Saturday 12 September, 2009

நாறிப்போன பதிவுலகம்

“என்னங்க..உங்க பதிவுக்கு கிடைக்கிற வரவேற்பப் பார்த்தா, நானும் பதிவு எழுதலாம்னு ஆசையா இருக்குங்க..நானும் எழுதட்டா..”

என் மனைவி ஆசையா கேட்டபோது எனக்கு திக்கென்றிருந்தது..ஆஹா, இது ரத்த பூமியாச்சே..செத்தா பால் கூட ஊத்தமாட்டாயிங்களே..பதறிப் போயிட்டேண்ணே..

“வேணான்டி..சொன்னா கேளு..போலிஸ் கேசாயிடும்..”

“என்னங்க..என்ன பேசுறீங்க..போலிஸ் கேசுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்..”

இந்த வார சண்டை ஸ்பெசல் இரண்டு மூன்று பதிவுகளை எடுத்துக் காட்டுனேன் பாருங்க..அலறிட்டாண்ணே….

“ஐய்யோ..என்னங்க நடக்குது இங்க..நான் ஏதோ எல்லாரும் பொழுதுபோகாம எழுத வர்ராயிங்க நினைச்சேன்..பொழைப்பயே கெடுத்துரும்போல..ஆனாலும் அவர் பாவம்க..ரொம்பதாங்க கஷ்டப்பட்டுறாருக்காரு..”

“அடியே..பொறுடி..அவரும் லேசுப்பட்டவரா..அந்த பதிவுக்கு வந்த கமெண்ட்ஸ்ஸ படிச்சுப் பாரு,,”

படிச்சுப்பார்த்துக்கிட்டு கொஞ்சம் குழம்பித்தான் போனாள்..

“என்னங்க..இப்பத்தான் இவரை நல்லவர்ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்..அவரும் அப்படித்தான் இருந்துருக்காரு.. அதான் அக்குவேறா ஆணிவேறா ஒருத்தர் நிரூபிச்சிருக்காரே..”

“இறுடி..அக்குவேறா, ஆணிவேறா நிரூபுச்சிருக்காருல்ல..அவரைப் பத்தி இங்க ஒரு ஸ்க்ரீன்ஷாட் போட்டுருக்காயிங்க பாரு..”

படிக்க படிக்க கை நடுங்கிருச்சுண்ணே..

“ஐயோ..இவரும் இப்படியா….படத்துல பார்க்க ரொம்ப அப்பாவியா போஸ் கொடுக்காருரே..அவரா இப்படி இருந்துருக்காரு..”

ஆ..இந்த ஆடியோ பைலைக்கேளு..இந்த பதிவைப் படி..இந்த ஸ்கிரீன்ஷாட் பாரு..ஆ..இந்த கமெண்ட்ஸ்ஸைப் படி..இந்த போட்டாவைப் பாரு..இவரைப் பத்தி அவர் எழுதியிருக்காரு பாரு..

“டே..நீதான்டா பொறம்போக்கு..உன்னைப் பத்தி தெரியாதா..”

“வாய மூடுடா..வெண்ணை..நீ அவனோட கைக்கூலிதானே..”

“டே..இப்படி துரோகம் பண்ணிட்டேயேடா..”

“உன்னைத்தான் பார்த்தோமேடா…எவ்வளவு ஆபாசமா எழுதியிருக்க..”

“நீதான்யா போலி..”

“உனக்கு இருக்குடி மவனே..”

“ஐ..ஜாலி..ஜாலி…”

“போடா, அல்லக்கை..”

“நீதாண்டா அல்லக்கை..”

என் மனைவி தலையைப் பிடித்து உக்கார்ந்து விட்டாள்..பாவம் புதுசுதாண்ணே..

“என்னங்க..தலை ஒருமாதிரியா கிறு கிறுன்னு வருது..கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிடைக்குமா..”

“ரத்த பூமியில வந்துட்டு தண்ணியாவது, மண்ணாவது..ஒரு டம்ளர் ரத்தம் கிடைக்கும்..குடிக்கிறீயா…”

மேலே உள்ளதைப் படிக்கும்போது நகைச்சுவையாக இருந்தாலும் போன வாரப் பதிவுகளைப் படிக்கிறபோது மனசு வலித்ததுண்ணே..நாங்களெல்லாம், பொழைப்புக்கு நடுவுல ஏதோ ரெண்டு எழுத வந்தால்,ஐயோ பொழைப்பே போயிடும் போலே..இரண்டு மூன்று பதிவுகளைப் படித்துப் பார்த்ததில் கீழே உள்ளது மட்டும் புரிந்தது….

1) பலபேருக்கு வாழ்க்கை போயிருக்கிறது..பலபேருக்கு நிம்மதி போயிருக்கிறது..பலபேருக்கு பணம் போயிருக்கிறது..அதற்கு அவர்களே காரணம்..

2) பதிவுகள் பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை…மானப்பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப்பட்டது..

3) யாரும் உத்தமரில்லை..பலபேருடைய முகமூடி கிழிந்திருக்கிறது..பல பேருடைய துரோகம் வெளிப்பட்டிருக்கிறது..

4) ஈகோ பிரச்சனை டப்பாங்குத்து டான்ஸ் ஆடியிருக்கிறது..பாதிப் பிரச்சனை “விட்டேனா பார்” என்ற மனப்பான்மையால் வந்தது

5) யாராவது யாருக்காவது நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள், நான் நல்லவெனென்று..ஏன் என்றுதான் தெரியவில்லை..

6) ஒருத்தர் எழுத்தைப் பார்த்து நம்பக்கூடாது என்ற நல்ல மனப்பான்மை வந்திருக்கிறது..”இவரா இப்படி” என்று முதலில் அதிர்ந்தாலும், சே..எல்லாம் ஒரே குட்டைதான் என்ற நினைப்பும் வருகிறது

7) இனி யாராவது “சமூக ஒழுங்கு..தனிமனித ஒழுக்கம்..மனிதாபிமானம்..நட்பு..பின்நவீனத்துவம், சைடு நவீனத்துவம், குறுக்கால , மறுக்கால நவீனத்துவம்னு எழுதட்டும்..” என்கிற கோவம் வருகிறது

8) புதிய பதிவர்களிடம் பீதி உணர்வு காணப்படுகிறது..யாருக்கும் போலிஸ் கேசு என்று அலைவதற்கு விருப்பம் இல்லை..பேசாம எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சுடலாம என்ற எண்ணம் ஏற்படுகிறது, நான் உள்பட

இருங்கண்ணே..என் மனைவி அதிர்ச்சியிலிருந்து எந்திருச்சிட்டா..கொஞ்சம் தண்ணி எடுத்து முகத்துல அடிச்சிட்டு வர்றேன்..

“அடியே..எந்திருடி..நீ ஏண்டி மயக்கம் போட்டு விழுற..யார் அடிச்சுக்கிட்டா நமக்கென்ன..”

“இல்லீங்க..படிக்க, படிக்க, தலை சுத்திருச்சுங்க..ஏங்க நீங்க யாரு பக்கம்..”

“கொஞ்சம் பொறுடி..இந்த டயலாக்கை கேமிரா பார்த்துதான் சொல்லணும்..யாருப்பா அங்க, கேமிராவை கொண்டு வாங்கப்பா..”

(கேமிராவைப் பார்த்தபடி) நான் இவுங்க(மக்கள்)பக்கம்(உபயம்: வேட்டைக்காரன்)

(மனைவி காண்டு ஆகி) போயா அல்லக்கை..

“அடிப்பாவி..மொத்தம் 2 பதிவுதான் படிச்சிருக்க..அதுக்குள்ள அவிங்க மாதிரியே பேசிறேயேடி..அடியே..படிச்சா அப்படியே மனசுக்குள்ளாரயே வைச்சிக்கனும்..எஸ்டாபிளிஷ் பண்ணக் கூடாது..”

சாரிங்க..ஏதோ படிச்ச புளோவுல வந்துரிச்சு…ஏங்க ஒரு கேள்வி கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே”

“கேளு.”

“பதிவுலகம் எப்பங்க அடுத்த கட்டத்துக்கு போகும்..”

“பக்கத்தில ஒரு கட்டம் போட்டு கைய வைச்சி தள்ளிவிடு போயிடும்..”

“விளையாடாதீங்க..கொஞ்சம் சீரியஸா பதில் சொல்லுங்க..”

“ம்ம்ம்..இவிங்க எல்லாம் கொஞ்சம் தள்ளி உக்கார்ந்துகிட்டா தானா போயிடும்....”

53 comments:

துளசி கோபால் said...

// யாருக்கும் போலீஸ் கேசு என்று அழைவதற்கு....//

அழைவதற்கு= அலைவதற்கு

குப்பன்.யாஹூ said...

பயனுள்ள பதிவு.

நான் கூட என் அக்கா மகனுக்கு (பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான்), பதிவுலகம் அறிமுகம் என்று செய்யலாம் இருந்தேன். ஆனால் இப்போது யோசிக்கிறேன்.

என் பார்வையில் இருபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பதிவு உலகம் உள்ளே வர வேண்டும் என நினைக்கிறேன்.

வாலிப வயதில் ஈகோ, புகழ் விரும்பும் ஆசை எல்லாம் அதிகமாக இருக்கும்.

என்ன செய்வது ஒரு நல்ல பதிவு பdiப்பதர்க்காக நாம் இருபது தீய பதிவுகளையும் படிக்கத் தான் வேண்டி உள்ளது.

வெற்றி-[க்]-கதிரவன் said...

சைடு நவீனத்துவம் பற்றி குறிபிட்டதற்கு என் கடும் கடன்கள் ச்சி கண்டனங்கள் -:)

துபாய் ராஜா said...

பூனைக்கு முதலில் நீங்கள் மணி கட்டியுள்ளீர்கள்.

நல்ல முயற்சிண்ணே...

'திருட்டுப் பயலே' படத்தில் விவேக் காமெடி ஒன்று பார்த்திருப்பீர்கள்.பூங்காவில் தொலைக்காட்சி நாடகத்திற்காக ஒரு ஜோடி கள்ளக்காதலராக நடித்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் விவேக் கதையை சொல்லுங்கள் என்று கேட்கும் பொழுது அவர்கள் அவனுக்கும் அவளுக்கும் கள்ளத்தொடர்பு. இவனுக்கும் இவளுக்கும் கள்ளத்தொடர்பு.
அவனுக்கும் இவளுக்கும் கள்ளத்தொடர்பு.
இவனுக்கும் அவளுக்கும் கள்ளத்தொடர்பு. என்று கூறுவதை கேட்டு மயங்கி விழுந்து விடுவார்.

அதுபோல் தான் இங்கும் கடந்த ஒரு வாரமாக நடக்கிறது.நம்மை போன்று பலபேரும் மனம் வெறுத்துப்போய்தான் உள்ளனர்.

:((

ஈரோடு கதிர் said...

நிஜமா சொல்றேண்ணே... எனக்கு இந்த கருமம் புடிச்ச சண்டெயெல்லாம் ஒரு எழவும் புரியலண்ணே...

நானும் நாலுபேரு பேரை படிக்கிறேன்.... நாலு பேரும் நம்மள படிக்கிறாங்க... எல்லாம் நல்லவங்களாத்தாண்ணே தெரியிறாயங்க...

இந்த சண்டக் கட்சிக்காரவ பக்கம் நாம போறதில்லீங்கணா...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் பதிவுங்க ராஜா.

இந்த பீதி எனக்கும் ஏற்பட்டது உண்மை தான். நானும் நம்ம கதிர் சொல்ற மாதிரி எந்த பக்கமும் கிடையாதுங்க. சண்டையும் தெரியாதுங்க. ஏதோ நேரம் கிடைக்கறப்ப ரெண்டு பிளாக் எழுதறேன். அவ்வளவு தான்.

நமக்கு எது முக்கியம்னு புரிஞ்சுக்கிட்டா இதெல்லாம் வராதுங்க. அதுக்குத் தாங்க இந்தப் பதிவு :))

http://senthilinpakkangal.blogspot.com/2009/09/blog-post_08.html

குடுகுடுப்பை said...

எனக்கு தலைப்பு புரியவேயில்லைண்ணே, நாறிப்போன அப்பட்டின்னா என்னா? பதிவுலகம் அப்படின்னா என்னா
அப்படின்னு கொஞ்சம் வெளக்கமா சுக்கிரமணிய சாமி மாறி சொல்லுங்கண்ணா

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ஏதோ நேரம் கிடைக்கறப்ப ரெண்டு பிளாக் எழுதறேன். அவ்வளவு தான்.
சொல்லுங்கண்ணா

தேவன் மாயம் said...

அதைப் படிக்கத்தானே ஒரு கூட்டமே ரசிகர்களா அலையுதே!!!

vasu balaji said...

அய்யோ. இப்புடில்லாமா நடக்குது.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே என்னால முடிஞ்சது தமிழிஷ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டு போடுவது. அதை போட்டுவிட்டேன்.

Radhakrishnan said...

இதுதான் உலகம்!

எத்தனையோ சிறந்த பதிவர்கள் எழுதிக்கொண்டிருக்க, ஒரு சிலரால் அவரவர் சுயநலத்துக்காக எழுதப்பட்ட பதிவுகளை முன்னிறுத்தி பதிவுலகமே கேவலமாக இருக்கிறது எனச் சொல்வது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.

அல்லவை தேய அறம் பெருகும், நல்லவை நாடி இனிய சொலின்.

Btc Guider said...

நல்ல அருமையான பதிவு சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு பதிவுலகில் இருந்தால் பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கும், ஒரு வேலை இதைப்போன்ற பதிவையும் திட்டி பதிவுகள் வருமோ என்ற அச்சமும் இருக்கிறது.
நன்றி நண்பரே.

அஹோரி said...

ஹா ஹா ஹா ...

நான் நினைச்சேன் ... நீங்க சொல்லீடீங்க ...

ஆமாங்கனோ ...

ஒரே 'ஈகோ' புடிச்ச கும்பலா இருக்கு ...

புதுசா எழுதவந்தவங்க பதிவ மட்டும் படிச்சி தப்பிச்சி கோங்க அப்பு ....

என்ன கொடும சார் said...

ஆமாண்ணே பதிவர் சந்திப்புக்கு வரல.. நீயெல்லாம் ஒரு பதிவரா என்று மிரட்டுறாங்கண்ணே.. ஒரு கேங் மாதிரி சேர்ந்து வ்ந்தா கும்மலாம் எண்டு காத்திருக்காங்கண்ணே.. கருத்து சுதந்திரம் இருக்காண்ணே தெரியலண்ணே

http://eksaar.blogspot.com/2009/08/blog-post_26.html

THANGA MANI said...

“இல்லீங்க..படிக்க, படிக்க, தலை சுத்திருச்சுங்க..ஏங்க நீங்க யாரு பக்கம்..”

(கேமிராவைப் பார்த்தபடி) நான் இவுங்க(மக்கள்)பக்கம்(உபயம்: வேட்டைக்காரன்)

(மனைவி காண்டு ஆகி) போயா அல்லக்கை.."
_______________________________________________

கருத்து - சிந்திக்க வேண்டியது.
எழுத்து - நகைச்சுவையாக உள்ளது.

நன்று

அப்பாவி முரு said...

//(மனைவி காண்டு ஆகி) போயா அல்லக்கை..//

ராசா விழுந்து விழுந்து சிரித்தேன்....

நானும் சொல்க்கிறேன்.,

போயா அல்லக்கை...(எப்பூடி, நானும் பிர(ரா)பல பதிவர் தான்...)

Anonymous said...

அதனால் நண்பர்களே, நாம் யாரும் யாருக்கும் அநாவசியமாக அட்வைஸ் செய்ய வேண்டாம். அதற்கு முன் நமக்கு அந்த தகுதி உள்ளதா என பார்த்து பிறகு அட்வைஸ் பண்ணுவதை பற்றி யோசிக்கலாம்.

http://www.iniyavan.com/2009/09/blog-post_13.html

iniyavan said...

ஐய்யா யாரு அய்யா அது?

என் பதிவோட லிங்க இங்க குடுத்தது.

அன்பின் ராஜா அவர்களுக்கு, மேலே உள்ள கமெண்டும், லிங்கும் நான் கொடுத்தது அல்ல.

நான் வேறு சில காரணங்களுக்காக எழுதிய பதிவு அது.

வேறு யாரோ ஒரு நண்பர் இங்கே அந்த லிங்கை கொடுத்துள்ளார்.

என்னை நீங்கள் தவறாக நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த பின்னூட்டம்.

அவிய்ங்க ராசா said...

//////////////////
துளசி கோபால் said...
// யாருக்கும் போலீஸ் கேசு என்று அழைவதற்கு....//

அழைவதற்கு= அலைவதற்கு
12 September, 2009 8:00 PM
////////////////////
நன்றி துளசி சார்..மாற்றி விட்டேன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
ராம்ஜி.யாஹூ said...
பயனுள்ள பதிவு.

நான் கூட என் அக்கா மகனுக்கு (பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான்), பதிவுலகம் அறிமுகம் என்று செய்யலாம் இருந்தேன். ஆனால் இப்போது யோசிக்கிறேன்.

என் பார்வையில் இருபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பதிவு உலகம் உள்ளே வர வேண்டும் என நினைக்கிறேன்.

வாலிப வயதில் ஈகோ, புகழ் விரும்பும் ஆசை எல்லாம் அதிகமாக இருக்கும்.

என்ன செய்வது ஒரு நல்ல பதிவு பdiப்பதர்க்காக நாம் இருபது தீய பதிவுகளையும் படிக்கத் தான் வேண்டி உள்ளது.
12 September, 2009 8:05 PM
////////////////////////
வேணாமுன்னே..பயபுள்ளைக படிக்கட்டும்..இது ரத்த பூமி..

அவிய்ங்க ராசா said...

////////////////
[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்] said...
சைடு நவீனத்துவம் பற்றி குறிபிட்டதற்கு என் கடும் கடன்கள் ச்சி கண்டனங்கள் -:)
12 September, 2009 8:37 PM
////////////////
அண்ணே..சைடு நவீனத்துவம் பற்றி கண்டுபிடிச்சது நாந்தான்..காப்பி ரைட்ஸ் இருக்கு..)))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
துபாய் ராஜா said...
பூனைக்கு முதலில் நீங்கள் மணி கட்டியுள்ளீர்கள்.

நல்ல முயற்சிண்ணே...

'திருட்டுப் பயலே' படத்தில் விவேக் காமெடி ஒன்று பார்த்திருப்பீர்கள்.பூங்காவில் தொலைக்காட்சி நாடகத்திற்காக ஒரு ஜோடி கள்ளக்காதலராக நடித்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் விவேக் கதையை சொல்லுங்கள் என்று கேட்கும் பொழுது அவர்கள் அவனுக்கும் அவளுக்கும் கள்ளத்தொடர்பு. இவனுக்கும் இவளுக்கும் கள்ளத்தொடர்பு.
அவனுக்கும் இவளுக்கும் கள்ளத்தொடர்பு.
இவனுக்கும் அவளுக்கும் கள்ளத்தொடர்பு. என்று கூறுவதை கேட்டு மயங்கி விழுந்து விடுவார்.

அதுபோல் தான் இங்கும் கடந்த ஒரு வாரமாக நடக்கிறது.நம்மை போன்று பலபேரும் மனம் வெறுத்துப்போய்தான் உள்ளனர்.

:((
12 September, 2009 8:39 PM
//////////////////////////
ஆமாண்ணே..கரெக்டா சொன்னீங்க..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
12 September, 2009 8:39 PM
கதிர் - ஈரோடு said...
நிஜமா சொல்றேண்ணே... எனக்கு இந்த கருமம் புடிச்ச சண்டெயெல்லாம் ஒரு எழவும் புரியலண்ணே...

நானும் நாலுபேரு பேரை படிக்கிறேன்.... நாலு பேரும் நம்மள படிக்கிறாங்க... எல்லாம் நல்லவங்களாத்தாண்ணே தெரியிறாயங்க...

இந்த சண்டக் கட்சிக்காரவ பக்கம் நாம போறதில்லீங்கணா...
12 September, 2009 8:46 PM
////////////////////////
நிறைய பேர் இப்படித்தான் தலைசுத்தி கிடக்கோம்னே..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
கலக்கல் பதிவுங்க ராஜா.

இந்த பீதி எனக்கும் ஏற்பட்டது உண்மை தான். நானும் நம்ம கதிர் சொல்ற மாதிரி எந்த பக்கமும் கிடையாதுங்க. சண்டையும் தெரியாதுங்க. ஏதோ நேரம் கிடைக்கறப்ப ரெண்டு பிளாக் எழுதறேன். அவ்வளவு தான்.

நமக்கு எது முக்கியம்னு புரிஞ்சுக்கிட்டா இதெல்லாம் வராதுங்க. அதுக்குத் தாங்க இந்தப் பதிவு :))

http://senthilinpakkangal.blogspot.com/2009/09/blog-post_08.html
12 September, 2009 9:35 PM
///////////////////////////
கலக்கல் பதிவு செந்தில்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
குடுகுடுப்பை said...
எனக்கு தலைப்பு புரியவேயில்லைண்ணே, நாறிப்போன அப்பட்டின்னா என்னா? பதிவுலகம் அப்படின்னா என்னா
அப்படின்னு கொஞ்சம் வெளக்கமா சுக்கிரமணிய சாமி மாறி சொல்லுங்கண்ணா
12 September, 2009 10:34
////////////////////////
ஹா..ஹா..கூடிய சீக்கிரத்திலே எல்லாரும் இப்படி ஆகிடுவோம்..

அவிய்ங்க ராசா said...

//////////////////
krishna said...
ஏதோ நேரம் கிடைக்கறப்ப ரெண்டு பிளாக் எழுதறேன். அவ்வளவு தான்.
சொல்லுங்கண்ணா
12 September, 2009 10:56 PM
/////////////////////
வருகைக்கு நன்றி கிருஷ்ணா..

அவிய்ங்க ராசா said...

////////////////////
தேவன் மாயம் said...
அதைப் படிக்கத்தானே ஒரு கூட்டமே ரசிகர்களா அலையுதே!!!
12 September, 2009 11:07 PM
/////////////////////
ஆமாண்ணே..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
வானம்பாடிகள் said...
அய்யோ. இப்புடில்லாமா நடக்குது.
12 September, 2009 11:27 PM
இராகவன் நைஜிரியா said...
அண்ணே என்னால முடிஞ்சது தமிழிஷ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டு போடுவது. அதை போட்டுவிட்டேன்.
12 September, 2009 11:42 PM
வெ.இராதாகிருஷ்ணன் said...
இதுதான் உலகம்!

எத்தனையோ சிறந்த பதிவர்கள் எழுதிக்கொண்டிருக்க, ஒரு சிலரால் அவரவர் சுயநலத்துக்காக எழுதப்பட்ட பதிவுகளை முன்னிறுத்தி பதிவுலகமே கேவலமாக இருக்கிறது எனச் சொல்வது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.

அல்லவை தேய அறம் பெருகும், நல்லவை நாடி இனிய சொலின்.
13 September, 2009 12:13 AM
ரஹ்மான் said...
நல்ல அருமையான பதிவு சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு பதிவுலகில் இருந்தால் பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கும், ஒரு வேலை இதைப்போன்ற பதிவையும் திட்டி பதிவுகள் வருமோ என்ற அச்சமும் இருக்கிறது.
நன்றி நண்பரே.
13 September, 2009 1:03 AM
/////////////////////////
நன்றி வானம்பாடிகள், ராகவன், ராதா கிருஷ்ணன்..ரஹ்மான்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
என்ன கொடும சார் said...
ஆமாண்ணே பதிவர் சந்திப்புக்கு வரல.. நீயெல்லாம் ஒரு பதிவரா என்று மிரட்டுறாங்கண்ணே.. ஒரு கேங் மாதிரி சேர்ந்து வ்ந்தா கும்மலாம் எண்டு காத்திருக்காங்கண்ணே.. கருத்து சுதந்திரம் இருக்காண்ணே தெரியலண்ணே

http://eksaar.blogspot.com/2009/08/blog-post_26.html
13 September, 2009 2:02 AM
THANGA MANI said...
“இல்லீங்க..படிக்க, படிக்க, தலை சுத்திருச்சுங்க..ஏங்க நீங்க யாரு பக்கம்..”

(கேமிராவைப் பார்த்தபடி) நான் இவுங்க(மக்கள்)பக்கம்(உபயம்: வேட்டைக்காரன்)

(மனைவி காண்டு ஆகி) போயா அல்லக்கை.."
_______________________________________________

கருத்து - சிந்திக்க வேண்டியது.
எழுத்து - நகைச்சுவையாக உள்ளது.

நன்று
13 September, 2009 2:31 AM
/////////////////////////
நன்றி கொடுமை சார், தங்க மணி..

அவிய்ங்க ராசா said...

////////////////
அப்பாவி முரு said...
//(மனைவி காண்டு ஆகி) போயா அல்லக்கை..//

ராசா விழுந்து விழுந்து சிரித்தேன்....

நானும் சொல்க்கிறேன்.,

போயா அல்லக்கை...(எப்பூடி, நானும் பிர(ரா)பல பதிவர் தான்...)
13 September, 2009 2:43 AM
//////////////////
இன்னும் நல்லா திட்டனும்..முருகன்..டிரெய்னிங்க் வேணும்..

அவிய்ங்க ராசா said...

////////////
Anonymous said...
அதனால் நண்பர்களே, நாம் யாரும் யாருக்கும் அநாவசியமாக அட்வைஸ் செய்ய வேண்டாம். அதற்கு முன் நமக்கு அந்த தகுதி உள்ளதா என பார்த்து பிறகு அட்வைஸ் பண்ணுவதை பற்றி யோசிக்கலாம்.

http://www.iniyavan.com/2009/09/blog-post_13.html
13 September, 2009 5:37 AM
//////////////
நன்றி அனானி..என் பதிவில் ஒரு வார்த்தை கூட அறிவுரை இல்லை..

அவிய்ங்க ராசா said...

/////////////
13 September, 2009 5:37 AM
என். உலகநாதன் said...
ஐய்யா யாரு அய்யா அது?

என் பதிவோட லிங்க இங்க குடுத்தது.

அன்பின் ராஜா அவர்களுக்கு, மேலே உள்ள கமெண்டும், லிங்கும் நான் கொடுத்தது அல்ல.

நான் வேறு சில காரணங்களுக்காக எழுதிய பதிவு அது.

வேறு யாரோ ஒரு நண்பர் இங்கே அந்த லிங்கை கொடுத்துள்ளார்.

என்னை நீங்கள் தவறாக நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த பின்னூட்டம்.
13 September, 2009 6:09 AM
///////////////////////
நன்றி உல்கநாதன் அண்ணே..பரவாயில்லை..அந்த அனானி அசிங்கமாக திட்டாதவரையில் ஓகே..)))

சிங்கக்குட்டி said...

நல்ல பதிவு ஆனால் புதிய பதிவர்களையும் வரவேற்கலாமே?

புருனோ Bruno said...

:)

அருமையான நடை
ஊத வேண்டிய சங்கை ஊதியுள்ளீர்கள் !!

Anonymous said...

நீ என்ன பெரிய இவனா?? எங்களுக்கு கருத்து சொல்ல வந்துட்ட வெண்ண

Sure said...

Good ., I repeat words of Dubai Raja

பீர் | Peer said...

நல்லாயிருக்கு ராசா...

Unknown said...

ஒய் பிளட்?

சேம் பிளட். :)

நானும் இப்படித்தான் அடிபட்டு மிதிபட்டு நிக்கிறேன்.

சூப்பராருக்கு ராஜா :D

அவிய்ங்க ராசா said...

////////////////////
சிங்கக்குட்டி said...
நல்ல பதிவு ஆனால் புதிய பதிவர்களையும் வரவேற்கலாமே?
13 September, 2009 7:03 AM
புருனோ Bruno said...
:)

அருமையான நடை
ஊத வேண்டிய சங்கை ஊதியுள்ளீர்கள் !!
13 September, 2009 7:27 AM
////////////////
நன்றி புரூனோ, சிங்கக்குட்டி..

அவிய்ங்க ராசா said...

////////////////////
Anonymous said...
நீ என்ன பெரிய இவனா?? எங்களுக்கு கருத்து சொல்ல வந்துட்ட வெண்ண
13 September, 2009 7:33 AM
/////////////////////
இதுக்குமாண்ணே…

அவிய்ங்க ராசா said...

/////////////////
Sure said...
Good ., I repeat words of Dubai Raja
13 September, 2009 7:36 AM
பீர் | Peer said...
நல்லாயிருக்கு ராசா...
13 September, 2009 10:06 AM
Mãstän said...
ஒய் பிளட்?

சேம் பிளட். :)

நானும் இப்படித்தான் அடிபட்டு மிதிபட்டு நிக்கிறேன்.

சூப்பராருக்கு ராஜா :D
13 September, 2009 11:10 AM
//////////////////////
நன்றி சுயர், பீர் அண்ணே..மஸ்தான்..

உடன்பிறப்பு said...

பதிவுலகம் கொஞ்ச நாள் அமைதியா இருந்துவிட்டால் சிலருக்கு பொறுக்காதுண்ணே உடனே எதையாவது கிளப்பிவிட்டுறுவாங்கண்ணே, இது தொன்றுதொட்டு நடந்து வரும் வழக்கம்ணே

taaru said...

////////////////////
Anonymous said...
நீ என்ன பெரிய இவனா?? எங்களுக்கு கருத்து சொல்ல வந்துட்ட வெண்ண
/////////////////////
இதுக்குமாண்ணே…///

ஹா ஹா ஹா ஹா....
இன்னமும் ஒரு பயலையும் காணோமேனு பாத்தேன்....!!!!

taaru said...

//“இல்லீங்க..படிக்க, படிக்க, தலை சுத்திருச்சுங்க..ஏங்க நீங்க யாரு பக்கம்..?//
அண்ணி, நமக்கெதுக்கு இந்த பயபுள்ளைக சகவாசம்...
இவீங்க எப்பவுமே இப்புடி தான் அடிச்சுகிடுவாய்ங்க ...

நம்ம அண்ணனுக்கு முட்டையும் பாலும் கொடுத்து Gym பக்கம் டெய்லி அனுப்பி விடுங்க...
கொள்ள[ல்ல] பேரு GST Road ல autoவுல வெயிட் பண்றதா தகவல் வந்து இருக்கு....
Airport விட்டு வெளிய வந்த ஒடனே தூக்கப்போரத ஒரு வதந்தி.. பாத்துக்கோங்கப்பு... சொல்றத சொல்லியாச்சு அப்புறம் உங்க பாடு.. அவீங்க பாடு..

taaru said...

//பேசாம எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சுடலாம என்ற எண்ணம் ஏற்படுகிறது, நான் உள்பட //
அதே தான்....

//(கேமிராவைப் பார்த்தபடி) நான் இவுங்க(மக்கள்)பக்கம்(உபயம்: வேட்டைக்காரன்)//
உங்கள அல்லக்கைனு திட்டுனதுல தப்பே கிடையாது...
இன்னும் நல்ல திட்டுங்க ma'am.

[வேட்டைக்காரன் மட்டும் தானா? எல்லா படத்துலயும் ஒரே மாதிரி தான் பேசுவோம் நாங்க... So Ref: all தளபதி பஞ்ச் dialogue அப்புடின்னு போட்ருங்க...]

Dr.ராம் said...

உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு தல....உங்கள் கருத்துக்களில் நகைச்சுவை கலந்த ஆதங்கம்..பெரும்பான்மையோரின் மனதில் உள்ளது.. ..http://sakalakaladr.blogspot.com/

Dr.ராம் said...

நேரம் இருந்தால் எனது பதிவையும் பார்க்கவும்...http://sakalakaladr.blogspot.com/

அவிய்ங்க ராசா said...

///////////////
13 September, 2009 6:20 PM
உடன்பிறப்பு said...
பதிவுலகம் கொஞ்ச நாள் அமைதியா இருந்துவிட்டால் சிலருக்கு பொறுக்காதுண்ணே உடனே எதையாவது கிளப்பிவிட்டுறுவாங்கண்ணே, இது தொன்றுதொட்டு நடந்து வரும் வழக்கம்ணே
13 September, 2009 8:03 PM
taaru said...
/////////////
அப்படித்தான் தோனுது அண்ணே

அவிய்ங்க ராசா said...

////////////////
13 September, 2009 8:03 PM
taaru said...
////////////////////
Anonymous said...
நீ என்ன பெரிய இவனா?? எங்களுக்கு கருத்து சொல்ல வந்துட்ட வெண்ண
/////////////////////
இதுக்குமாண்ணே…///

ஹா ஹா ஹா ஹா....
இன்னமும் ஒரு பயலையும் காணோமேனு பாத்தேன்....!!!!
13 September, 2009 10:26 PM
/////////////////
மழை பெய்திராதா அண்ணே…

அவிய்ங்க ராசா said...

//////////////
taaru said...
//“இல்லீங்க..படிக்க, படிக்க, தலை சுத்திருச்சுங்க..ஏங்க நீங்க யாரு பக்கம்..?//
அண்ணி, நமக்கெதுக்கு இந்த பயபுள்ளைக சகவாசம்...
இவீங்க எப்பவுமே இப்புடி தான் அடிச்சுகிடுவாய்ங்க ...

நம்ம அண்ணனுக்கு முட்டையும் பாலும் கொடுத்து Gym பக்கம் டெய்லி அனுப்பி விடுங்க...
கொள்ள[ல்ல] பேரு GST Road ல autoவுல வெயிட் பண்றதா தகவல் வந்து இருக்கு....
Airport விட்டு வெளிய வந்த ஒடனே தூக்கப்போரத ஒரு வதந்தி.. பாத்துக்கோங்கப்பு... சொல்றத சொல்லியாச்சு அப்புறம் உங்க பாடு.. அவீங்க பாடு..
13 September, 2009 10:36 PM
///////////////////

ஆஹா..பீதியை கிளப்பாதீங்கண்ணே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////
14 September, 2009 1:43 PM
Dr.ராம் said...
நேரம் இருந்தால் எனது பதிவையும் பார்க்கவும்...http://sakalakaladr.blogspot.com/
14 September, 2009 1:45 PM
////////////////
வருகைக்கு நன்றி ராம்..கண்டிப்பா பார்க்குறேன்..

Anonymous said...

அண்ணே! ஊரபுரிஞ்சிகிட்டேன்,உலகம் தெரிஞ்சிகிட்டேன் ராசா என் ராசா. ஏது தனி மனித ஒழுக்கம், எல்லாம் வெளி வேஷம்.

Post a Comment