Thursday 20 August, 2009

மிக்சர் ஜூஸ்

நிறைய பேர் “அவியல், குவியல், கொத்துப் புரோட்டா..” ன்னு நிறைய எழுதிட்டதால, நம்ம என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்..கடைசில நம்ம மதுரையுல பேமஸ் “மிக்சர் ஜூஸ்”. அதுவே வைச்சிட்டேன்..வேற ஏதாவது பெயர் உங்களுக்கு தோணிச்சுன்னா சொல்லுங்கண்ணே..நல்ல தலைப்புக்கு ஏதாவது பரிசு கொடுத்துருவோம்..ஹீ..ஹீ..

அழகர்மலைப் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு பாட்டு..”உலகம் இப்போது எங்கே போகுது..” இளையராஜா ஒரு ஆல்பம் மாதிரி பண்ணியிருந்தார்..எனக்குத் தெரிந்து இளையராஜாவைத் தவிர யாரும் தன்னைப் பற்றியே புகழ்ந்து எழுதிக் கொண்டு இசையமைத்து நடித்ததாக ஞாபகம் இல்லை..அதில் குறிப்பிட்டுள்ள சில வரிகளைப் பார்க்கும் போது, இளையராஜாவுக்கு என்ன ஆயிற்று எனக் கேட்கத் தோணிகிறது. அப்பட்டமா ஏ.ஆர் ரகுமானைப் பற்றியே பாடியதாக தோணுகிறது. ஏ.ஆர் ரகுமான் கடல் கடந்து போய் ஆஸ்கார் வாங்கியது இளையராஜாவுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை..அப்போ, ஏ.ஆர் ரகுமானை பாராட்டு விழாவில் புகழ்ந்து பேசியது வெறும் வார்த்தைகள்தானா?? மற்றொரு விழாவில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்ற வார்த்தைகளை தாக்கிப் பேசும் போது நோக்கம் என்ன என்று தெரிந்தது..இசையில் இசைஞானியாக இருந்தாலும் அவரைப் பற்றிய பிம்பம் படிப்படியாக நொறுங்கிப் போனது..

உரையாடல் போட்டி முடிவுகளைப் பார்த்த போது ஒன்றும் அதிர்ச்சியாக இல்லை..ஆனால் என்னுடைய சிறுகதையைப் திரும்ப ஒருமுறை படித்த போது ஏண்டா போட்டிக்கு அனுப்பினோம் என்று நொந்து போனேன்..ஒவ்வொருவர் சிறுகதையிலும் சற்று இலக்கணம் இருந்தது..அதில் ஒன்று கூட பொருந்தாமல் என் கதை இருந்தது..தெரியாத ஏரியாவில் மூக்கை நுழைக்க கூடாது என்று கற்று கொண்டேன்..கவிதை ஏரியாவும் எனக்கு பிடிபடாத ஒன்று..

போன வாரம் இன்டெர்நெட்டில் “வால்மீகி” படம் பார்த்தேன்..அவ்வளவு ஒன்றும் அறுவையாக இல்லை..ஆனால் ஏன் அந்தப் படத்தைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் ஏன் என்று தெரியவில்லை..அகில் இயல்பாக நடித்திருந்தார்..இப்படியே கதைக்கேற்ற பாத்திரத்தில் நடித்தால் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கலாம்

சமீபத்தில் “அங்காடித்தெரு” பாடல்கள் கேட்டேன்.இசையமைப்பாள்ர் ஜீ.வி பிரகாஷுக்கு 22 வயதாம்..ஒவ்வொரு பாடல்களும் பின்னியெடுத்துருக்கிறார்..”அவள் அப்படி ஒன்று அழகில்லை” மற்றும் “உன் பேரை சொல்லும் போது” இரண்டு பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்..வேறு உலகத்திற்கு எடுத்து செல்வார்..மறக்காமல் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் ஆண்ட்ரியா பாடிய “மாலை நேரம்” பாட்டை இன்னும் கேட்கவில்லையா..போங்கண்ணே..

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இங்கு நடக்கிறது..நம்ம ஆளு பூபதி வந்திருப்பதாக சொன்னார்கள். போன வாரம் சென்றிருந்தேன்..டிக்கெட் “42 டாலர்” என்றதுமே என் மனைவி முறைக்க ஒரு கோன் ஐஸ் வாங்கி சாப்பிட்டு ஓடி வந்துவிட்டேன்

மனைவி வீட்டில் இல்லாதபோது “காதல் கதை” படம் பார்த்தேன்..ரொம்ப நாளாயிற்று “ஜோதி” தியேட்டரில் படம் பார்த்து..

தகவல் தொழில் நுட்பம் திரும்பவும் பழைய நிலைக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரிவதாக சொல்கிறார்கள்..அமெரிக்க கனவு அவுட் ஆப் போகஸாகி திரும்பவும் போகஸ் ஆகும்போலே..

பன்னிக்காய்ச்சல் இந்தியாவில் தூள் கிளப்புதாமே..தெருவில் நடந்தா ஏதோ லேப்புக்குள்ள இருக்குற மாதிரி இருக்கிறது என்று நண்பன் சொன்னான்….யாராவது மாஸ்க் வைச்சிருந்தா கொஞ்சம் ஸ்டாக் வைச்சிருங்கப்பா வந்து வாங்கிக்குறேன்..கூடிய சீக்கிரம் ஊருக்கு வர்ரோமில்ல..

என்ன ஆச்சு வலையுலகத்திற்கு..கடந்த ஒரு மாசமா ஒரு சண்டையும் காணோம்….சண்டையப் போடுங்கப்பா..போரடிக்குதுல்ல..

27 comments:

Cable சங்கர் said...

ஏ.. ராசா. எங்க இளையராசாவை பத்தி நீ எப்படி பேசலாம்.. அவர பத்தி பேச நீ என்ன இளைய ராசாவா..? உன்னை விட மாட்டேன்..

ஹி..ஹி.. நீங்கதான் சண்டை போட்டு ரொம்ப நாளாச்சுன்னு கேட்டீங்க.. நான் ரெடி நீங்க் ரெடியா..?:)

taaru said...

பிரபல பதிவர் "சோழை" ராசா [ஆமா, நீங்களும் புரூட் மிக்சர் [அட இந்த பேரு நல்லா இருக்கே?!! இல்லயா?] போட ஆரம்பிச்சுட்டீங்களே.!!] .இன்னும் நெறைய புரூட்ஸ் சேத்து இருக்கலாம்..

Vijayashankar said...

எந்த ஊரிலே இருப்பீங்க? ஒரு பதிவர் சந்திப்பு போட்டிருங்க! அப்படியே, நல்ல சாகலேட்ஸ் வாங்கி வாங்க.

vasu balaji said...

ப்ரூட் மிக்சர்னாலே தனிதான். நல்லாருக்கு.

Anonymous said...

அண்ணே... “ஜிகிரி தண்டா”-னு வைங்கண்ணே..

பத்தி பத்தியா பிரிச்சு போட்டு டிஜைன்னா எழுதுனா சந்தோஷமா இருக்கும்..செய்வீங்களானே?

பாண்டி

யோ வொய்ஸ் (யோகா) said...

“காதல் கதை” படம் பார்த்தேன்..ரொம்ப நாளாயிற்று “ஜோதி” தியேட்டரில் படம் பார்த்து.

அண்ணா படம் எப்படிண்ணா இங்க இலங்கைல படமும் வரல்ல, சீடியும் கிடைக்குது இல்லை,

மிக்சர் ஜுஸுக்கு வேறு பேர் கேட்டுருக்கீங்க? என் சாயஸ் பாலும் பலவும் (பழம் அல்ல பலம்).

தினேஷ் said...

””அவள் அப்படி ஒன்று அழகில்லை”
“மாலை நேரம்”

கிறங்கடிக்க கூடிய பாட்டுண்ணே தினம் கேக்குறோம்ல ..

/அமெரிக்க கனவு அவுட் ஆப் போகஸாகி திரும்பவும் போகஸ் ஆகும்போலே.//

என்னத்த ஆயி என்ன செய்ய திரும்ப எப்ப புட்டுக்குமோன்னே தெரியலேயே ஒரு பிடிப்பே இல்லேண்ணே..

இங்க இவ்ளொ மக்கள் தொகையில் 2000 பேருக்கே இந்த் கூத்து நடக்குதே அங்க எப்படி..

திருப்பதி போனேன் போன வாரம் , ரெயில் , பஸ் , டிக்கெட் கவுண்டர். ரூம் சாவி குடுக்குறவர், பூசாரி(?) எல்லோரும் மாஸ்க்.. பாவம் ஏழுமலையானுக்கு மாட்ட மறந்துட்டாங்களா என்னனு தெரியல்லை..

/ஏ.. ராசா. எங்க இளையராசாவை பத்தி நீ எப்படி பேசலாம்.. அவர பத்தி பேச நீ என்ன இளைய ராசாவா..? உன்னை விட மாட்டேன்..

ஹி..ஹி.. நீங்கதான் சண்டை போட்டு ரொம்ப நாளாச்சுன்னு கேட்டீங்க.. நான் ரெடி நீங்க் ரெடியா..?//

கேபிள் அண்ணே ஆரம்பிச்சிர வேண்டியது தான் .. என்ன ராசா தோசையாக ரெடியா ?

ஈரோடு கதிர் said...

ஜூஸ் நல்லாருக்கு

Mullai said...

Nice post Raja...Am in bangalore only...

துபாய் ராஜா said...

'மிக்சர் ஜூஸ்' பேரு நல்லாத்தாண்ணே இருக்கு. இல்லைன்னா நம்ம மதுரை பேமஸ் 'ஜில் ஜில் ஜிகர்தண்டா'ன்னு வைங்கண்ணே...

Premkumar said...

இன்றுதான் உங்கள் blog - க்கு வந்தேன். எல்லா Postings படித்து விட்டேன் . எல்லாம் அருமை .
By
Premkumar
Chennai
premkumar2184@gmail.com

Prasanna Rajan said...

சே இந்த பிரபல பதிவர் ஆனாலே இப்பிடி தான். எதுனாச்சும் மொக்கையைப் போட்டே ஆகனும். நடத்துங்க தலை... நடத்துங்க...

Anonymous said...

Cholavanthan Raja, want to be famous by commenting all controversial things. It looks like who ever in US does not have much work to do. They think that they are all in the top of the world and comment about all leaders. Illayaraja is a giant, and he is a human. Its so obvious that he will envy with other person who is in same position. Probably you may have to change your perspective before posting about others.

vasu balaji said...

ஒரு சின்ன விருது நண்பரே. ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html

sakthi said...

என்ன ஆச்சு வலையுலகத்திற்கு..கடந்த ஒரு மாசமா ஒரு சண்டையும் காணோம்….சண்டையப் போடுங்கப்பா..போரடிக்குதுல்ல..

என்ன ஒரு நல்ல எண்ணம்

வாழ்க

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Cable Sankar said...
ஏ.. ராசா. எங்க இளையராசாவை பத்தி நீ எப்படி பேசலாம்.. அவர பத்தி பேச நீ என்ன இளைய ராசாவா..? உன்னை விட மாட்டேன்..

ஹி..ஹி.. நீங்கதான் சண்டை போட்டு ரொம்ப நாளாச்சுன்னு கேட்டீங்க.. நான் ரெடி நீங்க் ரெடியா..?:)
20 August, 2009 8:37 PM
//////////////////////
வேணான்னே..எதுனாலும் பேசி தீர்த்துக்குவோம்..))

அவிய்ங்க ராசா said...

/////////////////
20 August, 2009 8:37 PM
taaru said...
பிரபல பதிவர் "சோழை" ராசா [ஆமா, நீங்களும் புரூட் மிக்சர் [அட இந்த பேரு நல்லா இருக்கே?!! இல்லயா?] போட ஆரம்பிச்சுட்டீங்களே.!!] .இன்னும் நெறைய புரூட்ஸ் சேத்து இருக்கலாம்..
20 August, 2009 8:53 PM
//////////////////////
அய்யனார் அண்ணே..பிரபல பதிவரா..?? நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சி..ஏன் இப்படி..)))

அவிய்ங்க ராசா said...

///////
Vijayashankar said...
எந்த ஊரிலே இருப்பீங்க? ஒரு பதிவர் சந்திப்பு போட்டிருங்க! அப்படியே, நல்ல சாகலேட்ஸ் வாங்கி வாங்க.
20 August, 2009 9:05 PM
வானம்பாடிகள் said...
ப்ரூட் மிக்சர்னாலே தனிதான். நல்லாருக்கு.
20 August, 2009 9:13 PM
////////////////////
கண்டிப்பா விஜய் சங்கர்..நன்றி வானம்பாடி..

அவிய்ங்க ராசா said...

////////////////////////

////

//////////////////
Anonymous said...
அண்ணே... “ஜிகிரி தண்டா”-னு வைங்கண்ணே..

பத்தி பத்தியா பிரிச்சு போட்டு டிஜைன்னா எழுதுனா சந்தோஷமா இருக்கும்..செய்வீங்களானே?

பாண்டி
20 August, 2009 9:22 PM
யோ வாய்ஸ் said...
“காதல் கதை” படம் பார்த்தேன்..ரொம்ப நாளாயிற்று “ஜோதி” தியேட்டரில் படம் பார்த்து.

அண்ணா படம் எப்படிண்ணா இங்க இலங்கைல படமும் வரல்ல, சீடியும் கிடைக்குது இல்லை,

மிக்சர் ஜுஸுக்கு வேறு பேர் கேட்டுருக்கீங்க? என் சாயஸ் பாலும் பலவும் (பழம் அல்ல பலம்).
20 August, 2009 11:18 PM
/////////////////////
கண்டிப்பா பண்ணிருவோம் பாண்டி அண்ணே..நன்றி யோ…

அவிய்ங்க ராசா said...

//////////////////////
சூரியன் said...
””அவள் அப்படி ஒன்று அழகில்லை”
“மாலை நேரம்”

கிறங்கடிக்க கூடிய பாட்டுண்ணே தினம் கேக்குறோம்ல ..

/அமெரிக்க கனவு அவுட் ஆப் போகஸாகி திரும்பவும் போகஸ் ஆகும்போலே.//

என்னத்த ஆயி என்ன செய்ய திரும்ப எப்ப புட்டுக்குமோன்னே தெரியலேயே ஒரு பிடிப்பே இல்லேண்ணே..

இங்க இவ்ளொ மக்கள் தொகையில் 2000 பேருக்கே இந்த் கூத்து நடக்குதே அங்க எப்படி..

திருப்பதி போனேன் போன வாரம் , ரெயில் , பஸ் , டிக்கெட் கவுண்டர். ரூம் சாவி குடுக்குறவர், பூசாரி(?) எல்லோரும் மாஸ்க்.. பாவம் ஏழுமலையானுக்கு மாட்ட மறந்துட்டாங்களா என்னனு தெரியல்லை..

/ஏ.. ராசா. எங்க இளையராசாவை பத்தி நீ எப்படி பேசலாம்.. அவர பத்தி பேச நீ என்ன இளைய ராசாவா..? உன்னை விட மாட்டேன்..

ஹி..ஹி.. நீங்கதான் சண்டை போட்டு ரொம்ப நாளாச்சுன்னு கேட்டீங்க.. நான் ரெடி நீங்க் ரெடியா..?//

கேபிள் அண்ணே ஆரம்பிச்சிர வேண்டியது தான் .. என்ன ராசா தோசையாக ரெடியா ?
20 August, 2009 11:38 PM
கதிர் - ஈரோடு said...
ஜூஸ் நல்லாருக்கு
20 August, 2009 11:59 PM
///////////////////////
சூரியன் அண்ணே….வேணாம்னே..நம்ம உடம்பு தாங்காது..))) நன்றி கதிர்

அவிய்ங்க ராசா said...

///////////////////
Mullai said...
Nice post Raja...Am in bangalore only...
21 August, 2009 9:59 AM
துபாய் ராஜா said...
'மிக்சர் ஜூஸ்' பேரு நல்லாத்தாண்ணே இருக்கு. இல்லைன்னா நம்ம மதுரை பேமஸ் 'ஜில் ஜில் ஜிகர்தண்டா'ன்னு வைங்கண்ணே...
21 August, 2009 1:23 PM
Premkumar said...
இன்றுதான் உங்கள் blog - க்கு வந்தேன். எல்லா Postings படித்து விட்டேன் . எல்லாம் அருமை .
By
Premkumar
Chennai
premkumar2184@gmail.com
21 August, 2009 1:26 PM
////////////////////
முல்லை, என்ன ஒரு மெயில் காணோம்….நன்றி துபாய் ராசா..ஜிகர்தண்டா நல்ல பெயர்தான்..ஆனா ஏற்கனவே பீர் முகம்மது வைச்சிட்டாரு..நன்றி பிரேம்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
21 August, 2009 1:26 PM
பிரசன்னா இராசன் said...
சே இந்த பிரபல பதிவர் ஆனாலே இப்பிடி தான். எதுனாச்சும் மொக்கையைப் போட்டே ஆகனும். நடத்துங்க தலை... நடத்துங்க...
22 August, 2009 1:12 AM
Anonymous said...
Cholavanthan Raja, want to be famous by commenting all controversial things. It looks like who ever in US does not have much work to do. They think that they are all in the top of the world and comment about all leaders. Illayaraja is a giant, and he is a human. Its so obvious that he will envy with other person who is in same position. Probably you may have to change your perspective before posting about others.
22 August, 2009 4:19 AM
////////////////////
ஆத்தாடி..பிரபல பதிவரா..ஏன்னே இப்பிடி…))))
அனானி அண்ணே..ஏன் இப்பிடி…ரொம்ப அடிக்காதீங்க..அப்புறம் அழுதுருவேன்…..))

அவிய்ங்க ராசா said...

////////////////
வானம்பாடிகள் said...
ஒரு சின்ன விருது நண்பரே. ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html
22 August, 2009 5:12 AM
sakthi said...
என்ன ஆச்சு வலையுலகத்திற்கு..கடந்த ஒரு மாசமா ஒரு சண்டையும் காணோம்….சண்டையப் போடுங்கப்பா..போரடிக்குதுல்ல..

என்ன ஒரு நல்ல எண்ணம்

வாழ்க
22 August, 2009 9:15 AM
///////////////////////
விருதுக்கு நன்றி வானம்பாடி..நன்றி சக்தி..

Jaleela Kamal said...

உங்கள் மிக்ஸ்ர் ஜூஸ் ரொம்ப சூப்பர்,

வாங்க என் ஏரியாவிற்கும்.
www.allinalljaleela.blogspot.com

Karthik Nagarajan said...

Aval Appadi Ondrum Azhagillai song is by Vijay Antony. In that film few songs are by Vijay Antony and few are by GV Prakash. RR as usual some one else will do, I guess...!

Karthik Nagarajan

Post a Comment