Sunday, 23 August 2009

ஷாருக்கான் – தேசத்தின் அவமானமா??

கோவாலுவை அவ்வளவு கோவமா பார்த்ததேயில்லைண்ணே..முகம் முழுக்க கோவத்துடன் எங்கிட்ட வந்தான்….

“ராசா..ரொம்ப அவமானம்டா..சே..மானமே போச்சுடா..”

“ஐயோ..கோவாலு..என்னடா ஆச்சி….வீட்டில இருக்குறவயிங்களப் பத்தி யாராவது தப்பா பேசுனாங்களா..சொல்லுடா, அடியப் போட்டுருவோம்..”

“இல்லடா ராசா..அமெரிக்க ஏர்போர்ட்ல ஷாருக்கானை அவமானப்படுத்தியிருக்காயிங்கடா..எப்படிடா அவிங்க பண்ணலாம்..”

“ஆமாடா கோவாலு..என்ன தேசம்டா இது..இதை சும்மா விடக்கூடாதுடா..இப்படிப்பட்ட நாட்டுல நீ இருக்கவே கூடாதுடா..இப்படிப்பட்ட நாடு தர்ற சம்பளம் உனக்கு தேவையாடா..உடனே டிக்கெட் வாங்கிட்டு இப்பவே ஊருக்கு கிளம்புடா..”

“டே ராசா..இதுக்கெல்லாம் போயி……..வீட்டுல மதியான சாப்பட்டுக்கு சோறு ரெடியாகி இருக்கும்….நான் கிளம்புறேன்..”

திரும்பிப் பார்க்காம ஓடியே போய்விட்டான்..இதுபோலத்தான் நம்மில் பலர் இருக்கிறோம்..உண்மையில் ஷாருக்கானை அவமானப்படுத்தியது தேசத்தை அவமானப்படுத்தியது போலவா??கேள்வியை ஒருமுறை நமக்குள்ளே கேட்டுப் பார்ப்போம்..கேட்டு விட்டோமா...கீழே மூன்றுகேள்விகள் இருக்கின்றன..திறந்த மனதுடன் இதற்கு பதில் சொல்லுவோம்..

  1. சென்னையில் நமக்கு சொந்தவீடு ஒன்று இருக்கிறது..வாடகைக்கு விட முடிவு பண்ணியிருக்கிறோம்..இஸ்லாமியர் ஒருவர் வந்து வாடகைக்கு கேட்கிறார்..நல்ல குணமாக இருக்கிறார்..ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதாலேயே வாடகைக்கு விடுவோமா..மாட்டோமா..?
  2. நாம் காதல் திருமணத்தை ஆதரிப்பவர்..நமக்கு கல்யாணம் ஆகி திருமண வயதில் மகள் இருக்கிறாள்..ஒரு இஸ்லாமிய இளைஞனை காதலிக்கிறாள்..அவன் ஒரு முஸ்லீம் என்பதாலே திருமணத்திற்கு ஒத்துக் கொள்வோமா மாட்டோமா..?
  3. குஜராத் கலவரம் நடந்தபோது..”அவிங்களுக்கெல்லாம் இதெல்லாம் வேண்டும்டா..” என்று சொல்லியிருக்கிறோமா..?

மேலே உள்ள மூன்று கேள்விகளுக்கு நாம் “மாட்டேன்” “சொல்லி இருக்கிறேன்” என்று பதில் சொன்னால், பிரச்சனை அமெரிக்காவில் இல்லை..நம்மிடத்தில் உள்ளது..தேசத்தை அவமானப்படுத்துவது அமெரிக்கா இல்லை..நாம்தான்….

இப்படி சொல்வதால் அமெரிக்கா செய்தது சரியென ஆகிவிடாது..இனம், மொழி, நிறப் பாகுபாடு கொடுமைகள் அமெரிக்காவில் என்ன அண்டார்டிகாவில் நடந்தாலும் தவறுதான்..

எனக்கு ஒரு முஸ்லீம் நண்பன் உண்டு..எனக்கு மிகவும் பிடித்தவன்…நல்ல கடவுள் பக்தி உள்ளவன்..அவனுக்கு மேற்கு மாம்பலத்தில் ஒரு கம்பெனியில் வேலைக் கிடைத்திருந்தது..அதனால் மேற்கு மாம்பலத்திலேயே வாடகைக்கு ஒரு வீடி தேடினான்..நானும் அவனும் வீடு வீடாக சென்று தேடினோம்..சொல்லவே கஷடமாக உள்ளதுன்னே..அவன் ஒரு முஸ்லீம் என்பதாலேயே அவனுக்கு ஒருத்தரும் வீடு கொடுக்கவேயில்லை….இதில் ஒரு வீட்டு ஓனர் என்னைத் தனியே கூப்பிட்டு சொல்கிறார்..

“தம்பி..ஏன்பா இவிங்களை எல்லாம் வீடு பார்க்க கூப்பிட்டு வர்ற..தீவிரவாதியா கூட இருக்கலாம்பா..நம்ப முடியாது..”

எனக்கு செருப்பால் அறைந்தது போல் இருந்தது..இத்தனைக்கும் அவர் படித்த மத்திய அரசு அலுவலர்..ஏன் இந்த பாகுபாடு..யாரோ சிலர் அந்த இனத்தில் தீவிரவாதம் செய்வதால் அனைவரும் தீவிரவாதியா?? ஒரு விமானம் தரையில் விழுந்துவிட்டால் விமானப் பயணத்தையே தவிர்க்கிறோமா..என்ன மனிதர்கள் நாம்..

ஒரு கட்டத்தில் என் நண்பனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது..

“ராசா..இனிமேலும் எனக்கு வீடு கிடைக்கும்னு நம்பிக்கை இல்லைடா..ஏண்டா நானென்ன அந்நிய நாட்டுக்காரனா..நானும் இந்தியந்தானடா..ஏண்டா என்னை ஒரு தீவிரவாதி மாதிரியே பாக்குறாங்க..”

என்னால் எதுவும் பதில் சொல்ல இயலவில்லை..”சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஆசைப்படுகிறாயா..முதலில் உன்னிடம் இருந்து ஆரம்பி” என்று ஒரு அறிஞர் சொன்னார்

சமூக மாற்றத்தை விரும்பும் இளைஞர்களாய் நாம் இருக்கிறோம்..ஷாருக்கான் பற்றிக் கவலைப்படும் முன்பு நம் பக்கத்து வீட்டில் உள்ள “காதர் மொய்தீன்”,”ஷேக் முகம்மது” போன்றோரை மொழி, இனம், நிறம் தாண்டி நேசிப்போம். பின்பு அமெரிக்காவிடம் நெஞ்சை நிமிர்த்தி கேட்போம் “ஏன் ஒரு இந்தியனை, இஸ்லாமியனை அவமானப்படுத்தினாய்” என்று..

பின்பு நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம், “குடியரசுத் தலைவராய் ஒரு இஸ்லாமியரைத் தந்த நாடு, என் நாடு” என்று..

32 comments:

Anonymous said...

Ask your muslim friend to take this issue to his fellow muslims. These are all because of his fellow muslims only. Everyone knows this truth.

ஈரோடு கதிர் said...

அருமையான பதிவு

நாம் நம்மையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை புகுத்தியிருக்கும் பதிவு..

அப்பாவி முரு said...

ஆ...

அனானி அண்ணன் வந்துட்டாங்களா.,

களம் இன்னும் சூடாகும்.

vasu balaji said...

மிக மிகச் சரியான கருத்து. நம்மை நாம் முதலில் சரிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

யோ வொய்ஸ் (யோகா) said...

Hats off தலை சூப்பரா சொன்னீங்க.. நானெல்லாம் முஸ்லீம் நண்பர்களுக்கு இடையில் உள்ள ஒரே ஹிந்து. என்னை அவர்கள் நன்றாக பார்த்து கொள்கிறார்கள்.

Senthil said...

as usual!!!!!!!!

u r great!!!!!!

Anonymous said...

நல்ல காமெடி பதிவு. நண்பரே உங்களுக்கு சுத்தமாக எழுதவரவில்லை. வேறு ஏதாவது வேலை இருந்தால் பார்க்கவும். உங்கள் நேரத்தையும் வீணடித்து எங்கள் நேரத்தையும் வீணடித்து ஏன் தாலி அறுக்கிறீர்கள்.

நஜி said...

உங்களைப் போன்ற நடுநிலையளர்களால் தான் இந்தியா இன்னும் மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Anonymous said...

நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்

venkat said...

your correct,because your indian even though ur in usa, u behave like indian.

என்ன கொடும சார் said...

இந்த துணிவு இருக்கும் ஒரே பதிவர் நீங்களாக இருப்பதுதான் உங்கள் சிறப்பு

Anonymous said...

I feel mistake is in both the end.....

துபாய் ராஜா said...

நாங்கல்லாம் இருக்கிறது அவிய்ங்க நாடுதான். அண்ணன் தம்பியாத்தான் பழகறோம்.நம்ம நாட்டு மேலயும் ரொம்ப மரியாதை வைச்சிருக்கறாங்க. எல்லாம் நம்ம கைலத்தாண்ணே இருக்கு.

எழில் said...

உங்களால தான் ஒலகத்துல மழ பெய்யுது

Mottai Pandi said...

Cholanvanthan raja, Sharukhan was detained in US Airport for a security check. Sharukhan is a big film star here in india. He might be a iconic face in India. But its nothing for US and the people who stay there. For them their security is so important than anything else. Please do not try to link any colors to that. There are so many people who were detained when the security official gets into any doubt.
As a Indian im feeling shame all these Big film star wants to get publicity by cheap self advertisement.
How many people know that abdulkalam also detained in airport by a american airline. He did not come to any media and does not do any cheap advertisement.
My friend do you know how many our sikh friends suffered during 9/11. We all know and create it as a BIG NEWS any thing happens to our BIG SCREEN ACTOR/ACTRESS. Actor/Actress are the people who does not need to much skill to get in to that position. Get out of this and do some constructive work.

குப்பன்.யாஹூ said...

your post is good, but i have seen other side of the people. when Indian MP elections results were announcing, lot of chat friends (mlostly christains Indians migrated to Aussie, Newzealnd, Canada, have asked said the 1st thing, oh Luckily BJP has not come into power.

This is what reality. People still have caste, religion feeling across the globe.

Unknown said...

மிகவும் அருமையான பதிவு.

படிக்கும் போது மிகவும் நெகிழ்சியாக இருந்தது.

நன்றி ராஜா.

நீங்கள் கூறியது போல சில பேர் இருக்கத்தான் செய்கின்றனர். என்ன செய்வது, யாரோ செய்யும் தவறுக்கு யாரோ பொறுப்பாக வேண்டியதுள்ளதே...

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Anonymous said...
Ask your muslim friend to take this issue to his fellow muslims. These are all because of his fellow muslims only. Everyone knows this truth.
23 August, 2009 7:26 PM
//////////////////
அனானி அன்பரே..நான் என் நண்பனிடம் கேட்பதற்கு முன்னால் நீங்கள் உங்கள் மனசாட்சியிடம் கேட்டீர்களா..

அவிய்ங்க ராசா said...

///////////////
கதிர் - ஈரோடு said...
அருமையான பதிவு

நாம் நம்மையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை புகுத்தியிருக்கும் பதிவு..
23 August, 2009 8:37 PM
////////////////////
வருகைக்கு நன்றி கதிர்..

அவிய்ங்க ராசா said...

/////////////////
அப்பாவி முரு said...
ஆ...

அனானி அண்ணன் வந்துட்டாங்களா.,

களம் இன்னும் சூடாகும்.
23 August, 2009 8:42 PM
///////////////
ஆமாண்ணே..வரட்டும்..பேசிப் பார்ப்போம்…)))

அவிய்ங்க ராசா said...

///////////////////
வானம்பாடிகள் said...
மிக மிகச் சரியான கருத்து. நம்மை நாம் முதலில் சரிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
23 August, 2009 9:12 PM
யோ வாய்ஸ் said...
Hats off தலை சூப்பரா சொன்னீங்க.. நானெல்லாம் முஸ்லீம் நண்பர்களுக்கு இடையில் உள்ள ஒரே ஹிந்து. என்னை அவர்கள் நன்றாக பார்த்து கொள்கிறார்கள்.
23 August, 2009 11:34 PM
Senthil said...
as usual!!!!!!!!

u r great!!!!!!
24 August, 2009 3:15 AM
///////////////////////
வருகைக்கு நன்றி யோ, வானம்பாடி, செந்தில்..

அவிய்ங்க ராசா said...

////////////////
Anonymous said...
நல்ல காமெடி பதிவு. நண்பரே உங்களுக்கு சுத்தமாக எழுதவரவில்லை. வேறு ஏதாவது வேலை இருந்தால் பார்க்கவும். உங்கள் நேரத்தையும் வீணடித்து எங்கள் நேரத்தையும் வீணடித்து ஏன் தாலி அறுக்கிறீர்கள்.
24 August, 2009 3:32 AM
///////////////
நன்றி அனானி நண்பரே..சந்தோசம்..அப்படியே உங்க பிளாக் அட்ரஸ் கொடுத்தா எப்படி எழுதுறதுன்னு கத்துக்குவேன்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
நஜி said...
உங்களைப் போன்ற நடுநிலையளர்களால் தான் இந்தியா இன்னும் மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
24 August, 2009 3:34 AM
Anonymous said...
நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்
24 August, 2009 4:07 AM
venkat said...
your correct,because your indian even though ur in usa, u behave like indian.
/////////////////
நன்றி நஜி, அனானி, வெங்கட்

அவிய்ங்க ராசா said...

/////////////////
என்ன கொடும சார் said...
இந்த துணிவு இருக்கும் ஒரே பதிவர் நீங்களாக இருப்பதுதான் உங்கள் சிறப்பு
24 August, 2009 5:26 AM
Anonymous said...
I feel mistake is in both the end.....
24 August, 2009 5:45 AM
துபாய் ராஜா said...
நாங்கல்லாம் இருக்கிறது அவிய்ங்க நாடுதான். அண்ணன் தம்பியாத்தான் பழகறோம்.நம்ம நாட்டு மேலயும் ரொம்ப மரியாதை வைச்சிருக்கறாங்க. எல்லாம் நம்ம கைலத்தாண்ணே இருக்கு.
24 August, 2009 6:22 AM
/////////////////
நன்றி அனானி, ராஜா, என்ன கொடுமை சார்

அவிய்ங்க ராசா said...

///////////////////
எழில் said...
உங்களால தான் ஒலகத்துல மழ பெய்யுது
24 August, 2009 9:01 AM
///////////////////
நன்றி எழில்..இதுல எதுவும் உள்குத்து இல்லையே..))

அவிய்ங்க ராசா said...

///////////////
Mottai Pandi said...
Cholanvanthan raja, Sharukhan was detained in US Airport for a security check. Sharukhan is a big film star here in india. He might be a iconic face in India. But its nothing for US and the people who stay there. For them their security is so important than anything else. Please do not try to link any colors to that. There are so many people who were detained when the security official gets into any doubt.
As a Indian im feeling shame all these Big film star wants to get publicity by cheap self advertisement.
How many people know that abdulkalam also detained in airport by a american airline. He did not come to any media and does not do any cheap advertisement.
My friend do you know how many our sikh friends suffered during 9/11. We all know and create it as a BIG NEWS any thing happens to our BIG SCREEN ACTOR/ACTRESS. Actor/Actress are the people who does not need to much skill to get in to that position. Get out of this and do some constructive work.
////////////////////
பாண்டி..ஷாருக்கான் பெயரில் கான் இருப்பதாலயே, அவர் காக்க வைக்கப்பட்டார்..அப்துல் கலாம் நிலை வேறு..அவரை அவர் மதத்தை சார்ந்தவர் என்பதால் செக் செய்யவில்லை..மற்றும்..ஷாருக்கானுக்கு நடந்தது எந்த மதத்தைச் சேர்ந்தவர்க்கு நேர்ந்தாலும் கண்டிக்கத்தக்கது,,விவாதம் செய்ய விரும்பினால், மெயில் அனுப்பவும்..ஆரோக்யமான விவாதம் செய்யலாம்..

அவிய்ங்க ராசா said...

/////////////////
ராம்ஜி.யாஹூ said...
your post is good, but i have seen other side of the people. when Indian MP elections results were announcing, lot of chat friends (mlostly christains Indians migrated to Aussie, Newzealnd, Canada, have asked said the 1st thing, oh Luckily BJP has not come into power.

This is what reality. People still have caste, religion feeling across the globe.
24 August, 2009 10:05 AM
Mãstän said...
மிகவும் அருமையான பதிவு.

படிக்கும் போது மிகவும் நெகிழ்சியாக இருந்தது.

நன்றி ராஜா.

நீங்கள் கூறியது போல சில பேர் இருக்கத்தான் செய்கின்றனர். என்ன செய்வது, யாரோ செய்யும் தவறுக்கு யாரோ பொறுப்பாக வேண்டியதுள்ளதே..
////////////////
நன்றி ராம்ஜி..ஆனால் அவ்வாறு தோணும்படி செய்த, பி.ஜே.பியினர் மீதும் தவறு உள்ளது…

நன்றி மஸ்தான்

வெத்து வேட்டு said...

“தம்பி..ஏன்பா இவிங்களை எல்லாம் வீடு பார்க்க கூப்பிட்டு வர்ற..தீவிரவாதியா கூட இருக்கலாம்பா..நம்ப முடியாது..”
nothing wrong in above comment
all terrorists first act like very innocent and then they kill,,and blow up trains you forgot Mumbai, Delhi markets??

how could a house owner know your friend is not a terrorist... as long as muslims don't control their terrorists...they all will be labeled as terrorists... so far Muslims didn't voice against terrorism..their "brother hood" is preventing them...

Anonymous said...

எந்த பார்ப்பானையும் இதுமாதிரி அமெரிக்கா அவமதிச்சதில்லையே அது ஏன்

Pradeep said...

நல்ல ஒரு பதிவு.
இதை படித்து ஒருத்தர் திருந்தினால் போதும்.நாட்டுக்கு நல்லது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Kirubakaran said...

அருமையான பதிவு..
//ஏண்டா நானென்ன அந்நிய நாட்டுக்காரனா//
சமுதாயம் இன்னும் அப்படிதான் பார்கின்றது..
..மாறுவோம்..மாற்றுவோம்..

Post a Comment