நான் ஏற்கனவே சொல்லியது போல் தூக்கத்திற்கு என் சொத்தை எழுதி வைத்திருக்கிறேன்..அதுவும் கால் வரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அதிகாலை வேளையில் வரும் தூக்கமே அலாதி சுகம்தான்..என்ன., அடிக்கடி வரும் குறட்டைச் சத்ததினால் பக்கத்தில் உள்ளவர்கள் காண்டாகி பஞ்சை காதில் வைத்து முயற்சித்து தோற்று, கத்தியைத் தேடுவார்கள் என்னைக் குத்துவதற்கு..அதற்கு எல்லாம் சலித்த ஆளா நாம்..கொசு கடிக்குதுன்னு தட்டி விட்டு கண்டினியூ பண்ணுவோம்ல..
சரியாக ஞாபகமில்லை..கல்லூரி காலம் என்று நினைக்கிறேன்., தூங்கும்போது அடிக்கடி ஒரு கனவு வரும்..விஜய் படத்தில் வரும் ரம்பா போல்(இது கொஞ்சம் ஓவருன்னு சொல்லுறது கேக்குது.. ஆனா என்ன பண்ண..வருதே..) ஒரு சிவப்பு உடை அணிந்த தேவதை அப்படியே ஒரு அலை கணக்கா தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கும்..முகத்தைப் பார்க்க எவ்வளவோ முயற்சி பண்ணித் தோற்றுக் கொண்டிருந்தேன்..ஆனால் சொல்லி வைத்தாற் போல் ஆ மின்னல் மாதிரி சருக்னு வரும், சருக்குன்னு போகும்..ஒரு காபி, கீபியை கையில கொடுத்து கொஞ்சம் மெதுவா வந்தாதானே, சுமூகமா ஒரு முடிவுக்கு வர முடியும்..ஆனால் ஒவ்வொரு தடவையும், அது(அதா..அடங்கொய்யாலே..) அவுட்ஆப் போகஸ்ஸிலே வருவதால் சில நேரம் கேமிரா வைத்துக் கொண்டு தூங்கலாமோ என்று நினைத்ததுண்டு..
ஆனா ராஜேஷ்குமார் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பம் போல் கரெக்டா என்னுடைய பிறந்தநாள் அன்னைக்கு மட்டும் கொஞ்சம் பக்கத்தில் வரும்..எப்படியாவது முகத்தைப் பார்த்து விடலாம் என்று நினைக்கும்போது முகம் முழுவதும் ஒளி அடித்தார்போல் பிரகாசமா இருக்கும்..சரி டியூப் லைட்தான் எதுவும் ஆப் பண்ணாம தூங்கிட்டமோ என்று நினைச்சா, அதுவும் ஆப் ஆகித்தான் இருந்துச்சு..அப்படியே பக்கத்தில் வரும்..
என் அருகில் நெருக்கமா வர எனக்கு வேர்த்து கொட்டியது..நாக்கு வேற உலர்ந்து போகும்(யாரும் தப்பா பின்னூட்டம் போட்டுடாதீங்கண்ணே..) அப்படியே ஆசையா வந்து பின்னால் இருந்து ஒரு கத்தியை வைத்து என் வயிற்றில் ஒரே குத்து…சதக்…
“அய்யோ..அம்மா..”
“என்னப்பா எதுவும் கெட்ட கனவு கண்டியா..”
“ஆமாம்மா..வந்து ஒரு சிவப்பு டிரெஸ் போட்டுக்கிட்டு…”
“அது உங்க பாட்டியா இருக்கும்..இந்தா தாத்தா போட்டாவை பக்கத்தில் வைச்சிக்கிட்டு தூங்கு..”
“ஆஹா..வேணாம்மா வேற மாதிரி ஆகிடும்….ஏம்மா, பாட்டி 25 வயசுலயே செத்துப் போயிடுச்சா..”
எங்கம்மா என்னை அதிர்ச்சியா பார்த்தாங்க..அதன் தாக்கம் காலையில் அப்பாவுடன் என் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோதுதான் விளங்கியது..
இந்த கனவே எனக்கு தொடர் கனவாகிப் போனது..சிவப்பு உடை தேவதை, அவுட் ஆப் போகஸில் ஓடிக் கொண்டே இருப்பதும், கரெக்டா பிறந்த நாள் வரும்போது நேர்ந்துவிட்ட மாதிரி பக்கத்தில் வந்து குறி வைச்சு கத்தியால் குத்துவதும் எனக்கு பழகிப் போனது..
போன வாரத்தில் தேவதையின் தூரம் குறைவாகி கொண்டே இருந்தது..இந்த தடவை கேட்டே விடுவது என்றே முடிவு பண்ணிட்டேன்..இல்லை அட்லீஸ்ட் முகத்தையாவது பார்த்து விடணும்..பக்கத்தில் வந்தது தேவதை..கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தேன்..ஒன்றும் தெரியவில்லை..சடக்கென்று மறைந்து போனது….
சடக்கென்று எழுந்து விட்டேன்..சத்தம் கேட்டு என் மனைவி சமையலறையில் இருந்து ஓடி வந்தாள்..
“என்னங்க..என்ன ஆச்சு..”
“ஒன்னுமில்லை..ஒரு கெட்டக் கனவு..”
அரைத் தூக்கத்தில் இருந்ததால் சரியாக பார்க்க முடியவில்லை..கொஞ்சம் கண் முழித்துப் பார்த்தால் என் மனைவி கையில் கத்தி. சமையலறையில் இருந்து வந்திருந்தாள் போல...இன்னும் கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறேன், அவள் அணிந்திருந்தது சிவப்பு நிற உடை…எனக்கு தூக்கி வாரிப் போட்டது…திடுக்கிட்டு காலண்டரைப் பார்க்கிறேன்..செப்டம்பர் 3. நாளை செப்டம்பர் 4, என் பிறந்த நாள்….
47 comments:
அய்யா எனக்கு பிறந்த நாள்...அய்யா எனக்கு பிறந்த நாள்.. plz என்ன வாழ்த்துங்க .. நீடூழீ வாழ்க ராசா
ராசா அந்த சினிமா காரங்க தான் அப்பிடின்ன.. நீங்களுமா?
//எங்கம்மா என்னை அதிர்ச்சியா பார்த்தாங்க..அதன் தாக்கம் காலையில் அப்பாவுடன் என் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோதுதான் விளங்கியது..//
நல்லாயிருக்கு
//அவள் அணிந்திருந்தது சிவப்பு நிற உடை…எனக்கு தூக்கி வாரிப் போட்டது…திடுக்கிட்டு காலண்டரைப் பார்க்கிறேன்..செப்டம்பர் 3. நாளை செப்டம்பர் 4, என் பிறந்த நாள்….//
வாழ்த்துகள் நண்பரே
/////////////////////
Rajinikanth said...
அய்யா எனக்கு பிறந்த நாள்...அய்யா எனக்கு பிறந்த நாள்.. plz என்ன வாழ்த்துங்க .. நீடூழீ வாழ்க ராசா
2 September, 2009 7:59 PM
/////////////////////
அடிங்கொய்யாலே..நண்பன் பிறந்த நாளை மறந்துட்டு கிண்டல் வேற பண்றியா..நான் உன் பொறந்த நாளுக்கு பண்ணின மாதிரி, ஒழுங்கா, நாக்குல அலகு குத்தி, நூறு ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணிடு..இல்லை…கே.கே நகர் தேடி வந்து அடிப்பேன்..
/////////////////////
Mangalore siva said...
ராசா அந்த சினிமா காரங்க தான் அப்பிடின்ன.. நீங்களுமா?
2 September, 2009 8:02 PM
/////////////////////
பின்ன எப்படிதாண்ணே சொல்லுறது…..நண்பர்களோட வாழ்த்துகள் தவிர வேற என்னண்ணே சந்தோசம் வேணும்..
////////////////////
ஆ.ஞானசேகரன் said...
//எங்கம்மா என்னை அதிர்ச்சியா பார்த்தாங்க..அதன் தாக்கம் காலையில் அப்பாவுடன் என் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோதுதான் விளங்கியது..//
நல்லாயிருக்கு
//அவள் அணிந்திருந்தது சிவப்பு நிற உடை…எனக்கு தூக்கி வாரிப் போட்டது…திடுக்கிட்டு காலண்டரைப் பார்க்கிறேன்..செப்டம்பர் 3. நாளை செப்டம்பர் 4, என் பிறந்த நாள்….//
வாழ்த்துகள் நண்பரே
2 September, 2009 8:10 PM
///////////////////////
வாழ்த்துக்களுக்கு நன்றி ஞானசேகரன்…
பிறந்த நாள் வாழ்த்துகள். நாளைக்கும் சொல்றேன். ஏன் ராஜா.? பிறந்த நாள சொல்றதுக்கு கூட இப்பிடி ஒரு லொள்ளா? ஒன்னு நல்லா தெரியுது. நாளைக்கு சாப்பாடு வெளிய. இல்லன்னா இப்புடி தகிரியமா சொல்ல முடியுமா:))
//Mangalore siva said...
ராசா அந்த சினிமா காரங்க தான் அப்பிடின்ன.. நீங்களுமா?//
அதுவும் முப்பத்தி மூணு வயசுக்கு ,மேலே போக மாட்டேங்கிராங்க...
அதுமாதிரி இல்லாத ராசாவுக்கு 4* வயது பிறந்ததுக்கு வாழத்துகள்!!
*
* *
* * *
---------
/ /
---------
பூச்செண்டை எடுத்துக்கங்க...
supperapuu
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
//சில நேரம் கேமிரா வைத்துக் கொண்டு தூங்கலாமோ என்று நினைத்ததுண்டு..//
திஸ் இஸ் டூ மச்.. !
_________________________________
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பிறந்தநாளுக்கு உங்களுக்கு ட்ரெஸ் எடுக்கறீங்களோ இல்லியோ வீட்டம்மாவுக்கு சிவப்புகலர் இல்லாத சேலை வாங்கி கொடுத்துருங்கண்ணே... :))
happy birth day
happy birth day in advance :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்துகின்றேன்
Empuu...Nallathana poikitrunthuchu...Enya pondatiya njabahapaduthureeha..parunga enaku mood out aiduchu...
neat!!!!!!!!!!!!!
/////////////////////
Rajinikanth said...
அய்யா எனக்கு பிறந்த நாள்...அய்யா எனக்கு பிறந்த நாள்.. plz என்ன வாழ்த்துங்க .. நீடூழீ வாழ்க ராசா
2 September, 2009 7:59 PM
/////////////////////
அடிங்கொய்யாலே..நண்பன் பிறந்த நாளை மறந்துட்டு கிண்டல் வேற பண்றியா..நான் உன் பொறந்த நாளுக்கு பண்ணின மாதிரி, ஒழுங்கா, நாக்குல அலகு குத்தி, நூறு ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணிடு..இல்லை…கே.கே நகர் தேடி வந்து அடிப்பேன்.
////////////////////
ராசா சார் என்ன இப்பிடி சொல்லிபுட்டிங்க... தேதி 4 ஆகலியே போச்சு அதுக்குள்ளே அவசரபட்ட எப்பிடி?. நீங்க சொன்ன மாதிரி தடபுடலா கொண்டாடிவோம்...
பிறந்த நாள் வாழ்த்துகள்!.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
wish you many more happy returns of the day...with good dreams :)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
///////////////////
வானம்பாடிகள் said...
பிறந்த நாள் வாழ்த்துகள். நாளைக்கும் சொல்றேன். ஏன் ராஜா.? பிறந்த நாள சொல்றதுக்கு கூட இப்பிடி ஒரு லொள்ளா? ஒன்னு நல்லா தெரியுது. நாளைக்கு சாப்பாடு வெளிய. இல்லன்னா இப்புடி தகிரியமா சொல்ல முடியுமா:))
2 September, 2009 9:08 P
/////////////////////
வாழ்த்துக்களுக்கு நன்றி வானம்பாடிகள்..
////////////////////////
அப்பாவி முரு said...
//Mangalore siva said...
ராசா அந்த சினிமா காரங்க தான் அப்பிடின்ன.. நீங்களுமா?//
அதுவும் முப்பத்தி மூணு வயசுக்கு ,மேலே போக மாட்டேங்கிராங்க...
அதுமாதிரி இல்லாத ராசாவுக்கு 4* வயது பிறந்ததுக்கு வாழத்துகள்!!
*
* *
* * *
---------
/ /
---------
பூச்செண்டை எடுத்துக்கங்க...
2 September, 2009 9:32 PM
/////////////////////////
நன்றி முருகன்..ஜஸ்ட் 31தான்..
//////////////////////
இளைய கவி said...
supperapuu
2 September, 2009 9:34 PM
//////////////////////
நன்றி இளைய கவி..
/////////////////
சுரேஷ்குமார் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
2 September, 2009 10:58 PM
////////////////
நன்றி சுரேஷ்குமார்..
பொறந்த நா வாழ்த்துகள் ராசா.. கதை அழகு. இதுக்கு மேல கத்துனீங்கன்னா தோசைக்கரண்டீல ஒரு புடி புடிச்சிருவாங்க.
/////////////////
கலகலப்ரியா said...
//சில நேரம் கேமிரா வைத்துக் கொண்டு தூங்கலாமோ என்று நினைத்ததுண்டு..//
திஸ் இஸ் டூ மச்.. !
_________________________________
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
2 September, 2009 11:15 PM
//////////////////////
நன்றி பிரியா..
/////////////////////
துபாய் ராஜா said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பிறந்தநாளுக்கு உங்களுக்கு ட்ரெஸ் எடுக்கறீங்களோ இல்லியோ வீட்டம்மாவுக்கு சிவப்புகலர் இல்லாத சேலை வாங்கி கொடுத்துருங்கண்ணே... :))
2 September, 2009 11:26 PM
///////////////////////
நன்றி துபாய் ராஜா…
//////////////////
Sachanaa said...
happy birth day
3 September, 2009 12:17 AM
/////////////////
நன்றி சச்சனா..
//////////////////////
சூரியன் said...
happy birth day in advance :)
3 September, 2009 12:28 AM
////////////////
நன்றி சூரியன்…
//////////////
Indian Share Market said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்துகின்றேன்
3 September, 2009 1:04 AM
/////////////////
நன்றி ஷேர் மார்க்கெட்..
/////////////////
Anonymous said...
Empuu...Nallathana poikitrunthuchu...Enya pondatiya njabahapaduthureeha..parunga enaku mood out aiduchu...
3 September, 2009 1:12 AM
////////////////
நன்றி அனானி..
/////////////////////
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
பிறந்த நாள் வாழ்த்துகள்!.
3 September, 2009 8:58 AM
////////////////////
நன்றி பாஸ்கர்..
///////////////
பாசத்திற்குரிய பாரதிராஜா said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
3 September, 2009 10:39 AM
///////////////
நன்றி பாரதிராஜா..
/////////////////////
Mullai said...
wish you many more happy returns of the day...with good dreams :)
3 September, 2009 11:28 AM
/////////////////////
நன்றி முல்லை..என்ன ஒரு மெயிலும் கானோம்..?
/////////////////////
சின்ன அம்மிணி said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
3 September, 2009 9:08 PM
////////////////////////
வாழ்த்துக்களுக்கு நன்றி அம்மினி..
///////////////////
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பொறந்த நா வாழ்த்துகள் ராசா.. கதை அழகு. இதுக்கு மேல கத்துனீங்கன்னா தோசைக்கரண்டீல ஒரு புடி புடிச்சிருவாங்க.
3 September, 2009 9:40 PM
//////////////////
நன்றி செந்தில்வேலன்..
வளமாய் வாழ
நிறைவாய் வாழ்த்துகள்.
vaazthukkal raja.
பிறந்த நாள் வாழ்த்துகள்...
அய்யா ராசா,
நானும் உங்கள என்னமோ நெனைச்சிட்டென்.வேணாம் உங்க சங்காத்தம்.வந்தவழியே கெளம்புறேன். யப்பா, யாருயாரோடெல்லாமோ லிங்க் இருக்கும் போல. ப்ளாக்" ஐ தொறந்தா யாரு யாரு படமெல்லாமோ தெரியுது?
நல்லா தான் எழுதிறீய்ங்க. நடத்துங்க...!
Belated pirantha naal nal valthukal Annae
பிறந்த நாள்..
இன்று [4th Sep] பிறந்த நாள்..
சிறு பிள்ளைகள் போலே ..
தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்..
happy birth day to U... [ஞாபகம் இருக்கா அண்ணே? இலங்கை வானொலி...]
ரொம்ப லேட்டா .. but fresh ஆ பொறந்த தின வாழ்த்துக்கள்...
Mrs.ராசாவுக்கு என்ன gift கொடுத்தீகள்??!!
enna aatchu raja? sep 4th kanavu vanthatha ?
sivappu udai azhagi vanthaala ??
unga wifeta soneenga enral avanga parthuppanga.
Kumar S
Belated Birthday wishes
belated birthday wishes !!!
Post a Comment