..”
கிளம்பும் போது மணி 09:30..இழுத்துப் பிடிச்சு ஓட்டி ஒரு அரை மணி நேரத்தில தியேட்டர் போயிடனும்..ஆக்சிலேட்டரை பலம் கொண்ட மட்டும் அழுத்தினேன்..
மணி 09: 45..
“என்னங்க..”
“என்னடி..எதுவும் குக்கரை ஆப் பண்ணாம வந்துட்டயா..”
“அய்யோ..அப்படி இல்லீங்க..நானும் வண்டி எடுத்ததுல இருந்து ஒன்னு கேக்கனுமின்னு இருந்தேன்..கோவிச்சுக்க மாட்டீங்களே..”
“என்னம்மா..எதுவும் கட்டுச்சோறு கட்ட மறந்துட்டயா..”
“நீங்க வண்டி எடுத்ததுல இருந்து, ரெட் கலர்ல ஸ்டியரிங்க பக்கம் ஒன்னு எறியுதே..அது என்னங்க..”
அதிர்ந்து போய் பார்த்தால் “பெட்ரோல் காலி அலர்ட்..”
“அடிப்பாவி..ஏன்..வண்டி ஆப் ஆனா பிறகு சொல்ல வேண்டியதுதானே..”
“இல்லீங்க..அப்ப சொன்னா நல்லா இருக்காது..”
எங்கதான் பேசக் கத்துக்குறாயிங்கன்னு தெரியலண்ணே..சரி பெட்ரோல் பங்கை தேடி அலைஞ்சா..ஒன்னும் கிடைக்கலை..
மணி 10:15..
“ஏங்க..படம் ஆரம்பிச்சுருக்குமாங்க..”
“கமல் இந்நேரம் குண்டு வைக்க ஆரம்பிச்சுருப்பாரு..”
அப்பாடா ஒரு வழியாய் பெட்ரோல் பங்கை அடைந்தாயிற்று… பர்ஸை எடுப்பதற்காக பேண்ட் பாக்கெட்டில் கையை விடுகிறேன்..பர்ஸைக் காணோம்..
“அய்யோ..அடியே..எங்க என் பர்ஸ்..நேத்து இந்த பேண்ட்தானே போட்டிருந்தேன்”
“நாந்தான் பத்திராம இருக்கட்டும்னு பீரோவுக்குள்ள வைச்சேங்க..”
“அடிப்பாவி..ஒரு டாலர் கூட இல்லியேடி..”
இருங்க..என் பர்ஸ்ல ஒரு 20 டாலர் வைச்சிருப்பேன்..பார்க்குறேன்..அப்பத்தான் எனக்கு மூச்சு வந்தது..
மணி 11:00
அவசரமாக பெட்ரோல் போட்ட பிறகு..வண்டியை அழுத்த..
“ஏங்க..கமல் ஏங்க குண்டு வைக்கிறாரு..”
“அவிங்க ராசா மாதிரி ஒரு பயலும் வாழ்க்கூடாதுன்னுதான்..கொஞ்சம் சும்ம வர்றீயா..படமே பார்க்கலைன்னாலும் பரவாயில்லை..உண்மைத்தமிழன் 10 பக்கத்துக்கு விமர்சனம் போடுவாரு..இரண்டரை மணீ நேரத்தில படிச்சுரலாம்..”
“ஈழத் தமிழன், மறத்தமிழன்..கேள்விப்பட்டிருக்கேன்..அது யாருங்க..உண்மைத்தமிழன்..”
“ஐயோ..கடவுளே..நானே..லேட் ஆகிடுச்சுன்னு கடுப்புல இருக்கேன்..பேசாம வா..”
மணி 11: 15..
“ஏங்க..இன்னொரு லைட் எறியுது..”
அதிர்ந்து போனேன்..அவசரம் அவசரமாக டிஸ்ப்ளே பார்க்க….
“இல்லீங்க…நம்ம கார்ல இல்ல..பின்னாடி போலிஸ் லைட் போட்டுக் காமிக்கிறாரு..”
அடக்கடவுளே..இங்க அமெரிக்காவுல போலிஸ் பின்னால் லைட் போட்டு காண்பித்தால் வண்டியை ஓரம் கட்டி நிற்க வேண்டும்..வண்டியை விட்டு வெளியே வரக்கூடாது..ஸ்டியரிங்க் மீது இரண்டு கைகளை வைத்திருக்க வேண்டும்..போலிஸ் வந்தார்..
“நான் எதற்கு உன்னைப் பிடித்திருக்கிறேன் தெரியுமா, சார்..”
“தெரியலை சார்..பெட்ரோல் எல்லாம் இருக்கு சார்..” உளறினேன்..
“நீ..100 மைல் வேகத்திற்கு வண்டியை ஓட்டிருக்கிறாய்..வண்டி டாக்குமெண்ட், இன்சூரன்ஸ்..லைசன்ஸ்., எடுங்க சார்.”
பர்ஸ் தான் வீட்டில் இருக்கிறதே..என் மனைவி நைசாக..
“ஏங்க..ஒரு டாலர் லஞ்சம் நீட்டினா வாங்கிக்கிருவாரா.,.,”
“அடிப்பாவி…இங்கெல்லாம் உசிரை எடுக்காம விட மாட்டயிங்க….”
“சார்..பர்ஸை மறந்து விட்டேன்..இது என் கம்பெனியின் ஐ.டி கார்டு..”
250 டாலர் அபதாரம்..கமல் ரொம்ப சோதிச்சுட்டருண்ணே..
வண்டியை 60 மைல் வேகத்திலே ஓட்டி தியேட்டரை அடைந்தால், மணி 12:30..தியேட்டர்ல ஈ காக்கா காணோம்..படம் முடிச்சுட்டாயிங்க போல..சரி, நாளைக்கும் படம் போடுறாயிங்க இல்ல..டிக்கெட்ட நாளைக்கு ஷோவுக்கு மாத்துறதுக்கு கேட்டுப் பார்ப்போம்..டிக்கெட் அலுவலகத்தை அடைந்தேன்..
“எக்ஸ்கியூஸ்மி..இன்னைக்கு படம் பார்க்க முடியல..இந்த டிக்கெட்டை நாளைக்கு மாற்ற முடியுமா..”
அலுவலகப் பெண்மணி எரிச்சலுடன் டிக்கெட்டை வாங்கிப் பார்த்து, கோவத்துடன் திருப்பித் தந்தாள்..
“மிஸ்டர்..நல்லா பாருங்க..இது நாளைக்கு ஷோவுக்குரிய டிக்கெட்தான்..”
பார்த்தால் 20 செப்டெம்பர்ன்னு இருக்குன்னே..நான் 20 செப்டம்பர் இன்னைக்கு நினைச்சு..60
மைல் வண்டி ஓட்டி, 250 டாலர் பைன் கட்டி..இப்ப என் மனைவி என்னை கொலை வெறியுடன் பார்க்க..
“சரிம்மா..விடு..இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில சகஜம்தானே..”
சல்ஜாப்பு சொல்லிட்டு வெளியே வர்றேன்..நம்ம ஊருக்காரர் ஒருத்தர் என்னைப் பார்த்து பாசமா கூப்பிட்டார்..
“சார்..ரெண்டு டிக்கெட் இருக்கு..வேண்டுமா..”
“அடப்பாவிங்களா..அமெரிக்காவுலயும், பிளாக்குல டிக்கெட்டா..இருங்க, உண்மைத் தமிழன் அண்ணாச்சிக்கிட்ட சொல்லிக் கொடுக்குறேன்..”
“சார்..அவசரப்படாதீங்க..இன்னைக்கு கிளம்பி வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு,….வர்ற வழியில கொஞ்சம் பிரச்சனை..வந்து பார்த்தா, என்னோட டிக்கெட் நாளைக்கு ஷோவுக்குதான்..நான் கவனிக்காம் வந்துட்டேன்..நாளைக்கு இதுக்காக 50 மைல் வர முடியாது..அதுக்குத்தான்..”
அட..உன்னைப் போல் ஒருவன்..
17 comments:
:)))))))
ராசா.. சூப்பரபு.. :)
nalla padam paaka kilamburinga...
//உண்மைத்தமிழன் 10 பக்கத்துக்கு விமர்சனம் போடுவாரு..இரண்டரை மணீ நேரத்தில படிச்சுரலாம்..”
//
LMAO :)))))))))))))))))))))))))))))
funny as usual.
படத்த விட இது நல்லாருக்கு. என்னா த்ரில்லு. அசத்திட்டீங்க ராசா.
//“நாந்தான் பத்திராம இருக்கட்டும்னு பீரோவுக்குள்ள வைச்சேங்க..//
//இருங்க..என் பர்ஸ்ல ஒரு 20 டாலர் வைச்சிருப்பேன்..பார்க்குறேன்..அப்பத்தான் எனக்கு மூச்சு வந்தது//
இப்போ தெர்தா கல்யாணம் பண்ணிட்டா எவ்ளோ பத்திரம்னு...
//“தெரியலை சார்..பெட்ரோல் எல்லாம் இருக்கு சார்..” உளறினேன்..//
அவருகிட்டயுமா??
//.இது என் கம்பெனியின் ஐ.டி கார்டு..”
250 டாலர் அபராதம்//
ID Card க்கு அபராதமா? அப்புடி அதுல என்ன தான்னே இருந்தது??? :-P
UPO வுல வர screenplay மாதிரி நல்லாவே இருக்கு...
உங்க ground ஓடி விளையாடி இருக்கீரு....
//சீக்கிரம் எந்திரிங்க..10 மணிக்கு “உன்னைப் போல் ஒருவன்” போகனும்..”//
//நாளைக்கு show ticket...இப்ப என் மனைவி என்னை கொலை வெறியுடன் பார்க்க..//
இது கொஞ்சம் Sync ஆகலையே....? ரைட்டா?!!
nice comedy writing, when u get time read dubukku's blog.
படத்துக்கு போறது இப்ப்டிங்க்களா? நன்னா இருக்கு சபாஷ்....அவனவன் வேதனை அவன் அவனுக்கு தான் புரியும். பாராடுக்கள். நிலாமதி
///////////////
ஜோ/Joe said...
:)))))))
19 September, 2009 8:51 PM
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
ராசா.. சூப்பரபு.. :)
19 September, 2009 9:16 PM
KISHORE said...
nalla padam paaka kilamburinga...
19 September, 2009 10:16 PM
/////////////////
நன்றி ஜோ, செந்தில், கிஷோர்..
////////////////
Anonymous said...
//உண்மைத்தமிழன் 10 பக்கத்துக்கு விமர்சனம் போடுவாரு..இரண்டரை மணீ நேரத்தில படிச்சுரலாம்..”
//
LMAO :)))))))))))))))))))))))))))))
funny as usual.
19 September, 2009 10:59 PM
வானம்பாடிகள் said...
படத்த விட இது நல்லாருக்கு. என்னா த்ரில்லு. அசத்திட்டீங்க ராசா.
19 September, 2009 10:59 PM
////////////////
ஹீ..ஹீ..நன்றி அனானி, வானம்பாடிகள்
///////////////////
taaru said...
UPO வுல வர screenplay மாதிரி நல்லாவே இருக்கு...
உங்க ground ஓடி விளையாடி இருக்கீரு....
//சீக்கிரம் எந்திரிங்க..10 மணிக்கு “உன்னைப் போல் ஒருவன்” போகனும்..”//
//நாளைக்கு show ticket...இப்ப என் மனைவி என்னை கொலை வெறியுடன் பார்க்க..//
இது கொஞ்சம் Sync ஆகலையே....? ரைட்டா?!!
20 September, 2009 2:57 AM
///////////////////////
அய்யானார் அண்ணே..என் மனைவியும் டிக்கெட் பார்க்கலை..நான் சனிக்கிழமைதான் ஷோ நினைப்புல “சனிக்கிழமை “ படத்துக்கு போறோம்..என் சொல்லி இருந்தேன்..
:)))
ம்... அருமை...
உங்கள கட்டிக்கிட்டு அவீங்க எம்புட்டு பாடு படுறாய்ங்க...
ச்சே.. பாவம்...
//உண்மைத்தமிழன் 10 பக்கத்துக்கு விமர்சனம் போடுவாரு..இரண்டரை மணீ நேரத்தில படிச்சுரலாம்//
sema kalai boss :D :D :D
excellent...no words to tell...u always rock
Post a Comment